siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 11 டிசம்பர், 2020

திடீரெனச் உலகளாவிய ரீதியில் செயலிழந்த சமூக ஊடகங்கள்..

உலகளாவிய ரீதியில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெஸன்ஜர் ஆகியன செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செயலணிகள், செயலிழந்துள்ளதாக 
பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 52 வீதமான பயன்பாட்டாளர்களுக்கு தகவல்களை 
பரிமாறிக் கொள்வதில் சிரம நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செயலணிகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் 
அறிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 5 நவம்பர், 2020

நடந்த திடீர்த் திருப்பம்..ஒட்டுமொத்தமாக கலைந்து போனஅதிபர் ட்ரம்ப் கனவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலை வகித்த சில மாகாணங்களில் கடைசி கட்டத்தில் பிடன் அதிரடியாக வெற்றிபெற்றார். இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்ப் கடும் விரக்தியில் இருக்கிறார்.
இந்த தேர்தலில் தொடக்கத்தில் டிரம்ப் முன்னிலை வகிப்பது 
போல இருந்தது. குடியரசு கட்சிக்கு ஆதரவான 
மாகாணங்களில் வென்ற டிரம்ப்.. ஜனநாயக கட்சிக்கு ஆதரவான தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வந்தார்.அதிலும் டெக்சாஸ் மாகாணத்தில் 38, புளோரிடாவில் 29 இடங்களை மொத்தமாக 
டிரம்ப் அள்ளினார். பல இழுபறி மாகாணங்களில் டிரம்ப்தான் முன்னிலை வகித்தார்.இந்த நிலையில்தான் இரவோடு இரவாக டிரம்ப் முன்னிலை வகித்த இடங்களில் எல்லாம் பிடன் வென்று
 இருக்கிறார். டிரம்ப் தொடக்கத்தில் முன்னிலை வகித்த விஸ்கான்சிஸ் மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பிடன் வென்றுள்ளார்.
ந்த திடீர் திருப்பம் ஏற்படுவதற்கு காரணம்.. தபால் வாக்குகள். விஸ்கான்சிஸ் மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் முதலில் டிரம்ப்தான் முன்னிலை வகித்தார். ஆனால் போக போக தபால் வாக்குகளில் பிடன்
 முன்னிலை வகிக்க தொடங்கினார். அதிலும் விஸ்கான்சிஸ் மாகாணத்தில் வெறும் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பிடன் வெற்றிபெற்றார்.
இன்னொரு பக்கம் மிச்சிகன் தொகுதியில் 1
 லட்சம் தபால் வாக்குகளால்.. பிடன் திடீரென வெற்றிபெற்றார். பிடன் தொடக்கத்தில் இங்கு 45 வாக்குகளில் பின்னடைவை 
சந்தித்து இருந்தார். ஆனால் கடைசியில் வந்த தபால் வாக்கு 
எண்ணிக்கை தேர்தல் முடிவை இரவோடு இரவாக புரட்டி போட்டது. இதுதான் டிரம்ப் தற்போது கோபம் அடைய காரணம்.பறிபோகிறது.இதைதான்.. என்னுடைய வாக்குகள், வெற்றி எல்லாமே காணாமல் போகிறது என்று டிரம்ப் கூறியுள்ளார். வெற்றிக்கு அருகில் வந்து
 தோல்வி அடைவதால், டிரம்ப் விரக்தியில் இருக்கிறார். தபால் வாக்குகள்தான் இந்த தேர்தலில் கேம் சேஞ்சராக உள்ளது. இதனால்தான் மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்று டிரம்ப் கோரிக்கை வைத்து வருகிறார்.
அதேபோல் இன்னொரு பக்கம் பென்சில்வேனியா,
 ஜார்ஜியா போன்ற மாகாணங்களில் இன்னும் முடிவு
 வரவில்லை. இங்கும் தபால் வாக்குகள்தான் அதிகம் பதிவாகி உள்ளது. இந்த தபால் வாக்குகள்தான் இனி முடிவை 
தீர்மானிக்கும்.இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியினர்தான் அதிகமாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த தபால் டிரம்பிற்கு எதிராக செல்ல வாய்ப்புள்ளது.
இதனால் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி 
அடையவும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான் டிரம்ப்.. இந்த வாக்குகளை எண்ணகூடாது என்று கோரிக்கை 
வைத்துள்ளார்.தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள்
 மட்டுமே பெற்றுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>




ஞாயிறு, 25 அக்டோபர், 2020

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாதாம்

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த
 விரும்புகிறது என பதில் சுகாதார சேவை 
பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர். திரு.சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை 
தெரிவித்துள்ளார். மேலும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 5 அக்டோபர், 2020

விண்வெளிக்குச் செல்லும் 169 கோடி ரூபா மதிப்பில் அதிநவீன கழிவறை

உலக நாடுகள்.பெரும் வியப்பில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது.தற்போது பரிசோதனை நோக்கில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ள இந்த கழிவறை எதிர்காலத்தில் நிலவுக்கு 
மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசாவால் பயன்படுத்தப்படலாம்.பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகள் அனுப்பப்படும் பொழுது 23 மில்லியன் டாலர் (சுமார் 169 கோடி இந்திய ரூபா) மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கழிவறையும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கு முந்தைய கழிவறை மாதிரிகளை போலல்லாமல், இந்த கழிவறை பெண் விண்வெளி வீரர்களுக்கு எளிமையானதாக இருக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாசா 
தெரிவித்துள்ளது.புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், மனித உடலிலிருந்து கழிவுகளை உறிஞ்சி எடுக்கும் வகையில் இந்தக் கழிவறை வடிவமைக்கப்பட்டுள்ளது.விண்வெளி 
வீரர்களின் தனியுரிமை கருதி, பூமியில் இருக்கும் ஒரு பொதுக் கழிவறையைப் போலவே இந்தக் கழிவறையும் சுற்றிலும் மூடப்பட்டிருக்கும்.சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகளை கொண்டு செல்லும் கலன் வியாழனன்று வர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவிலிருந்து ஒரு ராக்கெட் மூலம் புறப்பட இருந்தது.எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது புறப்பட இருந்ததற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னர் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.சரக்குகளை சுமந்து 
செல்லும் இந்த விண்கலத்துக்கு இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையை போற்றும் வகையில் எஸ்.எஸ். கல்பனா சாவ்லா என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகள் முற்றிலும் சரி செய்யப்பட்டு, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை இந்த ராக்கெட் கிளம்பியது.அக்டோபர் 5ஆம் திகதி, திங்கட்கிழமை இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்று சேரும் என்று நாசா தெரிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 12 ஆகஸ்ட், 2020

நியூசிலாந்தில் முற்றாக கட்டுப்படுத்திய தேசத்தில் மீண்டும் கொரோனா

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளார்.உலகையே 
உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பெப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி
 செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தியதன் விளைவாக நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அந்நாட்டில் 1,219 பேருக்கு
 கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் மட்டுமே 
சிகிச்சை பெற்று வந்தனர். எஞ்சியோர் அனைவரும் குணமடைந்தனர்.சிகிச்சை பெற்றுவருபவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்து வந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் நாட்டின் எல்லையிலே
 தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால், கொரோனா நாட்டுக்குள் பரவும் சங்கிலித்தொடரை தகர்த்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் தெரிவித்திருந்தார்.இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியதற்காக உலக நாடுகள் நியூசிலாந்து அரசுக்கு வாழ்த்துக்கள்
 தெரிவித்து வந்தன.
இதற்கிடையில், நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என நேற்று முன்தினம் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், 102 நாட்களுக்கு 
பிறகு நியூசிலாந்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டின் ஒக்லாந்தில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒக்லாந்தில் வசித்துவந்த 50 வயது நிரம்பிய நபர் உடல்நலக்குறைவு காரணமாக
 மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார். அங்கு அவருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் 50 வயது நிரம்பிய நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நபரின் குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் மேலும், 3 பேருக்கு கொரோனா பரவியிருப்பது தெரியவந்தது.இதனால், அதிர்ச்சியடைந்த 
சுகாதாரத்துறை அதிகாரிகள் வைரஸ் உறுதி செய்யப்பட்ட 4 பேரையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உள்ளூர்வாசிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒக்லாந்து முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் அறிவித்தார்.நகரம் முழுவதும் 3 ஆம் கட்ட எச்சரிக்கை 
அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 2 ஆம் கட்ட எச்சரிக்கை அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளதால், நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு 
வருகின்றனர்.


திங்கள், 4 மே, 2020

மிகக் குறைந்த மரணங்களின் எண்ணிக்கையை எட்டிய பிரித்தானியா

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 229 பேர் மரணித்துள்ளதாக mirror.co.uk. செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலந்தில் 204 பேரும், வேல்ஸில் 14 பேரும், வட அயர்லாந்தில் 6 பேரும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள் 28,675 ஆக உயர்ந்துள்ளது
.இதேவேளை இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணித்த 54 பேரில், 40 – 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 -79 வயதுக்கு உட்பட்ட 19 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட 33 பேரும் வயது அடிப்படையில் உள்ளடங்குவதாக NHS இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வைத்தியசாலையால் திருப்பி அனுப்பபடவர் வீட்டில் மகனின் சிறப்பான செயற்பாட்டினால் எழுந்து நடந்தார்

வட்பேட்(Watford -UK) நகரில் வாழ்ந்து வந்த சூரிக்கு 81 வயது ஆகிறது. அவர் தனது மனைவி காஞ்சனாவுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் அவரையும் கொரோனா தாக்கியது. இதனால் அவர் பாதிக்கப்பட்டு, வட்பேட்டில் உள்ள வைத்தியசாலைக்கு 
கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை சில நாட்கள் மட்டுமே பராமரித்த மருத்துவர்கள்.கடந்த 26-04-20ம் திகதி அவரது மகன் ராஜ்ஜை அழைத்து, உங்கள் தந்தைக்கு வெண்டிலேட்டர் பொருத்த முடியாது. அவரது நுரையீரல் தாங்காது. எனவே அவரை வீட்டுக்கு 
அழைத்து செல்வது என்றால், நீங்கள் கூட்டிச் செல்லலாம் என்று கூறியுள்ளார்கள். (மறைமுகமாக அவர் இறக்கப் போகிறார் என்பதனை தெரிவித்துள்ளார்கள்.)
இதேவேளை வட்பேட் மருத்துவமனையில் உள்ள முன்னணி, மருத்துவ ஆலோசகர் ஒருவர் உங்கள் தந்தையை 95,5 % விகிதம் காப்பாற்றுவது கடினம் என்றும். அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்து போன குடும்பம். இறுதி நாட்களில் ஆவது வீட்டில் தங்கி இருக்கட்டும் என்று 
அழைத்துச் செல்ல தீர்மானித்தார்கள். ஆனால் மகன் ராஜ் வேறு ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமானார்.
 அவர் அப்பாவை ஜமனின் கைகளில் தாரைவார்த்து கொடுக்க தயாராக இல்லை. எப்படி என்றாலும், அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்று சபதம் பூண்டார்.முதலில் ராஜ், வீட்டை சுத்தம் செய்து அப்பாவுக்கு என்று ஒரு  
அறையை ஏற்பாடு செய்தார். வீட்டிற்கு
 வெளி ஆட்கள் வருவதை தடை செய்து முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அப்பாவை 24 மணி நேரமும் கவனிக்க google spreed sheet பாவிக்க ஆரம்பித்தார். அனைத்து விடையங்களையும் அதில் போட்டு ஷியார் செய்தார். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, 
சீராக காற்றை வைத்திருக்கும் இயந்திரத்தை (continuous positive airway pressure) வீட்டிற்கு கொண்டு வந்தார். 
அப்பாவை படுக்கவைத்து அதனை முகத்தில் மாட்டி விட்டார். தொடர்சியாக கவனித்து, தேவையான மருந்துகளை கொடுத்தும் வந்தார். அனைத்து குடும்பத்தினரும், நேரத்தை பங்கு போட்டு அப்பாவை கவனித்து கொண்டார்கள்.ஏப்பிரல் மாதம் 26 அன்று பிழைக்க மாட்டார் என்று வைத்தியசாலையால்
 திருப்பி அனுப்பப்பட்ட சூரி, நேற்று எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார். ஆம் 81 வயதில் மேலதிக சில நோய்களால் ஏற்கனவே அவர் பீடிக்கப்பட்டு இருந்தார். ஆனால், கொரோனாவில் இருந்து அவர் முற்று முழுதாக மீண்டு விட்டார் என்று நேற்று குடும்பத்தார் அறிவித்துள்ளார்கள். மன
 வலிமையும் விடா முயற்ச்சியும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சமும் இருந்தால், இன் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்று, இந்த முதியவர் எமக்கு ஒரு மன தைரியத்தை ஏற்படுத்தி
 இருக்கிறார் இன்று.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


துருக்கியில் உடல்நிலை சரியில்லாத குட்டியை கவ்வியபடி மருத்துவமனைக்கு வந்த பூனை

உலகில் தாய்ப்பாசத்துக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை, இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை துருக்கியைச் சேர்ந்த பூனை ஒன்று 
நிகழ்த்திக் காட்டியுள்ளது.
துருக்கியில், தாய்ப்பூனை ஒன்று தனது குட்டிப் பூனைக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் தவியாய் தவித்துள்ளது. இதனால், மனிதர்களைப் போலவே அந்த தாய்ப்பூனை தனது 
குழந்தை பூனைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் குணப்படுத்துவதற்கு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு வந்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றி ட்விட்டரில் மெர்வ் ஆஸ்கன் என்பவர் பதிவிட்டிருந்தார்.
அதில், “நாங்கள் மருத்துவமனையின் எமர்ஜென்சி
 வார்டில் இருந்தபோது, ஒரு பூனை தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தது, நாங்கள் அந்த பூனையை நெருங்கியபோது அது குட்டியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு 
பாவமாக பார்த்தது.
அப்போது பரிசோதித்ததில் பூனையின் குட்டிப்பூனைக்கு உடல்நிலை சரியில்லை என்பது எங்களுக்கு தெரியவந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் பூனையை மிகவும் பாசத்தோடு மருத்துவர்கள் அரவணைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இக்காட்சி இணையத்துல் பலரையும் மனம் 
உருக வைத்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 8 ஏப்ரல், 2020

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய 
மாற்று வீதங்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை 
விலை 200.4 ரூபாவாக பதிவாகியுள்ளது.இந்த
 வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை ரூபாவின் பெறுமதி 9.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 17 மார்ச், 2020

கொரோனா வைரஸ் கட்டாரிலும் பரவுகின்றது கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளின் கீழ் கட்டார் மார்ச் 18 முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமை அடைப்பை அறிவித்துள்ளது.இதன்படி வருகைதரும் விமானங்கள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளன.பொதுப் போக்குவரத்துக்கள் உட்பட்ட அனைத்து பணிகளும் இடை நிறுத்தப்பட்டு 
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு பின்னர் நிலைமை ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.55 வயதானவர்கள், கர்ப்பிணி தாய்மார், சுவாசப்பிரச்சினை உடையவர்கள் 
வீடுகளில் இருந்தே பணியாற்ற 
அனுமதிக்கப்படுவர்.
அனைத்து பொது போக்குவரத்துக்களும் நேற்று முதலே மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. உணவு மற்றும் மருந்துகளுக்கு 6 மாத கால வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தெரிவு 
செய்யப்பட்டவர்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களில் இருந்து 6 மாத விலக்களிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 மார்ச், 2020

நுரையீரலை ஆய்வு செய்த அமெரிக்க மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சீனப் பிரஜை ஒருவரின் நுரையீரலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மவுண்ட் சினாய் உடல் பரிசோதனை வைத்தியர்கள் குறித்த சீன பிரஜையை ஸ்கான் செய்தவேளை அவருக்கு கொரோனா 
தாக்கம் ஏற்படாத நிலையில் அறிக்கைகள் வெளியாகின.ஆனால், அவரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்தியர்கள் அவதானித்த நிலையில் அவரின் நுரையீரலில் சில மாற்றங்கள் தெரிந்தன
.அதிக தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரின் நுரையீரலை ஸ்கான் மூலம் ஆராய்ச்சி செய்தபோது அதில் வைரஸ் பரவி வருவதை காணக்ககூடியதாக இருப்பதை வைத்தியர்கள் அவதானித்த
 நிலையில் அதனை 
புகைப்படங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை இருவாரங்கள் சோதனை செய்தபோதே 
இவ்வாறு அவரின் நுரையீரலில் வைரஸ் வளர்ந்திருப்பதை அவதானிக்க
 முடிந்தது.அதேவேளை இவ்வாறான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா நோயாளி ஒருவரை தனிமைப்படுத்தி அவருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கலாம் என அ
வர் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 8 ஜனவரி, 2020

பின்லாந் நாட்டு மக்களுக்கு அடித்தது அதிஷ்டம். நான்கு நாட்கள் மட்டும் வேலை

பின்லாந்தின் பிரதமர் இனி தன் நாட்டு மக்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறார்.இளம் வயதிலேயே பின்லாந்தின் பிரதமராகியுள்ள Sanna Marin (34), தன் நாட்டு மக்கள் குடும்பத்துடன் அதிக நேரம்
 மகிழ்ச்சியுடன் செலவிட வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.அத்துடன், நாளொன்றிற்கு பணியாளர்கள் ஆறு மணி நேரம் வேலை செய்தால் போதும். இப்படி செய்தால் ஒருவேளை
 உற்பத்தி பாதிக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஏற்கனவே ஸ்வீடன் 2015ஆம் ஆண்டிலேயே நாளொன்றிற்கு 
ஆறு மணி நேரம் வேலை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது.aவிளைவு, பணியாளர்களின் மகிழ்ச்சி மற்றும் வசதியுடன், உற்பத்தியும் அதிகரித்தது. அதேபோல், Microsoft Japan நிறுவனமும் கடந்த
 நவம்பரில் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை திட்டத்தை அறிமுகம் செய்தது.அந்த நிறுவனத்திலும் உற்பத்தி 39.9 சதவிகிதம் அதிகரித்ததைக் காணமுடிந்தது.
தற்போது, பின்லாந்து பிரதமரும், தன் நாட்டு மக்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தையும், பணியாளர்கள் நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் வேலை செய்யும் திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>