தலீபான்கள் அட்டூழியம் ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளம் உள்ளது. அதன் அருகில் உள்ள பகுதியில் தொழிலாளர்கள் நேற்று கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கே மோட்டார் சைக்கிள்களில் வந்த தலீபான் தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 தொழிலாளர்கள் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு படையினர், அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 4 தீவிரவாதிகள் பலியாகினர். 3 தீவிரவாதிகளை அவர்கள் உயிருடன் பிடித்தனர். இதற்கிடையே காபூல் நகரில் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து பஸ் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 7 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆப்கானில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலுக்கு தலீபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதேபோல் தீவிரவாத தாக்குதலுக்கு இரண்டு வெளிநாட்டு ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவங்கள், ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக