Wednesday, 19 September 2012, |
By.Rajah.சிவாஜி 3டி பிரிமியர் காட்சியை காண டோக்கியோ சென்றிருந்த ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து திக்குமுக்காட வைத்தனர். |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்த சிவாஜி படம் 2007ல் திரைக்கு
வந்து வெற்றிகரமாக ஓடியது. ரூ.68 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.128 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. சிவாஜி படத்தை தற்போது 3டியில் உருவாக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட உள்ளது. 3டி டிரெய்லரை சமீபத்தில் சென்னையில் ரிலீஸ் செய்த போது சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்றார். இதற்கிடையில் ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அங்கு ஜப்பானியர்கள் ரஜினிக்கு ரசிகர் மன்றமும் வைத்துள்ளார்கள். இதையடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிவாஜி 3டியின் சிறப்பு காட்சியை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தை காண ஜப்பானியர்கள் வந்து இருந்தனர். சிவாஜி 3டிபிரிமியர் காட்சியை காண ஸ்ரேயாவும் டோக்கியோ சென்று இருந்தார். அங்கு ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து திக்குமுக்காட வைத்தனர். படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு முன்பு சிவப்பு கம்பளம் விரித்து ஜப்பானிய பாரம்பரியபடி கை ரிக்சாவில் ஸ்ரேயாவை உட்கார வைத்து அழைத்து சென்றனர். ஜப்பான் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகள் பத்திரிகைகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஸ்ரேயாவை படம் பிடித்தனர். ஸ்ரேயா அங்கு பேட்டி அளித்தபோது, டோக்கியோ அழகான நகரம். இங்குள்ள மக்கள் மிகவும் இனிமையானவர்கள். எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்து விட்டது. சிவாஜியில் தமிழ்செல்வி கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த ரஜினிக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். |
புதன், 19 செப்டம்பர், 2012
ஸ்ரேயாவை திக்குமுக்காட வைத்த ஜப்பானிய ரசிகர்கள்
புதன், செப்டம்பர் 19, 2012
செய்திகள்