1962ம் ஆண்டுக்குப் பின் முற்றாக முறிந்துபோன அமெரிக்கா - கியூபா இடையிலான உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. கியூபாவில் 5 வருடங்களுக்கு முன் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 65 வயதான க்ரோஸ் என்ற புலனாய்வாளர் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கியூபாவுடன் தூதரக உறவு மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க அரசின் வலைதள பணிகளை
மேற்கொள்வதற்காக 2009ம் ஆண்டு 65 வயதான க்ரோஸ் என்பவர் கியூபா சென்றார்.அங்கு உளவு வேலை பார்த்ததாக அவரை கியூபா அரசு சிறைப்பிடித்தது. இதுதொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் கியூபா அரசு உடன்படவில்லை. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உளவு பார்த்ததாக கியூபாவை சேர்ந்த 5 பேரை அமெரிக்கா சிறைபிடித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இருதரப்பிலும் எவ்வித தூதரக உறவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், கியூபாவில் பணையக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த க்ரோஸ் விடுவிக்கப்பட்டார். அவர் அமெரிக்க விமானம் மூலம் புதன்கிழமை இரவு வாஷிங்டனுக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து தான் பிடித்து வைத்திருந்த கியூபாவை சேர்ந்த 5 பேரையும் அமெரிக்கா விடுவித்தது. இதை தொடர்ந்து அந்நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
கியூபா அதிபர் ரவுல் கஸ்ரோ அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளதன் மூலம் தூதரக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என்று அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் மார்கோ ருபியோ கூறியுள்ளார்.
தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த இரு நாட்டுத் தலைவர்களும் தவிர்க்க முடியாத சந்தர்பம் ஒன்றில் கைகுலிக்கிக்கொண்டனர். பகை நாடுகளாகப் பார்க்கப்பட்ட இரு நாடுகளின் தலைவர்களும் கைகுலுக்கிக்கொண்ட காட்சி உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இரு நாட்டுத் தலைவர்களும் மகிழ்வோடு கைகுலுக்கும் காலம் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>