siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 19 செப்டம்பர், 2012

மெக்சிகோ சிறையிலிருந்து 132 கைதிகள் அமெரிக்காவிற்கு தப்பி ஓட்டம்

 புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012,
By.Rajah.மெக்சிகோ சிறையில் இருந்து 132 கைதிகள் சுரங்கம் தோண்டித் அதன் வழியாக சிறையிலிருந்து தப்பியோடி உள்ளனர். அவர்கள் அண்டை நாடான அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மெக்சிகோ-அமெரிக்க எல்லையை ஒட்டிய நகரம் பீட்ராஸ் நெக்ராஸ்.
இங்குள்ள சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை சிறை வார்டன் வழக்கமான சோதனை மேற்கொண்ட போது 132 கைதிகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த தீவிர விசாரணையில் சிறையில் இருந்து சுரங்கம் தோண்டித் தப்பியோடியது தெரியவந்துள்ளது. கைதிகள் தோண்டிய சுரங்கத்தின் நீளம்-23 அடி, ஆழம்-9.5 அடி, அகலம்-4 அடி.
இவர்கள் கனகச்சிதமாக திட்டம் போட்டு பல நாட்களாக வெளியே சத்தம் கேட்காத வண்ணம், தூங்கும் நேரத்தில் சுரங்கம் தோண்டி இருந்ததைப் பார்த்து வார்டனே அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுரங்கம் முடியும் இடத்தில் இருந்த வேலியை வெட்டி விட்டு அனைவரும் பத்திரமாக வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். சிறை இருந்த இடத்துக்கு மிக அருகில் அமெரிக்க எல்லைப் பகுதி இருந்தது அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. அவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது