siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 10 செப்டம்பர், 2012

உடலில் வெயில் பட்டால் புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்

10.09.2012.ByRajah.உடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. லண்டனில் புற்று நோய்களுக்கும், சூரிய ஒளிக்கும் உள்ள தொடர்பு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். 100 நாடுகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆய்வு முடிவுகள் சர்வதேச புற்றுநோய் இதழில் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது: சூரியனின் புற ஊதாக்கதிர்களின் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டதில், சூரிய ஒளிக்கும், பல்வேறு வகை புற்று நோய்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூரிய ஒளி உடலில் படுவதன் மூலம் மார்பகம், கழுத்து, பெருங்குடல், உணவுக்குழல், இரைப்பை, நுரையீரல், நிணநீர் மண்டல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் உள்பட ஏராளமான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது.
சூரிய ஒளி அதிகம் உடலில் படுபவர்கள் இவ்வகைப் புற்றுநோயால் இறப்பது மிகக்குறைவாகவே உள்ளது.
263 சீனப்பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு சூரிய ஒளி அதிகம் விழுவதால், புற்றுநோய் இறப்புவிகிதம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 4.51 லட்சம் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் உடலில்படுவதன் மூலம் சிறுநீரகம், கழுத்து, புராஸ்டேட் உள்ளிட்ட புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மான்செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் ஆன் வெப் தன் கட்டுரையில் கூறியிருப்பது: தற்காலச் சூழலில் பெரும்பாலானவர்கள் மூடிய அறைக்குள்ளேயே பணிபுரிவதால், அரிதாகவே சூரிய ஒளி உடலில் படுகிறது. இதனால் சில வகைப் புற்றுநோய்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
ஆனால் அதிகமாக வெயிலில் காய்வதன் மூலம் தோல் புற்றுநோய் ஏற்படக்கூடும். குறைவான சூரிய ஒளியால் ஏற்படும் ஆபத்தைக் காட்டிலும், திடீரென எரிக்கும் அளவுக்கு வெயிலில் காய்வது அதிக ஆபத்தை விளைவிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார் ஆன் வெப்

வங்கி அதிகாரிகளுக்கு சம்பளம் குறைந்தது

10.09.2012.ByRajah.சுவிஸ் வங்கிகளில் அதிகாரிகளுக்கு கடந்த 2011ம் ஆண்டில் 23 சதவீத சம்பளம் குறைந்தது. ஆனால் மற்ற தொழில் நிறுவனங்களில் 5 சதவீதம் உயர்ந்தது. இத்தகவலை ஈத்தாஸ் என்ற நிலையான மேம்பாட்டுக்கான சுவிஸ் அமைப்பு தனக்குக் கிடைத்த புதிய தரவுகளை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் உள்ள இந்த அமைப்பின் ஆண்டறிக்கை, சம்பளம் நிர்ணயிப்பதை இன்னும் முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறது.
நோவார்ட்டிஸ் மருந்து நிறுவனத்தின் மேலாண்மைக் குழு கடந்த 2011ம் ஆண்டில் அதிக சம்பளம் பெற்றது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஜோ ஜிமெனெஸ் 15.7 மில்லியன் சுவிஸ் பிராங்க் சம்பளம் பெறுகிறார்.
அதன் நிர்வாகக் குழுத் தலைவர் டேனியல் வேசெல்லா 13.5 மில்லியன் சுவிஸ் பிராங்க் பெறுகிறார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக ரோச் என்ற மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி செவரின் ஷ்வான் அதிகச் சம்பளம் பெறுகிறார்.
கிரெடிட் சுவிஸ் வங்கியின் தலைமை நிர்வாகியின் சம்பளம் முந்தைய ஆண்டை விட இப்போது பாதிக்கு மேல் குறைக்கப்பட்டு விட்டது.
கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மில்லியனுக்கும் அதிகமாக மாதச்சம்பளம் பெறும் நிறுவனத்தலைவர்கள் இருபது பேரின் விபரங்கள் காணப்பட்டன

இங்கிலாந்தில் பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய குழந்தை

10.09.2012.ByRajah.இங்கிலாந்தில் 41/2 மாத பெண் குழந்தை ஒன்று, பாதி இதயத்துடன் உயிர் வாழ்வது தற்போது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரை சேர்ந்தவர் பீட்டர்(வயது 30). இவரது மனைவி நிகோலா(வயது 28). பள்ளி ஆசிரியையான நிகோலாவுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர்.
மூத்தவன் நதானியல்(வயது 2). இரண்டாவதாக பெண் குழந்தை ஸ்கார்லட் டாகன் பிறந்து நான்கரை மாதங்கள் ஆகின்றன.
இந்நிலையில் ஸ்கார்லட் டாகனுக்கு திடீர் திடீரென மூச்சு வாங்க ஆரம்பித்தது. உடனே இடைவிடாமல் அழுவாள். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பாள்.
நரக வேதனையில் அவள் துடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிகோலா மகளை யார்க்ஹில் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
குழந்தை ஸ்கார்லட்டை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவளது இதயம் அரைகுறையாக வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் பின் ஸ்கார்லட்டுக்கு ஹைப்போபிளாஸ்டிக் ரைட் ஹார்ட் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளது இதயத்தின் வலது பக்கம் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.
பாதி இதயம் மட்டுமே இருப்பதால், நுரையீரலுக்கு போதுமான ரத்தத்தை பம்ப் செய்து அனுப்ப முடியாது. இதனால் அத்தகைய குழந்தைகள் சில நாட்களிலேயே இறந்துவிடும். ஆனால் நாலரை மாதமாக ஸ்கார்லட் பிழைத்திருப்பது ஆச்சரியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்ப்ப காலத்தின் 22-வது வாரத்தில் ஸ்கேன் செய்யும் போது இந்த குறைபாடு தெரிந்துவிடும். நிகோலாவை பரிசோதித்த மருத்துவர் எப்படி கவனிக்காமல் விட்டார் என்பது தெரியவில்லை.
இதையடுத்து, குழந்தை ஸ்கார்லட்டுக்கு 2 அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டன. நுரையீரலுடன் ரத்தக் குழாய்களை நேரடியாக இணைத்த பின், தற்போது இதயம் பம்ப் செய்யாமலேயே நுரையீரலுக்கு ரத்தம் ஓட்டம் கிடைத்து வருகிறது.
அதனால் திணறல் இல்லாமல் அவள் தற்போது மூச்சு விடுகிறாள். தற்போது ஸ்கார்லட் நலமுடன் இருக்கிறாள். ஆனால் கடுமையான விளையாட்டுகள், மூச்சு வாங்கும் பயிற்சிகள் போன்றவற்றில் அவள் ஈடுபடவே கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பதின் வயதை அடையும் போது, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர்.


 

பிரான்ஸ் துப்பாக்கி சூடு: உயிர் பிழைத்த சிறுமி நாடு திரும்பினாள்

10.09.2012.ByRajah
பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலை காட்டுப் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த 4 வயது சிறுமி நாடு திரும்பினாள். இத்தகவலை பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சிறுமியின் சகோதரி ஜைனப் இன்னும் நினைவிழந்த நிலையில் கிரிநோபுள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அவளது தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து பொலிஸ் அதிகாரி எரிக் மயிலாட் கூறுகையில், இறந்து போன அனைவரது தலையிலும் குறைந்தபட்சம் இரண்டு குண்டுகளாவது பாய்ந்துள்ளன. எனவே இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது முடிவாகியுள்ளது. இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டின் இடையில் மாட்டிய ஒருவரும் இறந்து போனார் என்று தெரிவித்தார்.
பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு பொலிஸ் அதிகாரிகள் இரண்டாம் நாளாக கொலை செய்யப்பட்ட சாதின் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.
சாத் மற்றும் அவரது சகோதரன் சையதுக்கும் இடையிலான சொத்துத் தகராறில் சாத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
மேலும் சையதிடம் இரண்டாம் கட்ட விசாரணையும் நடைபெறும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

பேஸ்புக் மூலம் பிலிபைன்ஸ் பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கையர்!

