24.08.2012.பாலா இயக்கிய, "அவன் இவன் படத்தில் அறிமுகமான ஜனனி அய்யர், தற்போதுஸ்ரீகாந்துடன், "பாகன் படத்தில் நடித்து வருகிறார். அவரிடத்தில், "ஆரம்பத்தில்
நீங்கள் நிறைய, "கண்டிஷன் போட்டதாகக் கூறப்பட்டதே? என்று கேட்டதற்கு, "அது
என்னைப் பற்றி வெளியான வதந்தி. நான் யாரிடமும் கண்டிஷன் போடுவதில்லை. அப்படி செய்தால் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். நான் வீட்டில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும், "டைரக்டர்கள் என்ன சொல்கின்றனரோ... அதன்படி நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன், என்று சொல்லும் ஜனனி அய்யர், "கதைக்கு தேவையான அளவு கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராகி விட்டேன். அதனால், கமர்சியல் பட டைரக்டர்கள், தாராளமாக என்னை அணுகலாம் என்றும் அழைப்பு விடுக்கிறார்







