இங்கிலாந்தில் மிகச் சிறிய மொடல்
அழகனாக ரோவன் ஸ்டோன் என்ற 7 மாத குழந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வென்ச்சர் போட்டோகிராபி நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான அழகு
போட்டி நடத்தப்பட்டது. இதில் 2300-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றன. ஒன்லைனில் போட்டோக்களை பார்த்து 24 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இவர்களுடன் சூப்பரான அழகு குழந்தையை தேர்வு செய்ய நடுவர் குழுவும் அமைக்கப்பட்டது. அவர்களது ஏகோபித்த ஆதரவுடன் கொழு கொழு குழந்தையாக தாமஸ்(வயது 28) - பெக்கி(வயது 29) தம்பதியின் 7 மாத ஆண் குழந்தை ரோவன் ஸ்டோன் தெரிவு செய்யப்பட்டுள்ளான். இவனுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் பொம்மைகள் வாங்கிக் கொள்வதற்கான கிப்ட் வவுச்சர் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் ஓராண்டுக்கு வார, மாத இதழ்களில் அட்டை படமாக குழந்தை ரோவனின் படம் வெளிவருவதற்கும் விளம்பரத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
திங்கள், 31 டிசம்பர், 2012
இங்கிலாந்தின் மிகச் சிறிய மொடல் அழகன்
தமிழ் கணித மேதை ராமானுஜத்தின் கண்டுபிடிப்புக்களை 90 ஆண்டுகள்
கழித்து ஒப்புக்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். உலக பிரசித்தி பெற்ற இந்திய கணித மேதையும், தமிழருமான ராமானுஜம் 1920-ம் ஆண்டு மரணப்படுக்கையில் இருந்தபோது பல கண்டுபிடிப்புகள், சூத்திரங்களை கண்டறிந்தார். இங்கிலாந்தை சேர்ந்த தனது வழிகாட்டியான கணிதமேதை ஜி.எச்.ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் இதுபற்றி அவர் எழுதி இருந்தார்.
இது கணித உலகுக்கே புதிதாகவும், புதிராகவும் இருந்தது. இப்போது அமெரிக்க கணித ஆராய்ச்சியாளர்கள் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள், சூத்திரங்கள் எல்லாம் சரிதான் என ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரது கணித புதிர்களுக்கும் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.
ராமானுஜம் இறந்து ஏறத்தாழ 100 ஆண்டு காலம் நெருங்கும் நிலையில், இப்போது அவரது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி எமோரி பல்கலைக்கழக கணித ஆராய்ச்சியாளர் கென் ஒனோ கூறுகையில், ராமானுஜத்தின் கடைசி கடிதத்தில் கூறி இருந்த கணக்கு புதிர்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். கடந்த 90 ஆண்டுகளாக இந்த தீர்வு காணப்படாமல் இருந்தது. ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் சரியானவைதான் என்றார்.

வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு ரத்த உறைவு கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2009 ஜனவரி முதல் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு மந்திரி ஆக உள்ளார். தற்போது, உடல் நிலையை கருத்தில் கொண்டு ஒபாமாவின் மந்திரி சபையில் மீண்டும் தொடர மறுத்துவிட்டார்.
எனவே, அடுத்த வெளியுறவு மந்திரியாக ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன் திடீரென மயங்கி விழுந்தார். வயிற்று வலி காரணமாக இப்பிரச்சினை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் மயங்கி விழுந்தபோது உடலில் அடிபட்டு ரத்தம் உறைந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் நியூயார்க்கில் உள்ள பிரஸ்பிடேரியன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் தனது பணிகளை கவனிப்பார் என அவரது செய்து தொடர்பாளர் பிலிப் ரீயின்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி பதவியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டன் 112 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பதவியில் இருந்தபோது அதிக உலக நாடுகளுக்கு சென்று வந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி என பெருமையை இவர் பெற்றுள்ளார்
மிகவும் நூதனமான முறையில் கணனிகளை கொள்ளையிட்ட பெண்?
எல்.ஈ.டி, எல்.சீ.டி. மற்றும் மடி கணனிகளை கொள்ளையிட்ட பெண் கும்பலொன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதிலும் கோடிக் கணக்கான இலத்திரனியல் சாதனங்களை இந்தப் பெண் கும்பல் கொள்ளையிட்டுள்ளது. மிகவும் நூதனமான முறையில் இந்தக் கொள்ளைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கால்களுக்கு நடுவில் மடிகணனிகள் மற்றும் எல்.ஈ.டி. மற்றும் எல்.சீ.டி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை மறைத்து கொள்ளையிட்டுள்ளனர்.
கவர்ச்சியாக ஆடையணிந்த பெண்கள் கும்பலொன்று பிரபல இலத்திரனியல் சாதன விற்பனை நிலையங்களுக்கு சென்று ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடாத்தி, பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையன்று சம்ராஜ் என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகளின் போது இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
சுரங்கீ என்ற 25 வயதான பெண்ணே இந்தக் கும்பலை வழிநடத்தியுள்ளார். முதலில் கையடக்கத் தொலைபேசி போன்ற சிறிய பொருட்களை கால்களின் நடுவில் வைத்து நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் பின்னர் பெரிய இலத்திரனியல் சாதனங்களை கால்களின் நடுவில் வைத்து சந்தேகம் ஏற்படாத வகையில் நடக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இந்தக் கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட மடிகணனிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
மீரிகமவைச் சேர்ந்த பெண்களே இந்தக் கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர். சுரங்கீயுடன் ஆறு பெண்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)