ஈராக்கின் துணை ஜனாதிபதி
தாரிக் அல் ஹாஷ்மிக்கு, ஐந்தாவது முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் சதாம் உசேனின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அமெரிக்காவின் உதவியுடன்
ஆட்சி மலர்ந்தது. துணை ஜனாதிபதி பதவியில் இருந்த தாரிக் அல் ஹாஷ்மி, 45 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் துருக்கிக்கு சென்ற ஹாஷ்மி, மீண்டும் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே ஹாஷ்மி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதித்து பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு பிறகு சில நீதிமன்றங்களிலும் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மற்றொரு நீதிமன்றத்தில், அவருக்கு ஐந்தாவது முறையாக மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. ஹாஷ்மி கடந்த 2006ம் ஆண்டு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த 2010ம் ஆண்டில் நடந்த தேர்தலில் மீண்டும் துணை ஜனாதிபதியாக தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது |
வெள்ளி, 14 டிசம்பர், 2012
ஜனாதிபதிக்கு 5-வது முறையாக மரண தண்டனை விதிப்பு,/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக