siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா….

09.08.2012.அனைவரும் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்கிறார்களா என்று பார்த்தால், அது மிகவும் குறைவான அளவே உள்ளது. அவ்வாறு காதல் செய்தவர்கள் பெரும்பாலும் பிரிவதற்கு காரணம் சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பது. மேலும் பிரிந்த பின்னர் அவர்களில் முதலில் திருமணம் ஆவது யாருக்கு என்று பார்த்தால், அது பெண்களுக்கே நடக்கிறது. ஏனெனில் பெண்களின் வீட்டில் அவர்களை நீண்ட நாட்கள் வைத்திருக்க மாட்டார்கள். காதல் தோல்வி அடைந்த பிறகு, என்ன தான் திருமணம் வேண்டாம் என்று பெண்கள் நினைத்தாலும் முடியாது. ஒரு சிலர் காதலன் மீது உள்ள கோபத்தினாலேயே திருமணத்திற்கு ஒப்புக் கொள்வர்.
அவ்வாறு திருமணம் செய்யும் போது, தான் முதலில் காதலித்த காதலனை சிலர், தங்கள் திருமணத்திற்கு அழைக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு தன் முதல் காதலனை அழைத்தால் என்ன நடக்கும் என்றும், எதற்கு அவனை அழைக்க வேண்டும் என்றும், மேலும் அந்த நேரத்தில் முதல் காதலன் வந்தால் என்ன பிரச்சனை வரலாம் என்றும் அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
தன் முதல் காதலனை தன் திருமணத்தின் போது அழைத்து, ஒரு கேலியான பார்வையை அவன் மீது செலுத்தி, காதலியானவள் தன் மனதிற்குள் “நான் இன்னும் உன்னை நினைக்கவில்லை” என்று தெரிவிப்பதற்காக, நான் உன்னுடன் இருப்பதை விட, இவருடன் சந்தோஷமாக இருக்கிறேன், என்பதை காண்பிக்க அழைக்கலாம். பொதுவாக அனைத்து ஆண்களும் தான் காதலிக்கும் காதலியை, “என்னை விட யார் சந்தோஷமாக என் காதலியை பார்த்துக் கொள்வார்கள்” என்ற நினைப்பு இருக்கும். ஆனால் இவ்வாறு செய்வதால், தன் முதல் காதலனுக்கு தன் சந்தோஷத்தை, மெதுவாக தெரிவிப்பது போல் இருக்கும்.
சில நேரங்களில் காதலனை திருமணத்தின் போது அழைத்தால், அவர்கள் மிகவும் பொறாமைப்படுவார்கள். மேலும் என்னுடன் திருமணக் கோலத்தில் இருக்க வேண்டிய என் காதலி, மற்றொருவருடன் மணக்கோலத்தில் இருப்பதை எந்த ஒரு காதலனாலும் தாங்க முடியாமல், என் காதலி சந்தோஷமாக இருந்தால் அது போதும் என்று நினைத்து, அந்த இடத்தை விட்டே போய்விடுவார்கள். பின் அவர்கள் எந்த ஒரு சமயத்திலும் மறுபடியும் வரமாட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு அழைத்து, காதலனிடம் உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும், நம் இருவருக்கும் நல்ல புரிதல் இல்லை, என்னை விட ஒரு நல்ல துணைவி உனக்கு அமைவாள் என்பதை, அவனுக்கு புரியுமாறு தன் செய்கையில் புரிய வைத்து, அவனை விலக்கலாம்.
இல்லையென்றால் தன் முன்னால் காதலனை, தனக்கு வாழ்க்கை துணையாக வருபவரிடம் அறிமுகப்படுத்தி, ஒரு நல்ல நண்பர்களாக மூன்று பேரும் இருக்கலாம். இவ்வாறு செய்தால், கண்டிப்பாக அந்த நட்பு ஒரு நல்ல நிலையில் இருக்கும்.
ஒரு சில சமயங்களில் காதலனை அழைத்தால், அசம்பாவீதமும் நடக்கும் வாய்ப்புகளும் உண்டு. காதலன் மிகவும் பொறாமையின் உச்சக்கட்டத்தில் இருந்தால், திருமணத்தின் போது ஒரு சில டென்சன்களை ஏற்படுத்த வாய்ப்புகளும் உண்டு. வேண்டுமென்றால் காதலிக்கும் போது எடுத்த போட்டோ, வீடியோ ஆகியவற்றை வைத்து பயமுறுத்துவான். மேலும் என்ன தான் உங்களை திருமணம் செய்து கொள்பவருக்கு அனைத்து விஷயங்களும் தெரிந்திருந்தாலும், உறவினர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகிவிடுவதோடு, பின் அந்த திருமணம் இறுதியில் பெரிய பிரச்சனையை உருவாக்கிவிடும்.
எனவே, உங்கள் காதல் தோல்வி அடைந்துவிட்டால், ஏற்கனவே உங்கள் காதலன் அதிகமான அன்பு வைத்திருப்பவராக இருந்து, சரியாக புரிதல் இல்லாத காரணத்தினால் பிரிந்தவராக இருந்தால், அவர்களை அழைக்கலாமே தவிர, அதிக அன்புடன், கோபம் மற்றும் சந்தேக குணமுடையாக இருப்பவராக இருந்தால், அவர்களை அழைக்காமல் இருப்பதே நல்லது என்றும் அறிவுறுத்துகின்றனர் அனுபவசாலிகள்.
 

அஜித் ரசிகர்களிடம் மன்னிப்புகேட்ட இயக்குனர்!

09.078.2012.

சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த பில்லா-2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்பதே பலரின் கருத்து. பில்லா-2 அஜித் ரசிகர்களுக்காகவே செய்யப்பட்ட குல்லா எனவும் பத்திரிகைகளில் விமர்சனங்கள் எழுதப்பட்டன. அஜித்தின் நடிப்பை பாராட்டும் ரசிகர்கள் அஜித்தை சரியாக இயக்குனர் பயன்படுத்தவில்லை என்பதே அவர்களின் வேதனையாக இருந்தது.
பில்லா-2 ரிலீஸாகி சில நாட்களிலேயே பல கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டது. தமிழ்நாட்டின் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசூல் சாதனையையும் செய்த பில்லா-2 படத்தின் இயக்குனர் சக்ரி டொலட்டி ரசிகர்களே ஆச்சர்யப்படும் வகையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பில்லா-2 படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சக்ரி டொலட்டி “பில்லா-2 பார்த்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படம் பிடிக்காதவர்கள் என்னை மன்னித்துவிடுங்கள். முக்கியமாக ‘தல’ ரசிகர்கள் என்னை மன்னிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் இப்போது விஷ்ணுவர்தன் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பாக மும்பை, பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் நடந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து மறுபடியும் மும்பை செல்கிறது.
விஷ்ணுவர்தன் பட ஷூட்டிங்கை தீவிரமாக கவனித்து வரும் திரையுலகம் இந்த வருடத்திலேயே அஜித்குமாரின் அடுத்த படம் ரிலீஸாகிவிடுமா? என ஆச்சர்யத்தில் உள்ளது

நீருக்குள் இப்படியொரு நடனமா?

நீருக்குள் இப்படியொரு நடனமா?09.08.2012.
நீச்சல், உடல் பயிற்சி, ஆட்டம் ஆகியவற்றின் ஒரு கலவையாக தண்ணீருக்குள் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு வகை நடனம் தான் ஒத்திசை நீச்சல் நடனம் என்ற பெயரால் அறியப்படுகின்றது.
இசைக்கு ஏற்றால் போல ஆடப்படும் இந்நடனத்தினை மேற்கொள்வது இலேசான காரியம் அல்ல. நுட்பமான நீச்சல் தெரிந்தவர்களாகவும், சிறந்த வலிமை, பொறுமை, சகிப்புத் தன்மை, நெகிழ்ச்சித் தன்மை, கலைத்துவம், சரியான நேர நுட்பம், அசாதாரண மூச்சுக் கட்டுப்பாடு உடையவர்களாகவும் உள்ளவர்களால் மாத்திரமே ஒத்திசை நீச்சல் நடனத்தை மேற்கொள்ள முடியும்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஒரு முக்கியமான அம்சமாக கடந்த 05 ஆம் திகதி இந்த ஒத்திசை நடனம் மேற்கொள்ளப்பட்டது.


















பீர் போத்தலில் இசைக் கச்சேரி செய்ய முடியுமா?

பீர் போத்தலில் இசைக் கச்சேரி செய்ய முடியுமா?09.08.2012.
பொதுவாக பீர் அடித்து மட்டை ஆனவர்களை தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்குள்ள இளைஞர்கள், பீர் போத்தலை வைத்து ஒரு இசைக் கச்சேரியே நடத்துகின்றனர்.


இளவரசி டயானா நடனத்தின் அரிய புகைப்படங்கள்

இளவரசி டயானா நடனத்தின் அரிய புகைப்படங்கள்09.08.2012.
இளவரசி டயானா நடனமாடிய காட்சியின் மிகவும் அரிய வகைப் புகைப்படங்களின் தொகுப்பாகும்.








நயினை நாகபூஷணி அம்மன் ஆலய தேர்...

09.08.2012.
09.08.2012.
அம்பாளின் தேரிஇன் திருக்கட்சியை கா னதவர்க்குமிண்டும்அரோகரா ...கோசத்துடன் அம்மன் தேரில் வீதி வலம் வந்த அழகிய காட்சி

தொடர் வறட்சியால் கால்நடைகள் இறப்பு; உரிய நேரத்தில் குளங்கள் ஆழமாக்கப்படாமையே காரணம்

09.08.2012.
news
உரிய காலங்களில் குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு நீர் தேக்கிவைக்கப்படாமையும் குளங்கள் வறண்டு போவதற்குக் காரணம் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நீர் நிலைகளை பாதுகாப்பதில் உரிய அதிகாரிகள் காட்டும் அசமந்தப் போக்கே தற்போது வறட்சியால் கால் நடைகள் இறக்கவும் காரணமாகிறது. தீவுப் பகுதிகளிலேயே கால்நடைகளின் இறப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகிறது.
குறிப்பாக நயினா தீவில் கால்நடைகள் பெரிதும் இறக்கின்றன. அவற்றைப் புதைக்கும் நடவடிக்கைகளில் பிரதேசசபை உப அலுவலகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவுப் பகுதிகளில் மக்களும் குடிதண்ணீர் பெறுவ தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து காணப்படும் நிலையில் நீண்டதூரங்க ளுக்குச் சென்று தண்ணீரைப் பெற்று வருவதையும் காணமுடிகிறது.
பிரதேச சபையினர் பவுசர்கள் மூலம் குடிதண்ணீரை விநியோகித்து வருகின்ற போதும் அது மக்களுக்குப் போதியதாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பருத்தித் துறை பிரதேச செயலர் பிரிவில் வல்லிபுரம் கிராம சேவையாளர் பகுதியில் 14 குளங்களும், துன்னாலை வடக்கு கிராம சேவையாளர் பகுதியில் 2 குளங்களும் வற்றி வறண்டு போயுள்ளன.
இந்தக் கிராம சேவையாளர் பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள பெருந்தொகையான ஆடு, மாடுகள் குடிப்பதற்குத் தண்ணீருக்காக இந்தக் குளங்களை நாடி தண்ணீரின்றி ஏமாந்து செல்கின்றன.
இயற்கையான நீரூற்றுக்களைக் கொண்ட இந்தக் குளங்களே வறண்டு போயுள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்தக் குளங்கள் ஆழமாக் கப்பட்டு புனரமைக்கப்பட் டால் நீர் ஊறிக்கொண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு. கடந்த கால வறட்சிக் காலங்களின் போது இந்தக் குளங்களில் தண்ணீர் இருந்தது என இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த விடயத்தை உரிய அதிகாரிகள் இனிவரும் காலங்களிலாவது கவனத்தில் எடுத்து நீர் நிலைகளைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். இந்த வருட மழை காலத்துக்கு முன்னர் குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது.
இல்லாது போனால்

இதுவரை 42 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன; அமைச்சர் ஜோன் செனவிரட்ன தகவல்

09.08.2012.
news
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் செயற்திட்டத்தில் இதுவரை 42 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு நிரந்தர நியமனம் விரைவில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைய 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் செயற்திட்டம் அமைச்சரவையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக பெரும் எண்ணிக்கையான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீண்டகாலமாக பட்டச் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பின்றி இருந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆறு மாத பயிற்சிக் காலத்தின் பின்னர் இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 16478 பட்டதாரிகளும் மாகாணசபைகளுக்கு 4170 பட்டதாரிகளும் விவசாய அமைச்சுக்கு 2560 பட்டதாரிகளும் அரச பொதுநிர்வாக அமைச்சுக்கு 1500 பட்டதாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் யாழ் மாவட்டத்தில் 2238 பட்டதாரிகளுக்கும் கிளிநொச்சியில் 113 பட்டதாரிகளுக்கும் முல்லைத்தீவிலிருந்து 131 பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கே நாம் தற்போது வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளோம். 2010 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்களுக்கு 2013 ஆம் ஆண்டிலும்- 2011 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்களுக்கு 2014 ஆம் ஆண்டிலும் வேலைவாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்துள்ளது.

சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பட்டதாரிகளுக்கு தற்போது மாதாந்தம் அடிப்படைச் சம்பளமாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. இவர்கள் நிரந்தரமாக்கப்பட்டதும் அடிப்படைச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாவுடன் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்து மாதாந்தம் 23500 ரூபாவைப் பெற்றுக்கொள்வார்கள்.

தற்போது வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் அனைத்துப் பட்டதாரிகளும் நிரந்தர நியமனம் பெற்ற பின்னர் சாதாரண அரசாங்க உத்தியோகத்தர்களைப் போன்று விடுமுறைகள் மற்றும் இடமாற்றங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சகல வசதிகளையும் கொண்டுள்ளார்கள் என்றார்.

அத்துடன் நாட்டில் தற்பொழுது மூன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரிகள் உள்ளனர். எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி சடலமாக மீட்பு

09.08.2012.
news
கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பழம்வீதி, நாசிமார் கோவிலடியைச் சேர்ந்த குமாரசாமி மங்கையகரசி என்ற 70 வயது வயோதிபப் பெண்மணியே மேற்படி சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இன்று காலை குறித்த பெண்மணியின் வீட்டிற்கருகில் உள்ளவர்களினால் கோப்பாய் காவற்றுறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்றுறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தில் வெட்டுக்காயங்களும் அடிகாயங்களும் காணப்பட்டதாகவும் அவர் அணிந்திருந்த தோடு, சங்கிலி, காப்பு என்பன காணமால் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தை மீட்ட கோப்பாய் காவற்றுறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்மணியின் நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் மட்டும் தனிமையில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கைகளால் எழு! கண்களால் சுடு!

