siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

2008 முதல் 2011 வரையில் 2,48,492 தாய்மார் பணிப்பெண்களாக சென்றுள்ளனர்

09.08.2012.
2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையில் வீட்டுப் பணிப்பெண்களாக நான்கு இலட்சத்து 51 ஆயிரத்து 897 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும் இவர்களில் இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 பேர் தாய்மார் ௭னவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலனோம்பு அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐ.தே.க. ௭ம்.பி. அஜித் பி. பெரேராவினால் ௭ழுப்பப்பட்ட பிரேரணைக்கு சபையில் சமர்ப்பிக்கபட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 2008இல் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 486 பேரில் 40 ஆயிரத்து 665 தாய்மாரும் 2009 இல் சென்ற ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 508 பணிப்பெண்களில் 60 ஆயிரத்து 448 தாய்மாரும் உள்ளடங்கியிருந்தனர்.

அதேபோன்று 2010 ஆண்டு பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 807 பேரில் 73 ஆயிரத்து 944 தாய்மாரும் 2011 இல் பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து பதினோராயிரத்து 96 பேரில் 73 ஆயிரத்து 435 பேரில் தாய்மாரும் உள்ளடங்கியுள்ளனர். இதன் படி கடந்த நான்கு வருடங்களில் இலங்கையில் இருந்து இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 தாய்மார் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக