siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

வசதிக்கு பஞ்சமில்லை: மனநிறைவுடன் புத்தாண்டை வரவேற்கும்

  கனடாவில் வாழும் மக்கள் புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் வரவேற்க காத்திருக்கின்றனர். கனடியர்களின் புத்துணரச்சிக்கு அடிப்படை காரணம், தங்களது நிதி நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று அவர்கள் நம்புகின்றனர். இது தொடர்பாக ஹேரிஸ்- டெசிமோ நிறுவனம் மூலமாக கருத்துக்கணிப்பு நடத்திய CIBC, 70 சதவீதம் பேர் தங்களது தற்போதைய நிதிநிலை குறித்து மனநிறைவடைந்துள்ளனர். ஆனால் இந்த மனநிறைவு சென்ற ஆண்டு 63 சதவீதம் பேரிடம் மட்டுமே...

கத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்

இங்கிலாந்தில் 10 வயதுக்கு குறைவான மாணவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது அமெரிக்காவில் சமீபத்தில் ஆசிரியை மகன் ஒருவன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு...

பிரபல பாடகி விட்னி ஹுஸ்டன் கொலை செய்யப்பட்டாரா? திடுக்கிடும் ?

பிரபல பொப் இசை பாடகி விட்னி ஹுஸ்டன்(வயது 48), சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் கோகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை அதிகளவு உட்கொண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சிகாகோ நகரின் காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது நடித்து கொண்டிருக்கும் பால் ஹுபுல் என்பவர் இது தொடர்பாக...

சுரங்கத் தொழிலில் முதலீடு அதிகரிக்கிறது:

சுவிஸ் சுரங்கத்தொழில் ஜாம்பவானான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பாப்புவா நியு கினியாவில் ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கத்தை மேம்படுத்த முன்பு கணக்கிட்டதை விட 300 மில்லியன் டொலர் கூடுதலாகத் தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. சுவிஸ் நிறுவனம், பாப்புவா நியு கினியாவில் உள்ள ஹைலாண்டஸ் பசிஃபிக் என்ற நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து அந்தத் தீவில் சுரங்கத்தொழிலை மேற்கொண்டுள்ளது. முன்பு 5.3 மில்லியன்...

வாழ்த்துகளை விட பரிசுகள் அனுப்பியோரே அதிகம்

சுவிட்சர்லாந்தில் இந்த கிறிஸ்துமஸில் வாழ்த்துகளை விட பரிசுகளே அதிகம் அனுப்பப்பட்டதாக Swiss.com தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்த கிறிஸ்துமஸிற்காக சுவிஸ் தபால்துறை டிசம்பர் 1 முதல் 24 வரை 16 மில்லியன் பரிசுப்பொருட்களை பட்டுவாடா செய்துள்ளது. கடந்த வருடம் வரை இந்த எண்ணிக்கை 15 மில்லியனாகவே இருந்தது. இந்த கூடுதல் ஒரு மில்லியன் பரிசுப்பொட்டலங்களும் வாட், துர்கா, சோலோதுன் மாநிலங்களுக்கே அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன. அதாவது, சாதாரண நாட்களில்...

அமெரிக்க மருந்து பொருட்களை இறக்குமதி செய்த ஈரானின்பெண்

மருந்து பொருட்கள் மீது விலை உயர்வு அறிவித்த ஈரான் பெண் அமைச்சரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். ஈரான் அதிபராக முகமது அகமது நிஜாத் (55) உள்ளார். இவரதுஅமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக மெரீஷா வாஹில் தஸ்தர்டி உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரான இவர். நாட்டில் மருந்து பொருட்கள் மீது விலை உயர்வை அறிவித்தும், ‌2.4 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கத்திய மருந்து பொருட்கள் இறக்குமதி செய்தும் உத்தரவிட்டார். இதற்கு நாடு...