siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

பன்னாட்டுச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பன்னாட்டுச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 டிசம்பர், 2022

பெர்லினின் மையப்பகுதியில் 1500 உயிர்கள் துடிதுடித்து உயிரிழப்பு.

ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து சாலையில் நீர் சாலையில் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன.ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல்
 அமைந்துள்ளது.
இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மீன் தொட்டி உள்ளது. , இதில் 1,500 வகையான மீன்கள் வளர்க்கப்பட்டன.‘அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த தொட்டியில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த தொட்டி நேற்று அதிகாலை 6:00 மணிக்கு திடீரென
 உடைந்து சிதறியது.
வெப்பநிலை மைனஸ் 10 டிகிரிக்கும் குறைவாக சென்றதால் கண்ணாடி தொட்டியில் விரிசல் ஏற்பட்டு உடைந்ததாக கூறப்படுகிறது. மீன் தொட்டியிலிருந்து வெளியேறிய நீர், சாலையில் ஓடியது. இதில் இருந்த அரிய வகை மீன்களும் தரையில் விழுந்து 
துடிதுடித்து இறந்தன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 1 ஜூலை, 2022

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் அமெரிக்காவில் சாதனை

அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸ் தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் வெற்றி 
பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸின் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸில் இருந்து ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் ஒரு தீர்க்கமான ஆணையை வென்றார், அவரது எதிர் வேட்பாளரான அகமது நடத்திய பிரசாரத்தை வெற்றிகரமாக முறியடித்தார்.
இல்லினாய்ஸின் எட்டாவது காங்கிரஸ் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிருஷ்ணமூர்த்தி (48), ஜுனைத் அகமதுவை (71) சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் தோற்கடித்தார்.
இந்நிலையில் “எனது தொகுதி மக்கள் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பை விரும்புகிறார்கள். காங்கிரசில், நான் நடுத்தர வர்க்கத்தினருக்காகவும், பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்காகவும், பணவீக்கம் மற்றும் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகவும் இருக்கிறேன். வரும் முக்கியமான மாதங்களில் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க நான் தொடர்ந்து அயராது உழைப்பேன்” 
என்று கூறினார். 
அவர் 2017 முதல் இல்லினாய்ஸின் 8-வது காங்கிரஸ் மாவட்டத்திற்கான அமெரிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். புது டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை ராஜபாளையம். தாயார் தஞ்சாவூர். இவருடைய மனைவியும் தமிழ்நாடு தான். இவருடைய தந்தைக்கு அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைக்க,
 அங்கு சென்றனர்.
பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். மருத்துவமனை பொறுப்பாளராக இருந்த போது ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜா கிருஷ்ணமூர்த்தி 2004-ஆம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரசார ஆலோசகராக பணியாற்றினார்.
2008-ல் ஒபாமாவின் தனி ஆலோசகராக இருந்தார். 2007 – 2009 காலகட்டத்தில் இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராக இருந்தார்.
அவர், வரும் நவம்பர் 8-ஆம் திகதி பொதுத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் கிறிஸ் டர்கிஸை எதிர்கொள்கிறார். கடந்த மாதம்,
 அவரது சிறந்த தொழில் மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பை பாராட்டி அவருக்கு சிறப்புமிக்க தலைமைத்துவ விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 31 மே, 2022

அவுஸ்திரேலியாவில் இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையொருவர் அழகிப் போட்டியொன்றில் வெற்றி

இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையொருவர் அவுஸ்திரேலியாவின் அழகிப் போட்டியொன்றில் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் இலங்கை சிங்கள தொலைக்காட்சி நாடக நடிகையொருவர் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனிதா பெரேரா எனும் மாடல் அழகியே இவ்வாறு அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் ஸ்பெயினின் சான் ஜோஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சந்து கிரீடம் சூட்டவுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 20 மே, 2022

இலங்கையர் களமிறங்கும் அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டாட்சி தேர்தலில்

அவுஸ்திரேலியாவின் 47வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டாட்சி தேர்தலில் அவுஸ்திரேலியாவில் உள்ள Skullin தொகுதியில் இலங்கையர் ஒருவர் போட்டியிடுகிறார்.
மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரும் மொரட்டுவையை வதிவிடமாகவும் கொண்ட விரோஷ் பெரேரா அவுஸ்திரேலியாவில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
விரோஷ் வணிக மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
நாளை (21) தேர்தல் நடைபெற உள்ளது தான் ரே்தலில் போட்டியிடுவது தொடர்பில் விரோஷ் தெரிவிக்கையில், ‘
விக்டோரியா மாகாணத்திற்கு 38 லிபரல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் நானும் ஒருவன். எனது திறமைகள் மற்றும் தொழில்முறை திறன்களின் அடிப்படையில் நான் லிபரல் கட்சிக்கு மதிப்புமிக்க நபராக இருப்பேன் என்று நம்புகிறேன். கடந்த காலத்திலும் இதே எம்.பி.க்கள் குழுவே ஆசனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
நமக்கு மாற்றம் வேண்டும். ஸ்கல்லின் தொகுதியில் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதுடன், வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் குடும்பங்களின் சமூக மதிப்பைப் பாதுகாப்பது என்பவற்றை நான் செய்வேன் என நம்புகிறேன், ”என்று விரோஷ் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 17 மார்ச், 2020

