siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே//?

          போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே உள்ளதாக த டிப்ளொமெட் என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிய நிகழ்வை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டனர். இதன் பின்னர் பல மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து...

ஓடும் இரயிலில் பழகிய இரண்டே மணிநேரத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி

முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய, இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரை ஒருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து கொண்ட சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது. "ஆயிரம் காலத்து பயிர்” என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை இணைக்க, ஜாதி, மதம், ஜாதகம், பொருத்தம் என, பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், பார்த்த சில மணி நேரத்திலேயே, இரு மனமும் ஒன்றாகி, திருமண பந்தம் வரை சென்றுள்ளது, உண்மையில் ஆச்சர்யமானது தான்.முன்னெப்போதும்...

தன் மரணத்தை 12.12.12ல் தீர்மானித்த இளைஞர் தற்கொலை

உலகம் விசேட நாளாக கருதிய 12.12.12ல் இறக்க வேண்டுமென எண்ணிய வாலிபர், தற்கொலை செய்து கொண்டார். உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சகர் மாவட்டத்தில் உள்ள நரோரா நகரை சேர்ந்த கிருஷ்ணபால் (வயது 40), மரக்கன்றுகள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடவுள் விருப்பப்படி தான், கடந்த 12.12.1972ல் பிறந்ததாக கூறி வந்தார். ஆனால், இறப்பு என்பது கடவுள் விருப்பப்படி நடப்பது இல்லை எனக்கூறிய இவர், 12.12.12ம் திகதி உயிர்...

ஜனாதிபதிக்கு 5-வது முறையாக மரண தண்டனை விதிப்பு,/

  ஈராக்கின் துணை ஜனாதிபதி தாரிக் அல் ஹாஷ்மிக்கு, ஐந்தாவது முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் சதாம் உசேனின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அமெரிக்காவின் உதவியுடன் ஆட்சி மலர்ந்தது. துணை ஜனாதிபதி பதவியில் இருந்த தாரிக் அல் ஹாஷ்மி, 45 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் துருக்கிக்கு சென்ற...

மலாலாவின் பெயரை சூட்ட பள்ளி மாணவிகள் எதிர்ப்பு

தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆளான சிறுமி மலாலாவின் பெயர், பள்ளிக்கு சூட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாவட்டத்தின் மிங்கோரா நகரை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய்(வயது 14). பள்ளி மாணவியான மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், தலிபான்களின் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியர். இவர் அமைதி குறித்து பல்வேறு பேச்சு போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில்...

செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை

லண்டனில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன் பொலிசார் வெளியிட்டுள்ளனர். பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலையமொன்று அரசு குடும்பத்தினர் போன்று பேசி, இளவரசி குறித்த தகவல்களை சேகரித்தனர். இந்த அழைப்பு செவிலியர் ஜெஸிந்தா தான், இளவரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு இணைப்பு...

ஜனாதிபதியை தோற்கடித்து வெற்றி பெறும் நிலையில்?

  சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், புரட்சிபடையினரின் கை ஓங்கியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலக கோரி புரட்சிபடையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப் போராட்டத்தில் இதுவரையிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதுடன், ஐந்து லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். போராட்டத்தை கைவிடும் படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியும்,...