siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 19 செப்டம்பர், 2012

சினிமா நடிகர் பெரிய கருப்புத் தேவர் மரணம்

 Wednesday, 19 September 2012,
By.Rajah.தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் பெரிய கருப்புத் தேவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்ரெம்பர் 18) காலமானார்.
சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் இருந்த இவர், சுமார் 1,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
தாலாட்டு என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கரகாட்டக்காரன், பூ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஆடுகளம் படத்தில் அயூப் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
பெரிய கருப்புத் தேவரின் உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான கருமாத்தூரில் இன்று தகனம் செய்யப்படுகிறது

வல்வெட்டித்துறை இளைஞர் யஹரவப்பொத்தானைக்கு கடத்தல்; சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் நேற்றுத் தகவல்

19.09.2012.By.Rajah.
 
பெரும்பான்மை இனத்தவர்களால் வல்வெட்டித்துறை ஆதி கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு ஹெரவப் பொத்தானை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறான கடத்தல்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் அ.அனந்தராஜ் தெரிவித்தார்.
மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போதே வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை ஆதி கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜா ஜனார்த்தன் என்ற இளைஞன் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுள்ளார்.
இவர் வேலை செய்யும் காப்புறுதி நிறுவனத்தை விட்டு பணத்துடன் வெளியே வந்தபோது வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வானில் வைத்து அவருக்கு குடிப்பதற்கு ஒரு வகைப் பாணத்தை அந்த நபர்கள் வழங்கியுள்ளனர். அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
பின்னர் ஹெரவப் பொத்தானையில் ஒரு வீட்டில் வைத்து அவரை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கடத்தியவர்கள் சிங்கள மொழியிலேயே சரளமாகப் பேசியுள்ளனர். பின்னர் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்த மேற்படி இளைஞர் அங்குள்ள கடையொன்றிலிருந்து வீட்டாருடன் தொடர்பு கொண்டதையடுத்து மீட்கப்பட்டுள்ளார். தற்போது வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கடத்தல் தமிழ் ஆயுதக் குழுக்கள் மேற்கொள்ளவில்லை. ஆனையிறவு, ஓமந்தை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளைத் தாண்டி எவ்வாறு இந்த இளைஞனை அவர்கள் கொண்டு சென்றனர். இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது என்று அனந்தராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி எழிழரசி அன்ரன் யோகநாயகம்,ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் 2 பிரதேச செயலர் பிரிவுகளுக்குப் பொறுப்பாக உள்ளது. எமது பிரதேச செயலர் பிரிவில் கடந்த 7 மாத காலமாக சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை.
வேலைணைப் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு, மாடுகளைப் பிடித்தல் என்பன தொடர்ந்தும் நடைபெறுகின்றன. அத்துடன் அங்குள்ள பாதுகாப்புக் குழுக்கள் மூலம் சட்டவிரோத மணல் ஏற்றிச் செல்பவர்களைப் பிடித்தால் அவர்களிடம் தண்டப் பணம் அறவிட்ட பின்னர் விடுதலை செய்கின்றனர். அவர்கள் மீண்டும் மீண்டும் மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன் அவர்களைப் பிடித்துக் கொடுக்கும் சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கு உயிராபத்து எற்படுகின்றது என்றார். இதற்குப் பதிலளித்த ஊர்காவற்றுறைப் பொலிஸ் அத்தியட்சகர் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார்

காரைநகர் கசூரினா கடற்கரையில் கலாசார சீரழிவைத் தடுக்கக் கோரிக்கை

19.09.2012.By.Rajah.காரைநகர் கசூரினா கடற்கரையில் தொடரும் கலாசார சீரழிவுகளைத் தடுத்து நிறுத்த உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கசூரினா கடற்கரையில் கட்டு மீறிச் செல்லும் கலாசார சீரழிவுகளைக் கட்டுப்படுத்துவதுடன் அந்தப் பகுதியில் மதுபோதையில் அட்டகாசம் புரிவோரால் குடும்பமாகக் கசூரினா கடற்கரைக்கு செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
பிரதேச சபையால் கசூரினாக் கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு வரி அறவிட்டு உட்செல்ல அனுமதிப்பதுடன் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற வசதி செய்து கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனால் அந்த வாகனங்கள் தனியார் காணிகளிலும் சவுக்கு மரங்கள் நிறைந்த பகுதிகளிலும் நிறுத்தப்படுகின்றன. இந்த நிலைமை கலாசார சீரழிவுகள் ஏற்பட வழியமைக்கின்றன என்று கூறப்பட்டது.
பிரதேச சபையால் வாகனங்களை நிறுத்தவதற்கான தரிப்பிடங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் கலாசார சீரழிவுகளை தடுக்க ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