கொரோனா வைரஸ் கட்டாரிலும் பரவுகின்றது கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளின் கீழ் கட்டார் மார்ச் 18 முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமை அடைப்பை அறிவித்துள்ளது.இதன்படி வருகைதரும் விமானங்கள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளன.பொதுப் போக்குவரத்துக்கள் உட்பட்ட அனைத்து பணிகளும் இடை நிறுத்தப்பட்டு 
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு பின்னர் நிலைமை ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.55 வயதானவர்கள், கர்ப்பிணி தாய்மார், சுவாசப்பிரச்சினை உடையவர்கள் 
வீடுகளில் இருந்தே பணியாற்ற 
அனுமதிக்கப்படுவர்.
அனைத்து பொது போக்குவரத்துக்களும் நேற்று முதலே மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. உணவு மற்றும் மருந்துகளுக்கு 6 மாத கால வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தெரிவு 
செய்யப்பட்டவர்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களில் இருந்து 6 மாத விலக்களிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 29 மே, 2019

அவசர அறிவிப்பு Whats-app பயனாளர்களுக்கு

hatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு, ஊடுருவல்காரர்கள் கண்காணிப்பு மென்பொருளைப் பொருத்தியதை WhatsApp 
உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனீட்டாளர்களே குறிவைக்கப்பட்டனர் என்றும், அந்த ஊடுருவல் நடவடிக்கை மிகவும் திறமையாகக் கையாளப்பட்டது என்றும் WhatsApp
 அறிவிததுள்ளது.
ஊடுருவல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, WhatsApp செயலியின் ஒரு குறைபாடு சரிசெய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செயலியை update அதாவது புதுப்பித்துக்கொள்ளுமாறு நேற்று WhatsApp அதன் ஒன்றரை பில்லியன் பயனீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டது.
உலகச்செய்திகள் 14.05.2019
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 15 மே, 2019

இலங்கையில் பிரித்தானிய மனைவிக்கு எமனாக மாறிய ஹொட்டல்

இலங்கைக்கு தேனிலவு சென்ற போது மனைவியை பறிகொடுத்த கணவன் அவரை மறக்க முடியாமல் இரவில் நட்சத்திரங்களைப் பார்த்து பேசிக் கொள்வதாக வேதனையுடன் கூறியுள்ளார்.லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா. 33 வயதாகும் இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் என்பவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 19ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.திருமணத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் தேனிலவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். கடந்த 25ம் திகதி உணவருந்திய தம்பதியினர் இருவரும் அங்கேயே 
மயங்கி விழுந்தனர். இதில் உஷிலா படேல் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.இந்நிலையில் அன்று நடந்த சம்பவத்தைப் பற்றி சந்தாரியா கூறுகையில், முதல் நாள் இரவில் தான் உணவு சாப்பிட்டோம். மறுநாள் காலையில் அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டாள்.மூன்று பேர் எங்களை மருத்துவமனையில் சேர்த்தனர். 
வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள். இங்கு இருக்கும் அதிகாரிகள் என்னை ஒரு குற்றவாளியாக நடத்துவதில்லை. என்றாலும் என்னைப் பாதிக்கப்பட்டவனைப்போலும் நடத்துவதில்லை.இந்த உலகம் முழுவதும் எனக்கு எதிராக இருப்பது போல் உணர்கிறேன். இருந்தாலும், அவளை விட்டு வரப்போவதில்லை என்று சோகமுடன் கூறியுள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் சந்தாரியாவுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்திருந்தது 
குறிப்பிடத்தக்கது.
உஷிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடல் வறட்சி மற்றும் வாந்தியின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மனைவியின் மரணத்துக்கு ஹோட்டலில் கொடுத்த உணவே காரணம் என சந்தாரியா குற்றம் 
சாட்டிய நிலையில், ஹோட்டல் நிர்வாகமோ சாண்ட்விட்ச், சிப்ஸ் இவர்கள் சாப்பிட்டனர்.கூடவே வோட்கா மற்றும் 
கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்தனர். அப்படி இருக்கையில் எங்கள் உணவு தரமானதாக இல்லை எனக் கூறுவதே ஏற்க 
முடியாது என ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 14 பிப்ரவரி, 2019

பத்து வழிகள் கனடாவிற்கு செல்ல விரும்புபவர்களுக்கு

காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...
கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள், கருத்தரங்குகளில் அறிந்துகொண்ட விடயங்கள் ஆகியவற்றை, உசாத்துணையாக கொண்டு பின்வரும் பத்து விடயங்களை சுருக்கமாக 
குறிப்பிடுகின்றேன்.
காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன.
தகவல்களையும் விண்ணப்பங்கள் போன்ற விடயங்களையும் இணையத்தளத்தினூடாகவும், மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கனடிய அரசின் பிரதிநிதித்துவ காரியாலயமாகவுள்ள கனடிய தூதரகங்கள் மூலமாகவும் விபரமாக பெற்றுக்
 கொள்ளலாம்.
1) தற்காலிக விசாப்பெற்று உல்லாசப் பிரயாணியாக பிரவேசித்தல்(Visiting by tourist Visa )
சில குறிப்பிட்ட, கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு மக்கள் தங்கள் நாட்டு கடவுச்சீட்டுடன் கனடாவிற்கு பிரயாணம் செய்வதற்கு எதுவிதமான விசாவும் முன்கூட்டியே பெறவேண்டிய அவசியம் இல்லை. கனடாவிற்கு வந்திறங்கிய இடத்தில் வைத்து ஆறு மாதத்திற்கு தற்காலிகமான விசா வழங்குவார்கள்.
உதாரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள், அவுஸ்திரேலியா, கொங்கொங் , ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்வான், என 51 நாடுகளை குறிப்பிடலாம்.
இலங்கை இந்தியா உட்பட ஏனைய நாட்டு மக்கள் இந்த வழியில் கனடாவிற்கு வர வேண்டுமானால், முற்கூட்டியே தமது நாட்டில் உள்ள கனேடிய தூதராலயத்திற்கு விண்ணப்பித்து தற்காலிக விசா பெற்றுக் கொள்ளவேண்டும்.
விசா வழங்க முன்பு கனேடிய தூதராலயம் பின்வரும் விடயங்களை கூர்ந்து பரிசீலனை செய்து கொள்ளும்
தற்போது மின்னஞ்சல் மூலமாகவும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். (ETA - Electronic Travel Authorization )
* தமது சொந்த நாட்டில் தொழில்,வடு,நிதியியல் ரீதியான சொத்துக்கள் குடும்ப உறவுகள் யாவற்றினையும் வைத்திருக்கும் ஒருவர் தற்காலிகமாக கனடாவிற்கு போய் குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பி வருவதே நோக்கம் என்பது நம்பக்கூடிய அளவிற்கு தூதராலய விசா அதிகாரிகளினால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
* ஆரோக்கியமான உடல் நிலை, குற்றவியல் பதிவு எவையும் இல்லாதிருத்தல் நிரூபிக்கப்படல் வேண்டும்.
* கனடாவில் தங்கப் போகும் இடம் அதற்குரிய நிதி நிலைமைகள் காட்டப்பட வேண்டும்.
உறவினர்கள், நண்பர்களுடன் தங்குவதாக இருந்தால் அவர்களின் விபரங்கள், நிதி நிலைமைகள், அவர்களின் ஆதரவுப் பத்திரம், மற்றும் அழைப்புக்கு கடிதம் (Letter of Invitation ) என்பன தேவை.
இங்கு இருவகையான விசாக்கள் வழங்கப்படும்.
1) ஒருமுறை மட்டும் பிரவேசிக்கும் விசா (Single Entry Visa) இது குறிப்பிட்ட ஆறு மாதங்களுடன் நிறைவடைந்து விடும்.
2) பலமுறை பிரவேசிக்கும் விசா (Multiple entry visa ) சுமார் பத்து வருடங்களு பலமுறை போய் வரலாம்.
ஒருமுறை சென்றால் ஆறு மாதங்களுக்கு மட்டுமே 
கனடாவில் தங்கி நிற்கலாம்.
2)கல்வி, தொழில் துறைகளின் திறமைசாலிகளுக்கு வழங்கும் விசா (Federal Skill worker visa )
பல்கலைப் பட்டப்பிடிப்புகளுடன் சேர்ந்த தொழித்துறை சார்ந்த புலமையாளர்களை ஏனைய உலக நாடுகளில் இருந்து கனடாவிற்கு குடிவருவதற்கான வழங்கப்படும் நிரந்தர குடியுரிமை விசாவே இதுவாகும்.
இங்கு கனேடிய குடிவரவு அமைச்சு பின்வரும் ஆறு விடயங்களை கருத்தில் கொண்டு, ஒரு புள்ளி விபர மதிப்பீட்டின் அடிப்படையில் நிரந்தர குடியுரிமை விசா வழங்குவது பற்றி முடிவு செய்கின்றது.
*கல்வி Maximum 25%
*கனேடிய மொழிகளில் ஒன்றில் திறமை (Skill in English or french ) 16-18%
*தொழில் அனுபவம் 9-15%
*வயது (Age ) Maximum 12% 18-35 வயதிற்கு இடைப்பட்டோர். மேலதிக ஒவ்வொரு வயதிற்கு ஒவ்வொரு புள்ளி 47 வயது வரை குறைக்கப்படும்.
* கனடாவில் உடனடியாக உகந்த தொழில்வாய்ப்பு 0-10%
* கிடைக்கும் ஆதரவுகள் & வாய்ப்புக்கள் மற்றும் ஆரம்ப நிலையில் பண வசதி
தற்போது உள்ள குடிவரவு ஒழுங்கு விதிகளின் படி 67% புள்ளிகள் கிடைத்தால் சாதகமான முடிவு கிடைக்கும்.
இவற்றில் இறுக்கங்கள் பல்வேறு காலங்களிலும் ஏ
ற்படுவது வழமையாகும்.
3) துறை சார்ந்த சிறப்பு தொழில் திறமையுள்ளவர்களுக்கு வழங்கும் நிரந்தர குடியுரிமை விசா
கல்வி தொழில் துறைகளில் திறமைசாலிகளுக்கு வழங்கும் நிரந்தர குடியுரிமை விசாவில் இருந்து இக் குடியுரிமை விசா சற்று வேறுபட்டது. அதாவது கல்வித் தகமை என்பது இங்கு பெரிதாக 
கருத்தில் கொள்வது இல்லை.
இங்கு குடியுரிமை விசாவினைப் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
*கைத்தொழில், மின்னியல்,இயந்திரவியல், கட்டிட துறைகள், சமையல்துறை, வேளாண்மைத்துறை, போன்ற துறைகளில் இரு வருடங்களிற்கு மேலாக முழுநேரமாக தொழில் செய்த 
அனுபவம் இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தொழில் துறை என்பது அரச துறை சார்ந்த நிறுவனங்களின் சான்றிதழ் பெற்ற தொழில் சார்ந்த நிபுணராக இருத்தல் வேண்டும்.
கனேடிய மொழிகளான ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளில் ஓரளவேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
*கனடாவில் வந்து சேர்வதற்கும் கால்ஊன்றுவதற்கும் ஓரளவிற்கேனும் ஆரம்பகட்ட நிதி வசதி இருக்க வேண்டும்.
4)கனடாவில் கல்விகற்கும் மாணவர்களுக்கான விசா
ஒவ்வொரு வருடமும் சுமார் 200,000 மாணவர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்தும் கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதற்காக வருகின்றனர் என்பது புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உட்பட பல்வேறு வகையான கல்வி நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களை 
அனுமதிக்கின்றன.
முதலில் இந்தக் கல்வி நிறுவனத்தில்? எந்த துறையில்? கல்வி பயில விரும்புகின்றீகளோ அந்த நிறுவனத்தில் அடர்க்குரிய கட்டணங்களை செலுத்தி அனுமதி பெறுதல் வேண்டும். அனுமதி அவரவர் நாடுகளின் கனேடிய தூதராலயங்களினூடாகவும் 
பெற்றுக்கொள்ளலாம்.
கனடாவில் வாள்பவரின் உதவி மூலமும் பெற்றுக்கொள்ளலாம். அனுமதியின் பின் அவர்களின் நாடுகளில் உள்ள கனேடிய தூதராலயத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கனேடிய தூதராலயம், விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் குறிப்பிட்ட துறையில் கல்வி பயில தகுதி, ஆர்வம் உட்பட,
 கல்வி கற்பதற்கு தான் செல்கின்றாரா? அவருக்குள்ள நிதி வசதிகள் என்பவற்றினை பரிசீலனை செய்து அவர்களின் நேர்முகப் பரீட்சையில் கனடா பாதுகாப்புக்கு ஆபத்து இல்லாதவர் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் விசா வழங்குவார்கள். கற்கை நெறியினை கனடாவில் முடித்தவர் அதே துறையில் தொழில் செய்யும் அனுமதி பத்திரம் பெற்று தாற்காலிகமாக தொழில் கிடைத்தால் தொழிலும் செய்யலாம்.
இரு வருடங்கள் கனடாவில் தொழில் செய்த பின்னர் நிரந்தர பதிவுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம். மூன்று வருட நிரந்தர வதியுரிமைக்கு பின்பு கனேடிய குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம்.
5) கனடாவின் மாகாண அரச வதிவிட நியமனங்களினூடாக பெரும் நிரந்தர வதியுரிமை
கனடாவுக்கு நிரந்தர வதியுரிமை பெற்று குடியேறும் வெளிநாட்டவர் எவரும் பொதுவாக தத்தமது வசதிகள் வாய்ப்புக்களுக்கு ஏற்றமாதிரி கனடாவின் எந்தவொரு மாகாணத்திலும் குடியேறலாம். மத்திய அரசு என்ற பேரரசின் கீழ் உள்ள சிற்றரசுகள் போல் பத்து மாகாணங்களும் மூன்று பிரதேசங்களும் தங்களுக்குரிய இறைமைகளுடன் ஆட்சி செய்கின்றன. இங்கு ஏனைய நாடு ஒன்றிலிருந்து குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் தொழில் செய்து அந்த மாகாணத்திலேயே நிரந்தரமாக குடியேறுவேன் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கும் நிரந்தர வதியுரிமை 
விசாவே இதுவாகும்.
ஒவ்வொரு மாகாண அரசும் இந்தப் பிற நாட்டவர்கள் குடியுரிமை விடயங்களில் தங்களுக்குரிய கொள்கை, திட்டங்களை தங்களின் தேவைகளுக்கு ஏற்றமாதிரி தாங்களே
 வகுக்கின்றன.
மாகாணங்களின் பொருளாதார வளர்சிக்காக வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களை பரவலாக்கம் செய்வதற்காக இத்தகைய வதிவுரிமை விசாக்களை கனேடிய அரசு வழங்குகின்றது. இங்கு முதலில் குறிப்பிட்ட மாகாண அரசிற்கு நேரடியாக விண்ணப்பித்து தங்களின் கல்வித் தராதரம், தொழித் திறமைகள் அனுபவங்களிற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். குடியேறப் போகும் மாகாணத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பு பின்வரும் விலாசத்திற்கு விண்ணப்பபங்களை அனுப்புதல் வேண்டும்.citizenship &immigration Canada
provincial Nominee Program
Centralized Intake Office
P.O .Box. 1450
Sydney, NS, B1P 6k5
Canada
அவருடைய நாட்டில் உள்ள கனேடிய தூதராலயத்தின் இறுதி பரிசீலனையில் பின்பு குடியுரிமை விசா வழங்கப்படும்.
கனடாவில் எந்த மாநிலத்தில் குடியேறலாம் என அங்கீகாரம் கிடைத்ததோ அந்த மாகாணத்தில் குடியேறி அவரின் வாழ்வினை ஆரம்பிக்கலாம்.
6) தனியார் வீடுகளில் தங்கி இருந்து தொழில் செய்யும் 
பணியாளர்களுக்குரிய விசா
கனடாவில் பல்வேறு வகையான வசதிகளோடு வாழ்பவர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருந்து, விட்டு வேலைகளுடன், குழந்தைகளை பராமரிப்பது, முதியோரை பராமரிப்பது, உடல் இயங்க முடியாதவர்களுக்கு உதவுவது போன்ற தொழில்களுக்கு எவராவது தேவைப்பட்டால் 
வழங்கப் போகும் சம்பளங்கள், சலுகைகள் எவ்வளவு 
என்ற சட்டரீதியான ஒப்பந்தங்களுடன் ஏனைய நாடு ஒன்றிலிருந்து வருவித்து இரு வருடங்களிற்கு கனடாவில் நியமனம் வழங்கிக் கொள்ளலாம்.
இரு வருடங்கள் தொடர்ந்து ஒரு வீட்டில் பணிபுரிந்தவர் இரு வருடங்களின் பின்பு நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து சில வருடங்களின் பின்பு நிரந்தர குடியுரிமையும்
 பெறலாம்.
குறிப்பிட்ட வேலைக்கு கனடாவில் இருந்து எவரையும் நியமனம் செய்ய முடியாதுள்ளது என்பதை மத்திய அரசிற்கு விண்ணப்பித்து உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அதற்குரிய உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டே ஏனைய நாட்டில் இருந்து பணியாளரை வருவிக்க முயற்சிக்கலாம்.
தொடர்ந்து ஏனைய நாடு ஒன்றிலிருந்து ஊதியம் வழங்கிப் பணியாளரை நியமனம் செய்யும் அளவிற்கு வலிமை உடையவர் என்பதும் அவருக்கு பணியாளர் ஒருவர் தேவை என்பதும் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சுக்கு விண்ணப்பித்து நிரூபிக்கும் போது தொழில் அனுமதி
 வழங்குவார்கள்.
தொடர்ந்து விண்ணப்பங்களை முன்னெடுக்கும் போது குறிப்பிட்ட தொழிலை கனடாவிற்கு சென்று பணியாற்றுவதற்கு பணியாளராக செல்பவர் தகுதியானவரா என்பதனை நேர்முகப் பரீட்சையின் போது அந்தந்த நாடுகளில் கனேடிய அரசின் பிரதிநிதியாக உள்ள தூதராலயங்கள் முடிவுபண்ணி விசாவினை வழங்கும்.
7) இன்னொரு நாட்டில் இருந்து பிள்ளைகளை சட்டரீதியாக தத்தெடுத்தல் .
சர்வதேச ரீதியாக தங்களின் பிள்ளைகளை போன்று இன்னொரு பிள்ளையை தத்தெடுத்து, அந்தப் பிள்ளையை கனடாவுக்கு எடுப்பது இன்னொரு வழியாகும். கனடாவில் வாழும் ஒருவர் இன்னொரு நாட்டில் இருந்து பிள்ளை ஒன்றினை சட்டரீதியாக தத்து எடுப்பது என்பது
 இன்னொரு கட்டம்.
கனேடிய மத்திய அரசு தத்து எடுப்பவர் குடியிருக்கும் மாகாண அரசு தத்து எடுக்கப் போகும் பிள்ளை பிறந்த நாட்டின் சட்ட திட்டங்கள், அவர்களின் நிபந்தனைகள், ஒழுங்குவிதிகள் எனப் பல படிமுறைகளில் அங்கீகாரங்களை பல்வேறு வகையான நிலைப்பாடுகளில் இருந்து இவ் விடயத்தில் பூரணமான வெற்றியினை அடையலாம்.
8) கனடாவில் அகதி அந்தஸ்து கோரல்
தமது சொந்த நாட்டில் போர் கால சூழல்களால் கொடுமைகள், துன்பங்கள், துயரங்களை எதிர்கொண்டு உயிர் வாழ அச்சமாக உள்ளவர் என்பது நிரூபிக்கப்பட்டு கனடாவில் அகதி நிலை கோரலாம்.
இவ்வாறு அகதி நிலை கூறுபவர்களை இரு 
வகையாக பிரிக்கலாம்.
1. கனடாவுக்கு வெளியே இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு கனடாவில் புகலிடம் கோருவது.
உதாரணமாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்
1. சிரியா போன்ற நாட்டில் உள்ள அகதிகளை கனேடிய அரசே பொறுப்பேற்று புகலிடம் வழங்கியது.
2. ஐந்துபேர் இணைந்து குழுவாக ஒரு அகதியின் புகலிடத்திற்கு 
ஸ்பொன்சர் செய்வது.
3. ஒரு நிறுவனம் அல்லது சமூகம் ஒரு அகதியின் புகலிடத்திற்காக ஸ்பொன்சர் செய்வது
2) கனடாவில் இருந்துகொண்டு அகதி நிலை கோருவது.
எதோஒரு வழியில் கனடாவிற்குள் வந்து சேர்ந்த தமிழர் பலர் கனடாவில் நிரந்தர வாழ்வினை அமைத்துக் கொண்டதனை இங்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
9) குடும்ப ஸ்பான்சர்
கனடாவில் நிரந்தரமாக குடியேறி தமக்கென ஒரு வாழ்வினை உருவாக்கிக் கொண்ட ஒருவர், ஏனைய நாடுகளில் இருக்கும் தங்கள் குடும்ப உறவுகளுக்கு பொன்சர் பண்ணி கனடாவிற்குள் அழைக்கு
ம் முறையே இதுவாகும்.
குடும்ப உறவுகளுக்கு பின்வருவோருக்கு 
ஸ்பொன்சர் செய்யலாம்
1. மனைவி அல்லது கணவன், பிள்ளைகளுக்கு செய்யும் ஸ்பொன்சர்
2.பெற்றோர் பேரன்மார்க்கு ஸ்பொன்சர் செய்தல்
3.தற்காலிகமாக பெற்றோர், பேரன்மார் சேர்ந்து வாழ வழங்கும் விரைவான சுப்பர் விசா
4. தகுதியான உறவினர்களுக்கு ஸ்பொன்சர். உதாரணமாக 1983 ஆம் ஆண்டு இலங்கையில் உருவான பாரிய இனக்கலவரம் உட்பட பல உள்நாட்டு கலவரங்கள், பாதிப்புக்குட்பட்டவர்களுக்கு இந்த வலியின் மூலம் மேற்கொண்ட ஸ்பொன்சர் பலருக்கு 
வெற்றியினை தந்தது.
10) வர்த்தகர்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் விசா
கனடாவில் குடியேறும் உலகம் எங்கும் வாழும் மிகப் பெரும் செல்வந்தர்களுக்கே இம்முறை சாதகமாக
 அமையலாம்.
வர்த்தக முதலீடு செய்ப்பவர் குறைந்தது இரண்டு கனேடிய மில்லியன் டொலர் பணத்தினை கனடாவிற்குள் கொண்டுவர வேண்டும்.
குடியேற விரும்புபவரின் தெரிய வருமானம் பத்து மில்லியனாக இருக்க வேண்டும் என்பது இவை தொடர்பான சட்டப்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமூலம் (Bill C -31) இந்த விசாவுக்கு
 தடை விதித்துளளது.


கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள் லண்டனில் : வீட்டினுள் புகுந்த பொலிசார்

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என  இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது. இன் நிலையில் அவர்கள் ஒரு வீட்டை குறி வைத்து அதனை நோட்டமிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொலிசார் வீட்டினுள் சென்று தேடிய வேளை அங்கே கஞ்சா இருக்கவில்லை. அதிர்சியடைந்த பொலிசார் வீட்டின் மேல் மாடியில் உள்ள லொஃப்ட்(பரன்) உள்ள இடத்தை பார்வையிட முற்பட்டுள்ளார்கள்.
 சிறிய கதவை மேலே தள்ளி உள்ளே சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அழகாக லைட் எல்லாம் பூட்டி, மிக நேர்த்தியாக மின்சார விளக்குகள், வெப்பத்தை தரும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா செடிகள் கொழு கொழுவென்று
 வளர்ந்து காட்சி தந்துள்ளது.
எதேட்சையாக இவர்கள் எதன் மேலோ காலை வைத்து, வயர் நசுங்கியதால் என்னமோ, சிறியதாக நெருப்பு பிடித்த காரணத்தால். ஏற்கனவே காய வைக்கப்பட்டிருந்த சில கஞ்சா தீ யில் கருகி புகை கிளம்பியுள்ளதாகவும். இதனை தற்செயலாக சுவாசித்த 2 பொலிசார்(ஒரு 
பெண் மணி உட்பட) சற்று தள்ளாடியவாறு வெளியேறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது போக அங்கே சித்தப்பா மற்றும் சித்திக்கு தெரியாமல் தமிழ் இளைஞர் ஒருவர் கஞ்சா வளர்த்து வந்துள்ளார்.
 இவர்கள் இருவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவே சில மணி நேரம் ஆகியுள்ளதாம். மருமகனா இப்படிச் செய்துள்ளான் என அறிந்து அவர்கள் திகைத்துப் போனார்கள் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர். உரும்பிராயில் இருந்து வந்து இப்படி செய்வான் என நான் நினைக்கவில்லை என்று அவர்கள் கடிந்துள்ளார்கள்.
இன்றைய கால கட்டத்தில், குறுக்கு வழியில் இலகுவாக பணம் சம்பாதிக்கவே சில தமிழ் இளைஞர்கள் முயற்ச்சி செய்து வருகிறார்கள். லண்டன் வந்து 20 ஆண்டுகள் ஆகியும் நேர்மையாக
 உழைத்து வாழ்க்கை நடத்தும் பல தமிழர்கள் உள்ளார்கள். ஆனால் நேற்று வந்த இளைஞர்கள் எல்லாம் அவுடி காரில் செல்ல ஆசைப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் காசை சம்பாதிக்க தேர்வு செய்யும் வழி தான் பிழையாக உள்ளது என்று தமிழ் ஆர்வலர் ஒருவர் கவலை
 வெளியிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்! பிரான்சிலிருந்து

மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.
பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 52 ஆண்களும் 3 பெண்களும் மற்றும் 5 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்களிடம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் , அவர்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கடந்த ஜனவரி 24ம் திகதி 72 பேருடன் சிலாபத்தில் இருந்து ஆழ்கடல் படகொன்றில் குறித்த நபர்கள் ரியூனியன் நோக்கி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 13 பிப்ரவரி, 2019

தமிழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்துக்கு வீடு அன்பளிப்பு

 ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான 2018ஆம் ஆண்டின் இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் உள்பட 12 வீராங்கனைகளுக்கும் இன்று புதிய வீடுகள் வழங்கிவைக்கப்பட்டன .
வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் மொறட்டுவயின் 
அமைக்கப்பட்ட சாயுராபுர வீடமைப்பு வளாகத்திலேயே இந்த 12 வீடுகளும் இலங்கை அணியின் வீராங்கனைகளுக்கு
 வழங்கிவைக்கப்பட்டன .
வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் இந்த வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன .
2018ஆம் ஆண்டு செப்ரெம்பரில் சிங்கப்பூரில் ஆசிய சாம்பியன்ஷிப் வலைபந்தாட்டத் தொடர் நடைபெற்றது . இறுதிப் போட்டி சிங்கப்பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்ளக விளையாட்டரங்கில் செப்ரெம்பர்
 9ஆம் திகதி நடைபெற்றது .
இதில் இலங்கை அணி 69 – 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்து கொண்டுள்ளது .
இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ் . மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் இடம்பெற்றனர் .
ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம்  , எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெற்றனர் . தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெற்றமை இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தமிழுக்கு புதிய பெருமை கனடாவில் இரண்டாம் மொழியாக கற்பிப்பு..

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக கற்பிப்பு..! தமிழுக்கு புதிய பெருமை…!!
தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் 
வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.
இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், 
மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற 
நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், 
அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால்
 தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில்
 கற்பிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

பிரித்தானியாவில் தஞ்சமடைந்த தமிழ்ப் பெண் கதறியழுகின்றார்

அழகான குடும்பத்தை பிரித்து விடாதீர்கள் இலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்ணை சொந்த நாட்டுக்கு செல்லும்படி உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.இலங்கையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (71). இவர் மனைவி சுஷிதா (63). தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், பாலசுப்ரமணியம் கடந்த 1994-ல் பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.அவருக்கு அப்போது 
அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
இதன்பின்னர் அவரின் நான்கு பிள்ளைகளும் சில ஆண்டுகள் கழித்து பிரித்தானியா வந்த நிலையில் அவர்களுக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.இதையடுத்து பாலசுப்ரமணியத்தின் மனைவி சுஷிதா கடந்த 2014-ல் துணைவியாருக்கு வழங்கப்படும் விசா மூலம் பிரித்தானியாவுக்கு வந்தார்.பின்னர் இருவரும் தங்களின் மகன் மோகனதாஸ் (35) உடன் வசித்து வந்தனர்.தனது பிள்ளை மற்றும் பேர குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுப்பது, வீட்டு உதவிகளை செய்வது போன்ற விடயங்களை 
இருவரும் செய்து வந்தனர்.
இந்நிலையில், தனது விசாவை புதுப்பிக்க சுஷிதா 2016-ல் விண்ணப்பித்த நிலையில் அதை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.காரணம், உணவு தொழிற்சாலை மேலாளராக பணிபுரிந்த சுஷிதாவின் கணவர் பாலசுப்ரமணியம் பணிஓய்வு பெற்ற நிலையில் அவரால் போதிய வருமானத்தை ஈட்ட முடியாது என்பதால், மனைவியான சுஷிதா அவருடன் தங்கமுடியாது என கூறப்பட்டுள்ளது.
து குறித்து சுஷிதா கூறுகையில், எனக்கு உடல்நலம் சரியில்லை, என் மொத்த குடும்பமும் இங்கு தான் உள்ளது. இலங்கையில் என்னை கவனித்து கொள்ள யாருமில்லை.பிரித்தானியாவில் செளகர்யமாக இருக்கிறேன். என் பேர பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக
 உள்ளது என கூறியுள்ளார்.
சுஷ்மிதாவின் மகன் மோகனதாஸ் கூறுகையில், என் அம்மாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவர் தனியாக தான் வாழ வேண்டும். நான் இங்கே செட்டில் ஆகிவிட்டேன். என்னால் அடிக்கடி இலங்கைக்கு சென்று தாயை பார்த்து கொள்ள முடியாது.என் பெற்றோர் என் வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் எந்தவொரு சலுகைகளையும் பெறவில்லை.நான் அவர்களை கவனித்துக் கொள்வேன், வயதானவர்களை எப்படி அனுப்புவது? என கூறியுள்ளார்.
இவர்களின் குடும்ப வழக்கறிஞர் நாக கந்தையா கூறுகையில், இது ஒரு சோகமான வழக்கு, புலம்பெயரும் முறையின் கடுமையான உண்மைகளை இது காட்டுகிறது. குடும்பங்கள் ஒன்றாக இருக்க 
வேண்டும் என்பதே என் எண்ணம்
இதுபோல கடுமையான சட்டங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் முதியவர்கள் அதிகளவில் தங்கள் குடும்பத்தை பிரிந்திருப்பதை தான் காண வேண்டும் என கூறியுள்ளார்.உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தனிப்பட்ட வழக்கு
 குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை.சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, இது குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 25 டிசம்பர், 2018

நிலநடுக்கம்:இத்தாலியில் வெடிக்கத் தொடங்கிய எட்னா எரிமலை

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் தெற்கு பகுதியில் சிசிலித் தீவில் உள்ளது.
நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் அங்கு லேசனா நிலநடுக்கம் ஏற்பட்டமையைத் தொடர்ந்து எட்னா எரிமலை 
வெடிக்க ஆரம்பித்தது.
எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட
 தகவல் ஏதும் இல்லை.
எட்னா எரிமலை வெடிப்பு குறித்து இத்தாலியின் பூகோளவியல் மற்றும் எரிமலைகள் பற்றிய தேசிய ஆய்வு நிறுவனம்
 கூறியுள்ளதாவது;
எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 10 டிசம்பர், 2018

இலங்கை சிறுமிக்கு ஐரோப்பிய நாடொன்றில் நேர்ந்த துயரம்88-

இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
 நேற்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சிறுமி வசித்து வந்த குளியலறையுடன் இணைந்தவாறு காணப்பட்ட ஆடை உலர்த்தும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்த போதே குறித்த சிறுமியும் அதனுடன் சேர்ந்து தவறி விழுந்துள்ள 
உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வெரோனா நகர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 குறித்த சிறுமி தனது பாட்டி, தாத்தாவுடன் இலங்கையில் கல்வி கற்று வந்த நிலையில், விசாவை புதுப்பித்துக்கொள்வதற்காக கடந்த ஜுன் மாதம் இத்தாலியிலுள்ள தனது பெற்றோரிடம் சென்றதாகவும் ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் பாடசாலை செல்லும் நோக்குடன் இலங்கைக்கு திரும்பி வர​விருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 1 நவம்பர், 2018

சீனா தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு ஆபத்தா. கனடாவை எச்சரித்த

கனடாவில் வாழும் தமது பிரஜைகளை கஞ்சா பயன்பாட்டிலிருந்து விலகியிருக்குமாறு சீனா அரசாங்கம் எச்சரித்துள்ளது.
கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அண்மையில் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அண்மையில் கனடா வெளியிட்டுள்ளது.
உலகிலேயே முதன்முதலாக கஞ்சாவை வியாபாரமயமாக்கியுள்ள நாடாக கனடா விளங்குகிறது.
பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கஞ்சா பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே சீனா அரசாங்கம் அங்கு வாழும் சீன பிரஜைகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, கனடாவில் புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களும் அதிகம் வாழுகின்றனர். இந்நிலையில் புதிய சட்டத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்து இளைஞர், யுவதிகள் பாதிப்படையக் கூடிய அபாய நிலை உள்ளதாக தமிழ் சமூகம் கவலை 
வெளியிட்டுள்ளது.
இலங்கையில் யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர்கள் வாழும் பகுதியில் போதைப்பொருள் காரணமாக பல்வேறு குற்றச்செயல்கள் தீவிரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </

புதன், 18 ஏப்ரல், 2018

கால்பந்து போட்டி தொடக்க விழாவில் புகுந்த கரடி.பங்கேற்ற காட்சி

ரஷ்யாவில் கரடி ஒன்று கால்பந்து போட்டிக்கான தொடக்க விழாவில் பங்கேற்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் மாஸ்கோ நகரில் மாசூக் கே.எம்.வி அணிக்கும், அங்குசாட் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி
 நடைபெற்றது.
இதன் தொடக்க நிகழ்ச்சியின் போது, பயிற்சி பெற்ற டிம் என்ற கரடி அழைத்து வரப்பட்டது. பார்வையாளர்களை நோக்கி, தனது முன்னிரு கால்களை தட்டி ஒலி எழுப்பிய டிம் பின்னர், பந்தை நடுவரிடம் வழங்கி போட்டியை
 தொடங்கி வைத்தது.
இந்த காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய் பார்க்கப்பட்டு வருகிறது. இதே நேரத்தில் கரடியை கட்டாயப்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்ததாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி
 உள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் நாளை ஆபத்து

 ஞாயிற்றுக்கிழமை.01.04.2018. , சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர்ப்பு விசை காரணமாக தனது 
பாதையில் இருந்து விலகி வருகிறது. வரும் ஞாயிறு அன்று பெரும் அக்கினிப் பிழம்போடு அது எரிந்த வண்ணம் பூமியில் விழ உள்ளது.
இதன் மொத்த எடை சுமார் 9 தொன் ஆகும். சீனாவினால் உருவாக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக இது பூமிக்கு மேல் விண் வெளியில் சஞ்சரித்து வந்தது. ஆனால் அது மெல்ல மெல்ல தனது
 பாதையை இழக்க ஆரம்பித்தது. 2011ம் ஆண்டு இதனை மீண்டும் அதன் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டு வரும் கடைசி முயற்ச்சியில் சீன விஞ்ஞானிகள் இறங்கினார்கள். இருப்பினும் அதுவும் தோல்வியை தழுவிய நிலையில்.
தற்போது வரும் ஞாயிறு காலை 11.30 மணிக்கு(லண்டன் நேரப்படி) அது பூமி மீது வீழ உள்ளது. இதனால் பல நகரங்கள் மேல் துண்டுகள் வந்து விழ வாய்புகள் உள்ளது. லண்டன் , மும்பாய், பாரிஸ் றோம், மற்ரிட், என்று சுமார் 12 நகரங்கள் மேல் இதன் துண்டுகள் விழும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது./
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 3 நவம்பர், 2017

தமிழ் மொழி. கனடா பள்ளிகளில் இரண்டாம் மொழியாக படிக்கலாம்!

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.
Prime Minister Trudeau attends TamilFest in Scarborough. August 26, 2017. //// Le premier ministre Trudeau participe au TamilFest, à Scarborough. 26 août 2017.
தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் .
தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>



திங்கள், 23 அக்டோபர், 2017

பிரான்சில் இருந்து இலங்கை வந்த 10 வயதான சிறுவன் பிரான்ஸ் - லியோனில் பகுதியில் உயிரிழந்துள்ளார்.

 
விடுமுறை காலப்பகுதியில் பிரான்சில் இருந்து இலங்கை வந்த 10 வயதான சிறுவன் பிரான்ஸ் - லியோனில் பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் இலங்கைக்கு வந்திருந்த காலப்பகுதியில் திக்வெல கடற்கரையில் வைத்து வெறி நாய் கடித்துள்ளது. இதனை சிறுவனின் பெற்றோர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், நாடு திரும்பிய குறித்த சிறுவன் நோய்வாய்ப்பட்டதை அடுத்து கடந்த 4ஆம் திகதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, சிறுவனின் இரத்த மாதிரியை சோதனை செய்த பஸ்தர் நிறுவனம், குறித்த சிறுவனுக்கு வெறிநாய் கடித்து ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.
மேலும், குறித்த சிறுவன் மூலம் பிரான்ஸ் நாட்டிற்குள் ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்று தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் 
தெரிவித்துள்ளன.