siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 18 ஏப்ரல், 2018

உலகைக் கலங்க வைத்த புகைப்படத்துக்கு புலிட்சர் விருது!

கடந்த ஆண்டுக்கான புலிட்சர்  பிரேக்கிங் நியூஸ் போட்டோகிராபி விருது `டெய்லி ப்ராக்ரஸ்' பத்திரிகையின் ரேயான் கில்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. 
ஒவ்வோர் ஆண்டும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் புலிட்சர் விருது
 வழங்குகிறது. இந்த ஆண்டு 15 பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் போட்டோகிராபி பிரிவில், ரேயான் கில்லிக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் சார்லட்டேஸ்வில்லி 
நகரில் இனவெறிக்கு எதிரான போராட்டம் நடைபெற்றபோது, ஒருவர் காருடன் கூட்டத்திற்குள் பாய்ந்தார். மக்கள் தூக்கி எறியப்பட்டனர். இந்தக் காட்சியை ரேயான் கில்லி படம் எடுத்திருந்தார். தி டெய்லி ப்ராக்ரஸ் பத்திரிகைக்காக ரேயான் கில்லியின் கடைசி அசைன்மென்டும் இதுதான். தற்போது, ஃப்ரீலான்ஸர் புகைப்படக் கலைஞராக அவர் 
பணியாற்றுகிறார். 
future photography- பிரிவில் ரோகிங்யா முஸ்லிம் மக்களின் அவல நிலையைப் படம் பிடித்த வகையில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு புலிட்சர்  விருது கிடைத்துள்ளது.  2017- ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்குத் தப்பி வந்த ரோகிங்யா மக்களின் படகு
 டெக்னாஃப் நகர கடற்கரையை நெருங்குகையில் கடலில் கவிழ்ந்தது.
 இந்த விபத்தில் பெண் ஒருவரின் கைக்குழந்தை தண்ணீருக்குள் மூழ்கி இறந்து விடும். கைக்குழந்தையை முகத்தின் மீது முகம் வைத்து அந்தத் தாய் அழும் காட்சியை ராய்ட்டர்  என்ற புகைப்படக் கலைஞர் பதிவு செய்தார். இந்தப் புகைப்படமும் future photography பிரிவில் புலிட்சர் விருது பெற்றுள்ளது. இந்த விருது 15,000 அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசு 
கொண்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 comments:

கருத்துரையிடுக