இந்தியக் குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்கள்; அகதி முகாமில் நீண்ட நாள்கள் இருப்போர்

19.09.2012.By.Rajah.
இந்திய அரசு எங்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அகில இந்தியத்  தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடில்லியில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் அகில இந்தியத் தமிழ் அமைப்புகள் நடத்திய மாநாட்டில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், காண்டியபுரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி அமைப்பில் இருந்து அதன் தலைவர் எஸ்.ஆர். அந்தோனி, செயலர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர் என்கிற யேசுதாஸ், உதவிச் செயலர் பிரான்ஸிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற எங்களது ஆவலைப் பூர்த்தி செய்ய சட்ட ஆலோசகர் புனித. தேவகுமார் ஆலோசனை அளித்தார். அதன் பேரில் முகாமின் ஆணையரிடம் உரிய அனுமதி பெற்று இந்த மாநாட்டில் பங்கேற்றோம்.

தமிழகத்தில் உள்ள 117 முகாம்களில் சுமார் 70,000 அகதிகள் இருக்கிறோம். வெளிப்பதிவாக 50,000 அகதிகள் உள்ளனர். இவர்களில் 32,000 பேர் இந்திய வம் சாவளியைச் சேர்ந்தவர்கள்.

அகதிகளாக தமிழகம் வந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் அளித்தாலும் குடியுரிமை, வாக்குரிமை இல்லாததால் நாடற்றவர்களாக உணர்கிறோம். கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என பலவற்றையும் முறைப்படி பெறமுடியாதவர்களாக இருந்து வருகிறோம்.

இலங்கையில் சூழல் மாறுவதாகத் தெரியவில்லை. அப்படியே மாறினாலும் அங்கே செல்ல விரும்பவில்லை. காரணம், அகதிகளாக இங்கு வந்த பலரும் முதியவர்களாகிவிட்டனர். அவர்களது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். அவர்களுக்கு இலங்கையும், அங்கிருக்கும் பழக்கம், கலாசாரம் தெரியாது. அவர்கள் இந்தியக் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர்.

 ஆகவே, எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களின் பூர்வீக இடங்கள் சிங்கள மக்களின் ஆதிக்கம் பெற்ற பகுதிகளாகி வருவதாகக் கேள்விப்படுகிறோம்.

நாங்கள் மீண்டும் இலங்கைக்குச் சென்றால் எங்களை இந்தியர்களாகத்தான் பார்க்கின்றனர். அங்கிருந்து இங்கே வந்தால் இலங்கை அகதிகளாகப் பார்க்கின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இந்தியக் குடியுரிமை பெற விரும்புவதால் இந்தக்கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இது குறித்துத் தமிழக முதல்வரையும், மத் திய அரசையும் அணுக டில்லித் தமிழ்ச் சங்கம் மூலம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்

தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹன்சிகா


19.09.2012.By.Rajah.இஷ்க் என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஹன்சிகா நடிக்கிறார்.
கொலிவுட்டில் தற்போது வேட்டை மன்னன், வாலு, சிங்கம் 2 என பெரிய நடிகர், இயக்குனர்களின் கைகளில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்ஸிகா.
இதற்கிடையில் பிரபல நடிகை ஜெயப்பிரதா ஒரு தமிழ்ப் படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் அவரது உறவினர் சித்தார்த் நாயகனாக அறிமுகமாகிறார்.
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற இஷ்க் என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் என கூறப்படுகிறது.
தெலுங்கில் நித்யா மேனன் நடித்த வேடத்தில் ஹன்ஸிகா நடிக்கிறார்.
மேலும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவதாக ஜெயப்ரதா அறிவித்துள்ளார்

ஸ்ரேயாவை திக்குமுக்காட வைத்த ஜப்பானிய ரசிகர்கள்

Wednesday, 19 September 2012,
By.Rajah.சிவாஜி 3டி பிரிமியர் காட்சியை காண டோக்கியோ சென்றிருந்த ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து திக்குமுக்காட வைத்தனர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்த சிவாஜி படம் 2007ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.
ரூ.68 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.128 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.
சிவாஜி படத்தை தற்போது 3டியில் உருவாக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட உள்ளது.
3டி டிரெய்லரை சமீபத்தில் சென்னையில் ரிலீஸ் செய்த போது சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்றார். இதற்கிடையில் ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அங்கு ஜப்பானியர்கள் ரஜினிக்கு ரசிகர் மன்றமும் வைத்துள்ளார்கள்.
இதையடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிவாஜி 3டியின் சிறப்பு காட்சியை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
படத்தை காண ஜப்பானியர்கள் வந்து இருந்தனர். சிவாஜி 3டிபிரிமியர் காட்சியை காண ஸ்ரேயாவும் டோக்கியோ சென்று இருந்தார்.
அங்கு ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து திக்குமுக்காட வைத்தனர்.
படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு முன்பு சிவப்பு கம்பளம் விரித்து ஜப்பானிய பாரம்பரியபடி கை ரிக்சாவில் ஸ்ரேயாவை உட்கார வைத்து அழைத்து சென்றனர்.
ஜப்பான் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகள் பத்திரிகைகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஸ்ரேயாவை படம் பிடித்தனர்.
ஸ்ரேயா அங்கு பேட்டி அளித்தபோது, டோக்கியோ அழகான நகரம். இங்குள்ள மக்கள் மிகவும் இனிமையானவர்கள்.
எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்து விட்டது. சிவாஜியில் தமிழ்செல்வி கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த ரஜினிக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

பிரபல தெலுங்கு நடிகை திடீரென மயங்கியதால் படப்பிடிப்பு இரத்து

 Wednesday, 19 September 2012,
By.Rajah.பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார், ‘வானவராயன் வல்லவராயன்’ என்ற படம் மூலம் கொலிவுட்டிற்கு நாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் இவர் கழுகு நாயகன் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.
கிருஷ்ணா, மோனல் நடித்த காட்சியை படமாக்கிய போது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானர்கள்.
உடனே, மோனலை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மோனலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மூச்சுத் திணறலும் அஜீரண கோளாறும் இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாக கூறினார். இதை அடுத்து படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது

கணனியின் செயற்திறனை அதிகரிப்பத​ற்கு: Wise Disk Cleaner

புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012,
By.Rajah.தொடர்ச்சியான கணனிப் பாவனையின் காரணமாக வன்றட்டில் பயனற்ற கோப்புக்களும், தற்காலிகமான கோப்புக்களும் அதிகளவில் தங்குகின்றன. இதனால் வன்றட்டில் அநாவசியமான முறையில் மேலதிக இடம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் வேகம் குறைவடைவதனால் ஒட்டுமொத்தமாக கணனியின் செயற்திறனும் குறைவடைகின்றது.
எனவே இவ்வாறு அநாவசியமாகக் காணப்படும் பயனற்ற, தற்காலிக கோப்புக்களை சிறந்த முறையில் தேடி அவற்றை நீக்குவதற்கான வசதியை Wise Disk Cleaner எனும் மென்பொருள் தருகின்றது.
இம்மென்பொருளானது அனைத்துவகையான தற்காலிக, பயனற்ற கோப்புக்கள் இருக்கும் இடங்களை விரைவாக தேடுவதுடன் அவற்றினை பாதுகாப்பான முறையில் நீக்குகின்றது.
இதனால் வன்றட்டில் மேலதிக இடம் அதிகரிக்கப்பட்டு அதன் செயற்படுவேகம் அதிகரித்து கணினியின் வினைத்திறனும் அதிகரிக்கின்றது

