siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 6 செப்டம்பர், 2012

நொக்கியாவின் இறுதி நம்பிக்கை லுமியா 920: கைகொடுக்குமா?

06.09.2012.by.rajah.
கையடக்கத்தொலைபேசிச் சந்தையில் நொக்கியா என்ற சொல்லை அறியாதவர்கள் இல்லையெனலாம்.
குறிப்பாக ஆசிய நாடுகளில் நொக்கியாவுக்கு என்றுமே தனியான கூட்டமிருந்தது.
நியாயமான விலையில்,நீண்டகால பாவனைக்கேற்ற அனைவருக்குமான கையடக்கத்தொலைபேசியினைத் தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது நொக்கியாதான் என இன்றும் பலர் கூறுவதனைக் கேட்கலாம்.
குறைந்த விலை, 3 ஆம் தர மற்றும் மத்தியதர சந்தைக்கான கையடக்கத்தொலைபேசிகளைத் தயாரிப்பதில் நொக்கியா ஜாம்பவானாகத் திகழ்ந்தது.
எனினும் நுகர்வோர் மெல்லமெல்ல ஸ்மார்ட் போன்களை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர்.
இருந்தபோதிலும் ஸ்மார்ட் போன் சந்தையில் நொக்கியாவால் பெரிதாக எதுவும் சாதிக்கமுடியவில்லை.
அப்பிள் மற்றும் செம்சுங் என்ற இரண்டு மிகப்பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் நொக்கியாவால் மோதி ஜெயிக்கமுடியவில்லை.
இதன்காரணமாக பங்குச்சந்தையிலும் நொக்கியா வீழ்ச்சியையே சந்தித்து பலவகையில் போராடி சலித்துப்போனது நொக்கியா.
பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் தன்னை ஸ்மார்ட் போன் சந்தையில் மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ளும் பொருட்டு வின்டோஸுடன் கைகோர்த்தது நொக்கியா.
அண்ட்ரோய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இன் பிடிக்குள் இருக்கும் ஸ்மார்ட் போன் சந்தையில் வின்டோஸ் மூலம் பாவனையாளர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கி சந்தையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே இவ்விரு நிறுவனங்களும் இணைந்தமைக்கான பிரதான காரணமாகும்.
இதனையடுத்து வின்டோஸ் மூலம் இயங்கும் சில ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது நொக்கியா.
லுமியா எனப் பெயரிடப்பட்ட வின்டோஸ் மூலம் இயங்கும் நொக்கியா ஸ்மார்ட் போன்கள் தொடர்பில் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போதிலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பினைப் பெறமுடியவில்லை.
வின்டோஸுடன் இணைந்தபோதிலும் நொக்கியாவின் சரிவு தொடர்ந்தது.
இந்நிலையில் இறுதி முயற்சியாக வின்டோஸுடன் புதிய இயங்குதளமான வின்டோஸ் 8 மூலம் இயங்கும் லுமியா 920 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
பல நவீன வசதிகளுடன் கூடிய லுமியா 920 ஸ்மார்ட் போனை நொக்கியா மிகவும் நம்பியுள்ளது. இது தனக்கு இறுதி மூச்சளிக்குமென எதிர்பார்க்கின்றது.
இதன் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்க்கும் போது,
1280-pixel-by-768-pixel resolution உடன் கூடிய 4.5 அங்குலPure motion HD + WXGA IPS LCD திரையைக் கொண்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மிகத்தெளிவான திரைகளில் ஒன்றாக இத்திரை கருதப்படுகின்றது.
மேலும் இத்தொடுதிரையானது 'Super Sensitive' என நொக்கியா தெரிவிக்கின்றது.
இதனுடன் 8.7 மெகா பிக்ஸல், 3264 x 2448 pixels, Carl Zeiss optics, optical image stabilization, autofocus, LED flash வசதியுடன் கூடிய PureView தொழில்நுட்பத்தில் இயங்கும் கெமராவினைக் கொண்டுள்ளது.
இக்கெமராவானது பல டிஜிட்டல் எஸ்.எல்.ஆர். கெமராக்களை விட சிறந்ததென நொக்கியா தெரிவிக்கின்றது.
லுமியா 920 இல் காணப்படும் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் வயர்லெஸ் அதாவது வயர்கள் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதியாகும்.இதற்கென தனியான சார்ஜிங் பேளேட்டை நொக்கியா பாவனையாளர்களுக்கு வழங்கவுள்ளது.
இதனைத்தவிர
டுவல்கோர் 1.5 GHz Krait புரசசர்
Adreno 225 ஜி.பி.யு
Qualcomm MSM8960 Snapdragon சிப்செட்
NFC எனப்படும் (Near Field Communication)
HSDPA, 42 Mbps; HSUPA, 5.76 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

நொக்கியா லுமியா 920 ஸ்மார்ட் போனானது அதி நவீன வசதிகள் பலவற்றைக்கொண்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதனால் சந்தையில் முன்னணியில் உள்ள அப்பிள் மற்றும் செம்சுங் ஆகியவற்றை வெற்றிகொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அண்மையில் வெளியாகிய செம்சுங்கின் கெலக்ஸி S3 விற்பனையில் சாதனைபடைத்து வருகின்றது.
அதேபோல செம்சுங் கெலக்ஸி நோட் 2 ஸ்மார்ட் போனையும் அண்மையில் அறிமுகப்படுத்தியது இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி அப்பிளின் ஐ போன் 5 அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
எனவே சந்தையில் இலகுவாக ஆதிக்கம் செலுத்தலாம் என நொக்கியா கருதினால் அது வெறும் கனவாகவே இருக்கப்போகின்றது.
தற்போது சந்தையில் முன்னணியில் உள்ள ஸ்மார்ட் போன்கள் சிலவற்றுடனான ஒப்பீடு

பிபாஷா பாசு நடிக்கும் பில்லி சூனிய கதை

06.09.2012.by.rajah.பாலிவுட்டில் 1980ல் நடந்த ஒரு நடிகையின் உண்மை கதை ‘ராஸ் 3' என்ற பெயரில் இந்தியில் 3டி படமாக தயாராகிறது.
‘அவதார்' படத்தை தயாரித்த ஹாலிவுட் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ்பட் இணைந்து இதை தயாரிக்கிறார்.
விக்ரம் பட் இயக்கத்தில் நாயகனாக இம்ரான் ஹாஷ்மியும், நாயகிகளாக பிபாஷா பாசுவும், இஷா குப்தாவும் நடிக்கின்றனர். ‘ராஸ்' படத்தின் முதல்பாகம் 2003ம் ஆண்டு வெளியானது.
இதில் பிபாஷா பாசு, டினோ மோரியா நடித்திருந்தனர். இதன் 2ம்பாகம் 2009ம் ஆண்டு ‘ராஸ் 2' என்ற பெயரில் வெளியானது. இம்ரான் ஹாஷ்மி, கங்கனா ரனவத் நடித்திருந்தனர்.
முதல் 2 பாகம் வெற்றி பெற்றதையடுத்து 3ம் பாகம் உருவாகியுள்ளது. திரையுலகில் கனவு கன்னியாக புகழின் உச்சியில் இருக்கும் நடிகைக்கும் அப்பட இயக்குனருக்கும் காதல் மலர்கிறது.
இவர்களுக்கிடையே மற்றொரு நடிகை குறுக்கிடுகிறார். அவருடனும் இயக்குனருக்கு காதல் பிறக்கிறது. இயக்குனரின் உதவியுடன் முன்னணி நடிகையாகிறார்.
இந்நிலையில் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகையோ மார்க்கெட் இழப்பதுடன், காதலையும் இழக்கிறார்.
இதில் கோபமடைந்தவர் பில்லி சூன்யம், மந்திர வித்தைகளை பயன்படுத்தி காதல் ஜோடியை பிரிக்க முயல்கிறார். இதன் முடிவு என்ன என்பது தான் கதை. இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது

அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிப்பு

06.09.2012.by.rajah.
அமெரிக்காவின் கடன் சுமை 16 லட்சம் கோடி டொலரை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் பால் ரயன், லோவாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், கடன் சுமை அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்.
இது ஜனாதிபதி ஒபாமா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டது. இந்த கடன் சுமை வேலை வாய்ப்பு பிரச்னையை உருவாக்கி விட்டுள்ளது. மேலும் நமது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு எதிர்காலம் குறித்த பயத்தை உருவாக்கி உள்ளது.
அமெரிக்காவை வழிநடந்த எங்கள் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரோம்னிக்கு வாக்களித்தால் இந்த சூழ்நிலை மாறும். செலவுகளை குறைத்தும், பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியும் தருவோம் என்றார் பால் ரயன்.
மிட் ரோம்னி தேர்தல் பிரசார குழுவின் செய்தித் தொடர்பாளர் ரியான் வில்லியம்ஸ் கூறுகையில், ஒபாமா பதவியேற்ற பின்னர் வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார தேக்கம் போன்றவை வந்துவிட்டது. நாட்டின் அபரிமித கடன் சுமை எதிர்கால சந்ததிகளை துயரத்துக்கு ஆளாக்கி விட்டுள்ளது என்று தெரிவித்தார்.
செனட் பட்ஜெட் குழுவின் உறுப்பினரும், செனட்டருமான ஜான் கார்னின் கூறுகையில், கடன் சுமை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் கீழ்நிலைக்கு தள்ளிவிட்டது. ஒபாமா நிர்வாகத்தில் இது மற்றுமொரு வெட்கக் கேடான நிகழ்வு. தலைமை மாறுவதுதான் இதற்கு சரியான தீர்வு என்றார்.
நாடாளுமன்ற குடியரசு கட்சியின் அரசியல் குழுத் தலைவர் டாம் பிரைஸ், கடந்த 40 ஆண்டுகளாக இருந்த கடன் சுமையை விட இப்போது கடன் சுமை அதிகரித்துவிட்டது.
அமெரிக்க வரலாற்றில் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தவர்களால் உருவான கடன் சுமைகளில் இதுதான் பெரிய தொகை. மேலும், 2 கோடி அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். கடந்த 42 மாதங்களில் வேலை வாய்ப்பின்மை 8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
குடியரசு கட்சியின் செனட்டர் பாப் கார்கர் கூறுகையில், நாட்டின் கடன் சுமை 16 லட்சம் கோடி டொலரை எட்டி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தனியார் முதலீட்டை பெருக்குவதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். பொருளாதாரமும் வளரும். இதற்கு தேர்தலில் எங்களை(குடியரசு கட்சி) ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

கனடாவில் 27,000 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

06.09.2012.by.rajah.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 20 ஆண்டுகள் கழித்து சுமார் 27,000 அரசுப் பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டும், வரிச்சுமையை குறைக்க கோரியும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு தொழிற்சங்கத்தினை சேர்ந்த 25,000 பேரும், மற்ற இரண்டு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 2000 பேரும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டம் நடந்த அதே நாளில் முதல்வர் கிறிஸ்ட்டி கிளார்க், தனது அமைச்சரவையில் மாற்றங்களை நிகழ்த்தி புதிய நிதியமைச்சரை பணியில் அமர்த்தினார். மேலும் தனது அரசு இந்தப் போராட்டத்திற்குப் பணியாது என்றும் முதல்வர் தெரிவித்தார்

சட்டவிரோதமாக குடியேற முயன்ற அகதிகளின் படகு விபத்துக்குள்ளானது: 39 பேர் பலி

06.09.2012.by.rajah.
துருக்கியில் சட்டவிரோதமாக குடியேறிய சிலர் ஐரோப்பாவுக்கு படகில் செல்ல முயன்ற போது, அவர்கள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான குழந்தைகள் உட்பட 39 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன, 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
துருக்கியின் மேற்கு கடல் பகுதியிலிருந்து புறப்பட்ட படகு, கிரேக்க தீவுகளுக்கு அருகில் சென்ற போது கடலின் நடுவே இருந்த பாறையில் மோதி கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அரேபியாவிலிருந்து சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் துருக்கி மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் முதலில் குடியேறி, பின்னர் அங்கிருந்து ஐரோப்பா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.


சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயற்படுத்துமாறு கோரிக்கை

 
 
06.09.2012.by.rajah.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயற்படுத்துமாறு மத்திய அரசிற்கு திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம்,இன்று காலை 10 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் மானமிகு துரை-சக்ரவர்த்தி நிலையத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இராமன் என்ற இதிகாச கற்பனைப் பாத்திரத்தை முன்னிறுத்தி, நிறைவேற்றச் செய்யாமல் முட்டுக் கட்டை போடும் சக்திகளுக்கு இச்செயற்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
‘நீரி’ என்ற தொழில் நுட்ப நிறுவனம் வகுத்துத் தந்த அந்த 6-ஏ என்ற நீர்த் தடத்திலேயே திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தினை இச்செயற்குழு வரவேற்கிறது.
இந்த நிலையில், இத்திட்டத்தை நிறைவேற்றிட கால தாமதம் செய்யும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் வாய்தா கேட்டு காலத்தை நீட்டிப்பது முரண்பட்டதும் - மத்திய அரசின் மீதான நம்பகத் தன்மைக்கு ஊறு விளைவிப்பதுமாகும்.
எனவே, திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் நாளை இலங்கை வருகிறார்!

 
 
06.09.2012.by.rajah.
இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவர் மைக்கேல் சிசன் நாளை இலங்கை வருவார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அவர் இலங்கையர்களுக்கு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையிலான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் இலங்கையுடன் உறவினை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகள் குறித்து ஆராயவிருப்பதாகவும், குறிப்பாக வர்த்தக, பொருளாதார, சுற்றுலா வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாம் மக்களின் சக்தி குறித்து நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

யாழ். பல்கலைக்கழகம் இன்று திறந்திருந்த போதிலும் விரிவுரையாளர்கள் எவரும் வருகை தரவில்லை!

 
 
06.09.2012.by.rajah.
இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நடத்தி வருகின்ற தொழிற்சங்கப் போராட்டத்தையடுத்து, திடீரென இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை அரசாங்கம் வியாழனன்று திறந்திருந்தது. எனினும் ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சமூகமளிக்கவில்லை.
இதன் காரணமாக அங்கு கல்விச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
அரசாங்க அறிவிப்பையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்திற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களே வருகை தந்திருந்ததாக அந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் தெரிவித்தார்.
பல்கலைக்கழக அலுவலகங்கள் செயற்பட்ட போதிலும் விரிவுரையாளர்கள் எவரும் வருகை தரவில்லை. இதனால் பல்கலைக்கழகம் வெறிச்சோடிக் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தானே மூடிய பல்கலைக்கழகங்களை அரசாங்கம் இன்று திறந்தபோதிலும், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகப் விரிவுரையாளர்கள் எவரும் கடமைக்குத் திரும்பவில்லை என பல்கலைக்கழக ஆசியர் சங்க சம்மேளனத்தின் பொருளாளர் பவித்ரா கைலாசபதி தெரிவித்தார்.
நிதியமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தலைமையில் உயர் மட்டச் சந்திப்பு ஒன்று புதன்கிழமை நடைபெற்ற போதிலும், அந்தச் சந்திப்பிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும், இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்வதாகவும் பவித்ரா கைலாசபதி கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமும், பல்கலைக்கழகங்களைப் பாதூக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தாங்கள் முன்னெடுத்துள்ள பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வேலைத்திட்டமும் நடைபெறவிருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்திருக்கின்றது

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் அகிலதாஸ் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்! வடக்கின் வசந்தம்

 
 
06.09.2012.by.rajah.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் சிங்கமாகக் கர்ச்சித்துக் கொண்டிருந்த அதிபர் அகிலதாஸ் கொக்குவில் இந்துக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணமாக பெருமளவு பணமோசடி என கல்லூரியை விட்டு அவரை அகலச் செய்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக கொக்குவில் இந்துக் கல்லூரி ஏனைய பலம் பொருந்திய கல்லூரிகளுக்கு நிகராக வருவதற்கு ஆணிவேராக இருந்தவர் அகிலதாஸ்.
கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்களுக்கு கசக்கும் மருந்தாக இருந்து அவர்களையும் சரியான முறையில் இயங்கச் செய்தவர் என கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட கல்லூரியில் நீண்டகாலமாகக் கட்டுப்படுத்த முடியாத சில வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் வழியிலேயே சென்று அவர்களை வழிக்குக் கொண்டு வந்தவர் என குறிப்பிட சில பிரிவைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பலவழிகளிலும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மதிப்பை உயர்த்துவதற்கு பாடுபட்ட அதிபர் தற்போது தென்மராட்சி கல்வி வலயத்தில் இணைக்கப்பட்டதன் காரணம் என்ன??
கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபராக இருந்த அகிலதாஸ் அவர்களுக்கு சில முக்கிய குறைபாடுகள் இருந்ததாகத் தெரிகின்றது.
அதில் குறிப்பாக ஆசிரியர்களுடன் கடுமையாக நடந்து கொள்வதும் மாணவர்கள் முன் ஆசிரியர்களை தாறுமாறாகப் பேசுவதும் அவரது சிறப்பான குறைபாடாக அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இவ் அதிபர் பாடசாலையின் நன்மைக்காகவே முக்கியமாகப் பாடுபட்டார் எனவும் அவர்களே தெரிவிக்கின்றார்கள். அத்துடன் இவர் நிதி மோசடி செய்திருக்க மாட்டார் என ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இவருக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் பலம் பொருந்தியதாக கருதப்படும் பழைய மாணவர் சங்கத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கும் இடையில் முறுகல் இருந்ததாகத் தெரியவருகின்றது.
இதன் அடிப்படையில் கல்லூரியில் நிதி மோசடி என தெரிவித்து பல தடவைகள் மாகாண கணக்காய்வு அதிகாரிகள் கல்லூரி ஆவணங்களைக் குடைந்தெடுத்தும் ஆதாரம் இல்லாது சென்றுள்ளார்கள்.
ஆனாலும் இவர் ஊழல் செய்துள்ளார் என முக்கிய காரணம் காட்டியே கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து மாற்றப்பட்டார் என தற்போதும் அவரைப் பதவியில் இருந்து விலகச் செய்தவர்கள் தெரிவிக்கிறனர்.
குறிப்பிட்ட அதிபரை மாற்ற வைப்பதற்காக ஈ.பி.டி.பி யின் முக்கியஸ்தரான கொக்குவிலைச் சேர்ந்த தவராஜா (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) முன்னின்று உழைத்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்ற பதவியுயர்வு பெற்றே தென்மராட்சி கல்வி வலயத்திற்கு சென்றுள்ளதாக கல்வித்திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும் முக்கிய அதிகாரிகள் சிலர் இது தொடர்பாக மூச்சு விடவும் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.
அகிலதாஸ் அவர்கள் கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இவரை அதிபர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு அது காரணமல்ல என்பது நூறு வீத உண்மை.
அவ்வாறு இருக்கும் போது அதிபர் பதவியில் இருந்து தென்மராட்சி வலயத்திற்கு இணைக்கப்பட்டு பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவி கொடுக்கப்பட்டு அவரது வாயை மூடியுள்ளது உண்மை.
கல்வி அதிகாரிகள் தரப்பில் சிலர் அதிபர் தொடர்பாக பண மோசடி இருப்பதாகக் கூறுகின்றார்களே தவிர அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கின்றார்கள் இல்லை.
கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இனி வரப்போகும் அதிபர் யார் என சிலரிடம் வினாவிய போது நல்லூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து யாழ் இந்து மகளீர் கல்லூரியில் பிரச்சனைகளுக்கு உள்ளாகி அலுவலகத்துடன் அகற்றப்பட்ட மாணிக்கராஜா எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணிக்கமாக் திகழ்ந்து கொண்டிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு ராஜாவாக வரப்போகின்றவர் யார் என பழையமாணவர்களுக்கு விளங்கியிருந்தால் சரி

