siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 30 நவம்பர், 2012

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் பலி

 
மட்டக்களப்பு, வாகனேரி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் இறந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
119- 120 ஆவது மைல் கல்லுக்கு இடைப்பட்ட பகுதியில், நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 33 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதிலேயே இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மின்சாரக் கம்பமொன்று உடைந்திருந்த பகுதியொன்றிலுள்ள மலையொன்றைக் கடந்து தொப்பிகல பிரதேசத்துக்கு செல்ல முற்பட்ட போதே மேற்படி யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது?


ஈரான் தனது சொந்த தயாரிப்பான நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்களை வெளி உலகிற்கு காட்டியுள்ளது. இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஹேர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வின் போது, 2 காதிர் ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
காதிர் ரக நீர்மூழ்கி கப்பல்கள் ஒரே நேரத்தில் ஏவுகணைகளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்கமுடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் ஈரானானது மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டை தயாரித்து வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரமொன்றும் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே சந்தேகம் கொண்டுள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடனான ஈரானின் உறவை இது மேலும் சீர்குலைக்கலாம்{புகைப்படங்கள்,}

போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கில் அதிகாரிகள் விடுவிப்பு

போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் மற்றும் அவரது சகாக்கள் இருவரை சர்வதேச நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. கொசாவா முன்னாள் பிரதமரும், கொசாவா விடுதலைப்படை முன்னாள் தளபதியுமான ரமூஸ் ஹரடினாஜ் மற்றும் இவரது சகாக்களான இத்ரிஸ் பலாஜ், லாஹி பிராஹிமாஜ் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் புரிந்ததாக தி ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தனிநாடு கோரி போராடிய அல்பேனிய கொரில்லா படையினருக்கும், செர்பிய படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
அப்போது செர்பியர்களையும், அல்பேனியர்கள் அல்லாதவர்களையும் கொன்றதாகவும், சித்ரவதை செய்ததாகவும் ஹரடினாஜ், இத்ரிஸ் பலாஜ் ஆகியோருக்கு எதிராக 6 போர்க் குற்ற வழக்குகளும், லாஹி பிராஹிமாஜ் மீது 4 போர்க்குற்ற வழக்குகளும் பதிவாகின.
இந்த வழக்கின் மறுவிசாரணையில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி மூவரையும் விடுதலை செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்ச் நுரையீரல் நோயால் கடும் அவதி

அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவனர் அசாஞ்ச். இவர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயார் நிலையில் இருந்த போது, சுவீடன் நீதிமன்றத்தில் அசாஞ்ச் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே இங்கிலாந்தில் தங்கியிருந்த அசாஞ்சை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார் அசாஞ்ச்.
பல மாதமாக தூதரக கட்டிடத்திற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் அவரது உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
மருத்துவரை வரவழைத்து சிகிச்சை கொடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவருக்கான அனைத்து சிகிச்சை செலவையும் ஈக்வடார் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது அசாஞ்சே நுரையீரல் கோளாறால் மிகவும் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து நாட்டிற்கான ஈக்வடார் தூதர் அனா ஆல்பின் கூறுகையில், அசாஞ்சே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்.
இது எந்த நேரத்திலும் மேலும் மோசமான நிலையை அடையலாம். முழு மருத்துவ செலவுகளையும் ஈக்வடார் அரசாங்கமே ஏற்றுள்ளது.
மருத்துவர்கள் தினமும் சென்று அவருடைய உடல்நிலையை சோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

ஆசிட் ஊற்றி முகத்தை சிதைத்த கணவன்: வங்கதேச பெண்ணின் சோக கதை

வங்கதேசத்தில் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்த கணவனுடன் மறுபடியும் குடும்பம் நடத்தும் வேதனைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் பெண் ஒருவர். வங்கதேசத்தின் ஷக்திரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நூர்பானு. இவர் கடந்த 18 வருடங்களாக தனது கணவரிடம் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வந்தார்.
இதனால் மனம் வெறுத்துப் போன இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதை அறிந்து கோபமடைந்த இவரது கணவர் மனைவி முகத்தில் ஆசிட் வீசினார்.
இதில் நூர்பானுவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன. பார்வை நரம்புகள் சேதமடைந்ததால் பார்வை பறிபோனது. முகமும் அகோரமாகிப் போனது. இந்த நிலையில் நூர்பானுவுக்கு விவாகரத்து கிடைத்தது.
மனைவி மீது ஆசிட் ஊற்றிய பின்னர் 10 மாதம் தலைமறைவாக இருந்து வந்த நூர்பானுவின் கணவரை, பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வருடம் சிறையில் இருந்த அவரை அவரது தாயார் ஜாமீனில் வெளியே அழைத்து வந்தார்.
அதன் பிறகு நூர்பானு, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு அவரது மாமியார் மிரட்டியும், வற்புறுத்தியும், வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார்.
இதனால் மறுபடியும் நரகத்திற்குத் தள்ளப்பட்ட நூர்பானு, தற்போது மறுபடியும் அதே அடி உதையுடன் கஷ்டத்தில் சிக்கியுள்ளாராம்.
இவரது நிலை குறித்து விஎஸ்ஓ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆவணப் படமாக தயாரித்துள்ளது.{புகைப்படங்கள்,}

வியாழன், 29 நவம்பர், 2012

மிட் ரோம்னிக்கு விருந்து கொடுத்தார் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற மிட் ரோம்னிக்கு ஜனாதிபதி ஒபாமா மதிய விருந்து கொடுத்தார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஒபாமா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் ஒபாமா வெற்றி பெற்ற பின்பு ஆதரவு தருவதாக கூறினார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகை விருந்துக்கு ரோம்னி அழைக்கப்பட்டு இன்று நடந்த விருந்தில் கலந்து கொண்டார்.
விருந்தில் ரோம்னி- ஒபாமா இருவர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு பயன் உள்ளதாக இருக்கும் விடயங்களைப்பற்றியே பேசியதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜெய்கார்னி தெரிவித்தார்.

கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 54ஆக உயர்ந்தது

சிரியாவில் இரு கார் வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 54 பேர் பலியாயினர், 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக புரட்சிபடையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஜராமனா நகரில் கிறிஸ்தவ ட்ரூஸ் இன சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இங்கு 2 கார் வெடிகுண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென வெடித்ததில் அப்பகுதியில் இருந்த 20 பேர் பலியாயினர்.
குறுகலான சாலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்களின் மீது விழுந்ததாகவும், எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் இடிபாடுகளுக்கு இடையே சிதறி கிடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குண்டுவெடிப்பில் 20 பேர் இறந்ததாக முதலில் கூறிய சிரியா மனித உரிமைகள் அமைப்பு, பின்னர் 54 பேர் இறந்ததை உறுதி செய்தது, 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஜராமனாவில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 4 முறை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.{காணொளி, புகைப்படங்கள்}







கண்டம் விட்டு கண்டம் பாயும் பாகிஸ்தானின் ஏவுகணை

 
அணு ஆயுதங்களை சுமந்து சென்று 1300 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்ககூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கோரி என்றழைக்கப்படும் ஹத்ஃப்-5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் தடுப்புத்திறன் மற்றும் தேசியப் பாதுகாப்பை இச்சோதனை வலுப்படுத்தி உள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இந்த ஆண்டில் மட்டும் 60 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த ஹத்ஃப்-9 முதல் ஹத்ஃப்-4 வரை பல்வேறு அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.{காணொளி,}



பயணிகளின் பொருட்களை திருடிய 13 பேர் கைது

பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை திருடியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ரோஸி சார்லஸ் டி கவ்லி விமான நிலையம் உள்ளது.
இங்கு ஜோக்னஸ்பர்க், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய பகுதிகளிலிருந்து விமானங்களில் வரும் பயணிகளின் பெட்டிகள் கிடங்கில் அடுக்கி வைக்கப்படும்.
இந்த கிடங்கில் கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கமெரா இல்லாத ஒதுக்கு புறமான பகுதிகளில் உள்ள பெட்டிகளிலிருந்து நகைகள், துணிகள், தோல் பொருட்கள் போன்றவை திருடு போனது தெரியவந்தது.
இத்திருட்டு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகம் எழுந்த மற்ற 9 பேரின் வீடுகளில் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள், அவர்களையும் கைது செய்தனர்

வடகொரியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்

வடகொரியாவுக்கு எதிரான தீர்மானம் முதன் முறையாக வாக்கெடுப்பின்றி ஒருமனதாக ஐ.நாவில் நிறைவேறி உள்ளது. ஆள் கடத்தல் மற்றும் இதர விதிமீறல்கள் தொடர்பான பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வடகொரியாவை வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையின் மூன்றாவது குழுவிடம் வருவதற்கு 8 ஆண்டுகள் ஆன போதிலும், வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேறியது இதுதான் முதன் முறையாகும்.
எனினும் சீனா, கியூபா மற்றும் வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை

புதன், 28 நவம்பர், 2012

பாட்டு கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொலை??

பாட்டை சத்தமாக வைத்து கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில் நகரில் ஷாப்பிங் செய்ய மைக்கேல் டன்(வயது 45) என்ற தொழிலதிபர் தன் மனைவியுடன் வந்திருந்தார்.
அப்போது அதிகளவு சத்தம் போட்டு கொண்டு கறுப்பின வாலிபர்கள் சிலர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தனர்.
உடனே சத்தத்தை குறைக்கும் படி கூறினார், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.
கோபமடைந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியை எடுக்கவே, இதை பார்த்த டன் துப்பாக்கியை பிடுங்கி சரமாரியாக வாலிபரை நோக்கி 10 முறை சுட்டார்.
இதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவத்துக்கு பிறகு டன் அங்கிருந்து தப்பி சென்றார். ஆனால் கண்காணிப்பு கமெரா மூலம் அவரை பொலிசார் பிடித்தனர்.
இறந்த வாலிபர் டேவிஸ் என்பதும், கைது செய்யப்பட்ட டன் வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

பொருளாதாரம் திடீரென சரிவடையலாம்: OECD நிறுவனம் எச்சரிக்கை

 
கனடாவின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ள போதிலும், சில பின்னடைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக OECD என்ற சர்வதேச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பான OECD சர்வதேச அளவிலான பொருளாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, கனடாவுக்கு அதிர்ச்சியூட்டும் பொருளாதார தாக்குதல்கள் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டில் இருந்தும் உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் 2013ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலும் பொருளாதார வளர்ச்சியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதத்தில் கனடாவின் பொருளாதாரம் 15 சதவிகிதம் வளர்ச்சி பெறும். இது 2013ஆம் ஆண்டில் 1.8 சதவிகிதமாகவும், 2014ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.4 சதவிகிதமாகவும் மாறலாம் என்றும் OECDயும், கனடா மத்திய வங்கியும் கருதுகின்றன.
இருப்பினும் OECD அமைப்பு, சர்வதேச நாடுகளோடு ஒப்பிடுகையில் கனடாவின் வளர்ச்சி விகிதம் 34 நாடுகளை விட கூடுதலாகவே உள்ளதாக தெரிவித்தது.
இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பின்பு உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் சரிவு நிலை தோன்றும் என்றும் எச்சரித்துள்ளது

வடகொரியாவின் இளம் தலைவர் தான் உலகிலேயே செக்ஸியான மனிதர்: ?

உருண்டை முகத்துடன் இருக்கும் வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜாங் தான் உலகிலேயே செக்ஸியான மனிதர் என்று சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் தான் இந்த ஆண்டின் செக்ஸியான மனிதர் என அமெரிக்காவின் “The Onion" அறிவித்துள்ளதாக சீனாவை சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இளமையானவர், அழகானவர், உருண்டை முகம் கொண்டவர், துடிப்பானவர், உறுதியானவர்.. என எல்லா பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக கிம் ஜாங் விளங்குகிறார் என்று கமென்ட்டும் அடித்திருக்கிறது.
தனது இணையதளத்தில் 55 பக்கங்களுக்கு கிம் ஜாங்கின் விதவிதமான படங்களையும் வெளியிட்டிருக்கிறது.
உண்மையாகவே கிம் ஜாங்குக்கு இப்படியொரு பட்டத்தை The Onion மீடியா நிறுவனம் வழங்கியதா என்பது பற்றி தகவல் இல்லை.
சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு நடத்தும் பத்திரிகையில் இதுபோன்ற செய்திகள் வருவது இது முதல்முறை அல்ல.
அமெரிக்க நாடாளுமன்றத்தை வாஷிங்டனில் இருந்து இடம் மாற்றப் போகிறார்கள், வேறு இடம் பார்த்து வருகிறார்கள் என்று சீன அரசு நடத்தும் பீஜிங் ஈவ்னிங் நியூஸ் இதழில் 2002ம் ஆண்டு பரபரப்பான பொய் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது

இந்தோனேஷியாவில் கடுமையான நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின

இந்தோனேஷியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 56 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின, சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
டுவால் நகரில் இருந்து 157 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கடியில் 12 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், 6.3 ரிக்டர் அளவில் உருவாகும் என்றும் இந்தோனேசிய ஆய்வு மையம் முதற்கட்ட தகவலை வெளியிட்டிருந்தது.
இருப்பினும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசியா அறிவித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டனர்

கார்த்திகை விளக்கீட்டை அனுஷ்டிப்பதற்கு இந்துக்களுக்கு தடை!


இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27ம் திகதியன்றே இம்முறை குமாராலய தீபமும் வருவதால்தான் இந்த தலையீட்டையும் தடைகளையும் இந்துக்கள் எதிர்நோக்குவதாக அவர் கூறுகின்றார்.குமாராலய தீப நாளிலும் அதனை அடுத்த சர்வாலய தீப நாளிலும் இந்துக்கள் தமது வீடுகளில் தீபம் ஏற்றுதல் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடு செய்தல் வழக்கம்.
இம்முறை அவற்றைத் தடுக்கும் வகையில் இராணுவத்தினராலும் காவல் துறையினராலும் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து தனது கவனத்திறகு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி காவல் துறை துணை மா அதிபர் ஆகியோரை சந்தித்து நேரில் முறைப்பாடு செய்ய திங்கட்கிழமை சென்றிருந்த போதிலும சந்திக்க முடியாத நிலையில் எழுத்து மூலம் அவர்களின் கவனத்திற்குதான் தெரியபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளுக்கு தடை என்று பாதுகாப்பு தரப்பினர் அறிவித்திருந்தனர்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

ஜேர்மனியில் ஊனமுற்றோர் தொழிற்சாலையில் தீ விபத்து: 14 பேர் பலி (வீடியோ இணைப்பு)

ஜேர்மனியில் ஊனமுற்றோர் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். ஜேர்மனியின் பிளாக் பாரஸ்ட் என்னுமிடத்தில் உள்ள டிடிசீ நியூஸ்டட்டில் ஊனமுற்றோருக்கான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு 120 ஊனமுற்றோர்கள் மர மற்றும் இரும்பு சம்பந்தமான வேலைகள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த மீட்பு படையினர், அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.


பெண் வீராங்கனைகள் மீது பாலியல் தாக்குதல்: அவுஸ்திரேலிய

அவுஸ்திரேலிய இராணுவத்தில் இளம் இராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகள் மீது பாலியல் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டதற்கு அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அரசின் சார்பில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
அவர் கூறுகையில், இராணுவத்தில் இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் சக இராணுவத்தினரால் பாலியல் ரீதியாகவோ அல்லது உடல் மற்றும் மன ரீதியாகவோ துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தால் அதற்காக அரசு சார்பில் வருத்தம் தெரிவிக்கின்றேன் என்றார்.
மேலும் இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுகளை உயரதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததை ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு தலா 52 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லென் ராபர்ட் ஸ்மித் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட உள்ளது. இத்தகவலை தி ஆஸ்திரேலியன் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது

திங்கள், 26 நவம்பர், 2012

இங்கிலாந்தில் கனமழை: 800க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த கனமழையால் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன, மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் டேவிட் கமரூன் டுவிட்டரில், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான  அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் {புகைப்படங்கள்},

இருமல் மருந்து குடித்த 12 பேர் பலி: பாகிஸ்தானில்

கலப்பட இருமல் மருந்து குடித்த 12 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் லாகூர் அருகே ஷதாரா நகரம் உள்ளது. இங்குள்ள கடைகளில் இருமல் மருந்து 25 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இப்பகுதியை சேர்ந்த சிலர் போதைக்காக இருமல் மருந்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்று ஒரு கடையில் 20 பேர் இருமல் மருந்தை வாங்கி உட்கொண்டனர். இந்த மருந்தை குடித்த சில நிமிடங்களில் நான்கு பேர் இறந்து விட்டனர்.
மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
மேலும் ஏழு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலப்பட இருமல் மருந்தை உட்கொண்டதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக கூறப்படுகிறது.

தோல்வியில் முடிவதற்கு காரணம் காதலர்கள் தான் !


காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும், ஆணும், மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய்.
தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து தலித்துகளுக்கு எதிராக அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன
தான் காதல் திருமணங்களுக்கு எதிராக இல்லை.ஆனால், பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று வர்ணித்த ராமதாஸ், பெண்களுக்கு திருமண வயதை 21ஆக உயர்த்தினால்தான் அவர்கள் மன முதிர்ச்சியுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வரும் என்று கூறியிருந்தார்
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான பழமலய் , காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒரு ஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது என்றார்
இதன் மூலம், கலப்புத் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு அடிப்படையாக முன் வைத்த பெரியார் போன்றவர்களின் நிலைப்பாடு சரியல்ல என்கிறீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், மனிதர்கள் பிரதேச எல்லைகளையும், சாதிகளையும் கடந்து கலக்கத்தான் வேண்டும் என்றார். ஆனால் சாதிகள் தங்களது இருப்புக்காகவும், இட ஒதுக்கீடு பலன்களுக்காகவும், எண்ணிக்கையை பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கின்ற காலத்தில், சாதி விட்டு சாதி மாறி நடக்கும் திருமணங்களுக்கு எதிர்ப்பு இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிற காரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்
ஆயினும், தனது வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ள வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா என்று கேட்டதற்கு, இது தனிமனித உரிமை பேசுபவர்களின் வாதம் என்றார் பேராசிரியர் பழமலய்.
இந்தியாவில், தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, 18 வயதானவர்களுக்கு சமுதாயம் தந்துள்ள நிலையில், தங்களது சொந்த வாழ்க்கையில் தமக்கு விருப்பமானவர்களை தங்களது வாழ்க்கைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு மறுப்பது சரியா என்று கேட்டதற்கு, வாக்குரிமையையே சரியாகப் பயன்படுத்தாத சமூகம்தான் இந்தியச் சமூகம், மேலை நாடுகளில் காணப்படுவது போல கல்வியறிவும் முதிர்ச்சியும் அடையவில்லை என்றார் பழமலய்

தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்!


கல்லறைகள் முழுவதும் இடித்தழிக்கப்பட்டன. கோயில்கள், தெருகள் முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றனர். இத்தனையும் மாவீரர்களுடைய நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே.
அரசாங்கத்திற்கும், அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நன்றாக ஒரு விடயம் புரிந்திருக்கின்றது. எதனை அழித்தாலும், மக்கள் மீது எத்தகைய அடக்கு முறைகளை திணித்தாலும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர்களுடைய நினைவுகளை அழிக்க முடியாது.
ஏதோவொரு வழியில் மாவீரர்களுடைய நினைவுகளை மக்கள் அனுஸ்டிக்கவே போகின்றார்கள். அந்த வழிகளையும் முற்றாக மூடிவிடவேண்டும் என்றே படையினர் பகீரத பிரயத்தனம் எடுத்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு விடயத்தை அரசாங்கமும், அதன் காட்டுமிராண்டித்தனமான இராணுவ இயந்திரமும் புரிந்து கொள்ளத் தவறியிருக்கின்றது. அதாவது கடந்த 30வருடங்களில் 40ஆயிரத்திற்கு ம் மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
எனவே அந்த 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல இந்த மாவீரர்களுடன் சம களத்தில் நின்ற போராளிகள், நண்பர்கள், மனைவி, பிள்ளைகள் என ஒவ்வொரு தமிழனும் மாவீரர்களுடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றான். சிலர் அற்ப சலுகைகளுக்காக படையினருக்கும், அரசாங்கத்திற்கும் பின்னால் சென்றிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு மாவீரன் நெருக்கமான தொடர்பு இருக்கும். மாவீரர்கள் ஒன்றும் கூலிப்படை கிடையாது. அடக்கி, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அடையாளக் குறிகள். போராடினாலே வாழ்வென்றுரைத்த மூன்று தசாப்தங்களின் நிலைக்குறியீடுகள்.
கடைசி தமிழன் உள்ளவரையில் மாவீரர்களின் நினைவுகள் வாழும். மாவீரர்கள் பூசிக்கப்படுவார்கள். நடுகல் வழிபாடுகளின் தாய், தந்தையர்கள் நாங்கள். எங்கள் சொந்தங்களின் நினைவுகளைக் கொண்டாட முடியவில்லை.
எத்தனை அழிவுகள், இழிவுகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி மாவீரர்களுடைய கனவுகளையும், அவர் தம் நினைவுகளையும் சுமந்து கொண்டு கால்கடுக்க நடக்கின்றோம். அடைய வேண்டிய இலக்கினை நோக்கி.
நிச்சயமாக எங்கள் மாவீரர்கள் சிந்திய இரத்தத்திற்கும், அவர்கள் கொடுத்த உயிர் விலைக்கும் ஒரு விளைவு கிடைக்கும். தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்.
அந்த நம்பிக்கையோ, பிரிவினைகள், பேதங்கள் இல்லாமல் அந்த உத்தமர்களை நினைவில் கொள்வோம். மூச்சு மூடியும் கடைசித் தருணத்திலும் அவர்கள் உச்சரித்துக் கொண்ட தாரக மந்திரத்தை சொல்லிக் கொள்வோம்.
ஒரு நாள் அடிவானில் சூரியன் பிறக்கையில் இந்த இனம் விடுதலை பெற்று விட்டதாய் செய்தி வரும். அதற்காய் அஸ்த்தமன நேரத்தை ஒவ்வொரு நாளும் வேகப்படுத்திக் கொள்கின்றோம்{புகைப்படங்கள்,}

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மலாலாவுக்கு பிரித்தானியாவில் வீடு

தலிபான்களின் தாக்குதலுக்குள்ளாகி பிரித்தானியாவில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மலாலாவுக்கு அந்நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வீடு ஒதுக்கப்பட இருக்கிறது. கடந்த ஒக்ரோபர் 9ம் திகதி தலிபானியர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான மலாலாவுக்கு பிரித்தானியா அடைக்கலம் கொடுத்திருக்கிறது.
கடந்த மாதம் மலாலாவின் பெற்றோரும் அவரது சகோதரர்களும் பிரித்தானியா சென்றனர்.
இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை வரை போய் மலாலா சுடப்பட்ட 30வது நாளை மலாலா நாளாக கடைபிடிப்பதாகவும் அறிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, மலாலாவின் தந்தைக்கு பிரித்தானியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
தற்போது ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டிருப்பதால் பிர்மிங்ஹாமில் வீடும், வாகன வசதியும் வழங்கப்படுகிறது.
மலாலாவின் உடலில் இருக்கும் குண்டு அகற்றப்பட்ட பின்பு இந்த வீட்டில்தான் அவர்கள் வசிக்க இருக்கிறார்.
பாகிஸ்தான் அரசின் இந்நடவடிக்கையை பிரித்தானியா எம்.பி. காலித் மஹ்மூத் வரவேற்றுள்ளார்

பங்களாதேஷ் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து: 120 பேர் பலி

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ளே ஜவுளி தொழிற்சாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இந்த ஜவுளி ஆலை கட்டிடமானது 9 மாடிகளைக் கொண்டதெனவும் இதில் நூற்றுக்கணக்கானோர் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு பணியும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பங்களாதேஷிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இராணுவத்தில் இருந்து 6 பெண்கள் விலகினர் !BBC




இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்து தமிழ் பெண்கள் தப்பி ஓடியதாக முன்னர் வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

அதேவேளை, அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டதாகவும் வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

முன்னதாக, இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி, அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருந்தார்.

அலுவலகப் பணிகளுக்காக, கணினி பயிற்சிகளுக்காக என்று பொய்யாக கூறி சேர்க்கப்பட்ட தாம் இராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்று தெரிய வந்ததுடன் இராணுவத்தில் இருந்து விலக அந்தப் பெண்கள் கோரியதாகவும், ஆயினும் ஒரு நாள் வரை தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிறிதரன் எம்பி கூறியுள்ளார்.

முற்றிலும் இராணுவத்தினாலும், அதன் உளவுப் பிரிவினாலும் சூழப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மன்னார், துணுக்காய் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தப்பி ஓடியதாக வெளிவந்த செய்திகள் தவறு என்றும் சிறிதரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தான் உரிய இடங்களில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் சிறிதரன் தமிழோசைக்கு தெரிவித்தார்

உறுப்பினர்களை கொல்லச் சதி - கிழங்கு கறியில் சயனைட் நஞ்சு !

 

சிறிலங்கா நாடாளுமன்ற சமையற்கூடத்துக்கு அனுப்பப்பட்ட கோஹிலா கிழக்கில் சயனைட் நச்சுப்பொருள் கலந்திருந்தது, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்ற சமையற்கூடத்தில் சமைக்கப்பட்ட கோஹிலா கிழக்கு கறி, வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறத்தில் இருந்தது.
இதையடுத்து, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத கிழங்கு மாதிரிகள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையிலேயே, நாடாளுமன்ற சமையற்கூடத்துக்கு அனுப்பப்பட்ட கோஹிலா கிழங்கில் சயனைட் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற காவல்துறை பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அதிகளவில் பயன்படுத்தப்பட்ட உரம், அல்லது பூச்சிக்கொல்லியினால் கோஹிலா கிழங்கில் சயனைட் நச்சு ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது

சனி, 24 நவம்பர், 2012

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் !


மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தடைவிதிப்பது ஒரு மனிதவுரிமை மீறலாகும் என்பதை நெருக்கடிகளுக்கான சர்வதேச குழுவின் அறிக்கை புலப்படுத்துவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போரில் உயிரிழந்தவர்களை பயங்கரவாதிகள் என அரசாங்கம் வரையறுத்தாலும் பெற்றோருக்கு அவர்கள் பிள்ளைகள் என்பதை அரசு மறுக்க முடியாது எனவும் சுட்டிக்காட் டியுள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் நினைவாக அனுஸ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என நெருக்கடிகளுக்கான சர்தேச குழு அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இவ்விடயம் குறித்துக் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் விடயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த அறிக்கையில் மாவீரர் தினத்தை மக்கள் அனுஸ்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என குழு தெரிவித்திருக்கின்றது. இது இன்று தமிழ் மக்களுடைய மனங்களில் அடக்கப்பட்டிருக்கும் விடயத்திற்கு சற்றே அறுதலளிப்பதாக இருக்கின்றது.
யுத்தத்தில் உயிரிழந்து போனவர்கள் போராளிகள் என்றும், பயங்கரவாதிகள் என்னும் பார்க்கும் அரசாங்கம் அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் பெற்றோர், உறவுகள், நண்பர்கள் இருப்பதையும் உயிரிழந்து போன தங்கள் உறவுகளுக்கு, நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதையும் அரசு மறுக்கிறது.
இறந்தவர்களை தெய்வங்களாக கருதி நடுகல் வழிபாட்டை எங்கள் மூதாதையர்கள் ஆரம்பித்தார்கள். அதன் தொடர்ச்சியைத் தான் நாங்கள் கடந்த காலங்களில் செய்தோம். இது எங்கள் உணர்வுகளுடன் தொடர்புபட்டதொரு விடயம். இங்கே இனவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் இடம் கிடையாது.
மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அனுமதிக்க வேண்டும் என நெருக்கடிகளுக்கான சர்வதேச குழு விடுத்துள்ள செய்தி வரவேற்கத்தக்கது என்றார்

வெள்ளி, 23 நவம்பர், 2012

வியக்க வைக்கும் காட்சி - கருவறைக்குள் கொட்டாவி விட்ட?

        
 
இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர்.
சிசுவாக நாம் கருவில் இருக்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.
இதற்காக 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு கட்டமாக மொத்தம் 4 முறை ஸ்கேன் செய்து பார்த்தனர். கடைசி ஸ்கேனிங் 36வது வாரத்தி்ல எடுக்கப்பட்டது.
இதில் ஒரு படத்தில் ஒரு சிசு கொட்டாவி விடுவது இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் சிசுவானது, ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை கொட்டாவி விடுவதாக தெரிவித்துள்ளனர். இப்படிக் கொட்டாவி விடுவதன் மூலம் குழந்தையின் தாடைப் பகுதி நன்கு விரிய வாய்ப்பு கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை கொட்டாவி விடுவது என்பது மூளை வளர்ச்சியைக் குறிப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். மேலும் மூளையை ரிலாக்ஸ் ஆக்கும் முயற்சியாகவும் இதை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

16 வயதுப் பெண்ணின் தலையில் அறைந்து ரோட்டில் விழுத்திய ?

    
 
பெண்ணொருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நடைபாதையில் நடந்து செல்லும் போது நபர் ஒருவரின் அதிரடித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

அடிபட்ட அதிர்ச்சியில் குறித்த பெண் விழுந்த இடத்திலேயே மயக்கமாகியுள்ளார்.

இந்தக் காட்சிகள் சி.சி.ரி.வி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

கிழக்கு லண்டனின் Plaistow பகுதியில் மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்ணை அடித்த குறித்த நபர் சாதாரணமாக நடந்து சென்றுள்ளார்.
 

  குறித்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக லண்டன் Scotland Yard பொலிஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

16 வயதுப் பெண்ணைத் தாக்கிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கிழக்கு லண்டனின் Plaistow பிரதேசத்தின் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சிறு காயங்களுடன் குறித்த பெண் தற்போது தேறி வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் லண்டன் பொலிசாரின் குற்றவியல் பிரிவினரின் 020 8217 5890,,,,,ä or 0800 555 111தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்{காணொளி,}

எமக்கு இப்போது அரசியல் தீர்வு ஒன்றுதான் தேவை !


         
 
