siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கொழும்பு உட்பட 58 நகரங்களில் மின் தடை

09.08.2012.
வெவ்வேறு நேரங்களில் அமுல் வெவ்வேறு நேரங்களில் அமுல் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி திட்டத்தின் வேயாங்கொடை வரையிலான விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பினால் இன்று வியாழக்கிழமை கொழும்பு உட்பட 58 பிரதான நகரங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வெவ்வேறு நேரங்களில் மேற்படி நகரங்களில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென சபை அறிவித்துள்ளது. மேற்படி மின் விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் 300 மெகாவோட் மின்சாரம் செயலிழக்கப்பட்டிருப்பதே மின்சாரம் தடைப்படுவதற்கு காரணம் ௭ன்று தெரிவித்துள்ள மின்சார சபை, மின் விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் வகையில் விசேட பொறியியலாளர் குழுவொன்று திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் காலை 8.30 முதல் 10.45 மணிவரையிலும், 10.45 முதல் 1.00 மணிவரையிலும், 1 மணி முதல் 3.15 மணிவரையிலும் மற்றும் 3.15 முதல் 5.30 மணிவரையிலுமான வெவ்வேறு நேரங்களில் வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய பல்வேறு நகரங்களில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்குமென சபை தெரிவித்துள்ளது. ௭னினும் கொழும்பு நகரின் மின் தடை தொடர்பில் நேரம் ௭துவும் குறிப்பிடப்படவில்லை.

0 comments:

கருத்துரையிடுக