siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 3 ஜூன், 2013

அம்பலமாகிய கள்ளத் தொடர்பு!

 பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார். ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக, அந்த நபரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும்...

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு

  எதிர்காலத்தில் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது. உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும்...

சிங்கப்பூரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்?

 இலங்கை யுவதிகளை தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவைச் சேர்ந்த நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் சிங்கப்பூரில் விபசாரம் நடத்தி வந்தவர்களில் முக்கியமான நபரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் சமீபத்தில் ஐந்து யுவதிகளை அழைத்துச் சென்று பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நபரால் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த...

துப்பாக்கிச் சூடு: பொலிசார் தீவிர தேடுதல்,

சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரிச் மாநகர் காவல்துறையும், மாநிலக் காவல்துறையும் இணைந்து துப்பாக்கி சூடு நடத்திய ஒரு கொலைகாரனை வலைவீசித் தேடி வருகின்றது.கடந்த வியாழனன்று பிற்பகல் மூன்று மணியளவில் பிராயர்டிராஸ் தெருவில் உள்ள 37ம் எண் உடைய வீட்டில் ஒருவன், தன்னிடமிருந்த துப்பாக்கியால் இரண்டு துருக்கியரைச் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டான். குண்டுகாயத்துடன் இருந்த இருவரையும், பொலிசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஒருவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற்று...

கஞ்சா புகைப்பவருக்கு அபராதம் மட்டுமே?

சுவிட்சர்லாந்து கஞ்சா புகைப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் மூன்றரை இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரையிலான இளைஞர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.இனி இவர்கள் பிடிபட்டால் அங்கேயே நூறு பிராங்க் வரை அபராதம் வசூலிக்கப்படும். இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை. சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் கடத்தல், நுகர்வு போன்ற சட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் சில மாற்றங்கள் ஒக்டோபர் முதல் நடைமுறைக்கு வருகின்றன....

நிலநடுக்கத்தினால் சிலிண்டர் வெடிப்பு

.,. தைவானில் டைசங் நகரத்திலிருந்து தென்கிழக்கே 38 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.மேலும் பூமிக்கடியில் சுமார் 14.5 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் தைபேவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சிலிண்டர் வெடித்ததாக அந்நாட்டின் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகளோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ...

புதிய 15 கரும் நட்சத்திர மண்டலங்கள்

 அதி நவீன அல்மா டெலெஸ்கோப், அண்டத்தில் உள்ள காஸ்மிக் தூசுக்களின் இருளுக்குள் 15 புதிய கரும் நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை பதிவு செய்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.நட்சத்திர கூட்டம் 'செடஸ்' அமைந்திருக்கும் திசையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கரும் விண்மீன் திரளுக்கு 'சுபாரு' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் காஸ்மிக் பிரபஞ்ச தூசுக்களால் இருக்கும் இந்த கதிர்களின் ஆதிக்கத்திற்குள் மறைந்து...