பிரான்ஸ் பாரிஸில் போராட்டம் தீவிரமடைந்தமையைத் தொடர்ந்து G20 உச்சி மாநாட்டிலிருந்து அவசரமாக புறப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை
நடத்தியுள்ளார்.
எரிபொருள் விலையுயர்வை எதிர்த்து பாரீஸில் போராட்டம் நடத்துவோர் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
பாரீஸிலுள்ள அதிபர் மாளிகையில் ஜனாதிபதி மேக்ரான் கூட்டிய அவசரக் கூட்டத்தில் பிரான்ஸ் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
அவசர நிலை பிரகடனம் செய்யப்படவிருப்பதாக செய்திகள் உலவிய நிலையில், அப்படி ஒரு எண்ணம் தற்போதைக்கு அரசுக்கு இல்லை என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக மேக்ரான் பிரான்சின் புராதன நினவிடமாகிய Arc de Triomphe இல் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்தார்.
போராட்டக்காரர்கள் கார்கள் ஆகிய பொருட்களை சேதப்படுத்தியிருந்தனர்.
சேதமடைந்த பொருட்கள் முதலானவற்றை பார்வையிட்ட மேக்ரான், பொலிசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இருப்பினும் அவரை அவமதிக்கும் வகையில் சிலர் குரல் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்ட 412 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிசார், அவர்களில் 378 பேர் இன்னும் காவலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதிலும் 263 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களில் 133 பேர் தலைநகரில் காயமடைந்தவர்கள் என்றும் பாதுகாப்புப் படையினரில் 23 பேரும் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள்
வெளியாகியுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>