இங்கிலாந்தில் குடி போதையில் கார் ஓட்டிய சல்மான்ருஷ்டியின் மகனுக்கு அபராதமும், கார் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.
புகழ்பெற்ற இங்கிலாந்து வாழ் இந்திய எழுத்தாளர் சல்மான்ருஷ்டி. இவரது மகன் ஷபார்ருஷ்டி (35). இவர் ஒரு வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த ஆகஸ்டு 1–ந்தேதி ஹம்ப்ஸ்டட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார். அதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஷபார்ருஷ்டி 13 மாதங்கள் கார் ஓட்ட தடை விதித்தார். மேலும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்