கனடாவில் வீட்டு விற்பனை சரிவு

19.09.2012.By.Rajah.கனடாவில் வீடுகளின் விலை உயரவில்லை என்றாலும், விற்பனை சரிந்து விட்டதாக கனடாவின் வீட்டுமனைக் கழகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டு விற்பனை குறைந்து கொண்டே வந்து, தற்போது 8.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு வான்கூவர், டொரொண்டோ, கேல்கரி, எட்மண்ட்டன் மற்றும் ஒட்டாவாவின் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு தான் காரணமாகும்.
மாத அடிப்படையில் ஆராய்ந்தால் யூலை மாதத்தில் மட்டும் 5.8 சதவிகிதம் குறைந்து விட்டது. கடந்த இரண்டாண்டுகளில் இதுபோன்ற விற்பனைச் சரிவை இதுவரை கண்டதேயில்லை.
விற்பனையில் குறைவு ஏற்பட்டாலும் விலையில் குறைவு ஏற்படவில்லை. இது கடந்தாண்டை விட 0.3% உயர்ந்துள்ளது.
இன்னும் சில மாதங்கள் தகவல் சேகரித்தால் மட்டுமே கனடாவின் வீட்டுச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணங்களை ஆராய்ந்தறிய முடியும் என்று தலைமைப் பொருளியலாளர் கிரிகோரி க்ளம்பு கூறியுள்ளார்.
கனடாவின் வீட்டுமனைக் கழகம், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வீட்டு விற்பனை குறையும் என்றே எதிர்பார்க்கிறது. 2012ஆம் ஆண்டில் வீட்டு விலை சராசரியாக 365,000 டொலர் இருக்கலாம் என்றும், இது கடந்தாண்டின் சராசரி விலையை விட 0.6 சதவிகிதம் மட்டுமே அதிகம் என்றும் தெரிவித்துள்ளது

மெக்சிகோ சிறையிலிருந்து 132 கைதிகள் அமெரிக்காவிற்கு தப்பி ஓட்டம்

 புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012,
By.Rajah.மெக்சிகோ சிறையில் இருந்து 132 கைதிகள் சுரங்கம் தோண்டித் அதன் வழியாக சிறையிலிருந்து தப்பியோடி உள்ளனர். அவர்கள் அண்டை நாடான அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மெக்சிகோ-அமெரிக்க எல்லையை ஒட்டிய நகரம் பீட்ராஸ் நெக்ராஸ்.
இங்குள்ள சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை சிறை வார்டன் வழக்கமான சோதனை மேற்கொண்ட போது 132 கைதிகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த தீவிர விசாரணையில் சிறையில் இருந்து சுரங்கம் தோண்டித் தப்பியோடியது தெரியவந்துள்ளது. கைதிகள் தோண்டிய சுரங்கத்தின் நீளம்-23 அடி, ஆழம்-9.5 அடி, அகலம்-4 அடி.
இவர்கள் கனகச்சிதமாக திட்டம் போட்டு பல நாட்களாக வெளியே சத்தம் கேட்காத வண்ணம், தூங்கும் நேரத்தில் சுரங்கம் தோண்டி இருந்ததைப் பார்த்து வார்டனே அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுரங்கம் முடியும் இடத்தில் இருந்த வேலியை வெட்டி விட்டு அனைவரும் பத்திரமாக வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். சிறை இருந்த இடத்துக்கு மிக அருகில் அமெரிக்க எல்லைப் பகுதி இருந்தது அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. அவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

விசாரிக்க சென்ற இரு பெண் பொலிசார் படுகொலை

19.09.2012.By.Rajah.கொலை குறித்து விசாரிக்க சென்ற லண்டனை சேர்ந்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக மான்செஸ்டர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டனில் கடந்த மாதம் நடந்த இரு கொலைகள் குறித்து விசாரிக்க சென்ற போது பியோனா மற்றும் நிக்கோலா என்ற இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இரு பெண் ‌பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கி கொண்ட செல்லவில்லை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்றும், அதுவே கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது எனவும் லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதற்கான விசாரணையை லண்டன் பொலிஸ் துவங்கியுள்ளது

சுறாவால் உயிர் தப்பிய பொலிசார்

19.09.2012.By.Rajah.பசிபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்று வழி தவறி 15 வாரங்கள் கடலிலேயே தத்தளித்த பிரிட்டன் பொலிஸ்காரர், சுறா மீன் உதவியால் கரை திரும்பியதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி டோவ்காய் டெய்டோ 42, தன் உறவினர் லெலு பைலலி உடன், பசிபிக் பெருங்கடலில் கில்பர்ட் எலிஸ் தீவில் உள்ள தரவா பகுதிக்கு, படகில் மீன் பிடிக்கச் சென்றார்.
மெயினா தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் எரிபொருள் தீர்ந்து விட்டது. எனவே, இருவரும் படகிலேயே படுத்துத் தூங்கினர். பின் சில வாரங்கள் கடலிலேயே செய்வதறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
லெலு பைலலி மூச்சுத் திணறலில் இறந்தார். இதையடுத்து, டோவ்காய் மட்டும் 15 வாரங்களாக படகிலேயே கிடந்தார். சமீபத்தில் அவரை மீனவர்கள் காப்பாற்றினர்.
உயிர் பிழைத்தது குறித்து டோவ்காய் கூறுகையில், எரிபொருள் தீர்ந்த பின், என் உறவினர் உயிர் வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். சில வாரங்களுக்கு முன் அவர், மூச்சுத் திணறி இறந்தார்.
ஒருநாள் காலை படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய உருவம் படகை உலுக்கியது. விழித்து பார்த்தபோது, படகின் ஒரு முனையை சுறா மீன் உலுக்கிக் கொண்டிருந்தது. சுறாவைப் பார்த்ததும் செய்வதறியாமல் திகைத்தேன்.
பின், அந்த வழியாக ஒரு மீனவப் படகு வருவதைப் பார்த்ததும் கத்தினேன். அவர்கள் பைனாகுலர் வழியாக பார்த்து, என்னை வந்து காப்பாற்றிச் சென்றனர். அந்த சுறா மீன் மட்டும் படகை உலுக்காமல் இருந்திருந்தால், நான் தூங்கிக் கொண்டிருப்பேன். மீனவர்களும் காப்பாற்றி இருக்க மாட்டார்கள். ஒரு வகையில் பார்த்தால் சுறா மீன் தான் என்னைக் காப்பாற்றி உள்ளது என உயிர் பிழைத்த பொலிசார் தெரிவித்தள்ளார்

சுவிஸ் தொடர்வண்டித் தொழில் நுட்பத்தை அறிய இணையத்தளத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

19.09.2012.jah.சுவிட்சர்லாந்தின் தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான விஞ்ஞானிகளின் படைப்புத் திறனை அறிந்துக் கொள்ள அமெரிக்காவிலும், சுவிட்சர்லாந்திலும் இருப்பவர்கள் இணையத்தளத்தின் மூலமாக அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஸ்கைப் மூலமாக இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பட்டது. கடந்த 1870 ல் சுவிஸ் விஞ்ஞானியான அனட்டோலே மேலெட் என்பவர் கண்டுபிடித்த தொடர்வண்டி எந்திரத்தை இப்போது சீசர் மேயா என்ற பொறியாளர் இயக்கினார்.
இந்த மேலெட் எந்திரம் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய பொருள் அல்ல இன்றும் இவை நன்றாக இயங்கக்கூடிய தன்மை கொண்டது என அவர் அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
இந்த மேலட் எந்திர நுட்பம் என்பது இரட்டை எந்திரங்களைக் கொண்டதாகும். எனவே இந்த எந்திரம் பொருத்தப்பட்ட தொடர்வண்டிகளில் அமெரிக்காவில் மரங்களை ஏற்றிச் சென்றனர். இன்றும் ரஷ்மோர் சிகரத்தின் அருகே கறுப்பு மலையின் வழியாக ஒவ்வோராண்டும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் உட்பட 100,000 அமெரிக்கரை இந்தத் தொடர்வண்டி ஏற்றிச் செல்கிறது.
முதல் எந்திரத்திலிருந்து இரண்டாம் எந்திரத்திற்கு நகரும் போது நீராவியை இரண்டு முறை இந்த மேலட் எந்திரம் பயன்படுத்துவதால் இன்றும் கூட இந்தத் தொடர்வண்டி சிறப்பாக ஓடுகிறது.
மேலட் எந்திரத்துக்கும் வேறு இரண்டு சிறிய மோட்டார் வாகன இயந்திரத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடுகளைக் காட்டமுடியும். சிறிய எந்திரங்கள் நான்கு வண்டிகளை (கோச்) இழுக்க வல்லன. ஆனால் மேலட் எந்திரமோ ஏழு வண்டிகளை இழுக்கும் என்று சீசர் மேயர் விளக்கினார்

மூளையின் நரம்பிணைப்பு ஆராய்ச்சியில் சுவிஸ் விஞ்ஞானிகள் (வீடியோ இணைப்பு)

