siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 19 செப்டம்பர், 2012

சுறாவால் உயிர் தப்பிய பொலிசார்

19.09.2012.By.Rajah.பசிபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்று வழி தவறி 15 வாரங்கள் கடலிலேயே தத்தளித்த பிரிட்டன் பொலிஸ்காரர், சுறா மீன் உதவியால் கரை திரும்பியதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி டோவ்காய் டெய்டோ 42, தன் உறவினர் லெலு பைலலி உடன், பசிபிக் பெருங்கடலில் கில்பர்ட் எலிஸ் தீவில் உள்ள தரவா பகுதிக்கு, படகில் மீன் பிடிக்கச் சென்றார்.
மெயினா தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் எரிபொருள் தீர்ந்து விட்டது. எனவே, இருவரும் படகிலேயே படுத்துத் தூங்கினர். பின் சில வாரங்கள் கடலிலேயே செய்வதறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
லெலு பைலலி மூச்சுத் திணறலில் இறந்தார். இதையடுத்து, டோவ்காய் மட்டும் 15 வாரங்களாக படகிலேயே கிடந்தார். சமீபத்தில் அவரை மீனவர்கள் காப்பாற்றினர்.
உயிர் பிழைத்தது குறித்து டோவ்காய் கூறுகையில், எரிபொருள் தீர்ந்த பின், என் உறவினர் உயிர் வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். சில வாரங்களுக்கு முன் அவர், மூச்சுத் திணறி இறந்தார்.
ஒருநாள் காலை படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய உருவம் படகை உலுக்கியது. விழித்து பார்த்தபோது, படகின் ஒரு முனையை சுறா மீன் உலுக்கிக் கொண்டிருந்தது. சுறாவைப் பார்த்ததும் செய்வதறியாமல் திகைத்தேன்.
பின், அந்த வழியாக ஒரு மீனவப் படகு வருவதைப் பார்த்ததும் கத்தினேன். அவர்கள் பைனாகுலர் வழியாக பார்த்து, என்னை வந்து காப்பாற்றிச் சென்றனர். அந்த சுறா மீன் மட்டும் படகை உலுக்காமல் இருந்திருந்தால், நான் தூங்கிக் கொண்டிருப்பேன். மீனவர்களும் காப்பாற்றி இருக்க மாட்டார்கள். ஒரு வகையில் பார்த்தால் சுறா மீன் தான் என்னைக் காப்பாற்றி உள்ளது என உயிர் பிழைத்த பொலிசார் தெரிவித்தள்ளார்