
Friday, 24 August 2012,
கொலிவுட்டில் விஷாலின் நடிப்பில் உருவாகி வரும் எம்.ஜி.ஆர் படத்தில் நடிகை சதா குத்தாட்டம் ஆடியுள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் அந்நியன் படத்தில் நடித்த சதா, நீண்ட நாட்களாக கொலிவுட் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.
பின்னர் பி.வாசுவின் புலிவேஷம் படத்தில் நடித்தாலும் அவருக்கு இப்படம் பெரிய வரவேற்பை பெற்றுத்தரவில்லை.
இதையடுத்து தற்போது இயக்குனர் சுந்தர்.சியின் எம்.ஜி.ஆர் படத்தில் விஷாலுடன் நடனமாட அழைப்பு வந்தது.
இந்த அழைப்பை ஏற்று சதா, விஷாலுடன் குத்தாட்டம் ஆடினார். இதைத்தொடர்ந்து குத்தாட்ட வாய்ப்புகள் சதாவுக்கு வர அனைத்தையும் மறுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது, விஷால் என்னுடைய நீண்ட கால நண்பர் என்ற காரணத்தினால் அவருடன் இணைந்து நடனமாடினேன்.
மற்றபடி, குத்தாட்டத்தை தொடரும் எண்ணங்கள் இல்லை என்று உறுதிபட தெரிவித்திருக்கிறார்.