09.'08.2012.
essayபுதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தை அண்மித்ததாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த இளம் போர் வல்லுநர்களான தளபதிகளை மொத்தமாக, இரசாயன ஆயுதங்களால் பலி வாங்கிய பூமியின் மையத்தில் போர்க் காட்சியகம் ஒன்றை அமைத்து, "ஒரே தேசத்தின் எல்லா மக்களையும்'' கூவி அழைத்து சிலிர்த்துக் கொள்கின்றது இலங்கை இராணுவம்.
செந்தூரி
எவரெவர் பார்வையில் எப்படியமையினும், வந்து போகின்ற கடைக்கோடி தீ தமிழனிடமும் ""பாரடா! உன்னினத்தை பாரறிய வைத்தவர்களின் வீரத்தின் தளும்புகளை'' என்று வெற்றுக் கலங்கள் முணுமுணுக்கும் இடம் அது!
மூன்றுக்கு மூன்று அடிப்பரப்பையுடைய ஆறடி உயர இரும்புக் கூண்டொன்றும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. வலிமையான கம்பிகளால், மிகச் சிறிய கதவுடன் ஓர் ஆள் உட்காருவது கூட மிகக்கடினமான செவ்வகத் திண்மக் கம்பிக் கட்டமைப்பின் அருகிலிருக்கும் பலகையில் "பயங்கரவாதிகளின் தண்டனைக் கூண்டு'' என்று எழுதப்பட்டிருந்தாலும், தனிப் பார்வையில் சொல்வதானால் ஒட்டுமொத்த தமிழின ஒழுக்கத்தின் "வெளித் தெரியாத வேர்'' அது! விடயமறிந்த ஒருவரின் வாக்கு மூலத்தின் படி, தனிமனித ஒழுக்கமீறலுக்கான ஆகக்குறைந்த தண்டனை அந்தக்கூண்டு வாசத்தின் அறுநாள்களிலிருந்து தொடங்குகின்றதாம். "எல்லாமே'' அதற்குள் தானாம், வெளிவரும் போது "மாற்றம்'' மாற்றமில்லையாம்.
கலாசாரச் சீரழிவு, மாணவர்களின் ஒழுக்கமின்மை, குடும்ப வன்முறைகள், வீட்டுக்குள்ளான பெண் கொடுமைகள் போன்ற தலைப்புக்களில் எழுதுவோரெல்லாமே தெரிந்தும் தெரியாமல் போட்டுவிடுகின்ற பிள்ளையார் சுழி "தமிழீழ விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர்'' என்பதுதானே!
கட்டுப்பாடில்லாமல் விட்டால் கால்நடைகளினும் கீழாக தன்மரபுகளை சிதைக்கும் நிறமூர்த்தமொன்று எம் மரபணுக்களில் அரைக் கண்களில் தூங்கிக்கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்கும் வரை யோக்கியர்களாக இருக்கும் அயோக்கியர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருப்பது பேருண்மை. அவ்வப்போது வெளிவரும் இந்த மிருக சிந்தனைகளை முற்றிலும் நிறுத்துவதற்கு "அவர்கள்' கண்டுபிடித்த பேருபாயம் பயம்!
குற்றங்களுக்கான தண்டனைகளை மக்களறிய நிறைவேற்றுவதில், மீறப்படும் மனித உரிமைகளைவிட, காக்கப்படும் மனித உரிமைகள் எப்போதும் அதிகம் என்கின்ற கூற்றை வலுவாக ஆமோதித்தே ஆக வேண்டும்.
இந்தக் கணம் மின்கம்பமொன்றில் கைகள் பிணைக்கப்பட்டு, கண்களில் துணி சுற்றியபடி, கழுத்தில் குற்ற விவரம் எழு தப்பட்ட "கார்ட்போட்'டை தாங்கிய தலை தொங்கிய உடல் ஒன்று உன் நினைவெழுந்து மறைந்தால், நீயும் தமிழனே!
சுட்டதால்தானே தெரியும் நெருப்பு, குத்தியதால்தானே தெரியும் முள்வலி. பட்டதால்தானே அதன் பெயர் "பாடு', இந்த வரிசையில் "பயம்' தானே குற்றங்களின் முதல் எதிரி! இந்த வெருட்டல், யுக்தி வேகமாகப் பலிக்கும் வகைக்குரியதொன்று. காரணங்களின் வகையறாக்களை வரிசைப்படுத்தி நீட்டி முழக்காமல், ஒற்றைச் சொல்லினால் கட்டுப்பாடுகளுக்குள் நெட்டித் தள்ளி வைத்திருக்கும் வியூகம் என்னினத்திடம் இலகுவில் எடுபடக்கூடிய ஒன்று.
ஆதிச் சைவத் தமிழர்களிடமிருந்து வந்ததும், இன்றைக்கும் இறுக்கமாக வழக்கத்திலிருப்பதுமான பழக்கமொன்றினை, பிரித்தாய்வதன் மூலம் இந்த வகை யுக்தி எத்துணை பயன்தரும் என்பதைப் பார்க்கலாம்.
நோய்க் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு, தொற்று நீக்குதல், வீரியமான நுண்ணங்கிகளிடமிருந்து பரவும் வியாதிகளிலிருந்து முற்காப்புப் பெறுதல், தொற்றுநொய்க்குள்ளானவர்களை தள்ளிவைத்தல், அகச்சூழலை புறச்சூழலிலிருந்து தூயதாகப் பேணுதல் போன்ற பல ஏற்பாடுகளை ஒற்றைச் சொல்லான "துடக்கு' எனப்படும் தூய தமிழின் "தீட்டு' என்பதினுள் அடக்கினான் பழஞ்சைவன்.
இறந்த உடலிலிருந்து, தமக்கான வாழ்சூழல் இனிக்கிடைக்காது என்ற நிவாரண நிறுத்தம் பற்றிய அறிவித்தல் கிடைத்த மறுகணமே நுண்ணங்கிகள் வெளியேறத் தொடங்கும். சாதாரண காற்றே இவற்றுக்கான பரவுகை ஊடகமாகத் தொழிற்பட போதுமானதென்பதால், மரணமடைந்தவரின் நெருங்கிய உறவினர்கள், அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர்களின் உடல்கள் குறித்த நோய்களையும் நுண்ணங்கிகளின் இடைத்தங்கல் முகாம்களாக செயற்படும் வாய்ப்புக் கள் நிச்சயமான ஊகத்திற்குரியதே.
நெருங்கிய உறவினர்களையும், தொடர்புடையவர்களையும், உணவு தொடர்பு கொண்டவர்களையும், முதியவர்கள் குழந்தைகள் நலிந்த உடல் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் நெருக்கமாக ஒன்றுகூடும் ஆலயங்களுக்குள் அனுமதிப்பதனால் குறித்த தொகுதியில் பலர் நோய்த் தொற்றுக்குள்ளாக நேரிடும், என்பதால் சாவுவீடு நிகழ்ந்து முன் முப்பது நாள்களுக்கான முற்பாதுகாப்பு முஸ்தீபுகளில் ஒன்றாக நாம் கண்டெடுத்த ஆழி முத்துக்களில் ஒன்றே இந்த "தீட்டு' எனப்படும் தனிச்சொல்லினாலான "பயம்'!