தமிழரின் அக வாழ்விலும் புற வாழ்விலும் பனை

06.09.2012.BY.rajah.
மனித வாழ்க்கை இயற்கையோடு நெருக்கமாக இணைந்துள்ளது. மரமும் மலையும் மனிதனின் மனதிலே நிறைந்திருந்தன. ஆறும் கடலும் அவனது பார்வையிலே நிலைத்திருந்தன. மண்ணும் விண்ணும் எண்ணத்திலே இணைந்திருந்தன. மனிதன் வாழ்க்கை நடைமுறைகள் இயற்கையின் தோற்றங்களோடு தொடர்புற்று விளங்குகின்றன. தமிழர் வாழ்க்கையில் இப்பண்பினைச் சிறப்பாகக் காண முடிகின்றது. அதனைப் பல தமிழ்ப் பாடல்களும் சான்றுபகிர்கின்றன. குறிப்பாக இந்த ஆய்வுக் கட்டுரையில் தமிழர் வாழ்வியலோடு பனைமரம் இணைந்துள்ளமை விளக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பனையின் வளம்பெற்ற பூமியாகும். வரண்ட நிலமெனினும் வளமான பனைமரங்கள் வளர்ந்த நிலமாகும். அதனால் மக்களது வாழ்வியலோடு பனைமரம் நெருங்கி இணைந்துள்ளது. பனை மக்களது பண்பாட்டிலே நிலைத்துள்ளது. பனை தந்த வளங்கள் வாழ்வோடு அது இணைய உதவின. உணவு நிலையில் மட்டுமன்றி உணர்வு நிலையிலும் கூட நம் முன்னோர் பனை மரத்துடன் இணைந்துள்ளனர். அந்த இணைப்பு நிலை இலக்கியங்களிலே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காட்டப்பட்டுள்ளது. உருவிலும் உணர்விலுமாக பனை தமிழர் வாழ்வில் எவ்வாறு இணைந்திருந்தது என்பதை இன்று எம்மவர் அறிய வேண்டியதும் அவசியமே. கால மாற்றத்தினால் வாழ்வு நிலைமாறி திசைகெட்டு நாம் செல்லும் வழி இருட்டாகி நிற்கிறோம். இருட்டிலே தோன்றும் நெடும் பனைகளே எமக்கு விளக்காக, வாழ்வு நடக்க வேண்டியுள்ளது. பனையின் துணையோடு வாழ்ந்த முன்னோர் செய்திகளைத் தேடி அறிந்து துணைக்கொள்ள வேண்டும். அதற்கென ஆய்வுகள் பல செய்ய வேண்டும்.
சங்க இலக்கியங்களிலே பனை பற்றிய செய்திகளை நாம் நிறையக் காணலாம். அக வாழ்விலும் புறவாழ்விலும் அது நெருங்கியுள்ளதை அறியலாம். இயற்கையிலே இருண்ட நிறம் கொண்ட பனை மக்கள் மனதிலே நிறைந்திருக்கின்றது. வரண்ட வாழ்க்கைப் பாதையை வளமாக்கியுள்ளது. காதலும் வீரமும் காண உதவியுள்ளது. புலவர்களின் மொழிவளத்திலே சிறப்புப் பெற்றுள்ளது. பனையின் தோற்றமும் பண்பாடும் பரவலாகவே தமிழ் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அகவாழ்வு நிலையில்
மனிதனின் உள்ளம் சம்பந்தமான வாழ்க்கை நிலையைப் புலவர்கள் அகவாழ்வு என்று கண்டனர். ஆணும் பெண்ணுமாக இணைந்த கூட்டுவாழ்க்கையிலே அவர்களது உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பினாலே அறிதல் கூடும். குறிப்பு நிலையினை விளக்கப்பனைதான் பயன்பட்டுள்ளது. நற்றிணையிலே ஒரு பாடல் புலவர் வெள்ளிவீதியார் பாடியது. தான் விரும்பும் காதலனைப் பிரிந்த பெண்ணின் அகநிலைக் கூற்றாக அமைந்த பாடல் அது. காதலன் பிரிவினால் தான் அடையும் துன்பம் கூறும் பெண்ணின் குரல். கடற்கரையிலே வாழ்பவள். சூழலில் இருக்கும் மரங்களைப் பார்க்கிறாள். மண்ணுக்கும் விண்ணுக்குமாக அவள் பார்வை தாவுகிறது. திங்கள் வானிலே தோன்றிவிட்டது. கடல் அலைகள் ஓலமிடுகின்றன. தாழை மலர்ந்து நிற்கிறது. கண்ணிலே படும் காட்சிகள் யாவும் மனத்துயரை மாற்றுவதாக இல்லை. பார்வையினை மீண்டும் மேலே செலுத்துகின்றாள். அருகே உயர்ந்து நிற்கும் கரிய பெரிய பனை மரத்தில் ஒரு சோககீதம். உள்ளத்தை நெருடும் குரல். துணையிழந்த அன்றிற் பறவை துணைதேடி குரல் கொடுக்கிறது. கண்டவள் மனதிலே சற்று மாறுபாடு. ஒரு கணம் தன்துயர் மறந்து அந்தப் பனையிலே இருக்கும் அன்றிலையே பார்க்கிறாள். துன்பம் எனக்கு மட்டுமில்லை. இந்தப் பறவைக்கும் கூட இருக்கிறதே என்று எண்ணியவள் தன் துயரை மறந்து விட்டாள். நெடும்பனையில் நின்று வாடும் அன்றிலின் குரலுக்கே காது கொடுத்துவிட்டாள். பிரிவின் ஒற்றுமை நிலை. பேச்சுக்கிடமில்லை. தோற்றம் தான் உணர வைக்கின்றது. மையிரும்பனையே மனதில் நிறைந்துவிட்டது. புலவர் நாவிலே பாடலாகியது. சொற்களால் அணி சூழப் பனைமரம் நிற்கிறது.
திங்களும் திகழ்வான் ஏர்தரும் இளநீர்ப்
பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே
ஒலிசிறந்து ஓதமும் பெயரும் மலிபுனல்
பல்பூங் கானல் முள்ளிலைத் தாழை
சோறு சொரி குடவயின் கூம்புகை அவிழ
வளிபரந்து ஊட்டும் விளிவில் நாற்றமொடு
மையிரம் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும் (நற்றிணை: 335)
பழந்தமிழ்ப் பாடலிலே பனை மனவுணர்வைக் காட்டிநிற்கிறது. பனை நிறைந்த கடற்கரை நிலம் காதல் வாழ்வைப் படம் பிடித்துள்ளது. ஒருவனுக்கு ஒருத்தியாகி அவன் வரவுக்கென்றே வாழும் பண்பாடு. பனை மரம்போல வளர்ந்த பண்பாடு. அது தமிழர் வாழ்விலே நிலைத்து விட்ட பண்பாடு.
ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு விருப்பம் கொண்டாலும் கற்புநிலையிலே இணைந்து வாழ்ந்தனர். இருவர் விருப்பினையும் தோழி பெற்றோரிடம் கூறி இணையத் துணையாய் நிற்பாள். பனைமரம் படர்ந்த நிலத்தோர் பண்பாடு அதுவாக இருந்துள்ளது. குறுந்தொகையிலே வரும் பாடலொன்று அதனை விரிவாகவே விளக்குகிறது. உலோச்சனார் என்ற புலவர் புலமையின் துணையால் பண்பாடு பேசுகிறார். பனைமரங்கள் நிறைந்த மணற்பாங்கான நிலத்தில் வாழ்பவள். ஒருவனை விரும்பிவிட்டாள், மணம் செய்ய அவன் வருவான் என எண்ணிக் காத்திருக்கின்றாள். காலம் கடக்கிறது. சூழகோலமும் மாறிவிட்டது. அவன் இன்னமும் வரவில்லை. அவளது துயர்கண்ட அருமைத் தோழி தேறுதல் கூறுகிறாள். உண்மை நிலையை அறியாது தோற்றத்தைக் கண்டு துயரப்படும் தலைவியை நோக்கி அவள் கூறும் வார்த்தைகள் இயற்கையின் நிலைக்காட்டி இன்னல் தீர்க்கும் அவள் மதிநுட்பம்; பனையில் தோற்றம், துயரம் களையத் துணையாகிறது. "கடற்கரையிலே காற்றுக் காலத்திலே பனைமரங்கள் மணலால் அடிபுதைய மறைந்து நிற்கின்றன. அடம்பன் கொடி படர்ந்த மணல் குவிவதாலே நெடிய பனைகளெல்லாம் குறிய பனைகளாகத் தோற்றுகின்றன. உண்மையிலேயே அப்பனைகள் குறியன அல்லவே. காலம் மாற மீண்டும் மணல் கரைய நீண்டு தோன்றும். அதுபோல உன் காதலனும் உரிய காலத்திலே வந்துவிடுவான். வருந்தாதே'' தோழியின் சொற்களின் உண்மை காதலியின் உணர்விலே சேருகிறது. மனத்துயரும் தீருகிறது. பனையின் தோற்றம் காதலன் நிலையைக் காட்டுகிறது.புலவர்,
தோழி கானல்
ஆடரை புதைய கோடையிட்ட
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக்
குறிய வாகுந்துறைவன்... (குறுந்தொகை: 247)
என்ற அடிகளால் விளக்கும் வாழ்வியல் எவ்வளவு உண்மையானது. இயற்கையோடு நாம் இணைந்து வாழ்வதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. வாழுகின்ற சூழலோடு மன உணர்வுகளைச் சிறப்பாக அகவுணர்வுகளைச் சேர்த்து நோக்கும் தன்மை போற்றுதற்குரியது. மணலால் புதைய நிற்கும் நெடும் பனைகள் மனம் துயரிலே புதையாமல் வாழ வைக்கின்றன. நேரில் காணும் தோற்றங்கள் நெஞ்சிலே படியும் துயர அலைகளை மடியச் செய்கின்றன. பனை என்றுமே நெடும் பனைதான். காற்றினாலே மணல் சேர்ந்து அதன் தோற்றம் குறியதாதல் வெறும் தோற்றமே. சங்கப்பாடலில் காணும் இப்பனையின் கோலம் யாழ்ப்பாணத்திலும் நாம் காணும் கோலமே.
மக்கள் இளமை நிலையில் களவின்பம் நாடுவர். அது இயற்கை நிலை. ஆனால் பண்பாடு பெற்ற உள்ளங்கள் விரச வாழ்வை விரும்புவதில்லை. பறவைகள் சில ஒழுக்க நிலையிலே பகலிலே சேராமல் வாழுகின்றன. மனிதனும் அவற்றிடம் கற்கவேண்டிய பண்பாடு இது. காமத்தால் மயங்கி ஒழுக்கம் தவறாமல் வாழப் பனையும் பயன்பட்டுள்ளது. இளைஞன் ஒருவன் எந்நாளும் பகற்போதினிலே வந்து அழகிய பெண்ணொருத்தியுடனே நீண்ட போது அளவளாவுகின்றான். அவன் செயலால் ஊரிலே அலர் பரவிட்டது. முறையாகத் திருமணம் செய்துவிட்டால் அலருக்கிடமில்லை. பண்பு கெடாது. மணம் செய்ய எண்ணாமல் தினமும் பகலில் வருபவன் தவறை உணரவேண்டும். அந்தத் தலைவனைத் தோழி வழிப்படுத்த எண்ணுகின்றாள். அவன் வாழுமிடத்துப் பனைகளின் தோற்றத்தையே துணைகொண்டு செயற் படுகிறாள். தலைவனை அழைத்துக் கூறுகின்றாள். கடற்கரை நிலத்திலே வாழ்பவனே! இயற்கையின் தோற்றத்தை ஒரு முறை பார். எமது முற்றத்திலே நிற்கும் பனைமரத்திலே இரவிலேதான் நாரைகளும் அன்றிலும் வந்து தங்குகின்றன. அதுவே பண்பாடாயமையும். நீயும் இரவிலே வருவதே இயற்கை நிலையாகும். ""தோழியின் சொற்களில் வாழ்வு நிலையை அவன் உணருகின்றான். பறவைகள் இரவிலே கூட வாழ்கின்றன. அதற்காகவே பனை மரத்திலே வந்து தங்குகின்றன. பகலிலே உணவு தேடிப் பறந்து திரிகின்றன. இரவிலே துணையோடு இன்பம் காணப் பனையிலே வந்து தங்குகின்றன. முற்றத்தில் நிற்கும் பனையிலே நடக்கும் இனிய குடும்ப வாழ்வு என் காதலியின் உள்ளத்திலும் எண்ணமாயிருக்கும். பறவைகளைக் கண்டு அவள் மனம் என்னையும் ஒரு சேர எண்ணி ஏங்கும். இனிமேல் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதி கொள்கிறான். பனையில் இரவில் வாழும் அன்றில்கள் போல நாமும் இல்லத்திலே கூடி வாழ வேண்டும் என நினைத்து செயற்படுகின்றான். அன்று அகநானூறு 360 ஆம் பாடலில் இப்பனைக் குடும்ப வாழ்வு விளக்கப்பட்டுள்ளது. பனை நிற்கும் சூழல் வாழ்வு நிலைகள் அதனுடன் இயற்கையாகவே இணைத்து நோக்கப்பட்டுள்ளன. ஒருதலைக் காதல் நிலையிலும் கூடப்பனை தமிழர் வாழ்விலே தொடர்புற்றிருந்துள்ளது. தான் விரும்பிய பெண்ணை மணம் முடிப்பதற்காகப் பனையின் துணையை நாடும் ஆடவர் பலரும் அன்று வாழ்ந்துள்ளனர். அவர் நிலைகள் பாடலிலே குறிப்பிடப் பட்டுள்ளன. தன் எண்ணத்திலே நிறைந்தவள் உருவத்தை எழுதி, பனங்கருக்கிலே செய்யப்பட்ட குதிரையிலே ஏறி வீதிவலம் வரும் ஆண்கள் பலர். அவர்கள் செயல் "மடலேறல்' என அழைக்கப்பட்டது. குறுந்தொகையில் வரும் பாடலொன்று இதனை விளக்குகின்றது.
பொன்னோர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணட்
டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்த திதுவென முன்னின்
றவள்பழி நுவலு மிவ்வூர்
ஆங்குணர்ந் தமையினீங் கேகுமாறுளெனே.
(குறுந்தொகை : 173)
தான் விரும்பிய பெண்ணைப் பெறுவதற்கு உதவும்படி அப் பெண்ணின் தோழியை வேண்டுகின்றான் ஒரு ஆடவன். தோழியோ அதற்கு உடன்படவில்லை. எனவே அவன் மடலேறி தனது எண்ணத்தை எல்லோருக்கும் வெளிப்படுத்த முடிவுசெய்கின்றான். பனை மடலிலே செய்த குதிரையை பொன்னையொத்த நிறமுடைய ஆவிரையினுடைய புதிய பூக்களால் அலங்கரித்து, மணிகளைக் குதிரையின் கழுத்திலே கட்டி, அவை ஒலி செய்ய ஏறிவரும் அவன் செயல் ஊரவர்க்கு உண்மையை உணர்த்தும். குதிரையிலே எழுதித் தொங்கவிடப்பட்ட பெண்ணின் உருவம் யாருக்காக அவன் மடலேறினான் என்பதை விளக்கும். மடலேறிவருதலுக்காக அவன் நாணப்படவில்லை. பெண்ணின் மேல் ஊர்பழி கூறவே வழிசெய்கின்றான். இங்கு காமத்தின் நாணமற்ற தன்மையை வெளிப்படுத்தப் பனைமரம் பயன்படுத்தப்படுகிறது. கலித்தொகையிலும்,
மணிபீலி சூட்டிய நூலொரு மற்றை
அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்துயாத்து
மல்லலூர் மறுகின்கண் இவட்பாடும் இஃதொத்தன்
எல்லீருங் கேட்டீமின் என்று
படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை
நல்கியாள் நல்கியவை. (கலி : 138)
என வருகின்ற அடிகளும் மடலேறும் பற்றிக் குறிப்பிடுகின்றன.
பனங்கருக்கினாலே செய்த குதிரையை அழகு செய்யப் பலவித மலர்கள் பயன்பட்டன. நீல மணி போலும் நிறத்தையுடைய பீலியையும், பூளைப்பூவையும், ஆவிரம் பூவையும் எருக்கம் பூவோடு தொடுத்துக் காட்டிய மாலைகளால் மடல்மா அலங்கரிக்கப்பட்டது. உயிரற்ற குதிரையாக பனங்கருக்கு உருவெடுத்து காதல் வயப்பட்டவனைத் தாங்கிச் செல்கிறது. இது அவனது இறுதி முயற்சியாக அமைந்ததெனலாம். தன் எண்ணத்தை எல்லோரும் அறியச் செய்து பெண்ணைக் கொள்ளும் பெரு முயற்சி தமிழர் அகவாழ்வில் தனித்துவமான பண்பும் எனலாம்.
புறவாழ்வு நிலையில்
மனிதனின் வீட்டு வாழ்க்கை அகவாழ்வாக வெளிவாழ்க்கை புறவாழ்வாக அமைந்தது. போரும் அது சம்பந்தமான நிகழ்வுகளும் புறவொழுக்கம் எனப் புலவர்களால் விளக்கப்பட்டுள்ளன. போர்க்களத்திலே உள்ள யானைகளின் துதிக்கைகள் பனை மரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளன.
பனைமருள் தடக்கை எனப் புறநானூற்றுப் பாடலொன்று யானையின் பெருங்கையை வர்ணிக்கின்றது. பனையின் உயரமும், கருமை நிறமும் வலிமை படைத்த யானையின் துதிக்கையுடன் பொருந்தி நிற்கின்றன. அகநானூற்றுப் பாடலொன்றும் யானையின் துதிக்கையினை 'திரள்பனையன்ன பரு ஓர் எறுழ்தடக்கை' என வர்ணித்துள்ளது. பனையின் வலிமையான தோற்றம் புலவன் கண்ணில் நிறைந்து யானைக்கு உவமையாகிற்று. வலிமை நிலையிலே பனை மரமும் யானையின் துதிக்கையும் ஒன்றுபட்டு வீரம் விளக்குகின்றன.
தொடரும்

உயிரினங்களும் அவற்றின் கண்களும்........

06.09.2012.BY.rajah.

உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் பார்ப்பதற்கு கண்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். அந்தவகையில் உயிரினங்களும் அவற்றின் கண்களும் தொடர்பான சில சுவாரஷ்சியமான சிறப்பியல்புகள் வருமாறு.....

உலகிலுள்ள உயிரினங்களில் மிகப்பெரிய கண்ணினைக் கொண்ட உயிரினமாக இராட்சத ஸ்க்விட்(Giant Squid) விளங்குகின்றது. இதன் கருவிழியின் அகலமானது 18 அங்குலங்கள் ஆகும். அதாவது ஒரு தர்ப்பூசணியின் அளவினை ஒத்ததாகும்.

மனிதர்களுக்கு பிறப்பின்போது எந்த அளவில் கண்கள் இருந்ததோ, அதேஅளவிலேயே அவன் இறக்கும்வரை காணப்படும்.

எறும்புகளுக்கு இரண்டு கண்களே உண்டு. ஆனால் ஒவ்வொரு கண்களும் சிறியளவான பல கண்களைக் கொண்டுள்ளன.இது "கூட்டுக் கண்"என்றழைக்கப்படுகின்றது.

நாய்களால் சிவப்பு, பச்சை நிறங்களுக்கிடையிலான வித்தியாசத்தை உணரமுடியாது.(நிறக்குருடு)

பச்சோந்திகள் மற்றும் கடற் குதிரைகள், தமது கண்களால் ஒரே வேளையில் இரண்டு வித்தியாசமான திசைகளில் பார்க்க கூடிய இயல்பினைக் கொண்டுள்ளன. இதன் மூலம் அவை தமது எதிரிகளிடம் இலகுவில் மாட்டிக்கொள்வதில்லையாம்.

டொல்பின்கள் ஒரு கண்ணைத் திறந்தபடியே உறங்கும்.

தீக்கோழிகளின் கண்ணானது அதன் மூளையினை விடவும் பெரியதாகும்.

வண்ணத்துப்பூச்சிக்கு எத்தனை கண்கள் தெரியுமா?... ஆம்.. வண்ணத்துப்பூச்சிக்கு 12000 கண்கள் உண்டு.


நத்தைகளின் கண் வெட்டப்பட்டால் மீண்டும் வெட்டப்பட்ட இடத்தில் புதியதொரு கண் உருவாகும்.

ஆடுகளின் கண்கள் செவ்வக வடிவிலான கருவிழிகளைக் கொண்டவையாகும்.

இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு ௭திர்த்து இந்திய பாராளுமன்றத்தில் தமிழக ௭ம்.பி.க்கள் கோஷம்

06.09.2012.BY.rajah.
 
இந்திய பாராளுமன்றத்தில் நேற்று அ.தி. முக., தி.மு.க., இந்திய கம்யூ னி ஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ௭ம்.பி.க்கள் இலங்கை ஜனா திபதி இந்தியா வருவதற்கும், இல ங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற் சிய ளி ப் பதற்கும் ௭திர்ப்பு தெரிவித்து கோஷம் ௭ழு ப்பியதால் பெரும் பரபரப்பு ஏற் ப ட் டது.
இதன்போது ௭ம்.பி.க்கள் சிலர், பதா கைக ளை யும் ஏந்தி நின்றனர். காலையில் லோக் சபா ஆரம்பித்ததும் கேள்வி நேரம் பாதி ப்பு க் கு ள்ளானது.
நிலக்கரி ஊழல் பிரச்சி னை க்காக, பா.ஜ.க. ௭ம்.பி.க்கள் ஒருபுறம் கூச் ச லிட, மற்றொரு பக்கம் தி.மு.க., அ.தி. மு.க., இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறு த் தைக ள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழக ௭ம். பி. க்கள் இலங்கை விவகாரம் தொட ர் பில் தங்கள் அதிருப்தியை வெளி யிட் டனர்.
தி.மு.க. ௭ம்.பி.க்கள் இந்தியாவில் இல ங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதை ௭திர்த்தும், அ.தி.மு.க. மற்றும் விடு தலை சிறுத்தைகள் கட்சி ௭ம்.பி.க்கள் இலங்கை ஜனாதிபதி இந்தியா வருவதை கண்டி த் தும் குரல் ௭ழுப்பினார்கள்.
இதன்போது தி.மு.க. ௭ம்.பி.க்கள் வழக் கத்து க்கு மாறாக சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அதனைத்தொடர்ந்து தமி ழ கத்தில், இலங்கை இராணுவத்தினரு க்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து கோஷ ங்கள் ௭ழுப்பிய அவர்கள், ‘பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்’ ௭ன்ற கோஷங்கள் அடங்கிய பாதகைகளை யும் கையில் ஏந்தியபடி நின்றனர்.
இதனிடையே, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ௭ம்.பி. திருமாவளவனும், ஒரு பதாகையை பிடித்தபடி குரல் ௭ழுப்பினார். சபா நாயகர் இருக்கையை, அவர் முற்றுகை யிட்டாலும், ௭திர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ ராஜை நோக்கியே அவர் கோஷம் ௭ழுப்பி னார்.
இலங்கை சென்றிருந்த போது, தன் தொகு தியான சாஞ்சிக்கு வரும்படி இல ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் சவு க்கு சுஷ்மா அழைப்பு விடுத்திருந்தார் ௭ன் ப தால், ‘கொலைக் குற்றவாளியை வர வே ற் கக் கூடாது’ ௭ன ௭ழுதப்பட்ட பதா கை யை சுஷ்மாவிடம் காட்டியபடி, திரு மா வளவன் கோஷமிட்டார். ௭னினும் அதனை சுஷ்மா அவதானிக்காமலே இருந்தார்.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. ௭ம்.பி. க் க ளும் இதுதொடர்பில் வழக்கம் போல தங் கள் கண்டன கோஷங்களை ௭ழுப்பினர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண் டும் 12 மணிக்கும் கூடியது. அப்போது, தி.மு.க. ௭ம்.பி.க்கள் அமைதி காத்தனர்.
ஆனால், அ.தி.மு.க. ௭ம்.பி.க்¬கள் தொடர் ந்து கோஷம் ௭ழுப்பியபடியே இரு ந்தார் கள். இதனிடையே, ஒரு மசோதா நிறை வேற் ற ப்பட் டதைத் தொடர்ந்து சபை ஒத்திவைக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது

தமிழ் மொழியையும் தமிழ்க் கல்வியையும் காப்பாற்றுவதற்கு அரசியல் அதிகாரம் அவசியமானது: தொல் திருமாளவன்

 
06.09.2012.BYrajhh.
உலகெங்கும் பலநாடுகளிலும் கிளைகளை அமைத்து தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் பணிகளை பல ஆற்றிவருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்த தமிழ்க கல்வி மாநாட்டிலே நான் பங்கு பற்றுவதில் பெருமையடைகின்றேன்.
இந்த மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது, அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்றெல்லாம் எனக்கு ஆலோசனை கூறப்பட்டது. அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனாலும் நாங்கள் ஒரு விடயத்தை மட்டும் மறந்து விடக்கூடாது.
நமது கல்வியாக இருந்தாலும், கலை இலக்கிய முயற்சிகளாக இருந்தாலும்,விளையாட்டாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக நமது வாழ்வை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் நமது நாளாந்து அனைத்து விடயங்களிலும் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒரு அம்சம் அரசியல் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
இவ்வாறு நாங்கள் நோக்குகையில் எங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் இருந்தால்தான் நாம் நமது மொழியையோ அல்லது கல்வியையோ பாதுகாக்கலாம். எனவே இன்று சென்னையில் நடைபெறுகின்ற இந்த தமிழ்க்கல்வி மாநாட்டில் நாம், நமது மொழியையும் கல்வியையும் காப்பாற்றுவதற்கு அரசியல் அவசியம் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினறுமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த உலகத் தமிழ்க் கல்வி மாநாடு கடந்த 25ம், 26ம் திகதிகளில் சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
முதல் நாள் மாநாடு சென்னை முதுநிலை வழக்கறிஞர் இரா. காந்தி தலைமையில் நடைபெற்றது. விழாக்குழுவின் செயலாளர் இரா மதிவாணன் வரவேற்புரை நிகழ்த்த மாநாட்டின் நோக்கவுரையை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்வித்துறைப் பொறுப்பாளர் வி.சு.துரைராசா ஆற்றினார்.
அங்கு தொடர்ந்து தொல் திருமாவளவன் உரையாற்றுகையில்,
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பல சர்வதேச மாநாடுகளின் நான் பங்குபற்றியிருக்கின்றேன். மலேசியா, தென்னாபிரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளில் இயக்கம் ஏற்பாடு செய்த மேற்படி மாநாடுகளில் இயக்கத்தின் நோக்கம் பற்றி நான் நன்கு தெரிந்து கொண்டேன். இந்த பண்பாட்டு இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
அவர்கள் நடத்துகின்ற இந்த கல்வி மாநாடும் நல்ல நோக்கங்களை கொண்டதாகவே உள்ளது என்பதை நான் உணர்கின்றேன். தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னையில் வாழும் பல தமிழ் அறிஞர்களும் பேராசிரியர்களும் மாநாட்டுக் குழுவில் பங்கேற்றி உள்ளதை நான் பார்க்கின்றபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும், சென்னையில் இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் தலைநகரில், அதுவும் தமிழ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த மண்ணில் மாநாடு நடைபெறுவது என்பது மிகவும் அவசியம் என்றே நான் கருதுகின்றேன். ஏனெனில் வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களின் தமிழ்க் கல்விக்கு கைகொடுக்கக் கூடிய தகைமை தமிழக அரசிற்கே உண்டு என்பதை நான் நம்புகின்றேன்.
மேற்படி மாநாட்டில் சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மாநாட்டில் உரையாற்றுகையில்,
“உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் நடத்துகின்ற தமிழ்க் கல்வி மாநாட்டின் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும் நமது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் பலன்தரும் வகையிலும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.
தமிழர்களின் இருப்பை அழித்து நமது தாயகத்தில் தமிழர்களின் பலத்தை பல்வேறு வழிகளில் நசுக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசாங்கம் பல்வேறு பாதகமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்ற இந்த நேரத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து அத்தோடு தமிழ் நாட்டில் உள்ள பல தமிழ் அறிஞர்களி;ன் துணையோடு ஏற்பாடு செய்யப்பட்டள்ள இந்த மாநாடு தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் மிக அவசியம் மிக்க ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.
ஈழத்தமிழர்களாகிய நாங்கள் பல்வேறு வழிகளின் பாதிக்கப்பட்டவர்களாக உலகின் கண்களுக்கு தெரிந்தும் எமது மக்களின் துயரத்தை துடைப்பதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அபிவிருத்தி என்ற போர்வையில் நமது மக்களின் சொத்துக்களும் அபகரிக்கப்படுகின்றன. தங்கள் வாழ்வு அழிக்கப்படுகின்றது என்பதை நன்கு உணர்ந்து கொண்டாலும் நமது மக்கள் உணர்ந்து கொண்டாலும் தமது கல்விச் செல்வத்தை இழந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார்கள் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நடத்தப்படுகின்ற இந்த தமிழ்க் கல்வி மாநாடு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகி;ன்றது.
சென்னை மாநகரில் உள்ள முன்னணி மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டுக்கு தமிழ் நாட்டு மக்களதும் இங்கு வாழுகின்ற தமிழ் அறிஞர்களதும் ஆதரவு இருக்கின்றது என்பதை இ;ந்த மண்டபத்தில் நான் காண்கின்றேன்.
எமது மக்கள் தமிழுக்காக தங்கள் உயிர்களைக் கொடுத்துள்ளார்கள். இலட்சக் கணக்கான நமது மக்களும் போராளிகளும் தமிழ் மொழிக்காகவும் நமது அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவும் தங்கள் வாழ்வை இழந்துள்ளார்கள். இவ்வாறு பல இடையூறுகளின் மத்திpயில் வாழ்ந்து வரும் நமது மக்கள் இன்னும் தமிழ்க் கல்விக்கு மரியாதை செலுத்தி வருகின்றார்கள்.” என்றார்.
முதலாம் நாள் மாநாட்டை சென்னை எஸ். ஆர். எம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பொன். வைக்கோ தொடக்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில்,
உலகில் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு சென்னையில் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் இயங்கிவரும் முன்னணி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்ற வகையில் நான் பெருமையடைகின்றேன்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தி;ன் முக்கிய உறுப்பினர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களின் ஒத்துழைப்போடு நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் தமிழ்க் கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என்றார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் தமிழ்க் கல்வி தொடர்பான பல கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மேற்படி கட்டுரைகளை எழுதிய அறிஞர்களும் அங்கு கலந்து கொண்டு தங்கள் ஆக்கங்களை அங்க கூடியிருந்த மக்களுக்கு சமர்ப்பித்தார்கள்.
மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கொண்ட தமிழ் நாடு எம்ஜிஆர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் து. ராஜா மற்றும் முன்னார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஒளவை நடராஜன் ஆகியோர் பலனுள்ள பல கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.
மேற்படி இரண்டு நாள் மாநாட்டில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் வேல் வேலுப்பிள்ளை, செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் மற்றும் இயக்கத்தின் காப்பாளர் குரும்பசிட்டி இரா கனகரத்தினம், மலேசியாக் கிளைத் தலைவர் ப. கு. சண்முகம், தென்னாபிரிக்கா கிளையின் தலைவர் மிக்கிச் செட்டி, சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளர் ஆர். என்.லோகேந்திரலிங்கம், பிரான்சு கிளையின் தலைவர் விசு செல்வராசா, நோர்வே கிளையின் முக்கிய செயற்பாட்டாளர் சு. தியாகலிங்கம், மொரிசியஸ் நாட்டின் கிளைத் தலைவர் வேல் கோவிந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இலங்கையில் நாளொன்றுக்கு 11 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்

06.09.2012.BY.rajah.
இலங்கையில் நாளொன்றுக்கு பதினொரு பேர் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி வருடத்தில் 4000த்திற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதாக சுகாதார அமைச்சின் மனநலப் பிரிவு குறிப்பிடுகின்றது.
அநேகமானவர்கள் கிருமி நாசினிகளை உட்கொண்டு இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
20 முதல் 45 வயது வரையிலானவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளவதாகவும், இந்த மரணங்களை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கை முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தற்கொலைச் சம்பவங்களை தடுக்க முடியும் என சுகாதார அமைச்சின் மனநலப் பிரிவுப் பணிப்பாளர் பிரசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களை அச்சுறுத்தும் நோக்கில் நஞ்சு அருந்தும் பலர் உயிரிழந்து விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மன அழுத்தம் மன உலைச்சலிலிருந்து விடுபடுவது தொடர்பில் நாட்டு மக்களுக்கு போதியளவு விளக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

வரமராட்சியில் மாணவியுடன் வல்லுறவில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்த இளைஞர் குழு: தப்ப விட்ட கோப்பாய் பொலிஸார்

06.09.2012.BY.rajah.
 
வீதி திருத்த வேலைகளுக்காக வந்தவர் பாடசாலை மாணவியொருவருடன் வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இளைஞர் குழுவினால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சியைச் சேர்ந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்த வீதி வேலை செய்து வரும் நபர் ஒருவர், குறித்த மாணவியுடன் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.
காதலிப்பதாக கூறியே கதைப்பதற்காக வருமாறு குறித்த மாணவியை அவர் மாலையில் அழைத்து வந்தபோதும், இரவுவரை அவருடன் கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இரவு நேரத்தில் குறித்த மாணவியையும் அவரையும் சுற்றிவளைத்து பிடித்த இளைஞர் குழுவினர், அவர்கள் இருவரையும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதன் பின்னர் கோப்பாய் பொலிஸார் லஞ்சம் பெற்றுக்கொண்டு இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லாமல் அனுப்பி விட்டுள்ளனர். இதனை அறிந்த பொது மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நபர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பதோடு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவிக்கு என்ன? நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை சம்பவம் தொடர்பாக் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் போரில் பாதிக்கப்படாத மக்களுக்கு இந்திய வீடுகள்: இந்தியாவிடம் முறையிடுவோம்- சிறீதரன் எம்.பி

06.09.2012.BY.rajah.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள 500 வீடுகளில் பெரும்பாலானவற்றை யுத்தத்தினால் பாதிக்கப்படாத மக்களுக்கு வழங்க மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 2ம் கட்டமாக மாவட்டத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள 500 வீடுகளில் பெரும்பாலனவை யுத்தத்தினால் பாதிக்கப்படாத மக்களுக்கு வழங்க மாவட்டச் செயலகம் திட்டவரைபை தயாரித்திருக்கின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்திற்குக் கிடைக்கப் பெற்ற 500 வீடுகளில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் மட்டும் ஹிக்கிராபுரம் என்ற கிராமத்திற்கு 50வீடுகளும், மாதவள சிங்க குளம் என்ற கிராமத்திற்கு 75வீடுகளும் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த வழங்கல்கள் என்ன அடிப்படையில் வழக்கப்பட்டன என்பது குறித்து சரியான தகவல்கள் எவரிடமும் கிடையாது. மிக மோசமான யுத்தத்தினாலும், மிக நீண்டகால இடப்பெயர்வுகளினாலும் பாதிக்கப்பட்ட மாவட்டத்திலுள்ள 80 வீதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை அரை நிரந்தர வீடு கூட முழுமையாக வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்திய அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கிய வீட்டுத்திட்டத்தை யுத்தத்தினால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத மற்றும் அத்துமீறி தமிழர் பகுதிகளில் குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு எவ்வாறு வழங்க முடியும்?
மேலும் ஹிக்கிராபுரம் பகுதியில் சுமார் 600 ற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேறு மாவட்டங்களில் வீடுகள் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் வீட்டுத்திட்டத்தை வழங்குவது என்ன அடிப்படையில்? இதன் மூலம் முழுமையாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுவொரு மோசமான நிலையாகும். தமிழ் அதிகாரிகளையே உன்மை நிலையை வெளியிட முடியாமல் அச்சுறுத்தி சிலர் தமது அரசியல் நோக்கங்களை ஈடேற்றி வருகின்றனர். இதேவேளை ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளுக்கு 50 வரையான வீடுகளே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
ஏனவே இந்த விடயம் குறித்து இந்திய அரசாங்கம் அறிந்து கொள்ளாமலிருக்கின்றதா? இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் படுகின்றது. என்றவாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
எனவே இந்த விடயம் குறித்து இந்திய மற்றும் தமிழக அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வருவோம் என்றார்.

கிளி.கண்டாவளை பிரதேசத்தில் நிரந்தர படைமுகாம் அமைக்க திட்டமிடும் இராணுவம்

06.09.2012.BY.rajah.
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் நிரந்தர படைமுகாம்களை அமைப்பதற்கென தனியார் நிலம் உட்பட, சுமார் 2ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமக்கு வழங்குமாறு படையினர் பிரதேச செயலகத்திடம் அனுமதி கோரியிருக்கும் விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
மாவட்டத்தில் ஏற்கனவே கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 418ஏக்கர் நிலத்தை வழங்குமாறு படையினர் அனுமதிகோரியுள்ள நிலையில், தற்போது கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலும் சுமார் 2ஆயிரம் ஏக்கர் வரையான நிலத்தை தமக்கு வழங்குமாறு படையினர் அனுமதி கோரியுள்ளனர்.
இவ்வாறு படையினரால் அடையாளப்படுத்தப்பட்டு அனுமதி கோரப்பட்டுள்ள இடங்களில் ஏற்கனவே படையினர் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் அந்தப்பகுதியில் தமது முகாம்கள் நிரந்தரமாக விஸ்தரிப்பதற்காகவே இந்த அனுமதியை படைத்தரப்புக் கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பரந்தன், ஆனையிறவு போன்ற பகுதிகளிலேயே அதிகளவு நிலத்தை படையினர் அடையாளப்படுத்தியிருப்பதாகவும், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் ஊரியான் நெற் களஞ்சியம், ஆனையிறவு உப்பள விடுதி ஆகியவற்றுக்குச் சொந்தமான நிலத்தையும் தமக்கு வழங்குமாறு படையினர் குறித்த அனுமதியில் கேட்டிருக்கின்றனர்.
இதேவேளை மாவட்டத்தில் அதிகளவு நிலப்பரப்பைக் கொண்ட கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் படையினர் அனுமதிகோரியிருக்கும் நிலப்பகுதிகளில் பெரும்பாலானவை தனியாருக்குச் சொந்தமானவை என்பதுடன் இந்த நிலத்தில் வாழ்ந்த மக்கள் தற்போது வேறிடங்களில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்க நியூயெர்ஸி மாநிலத்தின் சிறந்த ஆசிரியை கைது


06.09.2012.By rajah
அமெரிக்க மாநிலத்தின் மிகச் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக கடந்த ஆண்டு பெயர் குறிப்பிடப்பட்ட நியூயெர்ஸி மாநிலத்திலுள்ள உயர் பாடசாலையொன்றின் ஆசிரியையொருவர் 15 வயது மாணவர் ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெஸ்ட் ஒரேஞ் உயர் பாடசாலை ஆசிரியையான ௭ரிக்கா டிபலோ (33 வயது) சிறுவனான மாணவனுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தமை, அவனது நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.

2011 ஆம் ஆண்டின் ௭ஸெக்ஸ் கன்றியின் ஆசிரியர் விருதை வென்ற ௭ரிக்கா டிபலோ, கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்ட மாணவனுடன் பாலியல் தொடர்பை ஆரம்பித்ததாகவும் கடந்த ஆகஸ்ட் இறுதி வரை அந்தத் தொடர்பை தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
௭ரிக்கா டிபலோ பாடசாலையில் ஆங்கில ஆசிரியையாகவும் பூப்பந்து விளையாட்டு பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவரது கைது குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன

தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தின் ௭திர்ப்புகளுக்கு காரணம்: ஜே.வி.பி.

 
06.09.2012.BYrajah.
அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைகளினால் நாட்டிற்கு பேராபத்து ஏற்படப் போகின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தின் ௭திர்ப்புகளுக்கு பிரதான காரணம். ௭னவே இந்தியாவுடன் வீணாக முரண்படாது உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை தேட இனியேனும் அரசு முயற்சிக்க வேண்டும் ௭ன்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைத்து அடித்துக் கொலை செய்தால் அதனை ௭ந்தவொரு நாடோ தரப்போ வேடிக்கை பார்க்காது. முதலில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க அரசு கற்றுக்கொள்ள வேண்டும் ௭ன்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அக்கட்சியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறுகையில்,

நாட்டின் பண வீக்கம் 8.9 வீதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் வாழ்வாதார செலவுகள் மிகவும் உச்ச நிலையை அடைந்துள்ளன. ௭திர்வரும் நாட்களில் ௭ரிபொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் பிரச்சினைகள் உருவாகப் போகின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடாது முரண்பாடுகளையும் வீண் பகைகளையும் அரசு வளர்த்து வருகின்றது.

இலங்கைக்கு ௭திராக சர்வதேச நாடுகளில் மாநாடுகளை நடத்தவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் அரசாங்கத்தின் அடிப்படை தன்மையற்ற நடவடிக்கைகளே பிரதானகாரணம். யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுதந்திரத்தை அரசு வழங்கவில்லை. மீள்குடியேற்றம் மற் றும் அடிப்படை உதவிகளை செய்தல் ௭ன்பவற்றிலிருந்து முழு அளவில் இழுத்தடிப்பையும் ஏமாற்றுப் போக்கையும் அரசு கையாண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தின் ௭திர்ப்புகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக இலங்கைக்கு ௭திராக தமிழக முதல்வர் ஜெயலலிதா செயற்பட அரசின் போக்கே காரணம். அரசாங்கத்திற்கும் தமிழ் மக்கள் மீது அக்கறையில் லை ௭ன்பதற்காக தமிழகமும் அவ்வாறே இரு ந்து விடும் ௭னக் கூற இயலாது. ௭னவே தமிழர்களின் அடிப்படை பிரச்சினைக ை ள தீர்க்க நடவடிக்கை ௭டுக்க வேண்டும். அவ்வாறு அல்லாது இந்தியாவிற்கு ௭திராக உள்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்து உருவப்பொம்மைகளை ௭ரிப்பதால் ௭வ்விதமான பலனும் கிடைக்கப் போவதில்லை மாறாக மீண்டும் பிரிவினைவாதமே தோன்றும். நாட்டில் மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும் ௭ன்றார்