siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் பேஷன் ஷோ

10.08.2012.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்திய விமான நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டின் “வியட் ஜெட் ஏர்” நிறுவனம் தன்னுடைய புது விமானத்தை, ஹோசிமின் நகரிலிருந்து சுற்றுலாத் தலமான நாடிராங் பகுதிக்கு, கடந்த 3ஆம் திகதி இயக்கியது.
புது விமானம் நடுவானில் பறக்கும் போது, விமானத்திற்குள் உள்ளாடைகளுக்கான அலங்கார அணிவகுப்பு நடந்தது.
ஐந்து மொடல் அழகிகள் இந்த அணிவகுப்பின் போது மூன்று நிமிடங்கள் நடனமாடியுள்ளனர். இந்த விமானத்தில் பயணித்தவர்கள் இந்த அணிவகுப்பு மற்றும் நடனத்தை மொபைல் போனில் படம் பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட வியட்நாம் நாட்டு விமான கட்டுப்பாட்டு ஆணையம், உரிய அனுமதி பெறாமல் நடுவானில் இதுபோன்ற ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்திய விமான நிறுவனத்துக்கு 1,000 டொலர் அபராதம் விதித்துள்ளது

தன் மகளின் நண்பர்களுடன் தவறான உறவில் ஈடுபட்ட தாய்

10.08.2012.
தனது மகளின் நண்பர்களான இரு பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு 7 வருட சிறை தண்டனை கிடைக்கவுள்ளது. 4 குழந்தைகளின் தாயான பிரிட்டனைச் சேர்ந்த கெல்லி பேகர் என்ற 35 வயது பெண், மதுபோதையில் 14 மற்றும் 16 வயது சிறுவர்களுடன் ஒரே நேரத்தில் உறவு வைத்துள்ளார்.
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள டட்வேர்த் நகரில் உள்ள கெல்லியின் வீட்டுக்கு அவரது மகள் தன்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விருந்தளித்தார். இதற்காக 10 மாணவ, மாணவிகள் கெல்லியின் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது கெல்லி மது அருந்தி விட்டு அவர்களில் 16 வயதான ஒரு மாணவனுடன் சமயலறையில் நடனமாடியுள்ளார். பின்னர் அவனுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார்.
அப்போது அதைப் பார்த்துவிட்ட 14 வயது சிறுவனையும் இழுத்து உறவு வைத்துள்ளார். 14 வயது சிறுவனுடன் தவறாக நடந்து கொண்டதற்காக கெல்லி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை கெல்லி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு அதிகபட்சமாக 7 வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

காதலியின் மகனைக் குத்திக் கொன்றவன் கைது

10.08.2012.
ஜேர்மனியில் காதலியின் மகனை, காதலன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் நள்ளிரவில் நடந்தது. மகனின் அலறலைக் கேட்டு விழித்த தாய், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனைக் தூக்கி கொண்டு தெருவில் நின்று கொண்டு உதவி கேட்டு கதறினாள்.
அலறல் சத்தம் கேட்டு அண்டை வீட்டாளர் ஒருவர், பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸ் விரைந்து வந்து கொலைகாரனைப் பிடிக்க முயன்ற போது அவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டான்.
அவனுக்கு மயக்கமருந்து கொடுத்து பிடித்துச் சென்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் அதிகளவு ரத்தம் வெளியானதால் உயிரிழந்தான்.
அதன் பின், கொலையாளி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவன் என்பதுவும், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளான் என்பதுவும் தெரியவந்தது.

தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த படகிலிருந்து எதிரிகளை காப்பாற்றிய அமெரிக்கர்கள்

10.08.2012.
மத்திய கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த படகொன்றிலிருந்து 10 பேரை அமெரிக்க கடற்படையினர் முதன் முறையாக காப்பாற்றி உள்ளனர். இவர்களில் 8 பேர் ஈரானியர்கள், மீதமுள்ள 2 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ் ஜேம்ஸ் ஈ. வில்லியம்ஸ் என்ற போர்க்கப்பலே இவர்களை மீட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க கடற்படை பேச்சாளர் ஒருவர் கூறுகையில், விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்கப் படையினரால் ஈரானியர்கள் காப்பாற்றப்படுவது இது முதல் முறையல்ல.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானியர்கள் 13 பேரைக் கடற்கொள்ளையர்களிடமிருந்து அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

,லங்கா ஸ்ரீ தமிழ் ரேடியோ {f m }

மிகவும் காதுக்குவிருந்தாக தமிழ் வானொலி
#






தடைகள் வரினும் டெசோ மாநாடு நடைபெறும்; ஏற்பாடுகள் பூர்த்தி என அறிவிப்பு

10.08.2012.
news டெசோ மாநாடு திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாமுகள் அனைத்தும் பூர்த்ததியடைந்துள்ளதாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ள டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் மாநாட்டை சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளளது.

இதனையடுத்து மாநாடு நடைபெறுவதில் பல்வேறு இடையூறுகளும் நெருக்குதல்களும் எழுந்த நிலையிலும் மாநாட்டை நடத்துவதில் டெசோவின் ததலைவரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி உறுதியாக உள்ளார் என ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் தெரிவித்திருக்கிறார்

நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டினால் ஈழத்துக் கடலக மக்கள் சுதந்திரமான கடற்றொழில் செய்வதற்கு வழிவகை பிறக்குமா?;

10.08.2012.
 வட மாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு எதிர்பார்ப்பு
news
ஈழத்தமிழர் ஆதரவு மாநாடான டெசோ மாநாட்டில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழிலினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படுமா? என வட மாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
அவ்விடயம் தொடர்பிவ் வடமாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1985ம் ஆண்டு வைகாசித் திங்கள் 12ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட “தமிழீழ ஆதரவாளர் அமைப்பு” (டெசோ) இன்றுடன் 27
வருடங்கள் ஆன போதிலும் ஈழத்தமிழனுக்கு எந்த வகையில் எதைச் செய்தது?

வன்னி மண்ணிலே கொத்துக் குண்டினால் குலை குலையாக தலை சாய்ந்த எம்மினத்தவர் எத்தனை?. எத்தனை?. கிபிர் போட்ட குண்டுகளினால் சிதறி சின்னாபின்னமாகி மாண்டு போன எம்மினத்தவர் எத்தனை? எத்தனை? தாய் தந்தையரை இழந்த அநாதைச் சிறுவர்கள் எம்மாத்திரம்?. குணவனை அழந்து நிர்க்கதிக்குள்ளாகி வாழ வழி தெரியாத விதவைப் பெண்கள் எத்தனை? எத்தனை? ஈழத் தமிழினம் இந்த அவலங்களை அனுபவித்த போது இந்த டொசோ அமைப்பு என்ன செய்தது?. இபடபோது என்ன அவசியம் ஏற்பட்டது மாநாடு நடத்துவதற்கு?.

ஈழத்தமிழனின் வாழ்வையும் சாவையும் தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் தத்தமது சுயலாபத்திற்கும் வழமான வாழ்விற்கும் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஈழத்தமிழினத்திற்கு விடிவு எப்படி ஏற்படும்?.

கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற போர் அனர்த்தங்களால் எம்மவர்கள் அனுபவித்தவை சொற்களில் வடிக்க முடியாத கொடுமைகள். என்ன செய்வது. தமிழனின் தலைவிதி என்றே கூறிவிடுவோம்.
போர் ஓய்ந்த பின் மீண்டும் நாம் இழந்த சொத்தைக் கடல் தாயின் மடியிலிருந்து மீண்டும் மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கடல் மீது சென்றால் இந்திய இழுவைப் படகுகளின் நடவடிக்கைகள், அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக தொழில் செய்ய முடியாத அவலம்.

இந்நிலை தொடர்பாக உயர்மட்டத்திலான அதிகாரிகளிடம் எத்தனை மனுக்கள் கொடுத்தோம். தொடர்பாடல் பலதடவை
மேற்கொண்டோம். முடிவுகள் சாதகமாக ஏற்படவில்லை.

இதன்பின் ஈழத்தமிழ் மீனவர்குழு நேரடியாக தமிழ் நாட்டிற்கு பயணத்தை மேற்கொண்டு தமிழ் நாட்டின் கரையோர
எமது உறவுகளான மீனவர்களை சந்தித்து எம்மவர்களின் நிலைமையை, கடந்த போர் அனுபவங்களையெல்லாம் பரஸ்பரம் வெளிப்படுத்தினோம். இதன் பின்னவராவது எம்மவர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என நம்பினோம். ஓன்றுமே நடைபெறவில்லை.

இந்த நிலையில் இது விடயமாக இந்திய இரசு மௌனம் காத்தது ஏன்? தமிழ்நாடு அரசு கூட பாராமுகமாக இருந்துவிட்டது. ஏன்? அப்போதும் தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர்தான் இருந்தார்.
இழுவைப்படகு தொழில் நடைமுறைகளால் எம்மவர்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் சொல்லிமாளாது. இழுவைப் படகுகளின் நடவடிக்கைகளால் வலைகளை இழந்த மீனவர்கள் இன்றும் கூட தொழில் செய்ய முடியாத அவல வாழ்வு வாழ்கிறார்களே!. இவை அனைத்தும் அரசியல்வாதிகளுக்குத் தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றதே.
அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ளும் எண்ணம் அரசுகளுக்கு சற்றேனும் இல்லை. இந்த நிலையில் கூட்டப்படும் டெசோ மாநாடு கடற்றொழில் மக்களின் அவல வாழ்வு நீங்க நடவடிக்கை எடுக்குமா?.

