ஜி - 7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. ஜப்பானில் நடைபெறும் ஜி - 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக
நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து
பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை முற்பகல் தெற்கு ஜப்பானின் நகோயா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இலங்கை ஜனாதிபதியையும்
அவருடன் வந்த
தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹீதேகி ஒமோரா ஆகியோர் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினர் மிக விமர்சையாக வரவேற்றனர். இந்த வரவேற்பையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால தங்கியிருக்கும் நகோயா ஹில்டனில் அவருக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு நிகழ்வும்
வழங்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>