அவ்வாறு திருமணம் செய்யும் போது, தான் முதலில் காதலித்த காதலனை சிலர், தங்கள் திருமணத்திற்கு அழைக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு தன் முதல் காதலனை அழைத்தால் என்ன நடக்கும் என்றும், எதற்கு அவனை அழைக்க வேண்டும் என்றும், மேலும் அந்த நேரத்தில் முதல் காதலன் வந்தால் என்ன பிரச்சனை வரலாம் என்றும் அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
தன் முதல் காதலனை தன் திருமணத்தின் போது அழைத்து, ஒரு கேலியான பார்வையை அவன் மீது செலுத்தி, காதலியானவள் தன் மனதிற்குள் “நான் இன்னும் உன்னை நினைக்கவில்லை” என்று தெரிவிப்பதற்காக, நான் உன்னுடன் இருப்பதை விட, இவருடன் சந்தோஷமாக இருக்கிறேன், என்பதை காண்பிக்க அழைக்கலாம். பொதுவாக அனைத்து ஆண்களும் தான் காதலிக்கும் காதலியை, “என்னை விட யார் சந்தோஷமாக என் காதலியை பார்த்துக் கொள்வார்கள்” என்ற நினைப்பு இருக்கும். ஆனால் இவ்வாறு செய்வதால், தன் முதல் காதலனுக்கு தன் சந்தோஷத்தை, மெதுவாக தெரிவிப்பது போல் இருக்கும்.
சில நேரங்களில் காதலனை திருமணத்தின் போது அழைத்தால், அவர்கள் மிகவும் பொறாமைப்படுவார்கள். மேலும் என்னுடன் திருமணக் கோலத்தில் இருக்க வேண்டிய என் காதலி, மற்றொருவருடன் மணக்கோலத்தில் இருப்பதை எந்த ஒரு காதலனாலும் தாங்க முடியாமல், என் காதலி சந்தோஷமாக இருந்தால் அது போதும் என்று நினைத்து, அந்த இடத்தை விட்டே போய்விடுவார்கள். பின் அவர்கள் எந்த ஒரு சமயத்திலும் மறுபடியும் வரமாட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு அழைத்து, காதலனிடம் உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும், நம் இருவருக்கும் நல்ல புரிதல் இல்லை, என்னை விட ஒரு நல்ல துணைவி உனக்கு அமைவாள் என்பதை, அவனுக்கு புரியுமாறு தன் செய்கையில் புரிய வைத்து, அவனை விலக்கலாம்.
இல்லையென்றால் தன் முன்னால் காதலனை, தனக்கு வாழ்க்கை துணையாக வருபவரிடம் அறிமுகப்படுத்தி, ஒரு நல்ல நண்பர்களாக மூன்று பேரும் இருக்கலாம். இவ்வாறு செய்தால், கண்டிப்பாக அந்த நட்பு ஒரு நல்ல நிலையில் இருக்கும்.
ஒரு சில சமயங்களில் காதலனை அழைத்தால், அசம்பாவீதமும் நடக்கும் வாய்ப்புகளும் உண்டு. காதலன் மிகவும் பொறாமையின் உச்சக்கட்டத்தில் இருந்தால், திருமணத்தின் போது ஒரு சில டென்சன்களை ஏற்படுத்த வாய்ப்புகளும் உண்டு. வேண்டுமென்றால் காதலிக்கும் போது எடுத்த போட்டோ, வீடியோ ஆகியவற்றை வைத்து பயமுறுத்துவான். மேலும் என்ன தான் உங்களை திருமணம் செய்து கொள்பவருக்கு அனைத்து விஷயங்களும் தெரிந்திருந்தாலும், உறவினர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகிவிடுவதோடு, பின் அந்த திருமணம் இறுதியில் பெரிய பிரச்சனையை உருவாக்கிவிடும்.
எனவே, உங்கள் காதல் தோல்வி அடைந்துவிட்டால், ஏற்கனவே உங்கள் காதலன் அதிகமான அன்பு வைத்திருப்பவராக இருந்து, சரியாக புரிதல் இல்லாத காரணத்தினால் பிரிந்தவராக இருந்தால், அவர்களை அழைக்கலாமே தவிர, அதிக அன்புடன், கோபம் மற்றும் சந்தேக குணமுடையாக இருப்பவராக இருந்தால், அவர்களை அழைக்காமல் இருப்பதே நல்லது என்றும் அறிவுறுத்துகின்றனர் அனுபவசாலிகள்.
0 comments:
கருத்துரையிடுக