ஈழத்தமிழர்களின் கடற்றொழில் நடைமுறைக்குப் புரண பாதுகாப்பு வழங்கி கடல் வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு ஒப்படைக்குமா?. டெசோ மாநாடு ஆக்கபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு ஆவண செய்யும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

சிறிலங்காவில் தமிழ் மக்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம்

10.08.2012.
news
சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் குறித்த விவாதத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. மனிதவுரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், யுத்த பாதிப்புக்குள்ளான தமிழர்களின் வாழ்க்கை சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இவ் விவாதத்தில் விரிவாக வாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிலங்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவில் தமிழீழ ஆதரவாளர்களின் மாநாடு எவ்வாறு செல்வாக்கு செலுத்தும் என்பது குறித்தும், இந்த விவாதத்தின் போது முக்கிய அவதானம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் கையெழுத்து வேட்டை

10.08.2012.
news
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம் இன்று வவுனியா நகரிலும் இடம்பெற்றுள்ளது.

மக்கள் கண்காணிப்பு இயக்கத்தினால் கடந்த மாதம் 27ம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கையெழுத்து வேட்டையானது நாட்டின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று வவுனியாவிலும் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று நண்பகல் 2 மணி வரை நடைபெற்றுள்ளது.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு மக்களின் ஜனநாயக உரிமை, மீளக்குடியேற்றம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு, சகலரும் சமஉரிமையுடன் வாழ்வதற்கான நிலைமை, காணிபிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படியும் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

அத்துடன் மக்களுக்கு தெளிபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது கையொப்பங்களை இட்டுள்ளனர்.
டன், இது நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது டெல்றொக்சனின் உடல்; மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

news10.08.2012.
 
வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி டெல்றொக்சனின் சடலம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான பாசையூருக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

நேற்று பிரேத பரிசோதனையின் பின்னர் மாலை 5.30 மணியளவில் சடலம் ராகம வைத்தியசாலையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சடலம் இன்று காலை 6 மணிக்கு அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை இன்று காலை மரணச் சடங்கு நடைபெறும் வீட்டிற்குச் சென்ற பொலிஸார், வாத்தியங்கள் இசைக்க கூடாதெனவும், ஊர்வலம் நடத்தப்படக் கூடாது என எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

உயிரற்று கிடக்கும் தமது உறவின் இறுதிக் கிரியகளை கூட தாம் நினைத்தபடி செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இறந்த தமிழ் அரசியல் கைதியின் இறுதிச் சடங்குகள் நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது

பொருளாதார அபிவிருத்தியில் மட்டுமே நிலையான சமாதானத்தை எட்ட முடியாது; சிறிலங்காவுக்கு பிரான்ஸ் அறிவுரை

news10.08.20'12.பொருளாதார அபிவிருத்தியின் மூலம் மட்டும் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவது அவசியமானது என சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன் அறிவுறுத்தியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர், எவ்வாறெனினும் இன்னும் பல விடயங்களில் வடக்கு கிழக்கு மக்களுக்கு சேவையாற்றப்பட வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் சிலர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாது உள்ளனர் எனவும், பெரும்பாலான இடம்பெயர் மக்களுக்கு உரிய இருப்பிட வசதிகள் எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் யுத்த வலய மக்களில் பலர் இன்னமும் பிரச்சினைகளையே எதிர்நோக்கி வருவதுடன் பெண்களும், ஊனமுற்றவர்களும் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக கிறிஸ்ரின் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அபிவிருத்தி மிகவும் அவசியமானது, எனினும், அபிவிருத்தியினால் மட்டும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் தமக்கு உடன்பாடில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மிகவும் காத்திரமான அறிக்கையாகவே உள்ளது எனவும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் காத்திரமான முறையில் அமுல்படுத்துவதன் மூலம் நிரந்தர சமாதானத்தை நோக்கி பயணிக்க முடியும் என்பதே பிரான்ஸின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணை செய்தல் ஆகியன தொடர்பில் சரியான பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரை அறிக்கை தமிழ் சிங்கள மொழிகளில் பிரசுரமாக உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்ஸில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் வெளிவிவகாரக் கொள்கைளில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும், சிறிலங்காவுடனான உறவுகளில் மாற்றம் இருக்காது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்

அமைதி முயற்சிக்கு உதவ தென்னாபிரிக்க அரசு தயார்; கூட்டமைப்புடனான சந்திப்பில் அந்த நாட்டு அமைச்சர் உறுதி

news210.08.2012.மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா முன்வந்திருக்கிறது.கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது தென்னாபிரிக்க அரசின் உயர்மட்டத் தலைவர்கள் இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி யிருக்கின்றனர்.
இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்கப் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் தலைமையிலான குழுவினரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியது. கொழும்பிலுள்ள தென்னாபிரிக்கத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் போருக்குப் பின்னரான மக்களின் நிலைமை குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வினவியுள்ள தென்னாபிரிக்க தூதுக்குழு, போருக்குப் பின்னரான நல்லி ணக்கம் மற்றும் அமைதி முயற்சி களுக்குத் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதுகுறித்து இலங்கை அரசு டனும் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போர் முடிவுக்கு வந்தபின்னர் இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுகள் முறிவடைந்தமைக்கான காரணங்கள், அதனை மீள ஆரம்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்பன குறித்து தென்னாபிரிக்கத் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு, மதச் சுதந்திர பறிப்பு உட்பட்ட பல விடயங் களையும் எடுத்துக் கூறியிருக்கிறது

செந்தில் நாதம்

10.08.2012.பத்தி காணொளி இசை நிகழ்சி கள்

இன்னும் நான்கு மாதங்களே உயிர் வாழக் கூடிய 12 வயது சிறுமி - இருக்கப் போவதை நினைக்கையில் கண்ணீர் தான் வருகிறது.

இன்னும் நான்கு மாதங்களே உயிர் வாழக் கூடிய 12 வயது சிறுமி - இருக்கப் போவதை நினைக்கையில் கண்ணீர் தான் வருகிறது.10.08.2012.
இன்னும் நான்கு மாதங்களே உயிர் வாழக் கூடிய 12 வயது சிறுமி தனது அழகுக் கலை மூலம் “youtube இணையத்தளத்தில் சுமார் 100,000 பேரை மகிழ்வித்து வருகிறார், Talia Joy Castellano எனும் சிறுமி neuroblastoma எனும் புற்று நோய் மூலம் கடந்த ஐந்து வருடங்களாக அவதியுற்று வருகிறார்.

இவ்வளவு துன்பத்திலும் மனம் தளராத சிறுமி தனக்கென Youtube இணையத்தளத்தில் ஒரு கணக்கை ஆரம்பித்து அவ்வப்போது அழகுக் குறிப்புகளை வழங்கி வருகிறார், தினமும் இவளுக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புற்றுநோய் மூலம் கிடைப்பது தீமை மட்டுமே எனினும் Youtubeஇல் பல நண்பர்கள் கிடைத்ததால் எனக்கு புற்றுநோய் நன்மையே செய்கிறதென சொல்கிறார். மிகவும் குழந்தை தனமாக பேசும் இவளின் அழகுப்பேச்சை கேட்கையில் மனதுக்கு மகிழ்வாக இருந்தாலும், இன்னும் சில நாட்களே இருக்கப் போவதை நினைக்கையில் கண்ணீர் தான் வருகிறது.

குழந்தை தன்னை பார்த்து சிரிக்கவில்லை என்பதற்காக குழந்தையை சுவரில் அடித்து கொலை செய்த தந்தை

குழந்தை தன்னை பார்த்து சிரிக்கவில்லை என்பதற்காக குழந்தையை சுவரில் அடித்து கொலை செய்த தந்தை10.08.2012.
குழந்தை தன்னைப் பார்த்து சிரிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அதன் மீது வெறுப்பு கொண்ட தந்தை ஒருவர், அதனை சுவரில் அடித்துக் கொன்றார். நியூஸிலாந்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நியூஸிலாந்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் இந்த விவரம் வெளியே தெரியவந்துள்ளது. கேஃபு இகாமனு என்பவர், தனது பெண் குழந்தை செய்னியின் கழுத்தை நெரித்தும், தோள், இடுப்பு எலும்புகளை உடைத்தும், மூளையில் அடிபடக் காரணமாக அமைந்தும், அதன் இறப்புக்குக் காரணமாகவும் இருந்தார் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை நடந்தது.
அப்போது, தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை சுவரில் தூக்கி வீசி, எலும்பும் மூளையும் பாதிக்கப்படும் அளவுக்கு இவர் நடந்துகொண்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் வக்கீல் குற்றம்சாட்டினார். இதனை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
கடந்த 2010 மார்ச் மாதம் தனது மூன்றாவது பிறந்தநாள் தொடக்கத்துக்கு 21 நாட்களுக்கு முன்னர் இந்தப் பெண் குழந்தை நிமோனியா தாக்கி இறந்தது. இதற்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதே காரணம் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தன் குழந்தை தன்னிடம் ஒட்டுதல் இன்றி இருந்ததாலும், பாசம் காட்டவில்லை, சிரிக்கவில்லை என்ற காரணத்தாலும் கோபமும் வெறுப்பும் அடைந்த தந்தை இவ்வாறு நடந்துகொண்டது தெரியவந்தது. இத்தனைக்கும் வெகுநாட்கள் அது தன் பாட்டி வீட்டில் இருந்ததாம். அது கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னர்தான் தன் தந்தை வீட்டுக்கு வந்ததாம்.