10.08.2012.
வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகொலை
செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி டெல்றொக்சனின் சடலம் இன்று காலை யாழ்ப்பாணத்தில்
அவரது சொந்த ஊரான பாசையூருக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
நேற்று பிரேத பரிசோதனையின் பின்னர் மாலை 5.30 மணியளவில் சடலம் ராகம வைத்தியசாலையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சடலம் இன்று காலை 6 மணிக்கு அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை இன்று காலை மரணச் சடங்கு நடைபெறும் வீட்டிற்குச் சென்ற பொலிஸார், வாத்தியங்கள் இசைக்க கூடாதெனவும், ஊர்வலம் நடத்தப்படக் கூடாது என எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர். உயிரற்று கிடக்கும் தமது உறவின் இறுதிக் கிரியகளை கூட தாம் நினைத்தபடி செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இறந்த தமிழ் அரசியல் கைதியின் இறுதிச் சடங்குகள் நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது |
0 comments:
கருத்துரையிடுக