10.09.2012.ByRajah |
பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலை
காட்டுப் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த 4 வயது சிறுமி நாடு
திரும்பினாள்.
இத்தகவலை பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சிறுமியின் சகோதரி ஜைனப் இன்னும்
நினைவிழந்த நிலையில் கிரிநோபுள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அவளது
தலையில் குண்டு பாய்ந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து பொலிஸ் அதிகாரி எரிக் மயிலாட் கூறுகையில், இறந்து போன அனைவரது தலையிலும் குறைந்தபட்சம் இரண்டு குண்டுகளாவது பாய்ந்துள்ளன. எனவே இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது முடிவாகியுள்ளது. இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டின் இடையில் மாட்டிய ஒருவரும் இறந்து போனார் என்று தெரிவித்தார். பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு பொலிஸ் அதிகாரிகள் இரண்டாம் நாளாக கொலை செய்யப்பட்ட சாதின் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். சாத் மற்றும் அவரது சகோதரன் சையதுக்கும் இடையிலான சொத்துத் தகராறில் சாத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் சையதிடம் இரண்டாம் கட்ட விசாரணையும் நடைபெறும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர் |
திங்கள், 10 செப்டம்பர், 2012
பிரான்ஸ் துப்பாக்கி சூடு: உயிர் பிழைத்த சிறுமி நாடு திரும்பினாள்
திங்கள், செப்டம்பர் 10, 2012
செய்திகள்