19.09.2012.By.Rajah.சுவிஸ் விஞ்ஞானிகள் ஒரு எலியின் மூளையின் மேற்பரப்பில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளின் வரைபடத்தைத் தயாரித்துள்ளனர். இதனைக் கொண்டு மனித மூளையையும் ஆராய முடியும் என்கின்றனர். இப்பணியை நிறைவேற்றாவிட்டால் மனித மூளையின் நரம்பிணைப்புகளின் வரைபடத்தில் ஒவ்வொரு நரம்பிணைப்பின் இருப்பிடத்தைக் குறித்து அறிய நாற்பது ஐம்பதாண்டுகள் ஆகலாம் என்று லாசேனில் உள்ள புளு ப்ரெயின் ஆய்வுத்திட்டத்தின் தலைவரான ஹென்றி மர்க்ராம் கூறினார்.
கடந்த 2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுத்திட்டத்தின் மூலமாக பாலூட்டி மூளை ஒன்றசை் செயற்கையாக உருவாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளை உருவாக்குவது பெரிய சவாலாக உள்ளது. இந்த இணைப்பின் மூலமாகத்தான் மின் மற்றும் வேதித் தொடர்புகள் ஏற்படுகின்றன.
உயிருள்ள மூளைத் திசுவிலிருந்து 20 ஆண்டுகளாக நரம்பணுக்களை எடுத்து தொகுத்து நரம்பிணைப்புகளை உருவாக்கி அதற்கிடையே தொடர்புபடுத்தப்படும் மின் மற்றும் வேதிப் பண்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நரம்பணுவையும் புளு ஜீன் சூப்பர் கம்யூட்டரில் முப்பரிமாண முறையில் மீட்டமைத்தனர். சுமார் 10,000 நரம்பணுக்களை இப்போது இணைத்துள்ளனர். நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் என்ற அமைப்பு வெளியிடும் வாரப்பத்திரிகை ஒன்றில் விஞ்ஞானிகள் தமது செயற்கை நரம்பிணைப்பு வரைபடத் திட்டம் பற்றி ஆய்வுக்கட்டுறை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் இந்த நரம்பணு இணைப்பு இயற்கையான மூளையில் இருப்பதைப் போல 75 - 95 சதவீதம் வரை துல்லியமாக உள்ளது.
இனி வரும் காலங்களில் இந்த ஆய்வு இன்னும் விளக்கமான முறையில் நரம்பியல் அமைப்புகளில் மாதிரி வடிவத்தை (Models) உருவாக்க உதவும்.


காசநோய் எதிர்ப்புக்கு புதிய மருந்து

19.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில், காசநோய் எதிர்ப்புக்கு மண்ணில் கிடைக்கும் நுண்ணுயிரி சரியான மருந்தாக அமைகிறது என்பதை சமீபத்தில் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். பைரிடோமைசின் என்ற இயற்கையான நுண்ணுயிரி, காசநோயை உருவாக்கும் மைகோ பேக்ட்டீரியம் ட்யுபர்குளோசிஸ் என்ற நுண்ணுயிரியை அழித்துவிடுகிறது.
இதனால் இந்த பைரிடோமைசினை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று ஐரோப்பிய பத்திரிக்கை ஒன்றில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இக்கருத்தை லாசோன்சாவில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் (EPFL) பேராசிரியர் ஸ்டூவர்ட் கோல் உறுதி செய்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி அரை மில்லியன் முதல் எட்டு அல்லது ஒன்பது மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் காசநோய்ப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே இந்த புதுமருந்து இவர்களுக்கு புதுவாழ்வைத் தருவது உறுதி.
இந்த புதிய மருந்து பற்றி ஐரோப்பிய மாலிக்யுலர் பயாலஜி அமைப்பு (EMBO) வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை விளக்குகிறது.
1953ம் ஆண்டில் ஜப்பானிய விஞ்ஞானிகள் இந்த பைரிடோமைசின் மருந்து பற்றி உலகுக்கு எடுத்துரைத்தனர்.
ஆனால் இதன் செயற்பாடும், நோயை குணமாக்கும் விதமும் தெளிவாக விளக்கப்படவில்லை என்று கூறி இதனை ஏற்க மருத்துவ உலகம் மறுத்துவிட்டது.
இப்போது ஐரோப்பிய விஞ்ஞானிய பைரிடோமைசினைப் பயன்படுத்தலாம் என்று உறுதி செய்துள்ளனர்