siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 மார்ச், 2014

அரச குடும்ப ரகசியத்தை அம்பலமாக்கிய டயானா

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உடனான தகராறில், அரச குடும்ப தொலைபேசி டைரக்டரியை பத்திரிக்கை ஒன்றிற்கு இளவரசி டயானா அளித்தது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் ”நியூஸ் ஆப் தி வேர்ல்டு" பத்திரிக்கை மீது பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டு செய்திகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து உரிமையாளர் ரூபர்ட் முர்டோச் பத்திரிக்கையை மூடினார், தற்போது குற்றச்சாட்டின் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரச குடும்பத்தின் தொலைபேசி புத்தகத்தை பொலிசாருக்கு பணம் கொடுத்து பெற்றதாக முன்னாள் ஆசிரியர் கிளைவ் குட்மேன் மீது குற்றம்சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இளவரசர் சார்லசுடன் ஏற்பட்ட மோதலால் அரச குடும்பத் தொலைபேசி டைரக்டரியை பிரிட்டிஷ் பத்திரிகைக்கு இளவரசி டயானா தந்தார் என்று குட்மேன் தெரிவித்தார்.

தனது கணவர் இளவரசர் சார்லஸிடமிருந்து 1992ம் ஆண்டில் 11 ஆண்டுகால மணவாழ்வுக்குப் பின்னர் பிரிந்த இளவரசி டயானா, இந்தத் தொலைபேசி டைரக்டரியை தனது பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பினார் என்றும், அது தனது தபால் பெட்டியில் வந்து சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்.
இளவரசி டயானா அந்தக் காலகட்டத்தில் மிகவும் ஒரு குழப்பமான மனோநிலையில் இருந்தார் என்று கூறிய க்ளைவ் குட்மேன், தன்னைச் சுற்றிலும் இளவரசர் சார்லஸுக்கு நெருக்கமான ஆட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கருதியதாகக் கூறினார்.

தனது கணவரின் அலுவலகத்தில் இருந்த பணியாளார்களின் எண்ணிக்கையையும், தனது அலுவலகத்தில் மிகக்குறைவாக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு காட்டுவதே அவரது நோக்கமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தொலைபேசி டைரக்டரியை அனுப்பிய பின்னர், தன்னை தொலைபேசியில் அழைத்து, இப்புத்தகம் கிடைத்துவிட்டதா என்பதை டயானா சரிபார்த்துக்கொண்டார் என்றும் குட்மேன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக