siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 டிசம்பர், 2012

தன் மரணத்தை 12.12.12ல் தீர்மானித்த இளைஞர் தற்கொலை

உலகம் விசேட நாளாக கருதிய 12.12.12ல் இறக்க வேண்டுமென எண்ணிய வாலிபர், தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சகர் மாவட்டத்தில் உள்ள நரோரா நகரை சேர்ந்த கிருஷ்ணபால் (வயது 40), மரக்கன்றுகள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார்.
இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடவுள் விருப்பப்படி தான், கடந்த 12.12.1972ல் பிறந்ததாக கூறி வந்தார்.
ஆனால், இறப்பு என்பது கடவுள் விருப்பப்படி நடப்பது இல்லை எனக்கூறிய இவர், 12.12.12ம் திகதி உயிர் விடுவேன் என முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.
இதன்படி தனது மரணத்துக்கு நாள் குறித்த கிருஷ்ணபால், 12.12.12ம் திகதி பிற்பகல் 12:12 மணிக்கு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக 12 பக்கத்துக்கு விரிவாக கடிதம் எழுதி வைத்தார்.
இந்நிலையில் செங்கற்களை எடுத்துக் கொண்டு நேற்று காஜியாபாத் பிரதாப் நகரில் உள்ள 80 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி உச்சிக்கு சென்றார்.
கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிக் கொண்டார். அந்த பக்கம் சென்றவர்களை அழைத்து, தான் வைத்திருந்த 12 பக்க கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பிகளை கீழே வீசினார்.
அதை படித்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்தனர். கிருஷ்ணபாலை சமாதானம் செய்து கீழே இறங்க கூறினர்.
அதை அவர் ஏற்கவில்லை. இதற்கிடையில் வாலிபர்கள் சிலர் தண்ணீர் தொட்டி மீது ஏறினர். அவர்கள் மீது செங்கற்களை வீசினார்.
இதனால் பயந்து போய் அவர்கள் கீழே இறங்கிவிட்டனர். எனினும், பொதுமக்களும் பொலிசாரும் கிருஷ்ணபாலை கீழே இறக்க தீவிர முயற்சி செய்தனர்.
இதனால் தனது எண்ணம் எங்கே நிறைவேறாமல் போய் விடுமோ என்று பதற்றமானார் கிருஷ்ணபால்.
11.05 மணிக்கெல்லாம் கீழே குதித்து விட்டார். பொலிஸ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபாலை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து காஜியாபாத் பொலிஸ் கண்காணிப்பாளர் ஷிவ்சங்கர் சிங் யாதவ் கூறுகையில், கிருஷ்ணபால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
12.12.12ம் திகதி 12:12 மணிக்கு கடவுள் விருப்பத்தை மீறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியவர் எதிர்பாராதவிதமாக முன்கூட்டியே விழுந்து இறந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0 comments:

கருத்துரையிடுக