siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 10 செப்டம்பர், 2012

பேஸ்புக் மூலம் பிலிபைன்ஸ் பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கையர்!

 
10.09.2012.BY.Rajah.
சமூக இணைய தளமான முகப் புத்தகம் (facebook) ஊடாக பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் இலங்கை பிரஜை மீது டுபாய் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மின்சார தொழில்நுட்பவியலாளரான குறித்த இலங்கை பிரஜை (33 வயது), பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை அச்சுறுத்தியுள்ளதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையரின் காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததால், அவர் தனக்கு முகப்புத்தகத்தில் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பிலிப்பைன்ஸ் பெண்ணின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை அச்சுறுத்தல் விடுத்ததை ஒப்புக் கொண்டுள்ள இலங்கையர், பிலிபைன்ஸ் பெண் தன்னிடம் பெற்றுக் கொண்ட ஆயிரம் திர்ஹாம் பணத்தை வழங்க மறுப்புத் தெரிவித்ததால் அவ்வாறு செய்ததாகவும் முகப்புத்தகத்தில் நண்பர்களின் கருத்தை கேட்டு மாத்திரமே அச்செயலில் ஈடுபட்டதாகவும் இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 23ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.