 
10.09.2012.BY.Rajah.
சமூக இணைய தளமான முகப் புத்தகம் (facebook) ஊடாக பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் இலங்கை பிரஜை மீது டுபாய் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மின்சார தொழில்நுட்பவியலாளரான குறித்த இலங்கை பிரஜை (33 வயது), பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை அச்சுறுத்தியுள்ளதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையரின் காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததால், அவர் தனக்கு முகப்புத்தகத்தில் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பிலிப்பைன்ஸ் பெண்ணின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை அச்சுறுத்தல் விடுத்ததை ஒப்புக் கொண்டுள்ள இலங்கையர், பிலிபைன்ஸ் பெண் தன்னிடம் பெற்றுக் கொண்ட ஆயிரம் திர்ஹாம் பணத்தை வழங்க மறுப்புத் தெரிவித்ததால் அவ்வாறு செய்ததாகவும் முகப்புத்தகத்தில் நண்பர்களின் கருத்தை கேட்டு மாத்திரமே அச்செயலில் ஈடுபட்டதாகவும் இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 23ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

நிறைவடைந்தது பாராஒலிம்பிக்

10.09.2012.By.rajah.கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைக.ளுடன் நிறைவடைந்தது பாராஒலிம்பிக்[புகைப்படங்கள், காணொளி]


லண்டனில் நடந்த பாராஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது.

பாராஒலிம்பிக்



மாற்றுத் திறனாளிகளுக்கான 14-வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த மாதம் 29ஆம் திகதி தொடங்கியது. இதில் 164 நாடுகளை சேர்ந்த 4,294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 20 விளையாட்டுகளில் 503 பிரிவுகளில் பந்தயங்கள் நடந்தன.

சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வீரர், வீராங்கனைகள் ஒவ்வொருவரும் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். 282 பேரை களம் இறங்கிய சீனாவே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் பதக்க வேட்டையை எந்த நாட்டாலும் நெருங்க முடியவில்லை.

சீனா முதலிடம்





பாராஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த சீனா 95 தங்கம், 71 வெள்ளி, 65 வெண்கலம் என்று மொத்தம் 231 பதக்கங்களை குவித்தது. இதன் மூலம் கடந்த 2008ஆம் ஆண்டு பீஜிங் பாராஒலிம்பிக்கில் 89 தங்கம் உள்பட 211 பதக்கங்கள் பெற்ற தங்களது முந்தைய சாதனையை முறியடித்தது.

ரஷியா 36 தங்கம் உள்பட 102 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 34 தங்கம் உள்பட 120 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றன. பிரதான ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா 31 தங்கம், 29 வெள்ளி, 38 வெண்கலம் என்று 98 பதக்கத்துடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இலங்கைக்கு ஒரு பதக்கம்

பதக்கப்பட்டியலில் மொத்தம் 75 நாடுகள் இடம் பிடித்தன. இதில் இலங்கைக்கு ஒரே ஒரு பதக்கம் கிடைத்தது. ரி46 பிரிவின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் பிரதீப் கலந்துக்கொண்டு வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதில் பிரதீப் ஓட்ட பந்தய தூரத்தை 49.82 விநாடிகளில் ஓடி முடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.



























தியத்தலாவை இராணுவ முகாமில்

 மண் திட்டொன்று வீழந்து ஆறு இராணுவ வீரர்கள் பலி
  10.09.2012.By.rajah.

தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று இடிந்து வீழந்ததில் ஆறு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முகாம் பகுதியில் வேலை செய்துக்கொண்டிருக்கும் போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜேர்மனிய நிறுவனத்தின் சாதனங்களைக் 'கொப்பி' செய்த அப்பிள்:

 

 

10.09.2012.By Rajah.
இணையத்தில் அம்பலமாகிய புகைப்படங்கள்   எந்தவொரு பொருளாக இருந்தாலும் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் தோற்றமாகும் .அப்பிள் சாதனங்களுக்கு இக்கூற்று நன்றாகவே பொருந்தும்.


அப்பிளின் சாதனங்கள் சந்தையில் வெற்றியடைந்தமைக்கும், அதற்கென தனியானதொரு கூட்டம் உருவாகியமைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது அவற்றின் தயாரிப்புகளின் வடிவமாகும்.


அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள், தரம் என்வற்றுக்கு அப்பால் அப்பிள் சாதனங்களின் வடிவமே தனித்துவமானது தான். உதாரணமாக முதலாவது' வின்டோஸ்' கணனி சற்றென்று உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? இல்லை முதலாவது 'மெக்' ஞாபகத்துக்கு வருகின்றதா?


நிச்சயமாக பலரின் விடை 'மெக்' ஆகத்தான் இருக்கும். இதுவே அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் வடிவங்கள் எம்மைக் கவர்ந்தமைக்கான சான்றாகும்.


ஆனால் அப்பிள் நிறுவனத்தின் சில சாதனங்களின் வடிவமானது ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்த பிரோன் நிறுவனத்தின் தயாரிப்புகளின் வடிவத்தினை ஒத்துக் காணப்படுவதாகத் தெரிகின்றது.






பிரோன் நிறுவனத்தினால் 1950 மற்றும் 1960 களில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை ஒத்ததாகவே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள சில புகைப்படங்களைப் பார்க்கும்போது அப்பிள் நிறுவனத்தினாலேயே மறுக்க முடியாத அளவுக்கு இரண்டு நிறுவனங்களின் சாதனங்களும் வடிவத்தில் ஒத்துப்போகின்றன.


அப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அந் நிறுவனத்தின் தொழில்துறை வடிவமைப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஜொனதன் ஐவ் ஆகியோர் பிரோன் நிறுவன தயாரிப்பு வடிவங்களின் பாதிப்பில் தமது சாதனங்களைத் தயாரித்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.






அப்பிளின் 2001 வெளியாகிய 'ஐ பொட்'டானது 1958 ஆம் ஆண்டு வெளியாகிய பிரோனின் 'டி3 பொக்கட் ரேடியோ'வின் வடிவத்தினை ஒத்துக்காணப்படுகின்றது.


அப்பிள் நிறுவனத்தின் தொழில்துறை வடிவமைப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதித் தலைவரான ஜொனதன் ஐவ் தனது வடிவமைப்புகளில் பிரோன் நிறுவனத்தின் பிரதான வடிமைப்பாளராகத் திகழ்ந்த டயர்டர் ரம்சின் தாக்கம் இருப்பதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




செம்சுங் நிறுவனம் மீது காப்புரிமை விதிகளை மீறியதாகக் கூறி வழக்குத்தொடுத்தும், குற்றஞ்சாட்டியும் வரும் அப்பிள் மற்றைய நிறுவனங்களின் வடிவத்தினை சத்தமின்றி 'கொப்பி' செய்வதனை என்னவென்று கூறுவது?











 

பிறந்த நாள் வாழ்த்து ராஜன் அம்பலவாணர் (09 .09 .12 )

BY.Rajah.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட ராஜன் அம்பலவாணர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
இவரை இவரது மனைவி, பிள்ளைகள், உறவினர் ,நண்பர்கள், மற்றும் இந்த நவற்கிரிஇணையங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்னும்பல ஆண்டுகள் இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகின்றோம்

அழகோவியம்...கவிதைகள்

10.09.2012.BY.Rajah.முயற்சி கொண்ட மனிதர் உள்ளம்
வீழ்ச்சி கண்டது கிடையாது!

 

அரக்கோணம் திரைப்பட பிரஸ் மீட் - சினிமா வெளியீடுகள்

10.09.2012.BY.Rajah.

கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க விருது வென்ற தெ.கொரிய திரைப்படமும் எதிர்ப்பும்

