siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 29 அக்டோபர், 2018

இந்தோனேசியாவில் 188 பேருடன் காணாமல்போன பயணிகள் விமானம்

ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட இந்தோனேசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்தது என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் 178 பெரியவர்கள், 1 குழந்தை, இரண்டு கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 விமானப் பணியாளர்கள் உட்பட 188 பேர்
 இருந்துள்ளனர்.
ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பன்ங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்தது.
இது பாங்கா பெலீடூங் தீவின் முக்கிய நகரம்.
இழுவைப் படகு ஒன்று விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதைப் பார்த்ததாக இந்தோனீசிய துறைமுக அதிகாரி சுயாதி என்பவர் கூறியதாக இந்தோனீசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 6.20க்கு (கிரீன்விச் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 23.30) இந்த புறப்பட்ட இந்த விமானம் 'போயிங் 737 மேக்ஸ் 8' வகையைச் சேர்ந்தது. இந்த மாடல் விமானங்கள் 2016-ம் ஆண்டு முதல்தான் பயன்பாட்டில் உள்ளன.
விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் யூசூஃப் லத்தீஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என 'லயன் ஏர்' விமான நிறுவன அதிகாரி ஒருவர் முன்னர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நிறுவனம் இந்தோனீசியாவை மையமாக வைத்து
 செயல்படும், குறைந்த கட்டண விமான 
நிறுவனம் ஆகும்.
எல்லா தகவல்களையும் திரட்டிவருவதாகவும், தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எட்வார்ட் சிரய்ட் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் 
தெரிவித்துள்ளா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 comments:

கருத்துரையிடுக