உங்களைப் போலவே, என்னிடம் எழுந்த மஹா கேள்விகளில் ஒன்று! இறப்பு வீட்டுக்கு இந்த "போர்மியூலா' சரியானதே!, ஆனால் பிறப்பு வீட்டுக்கும் இதே சம நடைமுறை ஏன் வழக்கத்திலிருக்க வேண்டும்? இங்கே தான் தமிழனின் ""மூடிய மோதகத்தினுள் சர்க்கரைத் துவையல்'' வைப்பது போன்ற ரிவர்ஸ்கியர் அல்லது மாற்றியோசிக்கும் மண்டைக் காய்த்தனத்தை நமக்கு நாமே மெச்சிக்கொள்ள வேண்டும்.
கோயிலில் கூடும் கூட்டத்தினரிடையே வீரியம் குறைவாக இலவச விநியோகம் செய்யப்படுகின்ற நுண்கிருமிகளை, கோயிலுக்கு வந்து போகும் மெய்யடியார்கள் மூலம் நேற்றுப் பிறந்த, நோய் எதிர்க்கும் வீரி யம் குறைந்த உடற்சக்தியுடைய பச்சைக் குழந்தையிடம் மலிவு விற்பனை செய்துவிடக்கூடாது என்கின்ற நல்லெண்ணமேயாகும்
"எப்பூடி!'
தென்மராட்சியில் வீட்டுப் படலைகளில் வைத்து வாளித் தண்ணீர் தலையில் ஊற்றிய பின்பே இழவு வீட்டிலிருந்து உள்வருவார்கள். இவ்வாறாக விளக்கமுரைத்து விரிவுரைக்காமல் ஒற்றை இழைகளில் சமூகக் கட்டுப்பாடுகளைப் போதுமான நம்பிக்கைகளோடு வேரோடி வைத்திருப்பதே எம் சமூகத்துக்கு எப் பொழுதும் பாதுகாப்பான வழி. தண்டனைகளின் வேகமும், நீதியும் குற்றச் செயல்களைக் குறைக்கும் ஊக்கிகளாகும்போதே பிறழ்வுகளற்ற கலாசாரத்தை தொடர முடியும்.
வடமராட்சியின் சக்கோட்டையில், வல்லுறவின் பின்னர் சேலையினால் கழுத்தைச் சுற்றி கொடூரக் கொலை செய்யப்பட்ட மாணவியின் இறப்பினை நிகழ்த்திய மிருகம் பிணையில் வெளியிலோ, விளக்கமறியலின் உள்ளேயோ இருப்பது மட்டும் போதுமான தண்டனை என்றால், நெடுந்தீவில் எட்டு வயதுப் பூவை கசக்கி முகர்ந்த பின் கல்லெடுத்து முகம் சிதைத்துக் கொலை செய்யும் துணிச்சல் இன்னொரு விலங்குக்கு எப்படி வந்தது? கொடூரர்களை பிணையில் வெளியே எடுக்க சட்டத்தரணிகள் எவருமே முன்வராதிருப்பது மட்டும் போதுமா, இன்றைக்கு முற்றிப்போன இந்தச் சமூகப் புற்றுநோயைக் குணப்படுத்த?
ஒரு சமூகம் தன்னையே அறியாமல் அதன் ஆழ் மனதில் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், மதிப்பீடுகளுக்கு "சமூக நனவிலி மனச் செயற்பாடுகள்' என்று பெயர். இன்றைய தமிழ்ச் சமூகத்தினது மனம், ஆள்மனமாக இப்படியாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது போலும். பெண்களுக்கு எதிரான வயது வேறுபாடுகளின்றிய வன்முறைகளும், அவற்றிற்குப் போது மான தீர்வளிக்கமுடியாததுமான எமது நம்பிக்கை மதிப்பீடுகளும், அடிமை மரபணுக்களில் அப்படியே உறையத் தொடங்கியிருக்கின்றன.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் "அவை', வாய்ப்புக் கிடைக்கும் போது தன் குரூர முகத்தை காட்டிச் சிரிக்கின்றன. பிரத்தியேக வகுப்பு வாத்தி, பத்தாம் வகுப்புப் பிள்ளையை இழுத்துக்கொண்டோடுவதும், காக்கிச் சட்டை சீருடைப் பட்டாளத்தான் பாடசாலை மாணவியை பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கு "பார்ட்டி எப்ப சேர்?'' என்று சந்தோஷம் கொண்டாடும் அதே ஊர் இளவல்களும் ,வாங்கிக்கொள்வது வேறு வேறாயினும், விற்றது "சுயமரியாதை' என்கின்ற ஒன்றைத்தானே!
"பள்ளிக்கூடம்' என்கின்ற வார்த்தை யைத் தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்பவர்களுள், படித்தவர்களும் இடம்பெறுகின்றார்கள் என்பது இன்றைய வட சமூகத்தின் ஆரோக்கியமிழந்து செல்லும் எதிர்காலத்துக்கான குறிகாட்டிகளே!
மோதி மிதித்து விடாமலும், முகத்தில் உமிழ்ந்து விடாமலும் பொறுமை காக்குமளவுக்கு, பொறுக்கிகள் ஒன்றும் பூஜைக்குரியவர்களில்லை! எவ்வளவு சொல்லியும் காதில் போட்டுக்கொள்ளாத அசூசை மிகு ஆண் வர்க்கத்தினை சீர்திருத்தும் வல்லமை, சமூகக் கூச்சல்களுக்கு பயந்து ஒதுங்கிவிடாத பெண்களின் முன்வருகையிலேயே பெரிதும் தங்கியிருக்கப் போகின்றது. திருடனாய்ப் பார்த்து திருந்தும் வரை பொறுத்திருப்பதற்கு, கொள்ளை போவது பொன்னோ, மண்ணோவல்லபெண்!
"இருபது ஆண் விடுதலைப்புலிப் போராளிகளோடு, ஒரு இரவு முழுவதும் ஒரே பாசறைக் கூடாரத்தில் தங்கியிருந்தேன். ஒரு நிமிடம் கூட நான் தனித்திருப்பதாகவோ, பாதுகாப்பற்றிருப்பதாகவோ மனதளவிலேனும் உணர்த்தப்படவில்லை. எந்தவொரு கண்ணும் ஓர் நொடி கூட என்மேல் கண்ணியம் தவறிப் பட்டதாகவுமில்லை.
தன்னையும், போராளிகளையும் ஒழுக்கம் மிகுந்தவர்களாக வளர்த்து வைத்திருப்பதில் பிரபாகரனின் ஓர்மம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது''பொய்கலவாத வார்த்தைகளில் மெய் சொன்னவர், பாசறைகள் வரை பழகித் திரும்பும் பாக்கியம் வாய்ந்த இந்தியப் பெண் பத்திரிகையாளர் "அனிதா பிரதாப்'.
என்ன செய்ய? நாம் தொலைத்துவிட்ட திரவியங்களின் பெறுமதி இன்னமும் எம் பின்னந் தலைகளில் ஓங்கியறைவது இனச்சாபமன்றி வேறென்ன? என்னினிய சனத்தின் யாதோவொரு "அழகிய தமிழ் மகன்' இதன் பிறகு நல்லூரின் வீதிகளில் நாகரிகம் கருதி ஒதுங்கி நடப்பானாகிலும் இந்தப் பந்தியின் அத்தனை வார்த்தைகளும் அடைந்து விடு கின்றன அதனதன் வெற்றியை!!

கோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று அதிகாலை உயிரிழந்தார்

09.08.2012.
news
வவுனியா சிறையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து கைதிகள் மீது பொலிஸாரும் சிறைக்காவலர்களும் மேற்கொண்ட மோசமான மிலேச்சத்தனமான தாக்குதலால் காயங்களுக்கு இலக்காகி கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்று அதிகாலை சிகிச்சை பயனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த மரியதாஸ் நேவிஸ் டெல்றொக்ஷன் (வயது 36, இதுவரை இவரது பெயர் டில்ருக்ஷன் என்றே ஊடகங்களில் வெளியாகி வந்தது) என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்தார். நேற்றுக் காலை டெல்றொக்ஷனின் தந்தையும் தாயும் ராகம வைத்தியசாலையில் உள்ள மகனைப் பார்வையிடுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக மகர சிறைச்சாலைக்குச் சென்றபோதே அவர் உயிரிழந்த விடயம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
வவுனியா சிறையில் நடந்த கொடூரமான தாக்குதல் காரணமாக கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேஸ் நிமலரூபன் (வயது 28) என்ற கைதி மரணமான நிலையில் தற்போது டெல்றொக்ஷனும் உயிரிழந்துள்ளமை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளதாக அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி வவுனியா சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி சிறைக் காவலர்கள் மூவரைத் தடுத்து வைத்தனர். கைதிகளிடமிருந்து சிறைக் காவலர்களை மீட்பதற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர்.
அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் சிறைக்காவலர்கள் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது தமிழ் அரசியல் கைதிகள் மீது மிக மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பல கைதிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினார்கள்.
அதில் ஏற்கனவே உயிரிழந்த நிமலரூபன், நேற்று உயிரிழந்த டெல்றொக்ஷன் ஆகியோரும் அடங்குவர். சிறைச்சாலை அசம்பாவிதங்களை அடுத்து அன்றைய தினமே தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கும் மேசமாகத் தாக்கப்பட்ட அவர்கள் கொழும்பு மகர சிறைச்சாலைக்கும், கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு மகர சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகளுள் ஒருவரான டெல்றொக்ஷன் கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் 38 நாள்களின் பின்னர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
ராகம வைத்தியசாலைக்கு மகனை பார்வையிடச் சென்ற தந்தையார் மரியதாஸ் உதயனுக்குத் தெரிவிக்கையில், ராகம வைத்தியசாலையில் உள்ள எனது மகனைப் பார்வையிடுவதற்காக நானும் எனது மனைவியும் நேற்று அங்கு சென்றோம். மகர சிறைச்சாலைக்கு சென்று மகனைப் பார்வையிட அனுமதி பெறவேண்டும்.
அதற்காக நேற்று காலை 9 மணிக்கு அங்கு சென்றேன். அப்போது அங்கிருந்த சிறை அதிகாரி எனது மகன் உயிரிழந்த விடயத்தை என்னிடம் கூறினார். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாகச் சிறை அதிகாரி கூறினார்.
இதன் பின்னர் நேற்று மாலை நீதிபதியுடன் சென்று எனது மகனின் சடலத்தைப் பார்வையிட்டேன். அவரது சடலம் ஐஸ் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. மகனின் சடலத்தை நாளை மதியம் (இன்று) தருவதாக அங்கு அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர் என்றார்.
இறுதிச் சடங்குகளுக்காக மகனின் சடலம் இன்று யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படும் எனவும் மரியதாஸ் கூறினார்.
 

சுதந்திரதினத்தன்று தாண்டவம் ஆடியோ ரிலீஸ்!

 

09.08.2012.
Thandavam Audio Release on August 15விக்ரம் நடித்துள்ள தாண்டவம் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது. தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு டைரக்டர் விஜய், மீண்டும் விக்ரமை வைத்து தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் நடிக்கிறார். இவர்களுடன் அனுஷ்கா, எமி ஜாக்சன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். யு.டி.வி., இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில் படத்தின் ஆடியோவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர் தாண்டவம் படக்குழுவினர். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தாண்டவம் படக்குழுவினர் தவிர நிறைய திரை நட்சத்திரங்களும் பங்கேற்க இருக்கின்றனர்

கறுப்பின வாலிபருடன் உறவு வைத்திருந்த மகளை தாக்கிய பெற்றோருக்கு சிறை

09.08.2012.
இங்கிலாந்தில் கறுப்பின வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த மகளை கொடூரமான முறையில் தாக்கிய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவது,

வேல்ஸ், ஸ்வான்சீ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான டேவிட் செம்பியன். இவரது மனைவி பெயர் பிரான்சஸ் செம்பியன். இவர்களின் மகள் ஜேன் சாம்பியன் (17).
England

ஒரு நாள் தனது பெற்றோர் வெளியே சென்ற சமயம் ஜேன் தனது காதலரான அல்போன்ஸ் நெகுபேயை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

நெகுபே கறுப்பினத்தைச் சேர்ந்தவர்.

இதன்போது வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதேவேளை அங்கு வந்த ஜேனின் பெற்றோர் தங்களது மகள் நிர்வாண நிலையில் தனது காதலருடன் இருப்பதைக் கண்டு கோபமடைந்துள்ளனர்.

இதையடுத்து தந்தை டேவிட், கோபத்துடன் மகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாக அடித்துள்ளார். தாயாரும் சேர்ந்து அடித்துள்ளார். இதைத் தடுக்க வந்த அல்போன்ஸையும் டேவிட் அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.

கறுப்பினத்தவருடன் உறவு வைத்து குடும்பக் கெளரவத்தைக் கெடுத்து விட்டாயே என்றும் ஜேனை திட்டியுள்ளார் டேவிட். நெகுபேயைப் பார்த்தும் இனவெறி கருத்துக்களைக் கூறியுள்ளார்.

பெற்றோர் கோபமாக இருந்ததால் ஜேன் வீட்டை விட்டு வெளியேறி தனது பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் டேவிட்டும், அவரது மனைவியும் மகளிடம் நெகுபேயை தொடர்ந்து சந்திக்கிறாயா? என கேட்டுள்ளனர்.

அதற்கு ஜேன் ஆம் என்று கூறவே கோபமடைந்த பெற்றோர் மீண்டும் அவரை அடித்துள்ளனர். இதில் ஜேனின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
England2


இதனையடுத்து டேவிட் மற்றும் அவரது மனைவி மீது பொலிஸா வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் தம்பதியரின் செயலையும், நெகுபே குறித்து இனவெறி கருத்துக்களைக் கூறியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அவர்களின் செயல் இழிவானது என விமர்சித்த நீதிபதி, டேவிட் செம்பியனுக்கு 12 மாத சிறைத் தண்டனையும், அவரது மனைவிக்கு 9 மாத சிறைத் தண்டனையும் விதித்தார்

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்

o09.08.2012.
அதிக வரி அறவிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர்கள் சிலர் இணைந்து கட்டுநாயக்க விமானநிலையத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இலங்கை, ஹொங்கொங், பேங்கொக், சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 க்கும் அதிகமானோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இன்று அதிகாலை 2 மணி முதல் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதன்காரணமாக விமான நிலைய மற்றும் சுங்கத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
தாம் கொண்டு வரும் பொருட்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன், அதிகப்படியான வரி அறவிடப்படுகின்றமையே ஆர்ப்பாட்டத்திற்கான காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி

சுல்தான் தி வாரியருக்காக காத்திருக்கிறேன்: விஜயலட்சுமி

09.08.2012.
ஜெயா தொலைக்காட்சியில் வருகிற ஓகஸ்ட் 15ம் திகதி முதல் கலக்கல் கபடி கே.பி.எல் என்ற மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியுடன் இணைந்த ரியாலிடி ஷோ ஒளிபரப்பாகவிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கபடி அணியினர் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு நிகழ்ச்சி சுமார் 120 வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது.
பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அண்மையில் இந்த படப்பிடிப்பில் நடிகை விஜயலட்சுமி கலந்து கொண்டார்.
சென்னை 60028, அஞ்சாதே, சரோஜா, கற்றது களவு, ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற விஜயலட்சுமி தற்போது 'வனயுத்தம்' படத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கபடி பெண்கள் மத்தியில் கலகலவென பேச ஆரம்பித்த விஜயலட்சுமியை விடாமல் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் வீராங்கனைகள்.
ரஜினியுடன் சுல்தான் தி வாரியர் படத்தில் நடித்தது பற்றியும் அவர்கள் கேள்வி எழுப்ப, அதெல்லாம் சீக்ரெட். சொல்ல மாட்டேன் என்று நழுவினார் விஜயலட்சுமி.
அந்த படம் எப்போது வரும்? இன்னும் எத்தனை நாட்கள் படப்பிடிப்பு இருக்கு என்று விடாமல் கேள்வி கேட்ட கபடி வீராங்கனைகளிடம் ஒருவழியாக சரணடைந்தார் விஜயலட்சுமி.
நான் ரஜினி அவர்களோடு பக்கத்தில் நின்றதே பெரிய பாக்யமாக கருதுகிறேன். அவரோடு சில நாட்கள் நடிக்கவும் செய்திருக்கிறேன் என்றால் அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்? மீண்டும் அழைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்காகதான் நானும் காத்திருக்கிறேன் என்றார் விஜயலட்சுமி.
இதற்கு முன்பு இதே போன்றதொரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலியை கபடி ஆடச்சொல்லி அதில் வெற்றியும் கண்ட கபடிப் பெண்கள், விஜயலட்சுமியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?
வலுக்கட்டாயமாக அவரை கபடி ஆட அழைத்தார்கள். கூந்தலை ஒதுக்கிக் கொண்டு கூலிங்கிளாசையும் இறுக்கி அணிந்து கொண்டு களத்தில் குதித்த விஜயலட்சுமியை அத்தனைபேரும் சேர்ந்து பிடித்து அமுக்க, அழாத குறையாக அவுட் ஆனார் அவர்.
ஏம்ப்பா... உங்களை நம்பி இறங்குனா இப்படிதான் மானத்தை வாங்கறதா என்று செல்லமாக அவர்களிடம் கோபிக்கவும் செய்தார் விஜயலட்சுமி.
நடிகர் கார்த்தி, விவேக், அஞ்சலி, கஸ்தூரி, என்று திரையுலகம் சார்பில் கபடிக்காக ஒத்துழைப்பு கொடுத்து வரும் இவர்களை கபடி வீரர்களும் வீராங்கனைகளும் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட இந்த கலக்கல் கபடி கே.பி.எல் நிகழ்ச்சியின் சிறப்பு முன்னோட்டம் ஓகஸ்ட் 15ம் திகதி சுதந்திர தினந்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இந்த போட்டி, தொடர் நிகழ்ச்சியாக ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரையிலும், ஞாயிறன்று மதியம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரையிலும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இணையத்தைக் கலக்கும் ஹிலரியின் நடனக் காணொளி

09.08.2012.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனின் நடனக் காணொளி தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றது.
தென்னாபிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சினால் ஜொஹன்னஸ் பேர்க்கில் நடத்தப்பட்ட இராப்போசன நிகழ்வொன்றிலேயே அவர் நடனமாடியுள்ளார்.
அவரது நடனத்தை ஊடகங்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன.
தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹிலரி கிளின்டன் ஆபிரிக்க நாடுகள் பலவற்றுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இப்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமையைக் குறைப்பதே இவரது விஜயத்திற்கான பிரதான நோக்கமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக நெல்சன் மண்டேலாவையும் அவர் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

'வை திஸ் கொல வெறி" : சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

09.08.2012.சுகாதார அமைச்சுக்கு முன்பாக வை திஸ் கொலவெறி என்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு சுகாதார சேவைகள் தொழிற்சங்கள் பல ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தன.

சுகாதாரத் துறையில் இடம்பெறுகின்ற ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மீள சேவையில் அமர்த்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஓய்வு பெற்ற முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் அமர்த்த அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றமை பாரதூரமான குற்றமாகும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

சுகாதாரத் துறையில் தொடர்ந்து இடம்பெற்ற சில ஊழல் மோசடிகள் குறித்து அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அவர் ஏன் மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி விசாரணைக்குழுவினரால் நடத்தப்பட்ட விசாரணையிலும் முன்னாள் சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறித்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டினர்.

எனவே சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக தகுதியுடைய ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு சுகாதாரத் துறையின் ஊழல்களுக்கு எதிரான ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

2008 முதல் 2011 வரையில் 2,48,492 தாய்மார் பணிப்பெண்களாக சென்றுள்ளனர்

09.08.2012.
2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையில் வீட்டுப் பணிப்பெண்களாக நான்கு இலட்சத்து 51 ஆயிரத்து 897 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும் இவர்களில் இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 பேர் தாய்மார் ௭னவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலனோம்பு அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐ.தே.க. ௭ம்.பி. அஜித் பி. பெரேராவினால் ௭ழுப்பப்பட்ட பிரேரணைக்கு சபையில் சமர்ப்பிக்கபட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 2008இல் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 486 பேரில் 40 ஆயிரத்து 665 தாய்மாரும் 2009 இல் சென்ற ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 508 பணிப்பெண்களில் 60 ஆயிரத்து 448 தாய்மாரும் உள்ளடங்கியிருந்தனர்.

அதேபோன்று 2010 ஆண்டு பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 807 பேரில் 73 ஆயிரத்து 944 தாய்மாரும் 2011 இல் பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து பதினோராயிரத்து 96 பேரில் 73 ஆயிரத்து 435 பேரில் தாய்மாரும் உள்ளடங்கியுள்ளனர். இதன் படி கடந்த நான்கு வருடங்களில் இலங்கையில் இருந்து இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 தாய்மார் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட 58 நகரங்களில் மின் தடை

09.08.2012.
வெவ்வேறு நேரங்களில் அமுல் வெவ்வேறு நேரங்களில் அமுல் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி திட்டத்தின் வேயாங்கொடை வரையிலான விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பினால் இன்று வியாழக்கிழமை கொழும்பு உட்பட 58 பிரதான நகரங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வெவ்வேறு நேரங்களில் மேற்படி நகரங்களில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென சபை அறிவித்துள்ளது. மேற்படி மின் விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் 300 மெகாவோட் மின்சாரம் செயலிழக்கப்பட்டிருப்பதே மின்சாரம் தடைப்படுவதற்கு காரணம் ௭ன்று தெரிவித்துள்ள மின்சார சபை, மின் விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் வகையில் விசேட பொறியியலாளர் குழுவொன்று திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் காலை 8.30 முதல் 10.45 மணிவரையிலும், 10.45 முதல் 1.00 மணிவரையிலும், 1 மணி முதல் 3.15 மணிவரையிலும் மற்றும் 3.15 முதல் 5.30 மணிவரையிலுமான வெவ்வேறு நேரங்களில் வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய பல்வேறு நகரங்களில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்குமென சபை தெரிவித்துள்ளது. ௭னினும் கொழும்பு நகரின் மின் தடை தொடர்பில் நேரம் ௭துவும் குறிப்பிடப்படவில்லை.