லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது. இன் நிலையில் அவர்கள் ஒரு வீட்டை குறி வைத்து அதனை நோட்டமிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொலிசார் வீட்டினுள் சென்று தேடிய வேளை அங்கே கஞ்சா இருக்கவில்லை. அதிர்சியடைந்த பொலிசார் வீட்டின் மேல் மாடியில் உள்ள லொஃப்ட்(பரன்) உள்ள இடத்தை பார்வையிட முற்பட்டுள்ளார்கள்.
சிறிய கதவை மேலே தள்ளி உள்ளே சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அழகாக லைட் எல்லாம் பூட்டி, மிக நேர்த்தியாக மின்சார விளக்குகள், வெப்பத்தை தரும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா செடிகள் கொழு கொழுவென்று
வளர்ந்து காட்சி தந்துள்ளது.
எதேட்சையாக இவர்கள் எதன் மேலோ காலை வைத்து, வயர் நசுங்கியதால் என்னமோ, சிறியதாக நெருப்பு பிடித்த காரணத்தால். ஏற்கனவே காய வைக்கப்பட்டிருந்த சில கஞ்சா தீ யில் கருகி புகை கிளம்பியுள்ளதாகவும். இதனை தற்செயலாக சுவாசித்த 2 பொலிசார்(ஒரு
பெண் மணி உட்பட) சற்று தள்ளாடியவாறு வெளியேறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது போக அங்கே சித்தப்பா மற்றும் சித்திக்கு தெரியாமல் தமிழ் இளைஞர் ஒருவர் கஞ்சா வளர்த்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவே சில மணி நேரம் ஆகியுள்ளதாம். மருமகனா இப்படிச் செய்துள்ளான் என அறிந்து அவர்கள் திகைத்துப் போனார்கள் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர். உரும்பிராயில் இருந்து வந்து இப்படி செய்வான் என நான் நினைக்கவில்லை என்று அவர்கள் கடிந்துள்ளார்கள்.
இன்றைய கால கட்டத்தில், குறுக்கு வழியில் இலகுவாக பணம் சம்பாதிக்கவே சில தமிழ் இளைஞர்கள் முயற்ச்சி செய்து வருகிறார்கள். லண்டன் வந்து 20 ஆண்டுகள் ஆகியும் நேர்மையாக
உழைத்து வாழ்க்கை நடத்தும் பல தமிழர்கள் உள்ளார்கள். ஆனால் நேற்று வந்த இளைஞர்கள் எல்லாம் அவுடி காரில் செல்ல ஆசைப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் காசை சம்பாதிக்க தேர்வு செய்யும் வழி தான் பிழையாக உள்ளது என்று தமிழ் ஆர்வலர் ஒருவர் கவலை
வெளியிட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக