அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனின் நடனக் காணொளி தற்போது
இணையத்தைக் கலக்கி வருகின்றது.
தென்னாபிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சினால் ஜொஹன்னஸ் பேர்க்கில் நடத்தப்பட்ட
இராப்போசன நிகழ்வொன்றிலேயே அவர் நடனமாடியுள்ளார்.
அவரது நடனத்தை ஊடகங்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன.
தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹிலரி கிளின்டன் ஆபிரிக்க நாடுகள்
பலவற்றுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளார்.
இப்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமையைக் குறைப்பதே
இவரது விஜயத்திற்கான பிரதான நோக்கமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக நெல்சன் மண்டேலாவையும் அவர் சந்தித்தமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக