siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆசியாவிலேயே அதிவேகமான கடலுக்குக் கீழான தரவுப் பரிமாற்ற இணைப்பு

24-08-2012.
ஆசியாவிலேயே அதிவேகமாக தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உதவும் புதிய அதிவேக கடலுக்குக் கீழான இணைப்பு திறந்து வைக்கப்படவுள்ளது.

7800 கிலோ மீற்றர் நீளமான இந்தக் கடலுக்குக் கீழான இணைப்பானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை இணைக்கிறது.

இந்த இணைப்பின் மூலம் தரவுகள் செக்கனுக்கு 40 ஜிகாபைட்ஸ் வேகத்தில் பரிமாற்றப்படுகிறது.

இது சிங்கப்பூருக்கும் டோக்கியோவுக்குமிடையிலான எந்தவொரு இணைப்பை விடவும் 3 மில்லி செக்கன்கள் வேகமானதாகும்.

கணனிகளால் வியாபாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தரவுப் பரிமாற்றம் மூலம் ஒரு செக்கனிலும் குறைந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான தரவுப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

வங்கிகளுக்கிடையிலான கடும் போட்டி காரணமாக தரவுப் பரிமாற்றத்தில் ஏற்படும் ஒரு செக்கன் தாமதமானது அவற்றின் இலாபத்தின் அளவைப் பாதிப்பனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

நயன்தாராவை அசர வைத்த அஜீத்!

24.08.2012.பில்லா-2வை அடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் அஜீத், அந்த படத்துக்காக, 15 கிலோ வரை, உடல் எடையை குறைத்துள்ளார். அவரது தோற்றத்தைப்
பார்த்து, படப்பிடிப்புக் குழு அசந்து நிற்கிறது. இது பற்றி, அந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா கூறும்போது, "பில்லா படத்தில் பார்த்த அஜீத்துக்கும், இப்போதைய அஜீத்துக்கும், எந்த வித்தியாசமும் தெரியவில்லை. முன் இருந்த மாதிரியே, இப்போதும் இளமையாக இருக்கிறார். அதேசமயம், இன்னும், "ஸ்லிம்மாகி விட்டார். தொழில் மீது பக்தியும், ஈடுபாடும் கொண்டவர்களால் தான், கதையின் தன்மைக்கேற்ப
தன்னை மாற்றிக் கொள்ள இயலும் என்கிறார்

தமிழுக்கு வந்த கன்னடத்து பைங்கிளி

24.08.2012.அட்டகத்தி படத்தின் மூலம், தமிழுக்கு வந்திருக்கும் கன்னட நடிகை நந்திதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிக கோடிகளை அள்ளிக்கொண்ட இவருக்கு, அடுத்து, வெங்கட்பிரபுவின் உதவியாளர் இயக்கும், "நளனும் நந்தினியும் என்ற படமும் கிடைத்துள்ளது. அதனால், தேடி வந்த கன்னட படங்களை கூட தவிர்த்து விட்டு,
முழுநேர தமிழ் நடிகையாகப் போவதாக, கோலிவுட் கோதாவில் இறங்கி விட்ட நந்திதா, "திறமைக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பேன்; கிளாமரில் லிமிட் தாண்ட மாட்டேன் என்கிறார்

கண்டிஷன் போட்டால்வீட்டில் தான் இருக்க வேண்டும் - ஜனனி அய்யர்!

24.08.2012.பாலா இயக்கிய, "அவன் இவன் படத்தில் அறிமுகமான ஜனனி அய்யர், தற்போது
ஸ்ரீகாந்துடன், "பாகன் படத்தில் நடித்து வருகிறார். அவரிடத்தில், "ஆரம்பத்தில்
நீங்கள் நிறைய, "கண்டிஷன் போட்டதாகக் கூறப்பட்டதே? என்று கேட்டதற்கு, "அது
என்னைப் பற்றி வெளியான வதந்தி. நான் யாரிடமும் கண்டிஷன் போடுவதில்லை. அப்படி செய்தால் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். நான் வீட்டில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும், "டைரக்டர்கள் என்ன சொல்கின்றனரோ... அதன்படி நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன், என்று சொல்லும் ஜனனி அய்யர், "கதைக்கு தேவையான அளவு கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராகி விட்டேன். அதனால், கமர்சியல் பட டைரக்டர்கள், தாராளமாக என்னை அணுகலாம் என்றும் அழைப்பு விடுக்கிறார்

வேன்கள் திடீரென தீப்பற்றியெரிந்து நாசம்

24.08.2012.மடவளை பஸார், ரவூப் ஹக்கீம் மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் வேன்கள் தீப்பிடித்து ஒன்று முற்றாகவும் மற்றது பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன.
முற்றாக எரிந்த வேன் இரவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு உரிமையாளரின் வீட்டு முற்றத்தில் இன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதிகாலைவேளை அது தீப்பற்றியுள்ளதை அவதானித்து அணைக்க முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை.
அதேநேரம் அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வேனும் தீப்பற்றிய போதும் அயலவர்கள் உதவியால் அது அணைக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றியமைக்குத் தொழில்நுட்பக் கோளாறா அல்லது நாசவேலையா எனத் தெரியவில்லை.வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
 

 

 

 

புதிய ரயில் வண்டி அட்டனில் வெள்ளோட்டம்

24.08.2012.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில் வண்டி நேற்று மாலை அட்டன் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.

சீனாவில் இருந்து தருவிக்கப்பட உள்ள 13 புதிய இரயில் வண்டிகளில் 5 வண்டிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளன. இவற்றில் ஒன்றை மலையக மார்க்கத்தில் ஈடுபடுத்துவதற்கான பரீட்சார்த்த பயணமே நேற்று மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
 

வெள்ளவத்தை முக்கொலை: சந்தேக நபர் கைது

வெள்ளவத்தையில் தாய்,தந்தை,தங்கையைக் கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
குருநாகல் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தவேளை சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அயலவர்கள் தரும் தகவல் (ஒலிப்பதிவு)





காகம் காட்டுவதாகக் கூறி இரண்டரை வயதுக் குழந்தை மீது பாலியல் குற்றம் புரிந்த தந்தை

 

24.08.12012.
தனது இரண்டரை வயது மகளை தினமும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த ஜோர்தான் நாட்டுப் பிரஜை ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
ஜோர்தான் நாட்டுப் பிரஜையான யூசுப் மொஹமட் அல் முவர் என்பவர் இலங்கைப் பெண்ணை மணம் முடித்து கொழும்பில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.
இச் சந்தேக நபர் தனது மகளை காகங்களைக் காட்டுவதாகக் கூறி தினமும் வீட்டின் மேல்மாடிக்கு அழைத்துச் செல்வதை வழமையாகக் கொண்டுள்ளார். அதன்போதே பாலியல் ரீதியாக குற்றம் புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கணவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மனைவி இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்ததில் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதை அறிந்துகொண்டுள்ளார்.
அதன் பின்னர் கிரண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் அவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

மம்மூட்டியின் புதுவை மாநகரம்


Friday, 24 August 2012,
மல்லுவுட்டில் மம்மூட்டி நடித்து வெளியான டபுள்ஸ் படம், தமிழில் புதுவை மாநகரம் என்ற பெயரில் வெளிவருகின்றது.

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் டபுள்ஸ்.
இப்படத்தில் மம்மூட்டி, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் வேடத்தில் நடித்திருந்தார்.
மம்மூட்டிக்கு ஜோடியாக டாப்ஸி, தெலுங்கு படங்களுக்கு இணையாக கவர்ச்சி காட்டி நடித்தார். மேலும் நதியா இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் வெளியாக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டார்கள்.
அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, பாண்டிச்சேரியில் பெரும்பகுதிகள் நடத்தி முடிக்கப்பட்டது.
எனவே தமிழ் பதிப்பில் புதுவை மாநகரம் என்றே பெயரிட்டு படத்தை விரைவில் வெளியிட உள்ளார்கள்


எம்.ஜி.ஆருடன் குத்தாட்டம் ஆடிய சதா


 Friday, 24 August 2012,
கொலிவுட்டில் விஷாலின் நடிப்பில் உருவாகி வரும் எம்.ஜி.ஆர் படத்தில் நடிகை சதா குத்தாட்டம் ஆடியுள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் அந்நியன் படத்தில் நடித்த சதா, நீண்ட நாட்களாக கொலிவுட் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.
பின்னர் பி.வாசுவின் புலிவேஷம் படத்தில் நடித்தாலும் அவருக்கு இப்படம் பெரிய வரவேற்பை பெற்றுத்தரவில்லை.
இதையடுத்து தற்போது இயக்குனர் சுந்தர்.சியின் எம்.ஜி.ஆர் படத்தில் விஷாலுடன் நடனமாட அழைப்பு வந்தது.
இந்த அழைப்பை ஏற்று சதா, விஷாலுடன் குத்தாட்டம் ஆடினார். இதைத்தொடர்ந்து குத்தாட்ட வாய்ப்புகள் சதாவுக்கு வர அனைத்தையும் மறுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது, விஷால் என்னுடைய நீண்ட கால நண்பர் என்ற காரணத்தினால் அவருடன் இணைந்து நடனமாடினேன்.
மற்றபடி, குத்தாட்டத்தை தொடரும் எண்ணங்கள் இல்லை என்று உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
 

இனியாவின் கண்பேசும் வார்த்தைகள்


 Friday, 24 August 2012,
ஸ்ரீகாந்த், சங்கீதா நடித்து பிரச்னைகளில் சிக்கிய படம் உயிர்.
கொழுந்தன் மீது அண்ணி காதல் கொள்ளும் கதையாக இது அமைந்திருந்ததால் மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இப்படத்தை தயாரித்தவர் ஆர்.பாலாஜி. இயக்குனர் ஷங்கரின் உறவினரான இவர் ஷங்கர் தயாரித்த காதல், அனந்தபுரத்து வீடு உள்ளிட்ட படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்தவர்.
இவர் முதன்முறையாக இயக்கும் படத்துக்கு கண்பேசும் வார்த்தைகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. நகைச்சுவைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது.
முதல்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் சிங்கப்பூரில் நடக்க உள்ளது. தஞ்சை, திருவாரூரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இப்படத்தில் நாயகனாக செந்திலும், நாயகியாக வாகை சூட வா இனியாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் இளவரசு, மதுமிதா, சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்
 

மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் இலங்கை தூதரகம் அப்புறப்படுத்தப்படும்! வேல்முருகன் எச்சரிக்கை



வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படை இனியும் தாக்குதல் நடத்தினால் தமி ழ்நாட்டில் இலங்கைத் தூதரகம் அப் புறப்ப டுத் தப்படும் ௭ன்று தமிழக வாழ்வுரிமைக் கட் சியின் நிறுவுனர் வேல்முருகன் ௭ச்சரி த்து ள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியி ட் டி ருந்த அறிக்கையில்,

தமிழக மீனவர்கள் தங்களது பாட்டன் முப் பாட்டன் காலத்திலிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த கடற்பரப்பில் தான் தற் போ தும் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், 1974 ம் ஆண்டு ஜூன் 28 ம் திகதியன்று கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த நாள் முதல் கடந்த 30 ஆண்டுகாலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி வருகிறது.
கச்சதீவு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பற் றிய கேள்வி ௭ழுந்தபோது பாராளுமன்ற த் தில் பதிலளித்த அந்நாளைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், தமிழக மீன வ ர்களின் மீன்பிடி உரிமையை கச்சதீவு ஒப்பந்தம் மூலம் விட்டுக்கொ டுத்துவிட வி ல்லை ௭ன்று பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால் 1976 ம் ஆண்டு இந்திய வெளி யுறவு செயலராக இருந்த கேவல்சிங்குக்கும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் வி.டி. ஜெயசிங்கேவுக்கும் இடையே கடிதப் பரிமா ற்றங்களில் இந்த உரிமை பறிகொ டுக்கப்ப ட்டுவிட்டது.

கச்சதீவை இலங்கைக்கு தாரைவா ர்த்த தால் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற் படையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
ஒவ் வொரு நாளும் வாழ்வாதாரம் தேடிப் போகும் மீனவர்கள் உயிரோடு மீண்டும் கரை க்குத் திரும்புவோமா ௭ன்ற உத்தரவா தமின்றி நடுக்கடலில் தவியாய் தவிக் கி ன் றனர்.

இது தொடர்பில் தமிழ்நாட்டின் அனை த்து அரசியல் கட்சிகளும் கூப்பாடு போட்டு கண்டனம் தெரிவித்த போதும், மத்திய அரசு தமிழனின் உயிரை மதிக்கத் தயாராக இல்லை.

இதனிடையே, தமிழக மீனவர்கள் பார ம்பரியமாக மீன்பிடிக்கும் மன்னார் வளைகுடா வில் ௭ண்ணெய் அகழாய்வுப் பணி க் காக சீனாவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது இல ங்கை அரசு.
இதேபோல் மன்னார் வளை குடா உட்பட தமிழர்கள் மீன்பி டிக் கும் கடற்பரப்பில் இலங்கைக்கு கடல் வழியிலோ அல்லது நிலவழியிலோ ௭ந்தத் தொடர்புமே இல்லாத சீனர்களுக்கும் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
சமீ ப த்திலும் திருகோணமலை கடற் பரப் பில் கைது செய்யப்பட்ட சீன மீனவர்களை ராஜ மரியாதையுடன் நடத்தி விடுதலை செய் திருக்கிறது இலங்கை அரசு.

இந்த செயற்பாடுகள், ௭திர்காலத்தில் மன் னார் வளைகுடாவில் முற்று முழுதாகவே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது ௭ன் ப தையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ௭ச் ச ரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், தமிழக மீனவர்கள் மீது இல ங் கைக் கடற்படை தாக்குதல் நடத்துவது ௭ன்பது நீடிக்குமேயானால் தமிழகத்தை விட்டே இலங்கை தூதரகத்தை அப்பு றப் ப டு த் துவதற்கான அனைத்து நடவடி க்கைக ளி லும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஈடுபடும் ௭ன்று குறிப்பிட்டுள்ளார்

செம்பியன்பற்றில் மக்கள் குடியிருப்புக்கு நடுவில் பாரிய புதிய இராணுவ முகாம்! பிரதேசெம்பியன்பற்றில் மக்கள் குடியிருப்புக்கு நடுவில் பாரிய புதிய இராணுவ முகாம்! பிரதேச மக்கள் அச்சம்ச மக்கள் அச்சம்



வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் செம்பியன்பற்று கிராமத்தின் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று கிராமத்தின் நடுப்பகுதியில் புதிதாக இராணுவத்தினர் பாரிய படைமுகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர்.
இந்த படைமுகாமில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் கடற்படையினரின் பாரிய முகாமும், 500 மீற்றர் தூரத்தில் இராணுவ தலைமைப்பீட முகாமும் ஏற்கனவே அமைந்துள்ள நிலையில் இப்பகுதியில் இப்புதிய முகாம் அமைக்கப்பட்டு வருகின்றது.
புதிய இராணுவ முகாம் அமைக் கப்பட்டுவரும் பகுதி மக்கள் செறிந்து வாழும் பகுதியாகும்.
இப்பகுதி கடற்றொ ழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பகு தியாகும்.
இந்த நிலையில் அவர்கள் தொழி லுக்குச் செல்லும்போது பெண்களே வீடு களில் தங்கியிருப்பர். இதனால் மக்கள் பல அசெளகரியங்களையே சந்திக்கவேண்டும் ௭ன இப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
வ டபகுதியில் தற்போது இராணுவ படை முகா மிற்கு பல நில ஆக்கிரமிப்புக்கள் நடை பெற்று வருகின்றன. இதனை தவிர்க்குமாறு பலரும் பல அமைப்புக்களும் கோரிவரு ம் நிலையில் படையினர் இதைக் காதில் வாங்காது இவ்வாறு செயற்பட்டு வருகி ன் றனர் ௭ன்றும் மக்கள் விசனம் தெரி விக் கி ன்றனர்.
படைமுகாம்கள் அமைப்பதாயின் மக்கள் குடியிருப்பில்லாத, மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் முகாம்களை அமைக்க வேண்டும் ௭ன்பது பலரது கோரிக்கையாகவும் உள்ளது.
இதனை கருத்தில் ௭டுக்காத படையினர் மக்கள் குடியிருப்புக்குள்ளேயே தமது நிலைகளை அமைத்து வருகின்றனர்.
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்றுப் பகுதி மக்கள் பல இடர்களைச் சந்தித்துத் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டுவரும் நிலையில் படையினரின் இந் நடவடிக்கை பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது

தண்ணீர் கூட அருந்தாமல் போராடும் ஈழத்தமிழர் செந்தூரனுக்கு தொடரும் அநீதி!- தமிழக அரசு மௌனம்

 
 வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன் நேற்றோடு 18 வது நாளாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ தமிழக அரசு விரும்பவில்லை.
அவரையும் அவரோடு இருக்கும் அனைத்து முகாம் வாசிகளையும் அரசு விடுதலை செய்து திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்பதே செந்தூரனின் கோரிக்கை.
நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அரசு விரும்பவில்லை.
இதுதொடர்பாக கியூ பிரிவு கண்காணிப்பாளர் (எஸ் பி) சம்பத் குமார் அவர்களை சந்திக்க, சிறப்பு முகாம் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் அவரது அலுவலகம் சென்றனர்.
இக்குழு கூறியதாவது,
எங்களை வரச் சொல்லிவிட்டு , இரண்டுமணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். பின்பு இறுதி வரை சம்பத் குமார் எங்களை சந்திக்க வரவே இல்லை. அதனால் நாங்கள் கடிதம் எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.
நாங்கள் வெளியே வந்ததும் எஸ் பி எங்களிடம் தொலைபேசியில் பேசினார். செந்தூரனை போராட்டம் நடத்துவதை கைவிடச் சொல்லுங்கள். நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டேன் என்கிறார் என்று கூறினார். ஆனால் செந்தூரனின் போராட்டத்திற்கு எந்த பதிலும் கூற அவர் தயாராக இல்லை.
இவ்வாறு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் கூறினர்.
இன்று செந்தூரனை சந்தித்து பேசிய தாசில்தார் வளர்மதி மற்றும் துணை மாவட்ட ஆட்சியாளர் செந்தூரனின் கோரிக்கையை நாங்கள் அரசுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு சென்றனர்.
அப்போது அரசின் காதுகளுக்கு இதுவரை இதுபற்றி தெரியவே தெரியாது போலும்.
இதற்கிடையில் இன்னொரு துயர சம்பவம் நடந்துள்ளது.
செந்தூரனை சந்திக்க இலங்கையில் இருந்து அவர் அத்தை வந்துள்ளார். செந்தூரனின் நிலையை கண்டு மனம் உடைந்துள்ளர். அவர் தங்கியுள்ள விடுதி மேலாளர்களை கியூ பிரிவு காவல் துறை மிரட்டி உள்ளனர். செந்தூரனின் சித்தப்பாவையும் மிரட்டி உள்ளனர்.
எல்லா நிகழ்வுகளையும் கவனித்த செந்தூரனின் அத்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் அத்தை நேற்று இறந்தே போனார்.
அத்தையின் இறந்த உடலை பார்ப்பதற்கு இப்போது செந்தூரன் காவல்துறையிடம் அனுமதி வேண்டி உள்ளார்.
ஒருவருக்கு இத்தனை சோகம் வரக் கூடாது. எவ்வகையிலும் ஆதரவற்ற இது போன்ற ஈழ ஏதிலிகளை சித்திரவதை செய்து இன்பம் காணுகிறது தமிழக அரசு மற்றும் காவல்துறை.
எளியோரை மென்மேலும் துன்பப்படுத்தி பார்ப்பது தான் அரசு இயந்திரந்தின் செயலாக இப்போது மாறிவிட்டதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.
 

சீபா உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது!- இலங்கை



வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 

இந்திய அரசாங்கத்துடனான சீபா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என இலங்கை இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உடன்படிக்கைக்கு இலங்கையில் ஏற்பட்ட எதிர்ப்புகளே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கடந்த 2000ம் ஆண்டு முதல் காணப்படுகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை, இந்தியாவை கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் இலங்கை வந்திருந்த இந்திய வர்த்தக துறை அமைச்சர், சீபா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பேசி இருந்தார்.

எனினும் இதனை ஆரம்பிப்பதில் இலங்கை அரசாங்கத்துக்கு நாட்டமில்லை என்று அவரிடம் அரசாங்க தரப்பில் கூறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த உடன்படிக்கையால், உள்நாட்டு வர்த்தக துறை பாதிப்படையும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே உள்நாட்டு சேவையாளர்கள் இதற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றனர்

ஓமானிலிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்யத் தீர்மானம்



வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 

இலங்கை எதிர்வரும் மாதங்களில் ஓமானில் இருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பிலான உடன்டிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓமானுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக நேற்;றைய தினம் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் சமர்ப்பித்திருந்த யோசனைக்கு ஒன்றுக்கு, அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரானிடம் இருந்து இலங்கை பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்கிறது.

ஏற்கனவே ஈரானிடம் இருந்து பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்த நிலையில், பின்னர் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மாத்திரம் விதிவிலக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கிளிநொச்சி SAS தனியார் வைத்தியசாலை கிணற்றில் இருந்து மர்ம வெடிபொருட்கள் மீட்பு

 வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 
கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் உள்ள SAS தனியார் வைத்தியசாலைக் கிணறு திருத்த வேலைகளின் போது கிணற்றில் இருந்து மர்ம வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை 25.08.2012 யாழ்ப்பாணம் ஜெயப்பூர் மையத்தினது ( Jaffna Jaipur Centre for Disability Rehabilitation ) வன்னி மக்களுக்கான இலவச செயற்கை கால் பொருத்தும் நிகழ்வு ஆரம்பிக்க இருந்ததன் நிமித்தம் SAS வைத்தியசாலை நிர்வாகத்தினர் கிணறு மற்றும் மலசல கூட திருத்தவேலைகளை இன்று துரிதப்படுத்தி செய்தனர்.
கிணற்றை இறைத்த போது கிணற்றின் அடியில் மர்ம வெடிபொருட்களை அவதானித்ததும் அவசர அவசரமாக 119 பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த பொலிசாரும் இராணுவத்தினரும் வெடிபொருள் அகற்றும் விசேட பிரிவினரும் அந்த மர்ம வெடிபொருட்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்தும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.