அணு ஆயுதங்களை சுமந்து
சென்று 1300 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்ககூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணையை
பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
கோரி என்றழைக்கப்படும் ஹத்ஃப்-5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை
பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் தடுப்புத்திறன் மற்றும் தேசியப் பாதுகாப்பை இச்சோதனை வலுப்படுத்தி உள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்த ஆண்டில் மட்டும் 60 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த ஹத்ஃப்-9 முதல் ஹத்ஃப்-4 வரை பல்வேறு அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.{காணொளி,} |
வியாழன், 29 நவம்பர், 2012
கண்டம் விட்டு கண்டம் பாயும் பாகிஸ்தானின் ஏவுகணை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக