
உயிர்த் தியாகம் செய்தாவது கூடங்குளம் அணு மின் உலையைத் திறக்க உறுதி ஏற்க வேண்டும்’ என இரண்டு மாதங்களுக்கு முன், காஞ்சியில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முழங்கினார் ஐஸ்வர்யா. சமீபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவியாக தேர்வு செய்யப்பட் டவர். இவரது திடீர் மரணம் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாச...