siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 3 மே, 2013

மாட்டு இறைச்சியில் எலிக்கறி, நரிக்கறி கலப்படம்: 904 பேர்


சீனாவில் எலிக்கறி, நரிக்கறி ஆகியவற்றை மாட்டு இறைச்சியில் கலப்படம் செய்து விற்று வந்த 904 நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சீனாவில் விற்கப்பட்டு வருகின்ற பதப்படுத்திய இறைச்சி வகைகளில் கலப்படம் செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது.
இதனால் சீனாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையில், எலிக்கறி, நரிக்கறி ஆகியவற்றை கலப்படம் செய்து பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 25ம் திகதியில் இருந்து இதுரை சுமார் 20 ஆயிரம் தொன் கலப்பட இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 904 பேரை இந்த வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
 

சூடான் தங்கச்சுரங்க விபத்தில் 60 பேர்


ஆப்பிரிக்க நாடான சூடானின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான தெற்கு சூடான் சமீபத்தில் பிரிந்து சென்றது. இதையடுத்து அந்நாட்டின் எண்ணெய் வருமானத்தின் 75 சதவிகித இழப்பு ஏற்பட்டது.
தர்பர் பகுதியில் இருக்கும் தங்கச் சுரங்கங்கள்தான் அந்த நாட்டின் முக்கிய வருமானமாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டில் 50 டன் தங்கம் வெட்டியெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்களன்று வடக்கு தர்பாரில் உள்ள ஜாபெல் அமிர் சுரங்கத்தில் 40 மீட்டர் ஆழத்தில் தங்கம் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சுரங்கம் சரிந்து விழுந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மீட்புப்பணிகள் முடங்கியுள்ளன.
இதனால் நவீன கருவிகளை பயன்படுத்தாமல், பழங்காலக் கருவிகளைக் கொண்டு மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தர்பர் தங்கச் சுரங்கங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடைபெறும் மோதலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊரைவிட்டு வெளியேறி, அகதிகள் முகாமில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

நிழல் தந்த மரம்,,


தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.
   காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள் அவன் மரத்தை நாடி வந்தான். அந்த மரம் அவனை அன்போடு வரவேற்றது. “வா குழந்தாய்! வந்து என் நிழலில் விளையாடு!” அந்தச் சிறுவன் சொன்னான், “நான் இன்னும் சின்னக் குழந்தை அல்ல. மரங்களுடன் என்னால் விளையாட முடியாது. நான் விளையாடுவதற்கு விளையாட்டு பொம்மைகள் தேவை. அவற்றை வாங்க பணம் தேவை.”
   அந்த மரம் சொன்னது, “என்னிடம் பணம் கிடையாது. ஆனால் நீ என்னிடமிருந்து ஆப்பிள் பழங்களை பறித்துச் சென்று அவற்றை விற்றால் உனக்கு தேவையான பணம் கிடைக்கும்.”
   அந்தச் சிறுவன் அப்படியே செய்தான். பழங்களை விற்றதில் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. அதைக் கொண்டு தனக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் மீண்டும் மரத்தின் பக்கம் போகவில்லை. மரம் மீண்டும் தனிமையில் விடப்பட்டது.
   சில ஆண்டுகள் கழித்து ஒரு இளைஞன் அந்த மரத்தை நோக்கி வந்தான். அந்தச் சிறுவன் தான் இப்போது வளர்ந்து இளைஞனாக இருக்கிறான். அந்த மரம் அவனை அடையாளம் கண்டு கொண்டது. “வா மகனே! ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? வந்து என் நிழலில் கொஞ்ச நேரம் உட்கார். இவ்வளவு நாட்களாக உன்னைக் காணாமல் நான் ஏங்கிப் போயிருக்கிறேன்” என்று அவனை அழைத்தது.
  அந்த இளைஞனோ சலித்துக் கொண்டான், “எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைக்கிறேன். அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது.”
   அந்த மரம் சொன்னது, “கவலையை விடு மகனே! இப்போதும் என்னிடம் பணமில்லை. ஆனால், நீ எனது கிளைகளை வெட்டி உனது வீட்டை கட்டிக் கொள்ளலாம்.” அந்த இளைஞன் சந்தோஷமாக அந்த மரத்தின் கிளைகளையும் நடுப்பகுதியையும் வெட்டி எடுத்துச் சென்று தனது குடும்பத்திற்காக வீடு கட்டிக்கொண்டான். அடிப்பகுதி மட்டுமே மிச்சமிருந்த அந்த மரம் மீண்டும் தனிமையிலாழ்ந்தது.
   நீண்ட காலம் கழித்து அந்த இளைஞன் மீண்டும் அந்த மரத்தை நாடி வந்தான். இப்போது அவன் இளைஞனல்ல. மூப்படைந்திருந்த அவன் மிக களைப்படைந்தவனாகவும் சோகமானவனாகவும் இருந்தான். மரம் அவனிடம் கேட்டது, “மகனே, ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? என் உதவி எதுவும் உனக்கு தேவையா? ஆனால், உனக்கு உதவ என்னிடம் இப்போது ஆப்பிள்களும் இல்லை, கிளைகளும் இல்லை. உனக்கு ஆறுதலாக நிழல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.”
  அந்த மனிதன் விரக்தியாக சொன்னான், “எனக்கு வாழ்க்கையே வெறுப்பாகி விட்டது. நான் மிக களைத்து விட்டேன். தனியானவனாகவும் ஆகிவிட்டேன். எனக்கு உன் ஆறுதல் மொழிகள் தேவை. உனது வேரில் நான் அமர்ந்து கொள்ளலாமா?”
   மரம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த மனிதன் அங்கு அமர்ந்து கொண்டான். தனிமையாக இருந்த இருவரும், ஒருவர் மற்றவருக்கு துணை என்ற எண்ணத்தில் மகிழ்வடைந்தார்கள். தங்கள் நிலையை எண்ணி அவர்களுக்கு அழுகையும் வந்தது.
   இந்த கதையை படிக்கும் நாம் அந்த சிறுவன் எத்தகைய கொடூரமான சுயநலவாதியாக இருந்திருக்கிறான் என அவன் மேல் கோபமடைவோம். கொஞ்சம் பொறுங்கள்! ஒருவகையில் நாம் அனைவருமே அந்த சிறுவனைப்போலத்தான் நடந்து கொள்கிறோம், நமது பெற்றோர்களை பொறுத்த வரையில்!
   மரம் என உருவகமாக சொல்லப்பட்டது நமது பெற்றோர்களைத்தான் என கொண்டு சற்று யோசனை செய்து பாருங்கள்!
   நாம் சிறுவயதாக இருக்கும்போது பெற்றோரின் அரவணைப்பு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடன் இருக்கும்போது நாம் மிக பாதுகாப்பாக உணர்கிறோம். நாம் வளர்ந்த பிறகு அவர்களின் நிழலில் இருப்பது நமக்கு பிடிப்பதில்லை. அவர்களை தனிமையில் விட்டு நாம் விலகிச்செல்கிறோம். அவர்களின் உதவி தேவை எனும்போது மட்டுமே நாம் திரும்ப வருகிறோம்.
   அவர்களுடன் செலவழிக்க நமக்கு நேரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பாசமிகு பெற்றோர் நமக்காக நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தம் பிள்ளைகளின் பாசமும் கவனிப்பும்தான். இதை நாம் சரியாக உணர்ந்து கொண்டிருக்கிறோமா?
   உங்கள் பெற்றோரை மறந்து விடாதீர்கள். முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். உங்கள் பாசத்தையும் பரிவையும் அவர்களிடம் காட்டுங்கள். நீங்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தானும் சந்தோசமடையும் ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்.