siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பிரிட்டனிலிருந்து திருப்பி அனுப்பப்படவிருந்த பலர் உயர்நீதிமன்றில் கடைசி நேரத்தில் தடையுத்தரவு பெற்றனர்

 
 
 
21.09.2012.Bxy.Rajah.
(2ம் இணைப்பு)
[காணொளி,] பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு நேற்று புதன் கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்த 60 பேரில் பலர் கடைசி நேரத்தில் தாம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் கடைசி நேரத் தடை உத்தரவைப் பெற்றிருந்தார்கள்.
திருப்பி அனுப்பப்படவிருந்த 60 பேரையும் ஏற்றிய விமானத்தை தடுத்து நிறுத்துவதற்காக நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை அடுத்தே ஒரு சிலருக்கு மட்டும் இந்தத் தடையுத்தரவு கிடைத்துள்ளது.
தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை ஏற்றிச்செல்லும் விமானத்தை முழுமையாகத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க மறுத்த நீதிபதி, தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தஞ்சம் மறுக்கப்பட்டமைக்கான தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டதாக தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் சார்பில் தடையுத்தரவு கோரி வழக்குத் தொடர்ந்த சட்ட நிறுவனமொன்றைச் சேர்ந்த வழக்கறிஞர் கீதார்த்தன் குலசேகரன் பிபிசி யிடம் தெரிவித்தார்.
அதன்படி, தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருந்த 60 பேரில் 25 பேர் மட்டுமே நேற்றைய விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர்களில் 13 பேர் தமிழர்கள் என்றும் 8 பேர் முஸ்லிம்கள் எனவும் மற்றையவர்கள் சிங்களவர்கள் என்றும் அவர்கள் அரசியல் தஞ்சம் கேட்டவர்கள் அல்லவென்றும் விசா அனுமதியின்றி தங்கியிருந்தவர்கள் என்றும் குலசேகரன் சுட்டிக்காட்டினார்.
திருப்பி அனுப்பப்படாமல் தடுக்கப்பட்டவர்கள் அவர்களின் தஞ்சக்கோரிக்கை மீளாய்வுக்காக முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரிட்டனில் தஞ்சம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 18 பேர் வரையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகி மீண்டும் தப்பித்து பிரிட்டனுக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் மனித உரிமை அமைப்புகளுக்கு முறையிட்டுள்ளதாகவும் குலசேகரன் மேலும் கூறினார்.
இதேவேளை, தஞ்சம் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக வெளிவரும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
லண்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சென்ற புதன்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்த 60 பேரில் பலர் கடைசி நேரத்தில் தாம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் கடைசி நேரத் தடை உத்தரவைப் பெற்றிருந்தார்கள்.
திருப்பி அனுப்பப்படவிருந்த 60 பேரையும் ஏற்றி சென்ற பேரூந்து விமான நிலையத்தை அடையும் குறிகிய நேரத்தில் அவர்களை திருப்பி அனுப்புவதை தடுத்து நிறுத்துவதற்காக அகதிகளுக்கான மனிதநேய அமைப்புகளை சார்ந்த மனிதவுரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினார்கள்.
அவ்வகையில் அகதிகளை ஏற்றி சென்ற பேரூந்துக்கு அடியில் புகுந்து தம்மை அந்த பேரூந்தோடு விலங்கிட்டு பூட்டினார்கள். இச் சம்பவத்தை அடுத்து பல ஊடகவியாளர்கள் மற்றும் காவல்துறை குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்தது.
இச் சந்தர்ப்பத்தை பிரயோகித்து தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் அகதிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க தேவையான நேரம் பெரிய அரிதாக கிடைத்தது. அந்த வகையில் சில அகதிகளை திருப்பி அனுப்புவதை தடுத்து நிறுத்தக் கூடியதாக அமைந்தது.
தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை ஏற்றிச்செல்லும் விமானத்தை முழுமையாகத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க மறுத்த நீதிபதி, தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தஞ்சம் மறுக்கப்பட்டமைக்கான தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இருந்தும் ஏனையவர்கள் 25 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

மஹிந்தவின் படத்தை எரித்தும், மதித்தும் ராஜபக்‌ஷவை

 
[காணொளி ]
 
21.09.2012.By.Rajah.இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ இந்தியா வந்ததை கண்டித்து இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 2000 க்கு அதிகமானோர் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் , பண்ருட்டி , சிதம்பரம் போன்ற பகுதியை சேர்ந்த மாணவர்கள் , இளைஞர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். அவர்கள் அனைவரையும் அடக்க முடியாமல் காவல் துறை திணறியது.
பெரும்பாலான மக்களை கைது செய்த பிறகு சிலர் தாமதமாக வந்து தங்களையும் கைது செய்ய வேண்டும் என காவல் துறையிடம் கேட்டனர். ஆனால் போதிய வாகனங்கள் இல்லாததால் காவல்துறை அவர்களை கைது செய்ய மறுத்தது.
இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் மத்திய தொடருந்து நிலையத்தில் நுழைந்து முழக்கமிடவே, ஒட்டுமொத்த நிலையமே அதிர்ந்தது.
ராஜபக்‌ஷவை வெளியேற்று, இந்திய அரசே இலங்கைக்கு துணை போகாதே என்று அனைவரும் முழக்கமிட்டனர் . ராஜபக்சேவின் உருவ படங்களை எரித்தும், மிதித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

 

காற்றில் கரைந்த கண்ணீரின் வரிகள்

21.09.2012.By.Rajah.செல்லத் தோட்டத்தின் அரச மரச் சந்தியென்றால் பகலில்கூட யாரும் நிற்கப் பயப்படுவார்கள். தவறு செய்தவர்களை தண்டிக்கும் மலைச் சாமியின் குடியிடம் அது. ஒவ்வொரு புதுவருடத்திலும் கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் மலைச்சாமிக்கு தேயிலை மாலை அணிவித்து குறைதீர்க்க வணங்குவது தோட்ட மக்களின் வழமை.

நேரம் அதிகாலை 2 மணி. மலைச் சாமியின் வாள் நிலவொளியில் மின்னிக்கொண்டிருந்தது. உறங்கிக்கொண்டிருக்கும் தேயிலைச்செடிகளுக்கிடையில் சலசலத்து ஓடும் ஓடையின் சத்தம் தவிர எங்குமே மயான அமைதி. மலையிடையில் வரி கீறியதாய் தோட்டத்துக்கு வரும் மண்பாதை உயிர்கொண்டு சத்தமிடுகிறதோ? இல்லை. து}ரத்தே ஒரு வாகனம் விரைவாக வந்துகொண்டிருக்கிறது.

செல்லத்தோட்டம் பற்றிச்சொல்லியாக வேண்டும். குறைகள் எதுவுமின்றி செழிப்புடன் இருந்ததால் செல்வத்தோட்டம் என மக்கள் இட்ட பெயர்தான் பின்னர் பேச்சு வழக்கில் செல்லத்தோட்டமானது. இப்போதெல்லாம் சரியாக கொழுந்து வளர்வதில்லை, சம்பளப்பிரச்சினை, போராட்டம் என சுமைகளுக்கிடையே சுமைதாங்கிகளாய் வாழும் தோட்ட மக்கள் வாடிய முகத்துடனேயே காணப்படுகிறார்கள். வறுமைக்கு எங்கே போய் நிவாரணம் தேடுவது? நாளைய சமயலுக்கும் குழந்தையின் படிப்புக்கும் யாரிடம் கையேந்துவது? என்றெல்லாம் எண்ணவோட்டங்கள் மூளை நரம்புகளைப் பிண்ணிப் பிணைகையில் அதைவிட பிணி ஏது?

உழைக்கும் கைகளில் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள், இன்றும் தேயிலைக் கிள்ளியே காம்பாய் மாறிய தம் கைகளைப் பார்த்தே விழித்தெழுகிறார்கள்.

உழைத்துக் களைத்து உறங்கிக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு என்ன சேதி சொல்ல வாகனம் வந்துகொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

ஐந்து நிமிட இடைநேரத்தில் வெள்ளை நிற வாகனமொன்று மலைச்சாமிக்கு எதிரே நிறுத்தப்பட்டது. உள்ளேயிருந்து இறங்கிய இருவர் வாகனத்தின் பின் கதவைத் திறந்து சகோதர மொழியில் பேசியவாறே பெட்டியொன்றை சிரமத்துடன் இறக்கிக் கீழே வைத்தனர். வாயை துணியால் மூடிய ஒரு பெண் உருவம் மலைச்சாமிக்கருகே சென்று மண்டியிட்டுக்கொண்டது.

இரண்டு உருவங்கள் மீண்டும் வாகனத்தில் ஏற வாகனம் உறுமிக்கொண்டு புறப்படத்தாயாரானது. அந்த வெளிச்சத்தில் மலைச்சாமியின் உருவம் தெளிவாகத் தெரிய அருகில் மண்டியிட்டுக்கொண்டிருந்த பெண் பார்வதிதான் என்பது கண்ணுக்குப் பட்டது. பார்வதியின் கண்களில் அணல்பறக்கும் வேகம் தெரிந்தது. தலைவிரிகோலமாய் மலைச்சாமிக்கு முன் மண்டியிட்டிருந்த அவள் வாகனம் புறப்படத்தயாரான போது மண்ணை அள்ளி தலையில் வீசிக்கொண்டு சத்தமாய் அழ ஆரம்பித்தாள்.

