சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரிச் மாநகர் காவல்துறையும், மாநிலக் காவல்துறையும் இணைந்து துப்பாக்கி சூடு நடத்திய ஒரு கொலைகாரனை வலைவீசித் தேடி வருகின்றது.
கடந்த வியாழனன்று பிற்பகல் மூன்று மணியளவில் பிராயர்டிராஸ் தெருவில் உள்ள 37ம் எண் உடைய வீட்டில் ஒருவன், தன்னிடமிருந்த துப்பாக்கியால் இரண்டு துருக்கியரைச் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டான்.
குண்டுகாயத்துடன் இருந்த இருவரையும், பொலிசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஒருவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற்று உடலில் புகுந்திருந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது.
இருவரும் அபாய நிலையிலிருந்து தப்பித்துவிட்டனர் என்று மாநகர் பொலிஸ் தகவல் தொடர்பாளி மார்கோ கோர்டெஸி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொலிசார் இந்தத் துப்பாக்கிச்சூடு பற்றி தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்
0 comments:
கருத்துரையிடுக