ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர் அவரது பர்லின் குடியிருப்பிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை அங்கிருந்து மற்றொருவரது சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை கொலை செய்து மற்றையவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்
வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த பைரேட் கட்சியை சேர்ந்த 44 வயதுடைய ஜேர்வோட் க்ளோஸ் புரூன்னர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புரூன்னர் குணப்படுத்த முடியாத ஒரு நோயினால் பீடிக்கப்பட்டு இருந்ததாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ள போதிலும் இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியிடவில்லை. எனினும் உயிரிழந்த மற்றைய நபர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பர்லின் மாநிலத் தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் பர்லின் நாடாளுமன்றத்திற்கான 15 ஆசனங்களையும் பைரேட் கட்சி இழந்திருந்தது.
இந்நிலையில் குறித்த அறிவிப்பிற்கு முன்னரா அல்லது தோல்விக்கு பின்னரா இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன என்பது தொடர்பில் தெளிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>