கடந்த மூன்று வருடங்களாக முல்லைத்தீவின் ""சைக்கிள் புதைகுழிகளுக்குள்'' கிடந்து வெயிலிலும் மழையிலும் நனைந்து அந்தச் சைக்கிள்களின் டயர்கள் உருகி உருத்தெரியாமல் போய்விட்டன.
வலிகாமத்தில் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் கோணப்புலம் முகாமில்தான் பவலோஜினியின் வீடு இருக்கிறது. அங்கிருந்து வாரத்தில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் ரவிக்குமார் 95 கிலோ மீற்றர் தூரம் பயணித்து சைக்கிள் புதைகுழிக்குப் போய் வருகிறார்.
2009, போரின் இறுதிக் கட்டத்தில் முல்லைத்தீவின் மிக ஒடுங்கிய நிலப்பகுதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் விடுதலைப் புலிகளும் தள்ளிச் செல்லப்பட்ட பின்னர் அவர்களால் கைவிடப்பட்ட ஒவ்வொரு துண்டு இரும்பையும் சேகரிப்பதற்காகவே ரவிக்குமார் அங்கு சென்று வருகிறார் என்கிறார் பவலோஜினி.
போரின் போது நடத்தப்பட்ட கடும் எறிகணை வீச்சுக்களால் சிதைந்து குப்பையாகிப் போன பஸ்கள், கார்கள், வான்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வீதியோரங்களில் இன்னும் அப்படியே கிடக்கின்றன. ரவிக்குமாரைப் போன்ற இரும்பு சேகரிப்பவர்கள் அவற்றுக்குள் சிறப்பானவையான சைக்கிள்கள் போன்றவற்றை வேட்டையாடி விற்பதற்காக வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள்.
பவலோஜினியின் வீட்டு முற்றத்தில் குவிந்து கிடக்கும் சைக்கிள் மலையின் நிழலில் நாம் இருந்து பேசிக் கொண்டிருக்கையில், இந்தச் சைக்கிள்களை கிலோ 49 ரூபா படி வாங்குவதற்கு முஸ்லிம் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்கிறார் பவலோஜினி. இவற்றை நாமே கொழும்புக்கு எடுத்துச் சென்றால் பழைய இரும்புச் சந்தையில் கிலோ 65 ரூபா வரைக்கும்கூட விற்கக்கூடியதாக இருக்கும். ஆனால் போக்குவரத்துச் செலவைப் பற்றித்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் மேலும் சொல்கிறார்.
கோணப்புலம் முகாமில் இருக்கும் ஏனைய பலரும்கூட இதே தொழிலில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்னர், தனது அயல் வீட்டுக் குழந்தைகளுக்குத் தானே உணவூட்டினார் என்கிறார் பவலோஜினி. அவர்களின் பெற்றோர்கள் பழைய இரும்பு தேடி புதைகுழிக்குப் போன நிலையில் இரண்டு நாள்களாகத் திரும்பி வராமையே அதற்குக் காரணம்.
முல்லைத்தீவில் குவிந்து கிடக்கும் இந்தப் பழைய இரும்புக் குவியல்கள், போர் எவ்வளவு கொடூரமாக நிறைவுக்கு வந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. அது மட்டுமல்ல, கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்த போர் மற்றும் முரண்பாடுகளில் இருந்து வெளியேவர யாழ்ப்பாண மக்கள் எவ்வளவு தூரம், கடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி சிக்கல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
போருக்குக்குப் பின்னரான யாழ்ப்பாணம், அது முன்னர் இருந்த மாதிரியிலிருந்து மிக வித்தியாசமானதாக இருக்கிறது. இரவு நேரத்தைப் போர்த்தியிருந்த இருளும் பயமும் இப்போது அங்கில்லை, சோதனை நிலையங்களில் நின்றபடி டோர்ச்சு வெளிச்சத்தைப் பீச்சியடித்து வீதியை மறிக்கும் சிப்பாய்கள் இல்லை, பெரும் வெடிச் சத்தத்துடன் விழுந்து வெடிப்பதற்கு முன்னர் தலைக்கு மேலாகக் கூவிக் கொண்டு செல்லும் எறிகணைகளும் இப்போது இல்லை.
இப்போது சோதனைச் சாவடிகள் இல்லை. ஒப்பீட்டளவில் இராணுவத்தினரின் பிரசன்னமும் குறைந்துவிட்டது. இரவு வேளைகளிலும் கடைகள் திறந்திருக்கின்றன. எல்லா நேரங்களிலும் மக்கள் வீதிகளில் நடமாடுகிறார்கள். வீதிகளை நிறைத்திருந்த சைக்கிள்கள் மற்றும் பெற்றோல் தட்டுப்பாட்டால் மண்ணெண்ணெயில் ஓடிய மொறிஸ் மைனர் கார்கள் என்பன எல்லாம் மறைந்து இப்போது வீதிகளை இயல்பான வாகனங்கள் நிறைத்துள்ளன.
இந்த மாற்றங்களுக்குள் ஒன்றாகத் துரையப்பா விளையாட்டு அரங்குக்கு முன்பாக (தபால் தலைமையகத்தின் அருகில்) பெரிய உல்லாச விடுதி ஒன்று முளைத்துள்ளது. அதன் உரிமையாளர் திலக் தியாகராஜா, இன்று யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய தனியார் முதலீட்டாளர். தியாகராஜா யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிய போது அவருக்கு வயது 17. ஐக்கிய இராச்சியத்தில் அவர் இப்போது வாழ்கிறார்.
42 அறைகளைக் கொண்ட அவரது விடுதியான டில்கோ தியாகராஜா மற்றும் அவரது மனைவியான கோகிலா ஆகியோரின் பெயர்களின் ஆங்கில முதல் எழுத்துக்களைச் சேர்த்ததே டில்கோ என்ற பெயர் இப்போது எதிர்பார்ப் பின் குறியீடாக நின்று கொண்டிருக்கிறது. குறைந்தது தியாகராஜா சொல்வதைப் போன்று யாழ்ப்பாண மக்கள் இழந்துவிட்ட பெருமைகளை மீட்டு எடுக்கும் எதிர்பார்ப்பின் குறியீடாகியிருக்கிறது.
அமைதியை அடைய வேண்டும் என்றால் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை. நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வேலைகளை உருவாக்குவதும் உள்ளூர்த் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதும்தான் என்கிறார் 56 வயதான விடுதி உரிமையாளர். அவர் லண்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மாறி மாறி தனது வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறார். அங்கே, லண்டனுக்கு வெளியே அவரது வீடான சிங்வெல்லில் அவர் ஒரு பட்டயக் கணக்காளர். அவரது மனைவி இரு பிள்ளைகளும் அங்கேயே இருக்கிறார்கள்.
அவரை வெளிநாட்டுக்கு ஓடவைத்த 1970களின் இலங்கையின் நிலைமையை நினைவுபடுத்திப் பார்க்கையில். தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வேலைகளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது நோக்கம் என்கிறார் அவர்.

உடையார்கட்டு பிரதேசத்தில் இருவரது சடலங்கள் மீட்பு !

          
 
முல்லைத்தீவு உடையார்கட்டு குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருவரது சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உடையார்கட்டைச் சேர்ந்த எஸ். கோணேஸ்(வயது35), எஸ்.சின்னவன்(வயது40), ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (புதன் கிழமை) மாலை குளத்தில் நீராடச் சென்றுள்ளனர்.
எனினும் இருவரும் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடியுள்ளதுடன், நேற்று காலை முதல் குளத்திலும் சுழியோடிகள் மூலம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரது சடலங்களும், நேற்று மாலை நீரிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றது. எனினும் இறப்பு எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தகவல்கள் எவையும் தெரியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், சடலங்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிங்கள எம்.பி வேலை பார்த்த பெண் ஒருவரின் மார்பை

         
 
லண்டன் விம்பிள்டன்னில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில், வேலை பார்த்த பெண் ஒருவரின், மார்பை எட்டிப் பிடிக்க முனைந்தார் என்ற குற்றத்துக்காக முன் நாள் இலங்கைத் தூதரும் எம்.பியுமான, ரியூட குணசேகர கடந்த மே மாதம் கைதாகியிருந்தார். உடல் நோவைக் குறைக்க தசைகளை மசாஜ் செய்து விடும் பெண்ணோடு இவர் தகாத முறையில் நடந்துகொண்டது உறுதிசெய்யப்பட்டது.
அத்தோடு விம்பிள்டன் நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்து, தீர்ப்பும் வழங்கியுள்ளது இதில் வியப்பான விடையம் என்னவென்றால், பெரும் செல்வந்தரான இவர் மீது நீதிபதி மேலதிக விசாரணை ஒன்றை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்பது தான் ! பட்ட காலிலேயே படும் என்பார்கள் ! அது போல 2 வது வழக்கும் இவர்மீது பதிவாகி இருக்கு என்றால் பாருங்களேன் !

77 வயதாகும் ரியூட குணசேகர ஒரு மூத்த இலங்கை இராசதந்திரி ஆவர். இவர் விம்பிள்டன் பகுதியில் வசித்து வருகிறார். போலந்து நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக இருந்த இவர், 2 பிள்ளைகளின் தகப்பனுமாவார்.
இவருக்கு பல வர்த்தக நிலையங்கள் கொழும்பில் உள்ளது என்று கூறப்படுகிறது. அத்தோடு இவர் பெரும் செல்வந்தரும் ஆவார். கடந்த மே மாதம் இவர் சுவீடிஷ் மசாஜ் எடுப்பதற்காக ஒரு நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே அவரைப் படுக்கவைத்து, ஒரு பெண் இவர் உடல் நோவைப் போக்க மசாஜ் செய்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில், அப் பெண்ணோடு சில்மிஷங்கள் செய்ய ஆரம்பித்துள்ளார் ரியூட குணசேகர. இதனையும் அவர் பொறுத்துக்கொண்டுள்ளார். ஆனால் இறுதியில் எட்டி மார்பைப் பிடிக்க முனைந்தவேளை, அப் பெண் அங்கே உள்ள ஆபத்து மணியை அடித்துள்ளார். இதனையடுத்து நிலைய காவலாளிகள் உள்ளே நுளைந்து குணசேகரவை பிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நீதிமன்றில், குணசேகர தாம் அப்பெண்ணைத் தொட முயற்ச்சிக்கவில்லை என்றும் அப்பெண்ணே தன்னிடம் மேலதிகப் பணத்தைக் கோரியதாகவும் கூறினார். ஆனால் இந்தப் பம்மாத்து வார்த்தைகளை பிரித்தானிய நீதிபதிகள் ஏற்க்க மறுத்துவிட்டனர். குறிப்பிட்ட பெண்ணையும், மசாஜ் சென்ரன் பாதுகாப்பு ஊழியரையும் விசாரித்த நீதிபதிகள், இறுதியில் குணசேகர குற்றவாளி என அறிவித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட பெண்ணுக்கு 1,000 பவுன்சுகள், நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் எனவும், பிரித்தானிய நீதிமன்றத்துக்கு மேலும் 1,200 பவுண்டுகளை தண்டமாகக் கட்டவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனிடையே தன்னிடம் வக்கீல் வைத்து வாதாடப் பணம் இல்லை என்று, குணசேகர கூறி, நீதிமன்ற திணைக்களத்திடம் இருந்து(லீகல் ஏய்ட்) பெற்றுள்ளார். இவர் வழக்கை வாதாட, சுமார் 4,170 பவுண்டுகளை அத் திணைக்களம் வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மக்கள் வேலை செய்து, தாம் உழைக்கும் சம்பளத்தில் வரிப்பணத்தைக் கட்டி வருகின்றனர். இதில் ஒரு பகுதி நீதிமன்ற திணைக்களத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிப் பணத்தில் இருந்து 4,170 பவுண்டுகளை இவருக்கு ஏன் கொடுக்கவேண்டும் என்று, நீதிமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பெரும் செல்வந்தரும், பிசினஸ் தாதாவுமான குணசேகரவுக்கு ஏன் இவ்வாறு மக்கள் நிதியில் இருந்து பணம் வழங்கப்படவேண்டும் என்று அரச தரப்பு வக்கீல் கேள்வி எழுப்பினார்.
அதிர்ந்துபோன நீதிபதிகள், இது குறித்து பிறிதொரு தனிப்பட்ட விசாரணை நடத்துமாறு பொலிசாருக்கும் வருமானத் துறைக்கும் கட்டளையிட்டுள்ளனர். மொத்தத்தில் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் குணசேகர. இலங்கை எம்.பி யின் அட்டகாசம் என்ற தலைப்பில், பல உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசுக்கு மேலும் கிடைத்திருக்கும் ஒரு சாட்டை அடி ஆகும். சிங்களவர்கள் தமிழர்களை மட்டுமல்ல வெள்ளை இனத்தவர்களையும் பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர். ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியே இப்படி என்றால், இலங்கை இராணுவம் எப்படி இருக்கும் ? என்று இனை வெள்ளை இனத்தவர்களும் ஊகிக்க முடியும் அல்லவா