“ஆசயா வளத்த என் பிள்ளைய பிணமா கொண்டு வந்து போட்டுட்டு போறானுங்களே…
ஐயோ…
கேட்க யாருமே இல்லையா?

மலைச்சாமியே…. என் மகள இப்படிப்பார்க்கவா உனக்கு கொழுந்து மாலை போட்டேன்?
யாருமே இல்லையா? யாராவது வாங்களே…”

பார்வதியின் குரல் மரண ஓலமாய் ஒலிக்க மலையிடுக்கெங்கும் அது எதிரொலித்து மௌனம் கரைத்தது. உயிரை உறையவைக்கும் அழுகைக் குரலுக்கு சற்றேனும் செவிசாய்க்காது திரும்பிச்சென்றது அந்த வாகனம்.

அந்த வெளிச்சத்தில் மின்னியது சவப்பெட்டி.

“போ…
என் மகளைக் கொலை செய்த பாவம் உன்னையெல்லாம் சும்மாவிடாது”

பார்வதியின் கண்ணீர் நிறைந்த கைக்குட்டையை வாகனத்தை நோக்கி வெறித்தனமாக வீசியெறிந்தாள்.

நடுங்கும் குளிரில் முனகியவாறே மெழுகுதிரி ஏந்திய சில உருவங்கள் லயத்திலிருந்து படியிறங்கி வந்துகொண்டிருக்கின்றன. தொடர்ந்தும் குழுகுழுவாக ஆண்களும் பெண்களும் இணைந்து வருகின்றனர். அவர்களில் பார்வதியின் குரல்கேட்டு பதறியடித்துக்கொண்டு வரும் அவள் கணவர் பெரியசாமியும் ஒருவர்.

அவர்களைப் பார்த்த பார்வதியின் அழுகை மேலிட்டது. சவப்பெட்டிக்கருகில் சென்று கதறிக் கதறி அழுகிறாள்.

“சுமதிய அனுப்ப வேணாம்னு சொன்னேன். கேட்டீங்களா? அரக்கனுங்களெல்லாம் சேர்ந்து புள்ளைய கொன்டுட்டாங்க.
இப்போ யாரு என் மகள திரும்பத் தருவாங்க?

கணவனைக் கட்டியணைத்ததோடு மயங்கி விழுகிறாள் பார்வதி.

என்ன நடந்ததென்றே தெரியாமல் விழிகளில் நீர் நிறைய சவப்பெட்டியை நெருங்குகிறார் பெரியசாமி. அவர் சவப்பெட்டியைத் திறந்ததும் அரசமரச் சந்தியே அழுகையில் நனைகிறது.

ஆம்! செல்லத்தோட்டத்தின் செல்லப்பிள்ளை என அனைவராலும் ஆதரிக்கப்பட்ட சுமதிதான் பிணமாக இருக்கிறாள். குழந்தைச் சிரிப்பு மாறாதவண்ணம் நீலநிறத்தில் காட்சியளிக்கிறது அவள் முகம். சுமதிக்கு என்ன நடந்தது? கேட்க முடியாத கேள்வியின் அடையாளமாக அனைவரும் விழிபிதுங்கி நிற்க சுமதியின் ஒன்றுமறியா கடைத்தம்பி சவப்பெட்டியைத் தடவிக்கொண்டிருந்தான்.

பெரியசாமி, பார்வதிக்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் தான் சுமதி. பெரியசாமிக்கு நெஞ்சு வருத்தம் இருந்ததால் குடும்பச் சுமை முழுவதும் பார்வதியின் வசம்தான். எத்தனை வேதனைகள் என்றாலும் இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பி கடைக்குட்டியை பிள்ளைமடுவத்தில் சேர்த்து வேலைக்கும் சென்று வந்து சமைத்து, சோறுகொடுத்து குடும்பத்தை கண்ணெனக் காத்துவந்தாள் பார்வதி. மலைச்சாமியின் மண்விபூதி எப்போதும் பார்வதியை இலட்சணமாகக் காட்டும்.

தோட்டத்துக் குழந்தைகளில் சுமதியின் மீது அனைவருமே அதிக பாசம் வைத்திருந்தார்கள். பண்புடனனான நல்ல பழக்கமும் சிரித்த முகத்துடன் பேசுவதுமே இதற்குக் காரணம். பட்டம் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு லயன் அறை ஒவ்வொன்றாக சென்று தனது நண்பர் கூட்டத்தை அழைத்து மேல்கணக்கு மலைக்கு சென்று விளையாடுவதும் அம்மாவுக்கு பயந்து ஆறு மணிக்கே ஐயா வீட்டுக்கு அந்தி வகுப்பு செல்வதும் என துடிதுடிப்பாக இருப்பாள் சுமதி.

குழந்தைகள் வளர வறுமையும் கதவைத்தட்டியது.

“பெரியசாமி அண்ணே… உள்ளயா இருக்கீங்க?”

“ஆ… வாங்க தரகர் தம்பி. என்ன இந்தப்பக்கம்? நீங்க வேற தோட்டத்துக்கு போறதா கேள்விப்பட்டேன்”

“ஆமா அண்ணே. நம்மள நம்புறவங்ககிட்ட தானே வாழ முடியும். இப்போதெல்லாம் தொழிலும் ஜமாய்க்குதில்ல. வீட்டில சும்மா இருக்கிறதுக்கு உங்கள பார்க்கலாமேனு வந்தேன்”

பெரியசாமிக்கும் தரகருக்கும் பேச்சு நீண்டுகொண்டு சென்றது.

சிட்டாய் அங்கு விரைந்துவந்த சுமதி தந்தைக்கு தேநீர் கொடுத்துவிட்டு பறந்துசென்றாள்.

அப்போதுதான் சுமதி பற்றிய கதை அங்கு ஆரம்பமானது.

“உங்களுக்கும் சுகமில்ல. பார்வதிக்கு எத்தனை நாளைக்கு தான் குடும்ப பாரத்த சுமக்க முடியும்? சுமதிக்கு இப்ப சரியான வயசு. கொழும்பில நல்ல வீடா பார்த்து, வேலைக்கு விட்டா, அங்கேயே படிச்ச மாதிரியும் இருக்கும், குடும்ப செலவுக்கு காசு வந்தமாதிரியும் இருக்கும்”

ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் தரகர். வாரத்தில் ஒரு முறையேனும் கசிப்பு குடிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டுக்கொண்டிருந்த பெரியசாமிக்கு அது சரியாகப் பட்டது. வஞ்சகப் பேச்சில் முழுமையாக மதிமயங்கிய அவர் இதுபற்றி பார்வதியிடம் பேச குடும்பத்தில் சண்டையே வலுத்தது.

பார்வதிக்கு நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரிக்க கணவரின் வற்புறுத்தலுக்கு இசைந்து தன் ஆசை மகளை கொழும்புக்கு அனுப்பத் தீர்மானிக்கிறாள்.

அந்த வீட்டிலிருந்துகொண்டே கொழும்புப் பாடசாலையில் படிக்க வைப்பதாகவும் முதல் மாத சம்பளம் தனக்கு வேண்டும் எனவும் ஆசைகாட்டி, பேரம்பேசி சுமதியை அழைத்துச்செல்கிறார் தரகர்.

சுமதிக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என மலைச்சாமியிடம் மன்றாடி தனது குறையை ஒப்புவித்துவிட்டு வீடு திரும்பிய பார்வதிக்கு சுமதியின் நினைவாகவே மூன்று மாதம் கழிகிறது. தலைக்கு மேல் பிரச்சினையென்றாலும் ஒரே தலையணையில் பிள்ளைகளுடன் படுத்துறங்கிய பொழுதுகளில் மனக்குது}கலம் நிறைந்து இன்முகத்தோடான விடியலை இனியொருநாள் அனுபவிக்கக் காத்திருக்கிறாள்.

நான்காவது மாதம் தன் மகளைப் பார்க்க தரகருடன் கொழும்புக்கு செல்கிறாள் பார்வதி. இவ்வளவு பெரிய நகரத்திலா என் மகள் படிக்கிறாள்? வேலை செய்கிறாள் என ஆச்சரிய மகிழ்ச்சியில் செல்லும் பார்வதிக்கு வேதனைச்செய்தி தான் காத்திருக்கிறது.

பலவிதங்களில் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறாள் சுமதி. காலையில் வீட்டுப் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது, பாத்திரம் தேய்ப்பது. சமயல் உதவி என ஏகப்பட்ட வேலைகள். இரவில் உரிமையாளருக்கு கால்பிடித்துவிடுவது முதல் ஏராளமான பாலியல் துன்புறுத்தல்கள். இவை அத்தனையையும் சொல்லி பார்வதியின் காலைப்பிடித்து அழுத குழந்தைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை?

ஒரு வேளை சோறென்றாலும் அள்ளி அணைத்து மடியில் கிடத்தி வளர்த்த மகள் காலனின் வதைக்குள்ளாவது காலத்தின் தண்டனையா? என தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டாலும் அவளால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை. கொழும்பின் எந்த வீதியும் அவளுக்குத் தெரியாது. கையில் பணம் இல்லை. எவ்வாறு அழைத்துச்செல்வது?

வழியொன்றும் அறியாமல் மகளைத் தனியே விட்டுவிட்டு வீட்டார் கொடுத்த நாலாயிரம் ரூபாவுடன் ஊருக்கு வருகிறாள் பார்வதி.

உணவில்லை. உறக்கமில்லை. மலைக்குச்சென்று கொழுந்து பறிக்கையில் தன் மகளின் மானம் பறிக்கப்பட்ட ஞாபகம். யாரிடம் முறையிடுவது? எப்படி உதவி கேட்பது. கைகொடுக்க கல்வியறிவும் இல்லை. ஊராரிடம் சொல்லி உதவி கேட்கவும் தயங்குகிறது மனம்.

இவ்வாறு ஆறு மாதம் கடந்த பின்னர்தான் திடீர் தந்தி பார்வதியின் கரம் கிட்டியது. கொழும்பின் தனியார் மருத்துவமனையில் மகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவசரமாக வருமாறும் தந்தி சொல்லியது.

சாமி படத்துக்குக் கீழே சேர்த்துவைத்திருந்த பணத்துடன் தரகரையும் அழைத்துக்கொண்டு பார்வதி கொழும்புக்கு செல்கிறாள். அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமதிக்கு பேச்சு வரவில்லை. வார்த்தைக்குப் பதிலாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. தேயிலை மலையெங்கும் பட்டம் விட்டு அம்மாவின் பெயரைக்கூறி அது எதிரொலிக்கும் சத்தம் கேட்டு மகிழும் பிஞ்சு, கட்டிலுக்குள் அடங்கியிருந்தாள்.

சுமதி தான் இருந்த வீட்டின் ஒன்பதாம் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் வீட்டார் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அங்கிருந்த இருவர் தகவல் கூறினர். கொல்லும் கோபத்தில் வீட்டு உரிமையாளரை கேட்டபோது அவர்கள் திருமண வைபவம் ஒன்றுக்காக சென்றுவிட்டாதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“அ…ம்….மா….”

சுமதி ஏதோ சொல்ல முற்படுகிறாளா? இல்லை அம்மா என்ற சொல்லில் ஆறுதல் தேடுகிறாளா தெரியவில்லை. கருவிழிகள் மேலும் கீழும் சென்று ஏதோ பாஷை சொல்வது மட்டும் புரிகிறது. ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் விடுதலையாகிறாள் சுமதி.

பார்வதியின் அலறல் ஒலியில் நிறைகிறது அறை. இருந்தும் என்ன பயன்? காற்றோடு கலந்துவிட்ட உயிரை எந்தக் குரல்கொடுத்து அழைக்க முடியும்? அவள் சொல்ல முற்பட்ட கண்ணீர் வரிகளை எந்தக் கண்கொண்டு பார்க்க முடியும்?

ஏதோ ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ஏமாற்றப்படுகிறோம் என்பது மட்டும் பார்வதியின் சிற்றறிவுக்குத் தெரிகிறது. மாயமாகிவிட்ட தரகருடன் பாரியதொரு பித்தலாட்டம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பததையும் அறிகிறாள். இருந்தும் தன் கையெழுத்தையே தன்னால் எழுத முடியாத பார்வதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனக்குத் தெரிந்த ஒரே நீதிபதி மலைச்சாமி தான்.

துடிக்கத் துடிக்க கண்கள் அகற்றப்பட்டு அங்கங்கள் அனைத்துமே கூர்க் கோடரியால் வெட்டிச் சிதைப்பது போன்ற உணர்வு பார்வதிக்கு. தன்னால் தனக்கே ஆறுதல் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கியசாலியாய் பொம்மை போல ஆகுகிறாள்.

இந்நிலையில் தான் விடிபொழுதில் ஓர் அஸ்தமனச் செய்தி செல்லத்தோட்டத்துக்கு மரண ஓலமாய்க் கேட்கிறது. நினைத்துப்பார்க்க முடியாத குறுங்காலத்தில் சுமதியின் சுட்டித்தனங்களும், நிரந்தரப்பிரிவும் தோட்டத்தையே துவர்க்கம் செய்தது.

பொழுதுவிடிந்தது. பார்வதிக்கு இன்னும் விடியவில்லை. மகளின் பெயரை முனுமுனுத்தவாறே தன்னிலை மறந்திருக்கிறாள். இவ்வேளை மீண்டும் ஒரு வாகனம். என்ன செய்தி வரப்போகிறதோ என மரண வீட்டிலும் மக்களின் எதிர்பார்ப்பு.

அதேபோல் மலைச்சாமிக்கு எதிரே நிறுத்தப்பட்ட கார் ஒன்றிலிருந்து மூவர் இறங்குகின்றனர். சுமதி வேலை செய்த வீட்டின் உரிமையாளர், அவர் மனைவியுடன் பொலிஸ் அதிகாரிபோல் தோற்றம் தந்த ஒருவரும் வருகிறார். சுமதியைப் பார்க்கவில்லை. சுமதியின் தாயாரைப் பார்க்க வேண்டும் என குரல்கொடுக்கிறார் பெரியவர்.

கலங்கிய மனதுடன் பழைய நினைவுகளிலிருந்து மீளாத பார்வதி கைத்தாங்கலாக கீழே அழைத்துவரப்படுகிறாள். வந்தவர்கள் ஏதோ சொல்கின்றனர். பார்வதி, பேரலையொன்றில் தாக்கப்பட்டவளாய் பார்த்துக்கொண்டிருக்கிறாள். சில நிமிடங்களின் பின்னர் பார்வதியின் கையில் ஒரு பையை கொடுத்துவிட்டு வந்தவர்களுடன் மறைகிறது கார்.

மறுவார்த்தை பேச சக்தியில்லாதவளாய் இருந்த பார்வதிக்கு பையில் இருந்த பதினையாயிரம் பணமும் தெரியவில்லை. அப்போதும் மலைச்சாமி மௌனம் காத்துக்கொண்டிருந்தது.

நம்மவர்களின் படைப்பில் ஆங்கிலத் திரைப்படம் ‘Trapped in Abyss

<

21.09.2012.By.Rajah.நமது நாட்டைச் சேர்ந்த துடிப்பு மிக்க இளைஞர்கள் கூட்டணி இணைந்து தயாரித்திருக்கும் ஆங்கிலத் திரைப்படமே ‘Trapped in Abyss’.
திகில் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இதன் டிரெயிலர் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியாகவுள்ளது


இத்திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் ஹொலிவூட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் Amber Armstrong நடித்துள்ளார்.
ஸ்ரீநாத் இராமலிங்கம் இத்திரைப்படத்தின் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.. அவரும்  ஷபீர் சின்னலெப்பையும் இணைந்து  இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்கள். கல்கிஸ்ஸை சென்.தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான ஸ்ரீநாத் இராமலிங்கம் அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் சம்பந்தமான பட்டப்படிப்பை மேற்கொண்டு, கடந்த 6 வருட காலங்களாக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
21
ஹொலிவூட்டில் திரைப்பட தொகுப்பாளராக தனது திரையுலகப் பணியை ஆரம்பித்த ஸ்ரீநாத், அதன் பின்னர் உதவித் தயாரிப்பாளர், மேடை முகாமையாளர், திரைக்கதை மேற்பார்வையாளர், ஊடக முகாமையாளர், உதவி இயக்குநர் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றி சிறந்த அனுபவத்தைப் பெற்றார்.
இருவருட காலத்துக்குள் இரண்டு ஹொலிவூட் விவரணத் திரைப்படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றும் வாய்ப்பும் ஸ்ரீநாத்துக்குக் கிட்டியது. அதனையடுத்து குறுந்திரைப்படங்கள், இசை வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றை தயாரித்தும் இயக்கியும் வந்த ஸ்ரீநாத் அடுத்த கட்டமாக சுதந்திரத் திரைப்படங்களை இயக்குவதற்கு அடியெடுத்து வைத்துள்ளார்.
 ‘Trapped in Abyss’ திரைப்படத்தின் புகைப்பட இயக்குனராக ஷபீர் சின்னலெப்பையும், தொகுப்பாளராக ஹரிஹரனும் பணியாற்றியுள்ளார்கள்.
திரைப்படத்தின் இணைத்தயாரிப்பாளர்கள் கெவின் மரினோ மற்றும் பென்ஸ்டன் அலெக்ஸ் பெர்னாண்டோ இருவரும், திகில் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு
‘Trapped in Abyss’ சிறந்த விருந்தாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது பிந்திய தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுவரும் இத்திரைப்படத்தின் டிரெயிலர்கள் எதிர்வரும் 25ம் திகதி முதல் You Tube, apple.com உட்பட அனைத்து முன்னணி ஊடகங்களிலும் வெளியாகவுள்ளது.
கடைத்தொகுதியொன்றுக்குள் சிக்கிக்கொள்ளும் இளைஞர்கள் குழுவொன்றை, தீய ஆவியொன்று முடிவுப் புள்ளியொன்றுக்குள் தள்ளிவிட முயற்சிக்கிறது. அதிலிருந்து தமது உயிரைக்காப்பாற்றித் தப்பிக்கொள்ள முயலும் அக்குழுவினரின் போராட்டமே திகிலோடு திரைப்படமாக விரிகிறது.

அமெரிக்காவில் கழுதையுடன் பாலியல் உறவு கொண்ட நபர் கைது

21.09.2012.By.Rajah.

அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் கழுதையுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒகலா நகரைச் சேர்ந்த கார்லொஸ் ரொமெரோ (31 வயது) என்ற பண்ணைத் தொழிலாளியே கழுதையுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.
குறித்த நபர் தானியக் களஞ்சிய அறையொன்றில் வைத்து கழுதையுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவத்தினை பண்ணையைக் குத்தகைக்கு எடுத்துள்ள நபர் கண்டு பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவரின் மனநிலை தொடர்பில் பொலிஸார் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.



தனது கணவரே நிஜ தந்தையென அவரது மரணத்துக்குப் பின் அறிந்து பெண் அதிர்ச்சி ரணத்துக்குப் பின் அறிந்து பெண் அதிர்ச்

21.09.2012.By.Rajah.தனது கணவரே தன்னுடைய நிஜத் தந்தை ௭ன்பதை அவர் இறந்த பின்னர் பெண்ணொருவர் கண்டறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. 

டொய்லெஸ்டவுண் நகரைச் சேர்ந்த வலேரி ஸ்ருயில் (60 வயது) ௭ன்ற பெண்ணே தனது கணவராக தன்னுடன் வாழ்ந்தவர் தனது தந்தையான பேர்சியே ௭ன்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. வலேரியின் தாயாரான கிறிஸ்டின் ஒரு விலைமாது ஆவார். இந்நிலையில் அவருக்கும் பேர்சிக்குமிடையே ஏற்பட்ட தொடர்பின் மூலம் வலேரி பிறந்தார்.

வலேரி 3 மாதக் குழந்தையாக இருக்கும்போதே தனது பாட்டா பாட்டியின் பராமரிப்பில் வாழ்வதற்கு அவர் ஒப்படைக்கப்பட்டார். 

தனது தாயார் ஒரு விலைமாது ௭ன்ற விடயம் வலேரிக்கு அவரது 9 ஆவது வயதில் கிறிஸ்ரிடின் இறந்த போதே தெரியவந்துள்ளது. இந்நிலையில், தனது உண்மையான தந்தையாரென்று தெரியாத நிலையில் டிரக் வண்டிச் சாரதியான பேர்சியை அவர் திருமணம் செய்துள்ளார். 

இதனையடுத்து சுகவீனம் காரணமாக பேர்சி தனது 60 ஆவது வயதில் மரணமானார். பேர்சி இறந்த பின்னரே வலேரியின் மாமனார் ஒருவர் பேர்சியே வலேரியின் உண்மையான தந்தையாக இருக்கக் கூடும் ௭ன்ற சந்தேகத்தை ௭ழுப்பினார். 

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளின் மூலம் பேர்சியே தனது உண்மையான தந்தையெனக் கண்டறிந்து வலேரி அதிர்ச்சியடைந்துள்ளார். 

பேர்சிக்கு வலேரி தனது மகள் ௭ன ஏற்கனவே தெரிந்திருந்த நிலையில் அச்சம் காரணமாக வலேரியிடம் உண்மையைக் கூறாது மறைத்திருக்கலாம் ௭ன சந்தேகிக்கப்படுகிறது

ஹெரோயின் கொண்டு வந்த நபர் விமானநிலையத்தில் கைது

21.09.2012.By.Rajaj.சென்னையிலிருந்து சட்டவிரோதமாக ஹெரோயின் கொண்டு வந்த நபர் ஒருவர் இன்று அதிகாலை 5.15 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய குறித்த நபரிடமிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 820 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

௭ல்லோருடைய அப்பாக்களும் வருகின்றனர்

21.09.2012.By.Rajah.௭னது அப்பா ஏன் இன்னும் வரவில்லை: ஜனாதிபதிக்கு கைதிகளின் பெற்றோர் மகஜர்சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை ௭டுக்க வேண்டும் ௭னக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறவினர்கள் ஜனாதிபதியிடம் வழங்குவதற்கென மகஜர் ஒன்றை கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்கள். கிளிநொச்சி பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளதை முன்னிட்டு இந்த மகஜரைத் தாங்கள் கையளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அந்த மகஜரின் முழுவிபரம் வருமாறு அவசர கால மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக சிறைச்சாலையில் வாடும் ௭மது உறவுகளை ௭ம்மோடு இணைத்து விடுங்கள், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதியாகிய தங்களை ஆவலுடன் நாம் ௭திர்பார்க்கும் நாட்டினதும் மக்களினதும் தலைவர் ௭ன்ற ரீதியில் உரிமைகளுடனும் நம்பிக்கையுடனும் இந்த வேண்டுகோளை தங்களினது மேலான கவனத்திற்கு தருகின்றோம். 

யுத்தம் முடிவடைந்து 3 வருடம் கடந்த நிலையில் நாட்டின் அபிவிருத்தி, மீள் குடியேற்றம், புனரமைப்பு ௭ன்பன துரித வளர்ச்சி கண்டு வருவதோடு ௭மது சகோதர உறவுகளான முன்னாள் போராளிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றனர். 

இலங்கைத்திருநாட்டில் அனைத்து மக்களும் சமாதான சூழலை அனுபவித்து வருவதோடு சந்தோசமாக அவர்களின் உறவுகளுடன் கூடி வாழ்ந்து வரும் நிலையில் ௭மது உறவுகள் மட்டும் ௭ம்மிடம் இருந்து பிரிக்கப்பட்டு இன்று பல வருடங்களை கடந்து உள்ளது. இவ்வாறு இருக்கையில் ௭ம்மை பிரிந்து அவர்களும் அவர்களை பிரிந்து நாமும் தினமும் கண்ணீரோடு வாழ்ந்து வருகின்றோம். ஜனாதிபதி அவர்களே நேரடியாக யுத்தத்தில் பங்கு கொண்ட முன்னாள் போராளிகளை தாங்கள் கருணை உள்ளம் கொண்டு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்து வருவதோடு இன்று அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு தமது குடும்பங்களுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். 

அதே போல சந்தேகத்தின் அடிப்படையிலும் பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு உள்ள ௭மது உறவுகளை ௭ம்முடன் சேர்த்து வைத்தால் நாம் நிம்மதியாக வாழ முடியும். ௭மது உறவுகள் கடந்த கால பட்டறிவுகளை பாடமாக கொண்டு இனி வரும் நாட்களை இனிய நாட்களாக ௭திர்கொள்ள தயாராகவுள்ளார்கள். அவர்களும் இந்த நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுத்து நற்பிரஜைகளாக வாழ ஆசைப்படுகிறார்கள் ௭ன்பதனை அவர்களது பெற்றோர்கள், உறவினர்களாகிய நாம் பொறுப்புடன் தெரிவிக்கின்றோம். 

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வாழ்வை தொலைத்து நிற்கும் ௭மது உறவுகளின் நியாயத்தன்மையை இன்று தென் பகுதி சிங்கள மக்களும் விளங்கி கொண்டு ஏற்று கொள்ளும் நிலை தோன்றி உள்ளது ௭ன்றால் காரணம் கடந்த கால கசப்புணர்வுகளை அனைவரும் மறந்து வாழ்வதேயாகும். ௭மது பிள்ளைகளையும் குடும்ப தலைவர்களையும் பிரிந்து வாழும் நாம் அன்றாட பலதரப்பட்ட சமூக, பொருளாதார கலாசார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து வருகின்றோம். 

௭மது பிள்ளைகள் கேட்கிறார்கள் ௭ல்லோருடைய அப்பாக்களும் வருகின்றனர் ௭னது அப்பா ஏன் வரவில்லை ௭ன கேட்கும் போது வானமே இடிந்து விழுவதை போன்ற அந்த வலியை ௭த்தனை வருடங்கள் தாங்குவது? இவை அனைத்திற்கும் விடை உங்களிடமே உள்ளது, ௭மது பிரதேச அபிவிருத்தியை பார்வையிட வரும் தா ங்கள் ௭மக்கு ஒரு நற்செய்தியை கொ ண் டு வருவீர்கள் ௭ன பெரிதும் நம்புகின்றோம் ௭திர்பார்ப்புடனான இக்கோரிக்கையை கிளிநொச்சி அரச அதிபர் ஊடாக தங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம்.

உலகின் முன்னணி இணையங்களின்

 
21.092012.By.Rajah இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது.

இந்த அமைப்புத் தொடர்பில் ஒருபுறம் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. 
'The Internet Association' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு முதலில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதில் இணையத்தளங்களின் பங்களிப்புக் குறித்து ஆராயவுள்ளது.
இந்த அமைப்பில் கூகுள், யாகூ, பேஸ்புக், அமேசன், ஏஓஎல், இ-பே, எக்ஸ்பீடியா, ஐஏசி, லிங்க்டின், மொன்ஸ்டர், ரொக்ஸ்பேஸ், சேல்ஸ்போர்ஸ், ட்ரிப் எட்வைஸர், சிங்கா ஆகிய நிறுவனங்களின் அங்கத்தவர்கள் பணியாற்றவுள்ளனர். 
இந்த அமைப்பின் தலைவராக மைக்கல் பெக்கர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக இயங்கும் இணையத்தளங்களை அந்நாட்டில் தடை செய்வதற்கும் அதற்கான சட்டவரைவுகளைத் தயார் செய்வதற்குமே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனை முற்றாக மறுத்துள்ள மைக்கல் பெக்கர்மன், இணையங்களின் வளர்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தாக்கங்கள் சாதகமான நிலைப்பாட்டினை அடைவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி இணைய நிறுவனங்களை முடக்குவதற்கு தீவிரவாதிகள் தயாராகலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் கசிந்துள்ளன.
இந்த அமைப்பில் அப்பிள், மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன