
ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான ஒரு பெண் ஆகிய இருவர் இவ் விபத்தில் பலியாகினர்.இன்று அவ்விபத்தில் காயமடைந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மரணமானான். கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29)...