siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கொழும்பில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,   கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் ஏலத்தில் வெள்ளைப்பூண்டு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்த வர்த்தகரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகரை விடுதலை செய்ய ஐம்பது லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. எனினும் கப்பமாக கோரப்பட்ட பணத்தில் ஏற்கனவே 30 லட்ச ரூபா வழங்கப்பட்டுள்ளது....

திருகோணமலை ஆண்டான்குளம் பகுதியில் நில அபகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012, திருகோணமலை ஆண்டான்குளம் பகுதியில் உள்ள மக்கள், திட்டமிட்டு தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மிகந்தபுர சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குறிப்பிட்ட சில குழுவினரால் போலியான காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, தங்களது சொந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி...

தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் 15,000 சிறைக் கைதிகள்!

வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012, இலங்கையில் தண்டப்பணம் செலுத்த முடியாத 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறைவாசம் அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலைகள் துறை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் பல்வேறு சிறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டவர்கள் பலரால் அதனை செலுத்தமுடியவில்லை.அவ்வாறான 15, 336 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது சிறையில் உள்ள மொத்த கைதிகளில் அறைவாசி பங்கு என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான...

இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானியக் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை

வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012 இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு பிரித்தானியா, மிகவும் அவதானமாக இருக்கும்படி புதிய பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தப் பயண எச்சரிக்கைக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுற்றாலும், இலங்கயில் தேசியவாதம் எழுச்சி கண்டுள்ளது. இதன்விளைவாக, மேற்குலக எதிர்ப்பு- குறிப்பாக பிரித்தானிய எதிர்ப்பு வாதம் வலுவடைந்துள்ளது.இது பிரித்தானியத்...

குறைந்த விலையில் இனி எச்.ஜ.வி நோயிலிருந்து விடுதலை பெறலாம்

16.08,2012.எச்.ஜ.வி(HIV) நோய் குறித்து பேசல்(Basel) பல்கழைக்கழகம் தற்போது ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆய்வில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சேர்க்கைகள் அடங்கிய மருந்துக்களை நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்துவதால், நோய்கள் சமநிலையில் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளன.எச்.ஜ.வி வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயிலிருந்து 90சதவீதம் குணமடைந்திருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எச்.ஜ.வி நோயினால் பாதிக்கப்பட்ட 2005 முதல் 2009 ஆண்டு...