பாரீஸ் நகரின் முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்து வருவதால் பொலிசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பாரீஸின் முக்கிய பகுதிகளான அமெரிக்க தூதரகம்(Us Embassy), ஈஃபில் டவர்(Eiffel Tower), பிளேஸ் டி லா கான்கோர்டோ(Place de la Concorde) உள்ளிட்ட பகுதிகளில், கடந்த திங்கள் மற்றும்
செவ்வாய் கிழமைகளில் மட்டும் சுமார் 5 ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது,
தொடர்ந்து வானில் பறக்கும் இதுபோன்ற ஆளில்லா விமானங்களை செலுத்துபவர்கள் யார் என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இது பாரீஸில் தாக்குதல் நடத்தும்
திட்டங்களில் தொடர்பு உடையதாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், சிறிய ரக ஆளில்லா விமானங்களை எளிதாக வாங்குவது எளிது, தற்போது முக்கிய இடங்களில் அதனை பறக்க விடுவதால் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களின் பிரச்சனையாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் எலிஸ்(Elysee) அரண்மனையிலும், பிரான்ஸ் அணு உலைகள் உள்ள பகுதிகளிலும் இதே மாதிரியான
ஆளில்லா விமானங்கள் பறந்தது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க தூதரகம் மேல் பறந்த ஆளில்லா விமானம் தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுருக்கும் நிலையில், அதை செலுத்தியவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என பொலிசார்
கூறியுள்ளனர்.
விமான போக்குவரத்து மற்றும் விமான பாதுகாப்பு துறை அதிகாரியான கிறிஸ்டோப் நாடின்(Christophe Naudin) கூறுகையில், இதுபோன்ற ஆளில்லா விமானங்களை செலுத்தி பாரீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராயப்படுகிறதா என பொலிசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.