இங்கிலாந்து அரசு நடத்தும் தேசிய லாட்டரி பரிசுக் குலுக்கல் கடந்த ஜூலை 26ம் திகதி நடைபெற்றது.
இந்த முறை 100 பேர் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் இதுவரை 88 பேர் பரிசினை பெற்றுச் சென்றுவிட்டார்கள். மீதியிருக்கும் அந்தப் 12 பேருக்காக அரசு காத்திருக்கின்றது.
இதற்கு முந்தைய குலுக்கல், ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா தின இரவு அன்று நடைபெற்றது. அதில் முதல் பரிசு 97 பேருக்கு அளிக்கப்பட்டது.
அதனால் மீதியுள்ளவர்களும் பரிசினைப் பெற்றால் இது ஒரு சாதனையாக அமையும் என்று அரசு கருதுகின்றது. 2014 ஆண்டு ஜனவரி முடிய இந்தப் பரிசினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த டிக்கெட்டுகள் இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் வாங்கப்பட்டுள்ளன. தான் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கக் கூடும் என்று கூறும் லாட்டரிக் குழுவின் தகவல் அதிகாரி, 88 பேரின் வாழ்க்கையை இந்தக் குலுக்கல் மாற்றியுள்ளது.
மீதி உள்ள 12 பேரை நாங்கள் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்று கூறுகின்றார்