10.08.2012. |
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில்
ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம் இன்று வவுனியா நகரிலும்
இடம்பெற்றுள்ளது.
மக்கள் கண்காணிப்பு இயக்கத்தினால் கடந்த மாதம் 27ம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கையெழுத்து வேட்டையானது நாட்டின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று வவுனியாவிலும் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இன்று
காலை 10 மணியளவில் ஆரம்பமான கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று நண்பகல் 2 மணி வரை
நடைபெற்றுள்ளது.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு மக்களின் ஜனநாயக உரிமை, மீளக்குடியேற்றம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு, சகலரும் சமஉரிமையுடன் வாழ்வதற்கான நிலைமை, காணிபிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படியும் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன் மக்களுக்கு தெளிபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது கையொப்பங்களை இட்டுள்ளனர். டன், இது நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது |
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் கையெழுத்து வேட்டை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக