
மட்டக்களப்பு ஓட்டமாவடிப்பகுதியில் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை இருந்ததால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளது.பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பவற்றுக்கு உள்ள ஒரே விளையாட்டு மைதானம் இம்மைதானமாகும். இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின்...