
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உடனான தகராறில், அரச குடும்ப தொலைபேசி டைரக்டரியை பத்திரிக்கை ஒன்றிற்கு இளவரசி டயானா அளித்தது தெரியவந்துள்ளது.இங்கிலாந்தின் ”நியூஸ் ஆப் தி வேர்ல்டு" பத்திரிக்கை மீது பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டு செய்திகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து உரிமையாளர் ரூபர்ட் முர்டோச் பத்திரிக்கையை மூடினார், தற்போது குற்றச்சாட்டின் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அரச குடும்பத்தின் தொலைபேசி புத்தகத்தை...