siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 6 செப்டம்பர், 2012

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் அகிலதாஸ் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்! வடக்கின் வசந்தம்

 
 
06.09.2012.by.rajah.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் சிங்கமாகக் கர்ச்சித்துக் கொண்டிருந்த அதிபர் அகிலதாஸ் கொக்குவில் இந்துக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணமாக பெருமளவு பணமோசடி என கல்லூரியை விட்டு அவரை அகலச் செய்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக கொக்குவில் இந்துக் கல்லூரி ஏனைய பலம் பொருந்திய கல்லூரிகளுக்கு நிகராக வருவதற்கு ஆணிவேராக இருந்தவர் அகிலதாஸ்.
கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்களுக்கு கசக்கும் மருந்தாக இருந்து அவர்களையும் சரியான முறையில் இயங்கச் செய்தவர் என கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட கல்லூரியில் நீண்டகாலமாகக் கட்டுப்படுத்த முடியாத சில வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் வழியிலேயே சென்று அவர்களை வழிக்குக் கொண்டு வந்தவர் என குறிப்பிட சில பிரிவைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பலவழிகளிலும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மதிப்பை உயர்த்துவதற்கு பாடுபட்ட அதிபர் தற்போது தென்மராட்சி கல்வி வலயத்தில் இணைக்கப்பட்டதன் காரணம் என்ன??
கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபராக இருந்த அகிலதாஸ் அவர்களுக்கு சில முக்கிய குறைபாடுகள் இருந்ததாகத் தெரிகின்றது.
அதில் குறிப்பாக ஆசிரியர்களுடன் கடுமையாக நடந்து கொள்வதும் மாணவர்கள் முன் ஆசிரியர்களை தாறுமாறாகப் பேசுவதும் அவரது சிறப்பான குறைபாடாக அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இவ் அதிபர் பாடசாலையின் நன்மைக்காகவே முக்கியமாகப் பாடுபட்டார் எனவும் அவர்களே தெரிவிக்கின்றார்கள். அத்துடன் இவர் நிதி மோசடி செய்திருக்க மாட்டார் என ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இவருக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் பலம் பொருந்தியதாக கருதப்படும் பழைய மாணவர் சங்கத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கும் இடையில் முறுகல் இருந்ததாகத் தெரியவருகின்றது.
இதன் அடிப்படையில் கல்லூரியில் நிதி மோசடி என தெரிவித்து பல தடவைகள் மாகாண கணக்காய்வு அதிகாரிகள் கல்லூரி ஆவணங்களைக் குடைந்தெடுத்தும் ஆதாரம் இல்லாது சென்றுள்ளார்கள்.
ஆனாலும் இவர் ஊழல் செய்துள்ளார் என முக்கிய காரணம் காட்டியே கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து மாற்றப்பட்டார் என தற்போதும் அவரைப் பதவியில் இருந்து விலகச் செய்தவர்கள் தெரிவிக்கிறனர்.
குறிப்பிட்ட அதிபரை மாற்ற வைப்பதற்காக ஈ.பி.டி.பி யின் முக்கியஸ்தரான கொக்குவிலைச் சேர்ந்த தவராஜா (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) முன்னின்று உழைத்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்ற பதவியுயர்வு பெற்றே தென்மராட்சி கல்வி வலயத்திற்கு சென்றுள்ளதாக கல்வித்திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும் முக்கிய அதிகாரிகள் சிலர் இது தொடர்பாக மூச்சு விடவும் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.
அகிலதாஸ் அவர்கள் கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இவரை அதிபர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு அது காரணமல்ல என்பது நூறு வீத உண்மை.
அவ்வாறு இருக்கும் போது அதிபர் பதவியில் இருந்து தென்மராட்சி வலயத்திற்கு இணைக்கப்பட்டு பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவி கொடுக்கப்பட்டு அவரது வாயை மூடியுள்ளது உண்மை.
கல்வி அதிகாரிகள் தரப்பில் சிலர் அதிபர் தொடர்பாக பண மோசடி இருப்பதாகக் கூறுகின்றார்களே தவிர அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கின்றார்கள் இல்லை.
கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இனி வரப்போகும் அதிபர் யார் என சிலரிடம் வினாவிய போது நல்லூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து யாழ் இந்து மகளீர் கல்லூரியில் பிரச்சனைகளுக்கு உள்ளாகி அலுவலகத்துடன் அகற்றப்பட்ட மாணிக்கராஜா எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணிக்கமாக் திகழ்ந்து கொண்டிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு ராஜாவாக வரப்போகின்றவர் யார் என பழையமாணவர்களுக்கு விளங்கியிருந்தால் சரி