10.09.2012.BY.Rajah.
வேனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில், கோல்டன் லயன் விருதை தென் கொரிய திரைப்படம் Pieta தட்டிச்சென்றுள்ளது.
kim ki-duk என்பவர் இயக்கிய இத்திரைப்படம், கடன் சேகரிக்கும் தொழில் கொண்ட நபர் ஒருவரை, ஒரு பெண்மணி தனது மகன் என சொந்தம் கொண்டாட தொடங்கியதால் வந்த விளைவுகளை பற்றியது. பணம் சுரண்டும் முதலாலித்துவத்திற்கு எதிரானது இத்திரைப்படம் என தெரிவிக்கப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்ட அதன் இயக்குனர் Kim ki-duk நடுவர் குழுவினருக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் பாடினார். பின்னர் இந்த பாடல் பற்றி கருத்து கூறிய போது, கொரியர்கள் கவலையாக இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும், ஏமாற்றப்பட்டிருப்பதாக உணரும் போதும் பாடும் பாடல் இது. ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதும் இந்த பாடலை தான் பாடுவார்கள்' என்றார். சிறந்த நடிகைக்கான விருதை Fille the Void எனும் திரைப்படத்திற்காக Hardas Yaron எனும் நடிகைக்கு வழங்கப்பட்டது. அவரது திரைப்படம் ஒரு தீவிர,பழமைவாத, கட்டுப்பாடான யூத சமூகத்தின் வாழ்க்கையில் மூழ்கும் திரைக்கதையை கொண்டது.

சிறந்த நடிகருக்கான விருது The Master எனும் திரைப்படத்தில் நடைத்தமைக்காக Philip Seymour Hoffman மற்றும் Joaquin Phoenix எனும் இருவருக்கு கிடைத்தது. அந்த திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான சில்வர் லயன் விருதும் கிடைத்தது. Paul Thomas Andersen இயக்கிய இத்திரைப்படம், சமய உட்பிரிவு தலைவர் ஒருவர் தனது பிரிவின் கீழ் ஒரு யுத்த வீரனை கொண்டுவரும் கதைக்களத்தை கொண்டது.

இதேவேளை கோல்டன் லயன் விருது Pieta வுக்கு கிடைக்கப்பெற்றதற்கு எதிர்ப்பும் வலுப்பெற்றிருக்கிறது. இயக்குனர் மைக்கெல் மானை தலைவராக கொண்டு வெனிஸ் ஜூரி குழுமம் செயற்பட்டிருந்தது. இரண்டு விருதுகளுக்கு மேல் ஒரு திரைப்படத்திற்கு வழங்கப்பட கூடாது எனும் விதிமுறை வெனிஸ் திரைப்பட விழாவில் கடைப்பிடிக்கப்படுவதால் The Master திரைப்படத்திற்கு கிடைக்க வேண்டிய கோல்டன் லயன் விருது, Pietaவுக்கு சென்று விட்டதாக சில ஹாலிவூட் ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

குறிப்பாக இத்தாலியின் பிரபல நாளாநத சஞ்சிகை Corriere della Sera தெரிவிக்கையில் Pieta திரைப்படத்திற்கு விருது கிடைத்தது விவாதிக்கபப்ட வேண்டியது. மனதை புண்படுத்தும் திரைக்கதை கொண்ட இத்திரைப்படத்தில் உண்மையான உயிரோட்டம் இல்லை. இயக்குனர் திரைக்கதை அதன் பாணியில் வளர்வடைவதற்கு விரும்பவில்லை. இத்திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகார தீர்ப்பு நடுவர்களின் குழப்பநிலையை எடுத்து காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறும் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழா என்ற போதும் 1998 ம் ஆண்டுக்கு பிறகு இத்தாலிய ஒரு திரைப்படமும், தங்க விருதை வென்றதில்லை. இம்முறை நிச்சயம் உயர் விருது ஒன்றை பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலிய படைப்பான Dormant Beauty யும் நடுவர் குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

'எப்போதும் உங்களது நாவல்களில் இருந்தே திரைப்படம் எடுக்கிறீர்கள். உங்களது சொந்த வரலாறுகளையே மறுபடி படமாக எடுத்து ஒரு சுய குறிப்புடன் தயாரிக்கிறீர்கள். உங்கள் திரைப்படங்களை நீங்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்' என வெனிஸ் நடுவர் குழுவின் அங்கத்துவர் ஒருவர் இத்திரைப்படம் பற்றி விமர்சித்திருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள அத்திரைப்படத்தின் இயக்குனர் Marco Bellocchio, 'நடுவர் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக நாங்கள் எப்படி படம் எடுக்க வேண்டும் என நீங்கள் சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை' என்றார்.

தங்க விருது வென்ற பியெட்டா திரைப்படம். 78,000 யூரோக்களை மட்டுமே கொண்டு குறைந்த பட்ஜெட்டில் உருவான படமாகும். பணம் சம்பாதிப்பது எனது நோக்கம் அல்ல. காலத்திற்கு காலம் ஏற்றவகையில் உலகின் வெப்பதட்பத்தை கொண்டு செல்வதே எனது இலக்கு என இத்திரைப்பட இயக்குனர் கிம் தெரிவித்திருந்தார்

பிரதமரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 10.73 கோடி! : அமைச்சர்களது அதைவிட அதிக

10.09.2012.BY.Rajah.பிரதமர் மன்மோகன் சிங்கின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ 10.73 கோடி என புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
பிரதமர் காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இப்புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி பிரதமரின் தற்போதைய சொத்து மதிப்பு கடந்த வருடத்திலும் பார்க்க இரு மடங்காக உயர்வடைந்துள்ளது.

எனினும் அவரை விட ஆளும் மத்திய அரசில் உள்ள மேலும் சில அமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. பிரபுல் படேலின் சொத்து மதிப்பு ரூ.52 கோடியாகவும், சரத் பவாரின் சொத்து மதிப்பு ரூ 22 கோடியாக உள்ளது. எனினும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியின் சொத்து மத்திப்பு ரூ 55 இலட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள அமைச்சர்களில் மிகவும் குறைவான சொத்துமதிப்பு உடையவராக இவர் தான் உள்ளார்

மன்மோகன் சிங்கை பொருத்தவரை அவருடைய - மாருதி 800 - கார், சந்திகார் மற்றும் டெல்லியில் உள்ள இரு மாடி வீடுகள் மற்றும் வங்கி வைப்புத்தொகை என்பன அனைத்தும் சேர்த்து அண்ணளவாக ரூ.10.73 கோடியாக உள்ளது.

கடந்த வருடம் அவரது மொத்த சொத்தமதிப்பு ரூ.5.11 கோடியாக இருந்தது. எனினும் இம்முறை அவரது சொத்து மதிப்பு விலை இரட்டை மடங்காக உயர்வடைந்ததற்கு, அவர் மேலதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என பொருட்படாது. ஏற்கனவே இருந்த சொத்துக்களின் விலை உயர்வடைந்துள்ளதே காரணம் என பிரதமர் காரியாலயம் விளக்கம் அளித்துள்ளது.

மன்மோகன் சிங்கிற்கு அசாமில் உள்ள டிஸ்பூர் வங்கியில் வைப்பு நிதி உள்ளது. இதில் அவர் ரூ.6,515.78 மட்டுமே வைப்பில் இட்டுள்ளார்

குவைத்தில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை





10.09.2012.BY.Rajah.குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை
மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கடந்த 19.08.2012 ஞாயிற்றுக்கிழமை, குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பாபள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் நடைபெற்றன.


அதிகாலை 5:30 மணிக்கே சாரிசாரியாக வரத் தொடங்கிய பெருமக்களை நறுமணம் பூசி, பேரீத்தம் பழம் அளித்து சங்கத்தின் நிர்வாகிகள் வரவேற்றனர். தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா பன்னூலாசிரியர் அல்ஹாஜ் மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ ஃபாஜில் தேவ்பந்தி (பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, சேலம்) அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம்" என்ற தலைப்பில், ஒவ்வொரு இஸ்லாமியரிடமும் இருக்க வேண்டிய பண்புகள், பிற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பெருநாள் அன்று எடுக்க வேண்டிய உறுதிமொழிகள் போன்றவற்றை தெளிவான முறையில் அழகு தமிழில் எளிய நடையில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்

சிறப்புச் சொற்பொழிவைத் தொடர்ந்து சரியாக காலை 7:35 மணிக்கு சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் பெருநாள் தொழுகை முறை, புத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் வாழ்த்துக்கள் கூறும் முறை போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்து, பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார்.

தொழுகையைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள் "பெருநாள் ஃகுத்பாப் பேருரை" நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ரமழானில் மேற்கொண்ட பயிற்சிகள் காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டும், நோன்பினால் இறையச்சம் (தக்வா) ஏற்பட்டதா? என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்